search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இருதரப்பு மோதல்
    X

    இருதரப்பு மோதல்

    • இதில் ஒருவரை ஒருவர் கம்பி, கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி கொண்டனர்.
    • இருதரப்பி–னரும் வலங்கைமான் போலீசில் தனித்தனியே புகார் அளித்தனர்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் குரு பரிகார கோவில் உள்ளது.கோவிலை் சுற்றியுள்ள அகழியை தூர்வாரும் பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் தனது சொந்த நிதியில் மேற்கொண்டார். தூர்வாரும் பணியின்போது ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக இரு தரப்பினரிடையே பிரச்னை எழுந்தது.இதில் ஒருவரை ஒருவர் கம்பி, கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி கொண்டனர். இருதரப்பி–னரும் வலங்கைமான் போலீசில் தனித்தனியே புகார் அளித்தனர்.

    குருமூர்த்தி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் அப்பகுதியை சேர்ந்த முருகையன், பிரபாகரன், சக்தி, ஐயப்பன், ரகுராம், குட்டி தினேஷ்், மோகன், அன்புமணி ஆகிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர்.இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள சக்தி, ஐயப்பன், குட்டி தினேஷ், முருகையன் ஆகிய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    அதே போன்று மற்றொரு தரப்பை சார்ந்த ஐயப்பன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் கட்ட பிரபு , லெனின், சரத்குமார், பிரசாத், கார்த்தி, குருமூர்த்தி, அஜித், விஜய், விக்னேஷ், அருண்குமார் ஆகிய 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இச்சம்பவம் தொடர்பாக இரு தரப்பைச் சேர்ந்த 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 12 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×