என் மலர்
வழிபாடு

தங்கம் சேர வேண்டுமா? வெள்ளிக்கிழமை இந்த வழிபாட்டை செய்தாலே போதும்..!
- வெள்ளிக்கிழமைகளில் லட்சுமியை வழிபடுவது வீட்டில் செல்வத்தையும் செழிப்பையும் பெருகச் செய்யும்.
- தங்கம் சேர குரு மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்களின் அருளும் வேண்டும்.
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து ஏழை எளிய நடுத்தர மக்களால் தங்கம் வாங்க முடியுமா என்ற நிலை உள்ளது. சிலருக்கு தங்கம் வாங்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை இருக்கும் தங்கத்தை பாதுகாப்பாக வைத்திருந்தாலே போதும் என்ற நிலை வந்துவிட்டது. இப்படி தங்கம் பற்றி பலவாறாக யோசித்து கவலைப்படாமல் வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி வழிபாடு செய்தாலே போதும். தங்கத்தையும் வாங்கலாம், உங்களிடம் உள்ள தங்கமும் நிலைத்து நிற்கும்.
* தங்கம் சேர, வெள்ளிக்கிழமை அன்று செல்வத்தின் தெய்வமான மகாலட்சுமியை வழிபாடு செய்வது மிகவும் முக்கியம்.
* வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த நாள் என்பதால், அன்றைய தினம் காலை எழுந்தவுடன் வீட்டை சுத்தம் செய்து, பூஜையறையில் மகாலட்சுமிக்கு விளக்கேற்ற வேண்டும்.
* மகாலட்சுமியை மனதாரப் பிரார்த்தித்து, தாமரை மலர்கள் அல்லது செந்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
* காலை அல்லது மாலை வேளையில் மகாலட்சுமிக்கு உரிய சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல் அல்லது பாயாசம் போன்றவற்றை நைவேத்தியமாக படைத்து, விளக்கேற்றி, மந்திரங்கள் சொல்லி வழிபடலாம்.
* மகாலட்சுமி பூஜையின் போது நம் மனதை அமைதியாகவும் நம்பிக்கையுடனும் வைத்திருக்க வேண்டும்.
* வெள்ளிக்கிழமைகளில் லட்சுமியை வழிபடுவது வீட்டில் செல்வத்தையும் செழிப்பையும் பெருகச் செய்யும்.
* தங்கம் சேர குரு மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்களின் அருளும் வேண்டும். ஆதலால், வெள்ளிக்கிழமை வழிபாட்டோடு சுக்கிர பகவானையும் குரு பகவானையும் சேர்த்து வழிபட வேண்டும்.
* மகாலட்சுமிக்கு உரிய கிரகம் சுக்கிரன். அதனால் வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் வெட்டிவேரை திரியாகத் திரித்து நெய் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
* தொடர்ந்து மூன்று வாரம் வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் இந்த விளக்கேற்றி வழிபட்டால் தங்கம் சேரும், செல்வ வளம் அதிகரிக்கும்.
மேலும் மஞ்சள், குங்குமம், பூக்கள் போன்ற மங்கலப் பொருட்களைப் பயன்படுத்தி வழிபாடு செய்வது நன்மை தரும். மகாலட்சுமியின் அருளைப் பெற வழிபாட்டின் போது கிராம்பு பயன்படுத்தலாம். செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியை செல்வ செழிப்பிற்காக தொடர்ந்து 24 வெள்ளிக்கிழமைகள் வழிபாடு செய்தால் வீட்டில் செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம்.






