search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவலை"

    • கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பால் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த தடை விதிக்கப்பட்டது.
    • இந்தாண்டு வருகிற ஆகஸ்ட் 31-ந்தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது.

    குமாரபாளையம்:

    ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி தமிழகத்தில் மிகவும் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பால் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த தடை விதிக்கப்பட்டது.

    கடந்த ஆண்டு வீட்டில் வைத்து வழிபடக்கூடிய சிறிய அளவிலான சிலைகள் மட்டும் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. பெரிய சிலைகள் வாங்கி வைத்தும் விற்பனை செய்ய முடியாமல் சிலை வியாபாரிகள் தவித்தனர்.

    இந்தாண்டு வருகிற ஆகஸ்ட் 31-ந்தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக ஒரு மாதம் முன்பே சிலை வியாபாரம் தொடங்க வேண்டிய நிலையில், தற்போது கொரோனா பாதிப்பால் விழாவிற்கு தடை விதித்து விட்டால் எப்படி சிலைகள் விற்பனை செய்வது? மற்றும் எந்த நம்பிக்கையில் சிலைகளை வாங்கி வைக்க முடியும்? என்று புரியாமல் வியாபாரிகள் தவித்து வருகிறார்கள்.

    இது குறித்து சிலை வியாபாரிகள் கூறியதாவது:-

    விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மதுராந்தகம், பாண்டிச்சேரி உள்ளிட்ட பல ஊர்களில் பெரிய அளவிலான சிலைகள் செய்து விற்பதும் வழக்கம்.

    இந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு தடை விதித்தால் என்ன செய்வது என்பதால் பெரிய அளவிலான சிலைகள் செய்வதா? வேண்டாமா? என விடை தெரியாமல் உள்ளோம்.

    விநாயகர் சிலைகளை வாங்கி விற்கும் எங்களைப்போன்ற வியாபாரிகள் விநாயகர் ஊர்வல விழாவிற்கு தடை விதித்தால் பெரும் நஷ்டத்திற்கு ஆளாக நேரிடும். எனவே விநாயகர் சதுர்த்தி விழா குறித்து அரசு சரியான முடிவினை சொன்னால் சிலை உற்பத்தியாளர்களுக்கும், வியாபாரிகளுக்கும் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • நூல் விலை உயர்வால் வெளிநாட்டு ஆர்டர்களை வாங்க முடியாமல் கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் தவித்து வருகிறார்கள்
    • கரூரில் உற்பத்தி செய்யப்படும் குஷன், பெட்ஷீட், திரைச்சீலை உள்ளிட்ட பொருட்களுக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது

    கரூர்:

    உலகளவில் வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தியில் கரூருக்கு என தனி இடமுண்டு. இங்கு உற்பத்தி செய்யப்படும் திரைச்சீலை, கைக்குட்டை, மேஜை விரிப்பான், கால்மிதியடி, கையுறை போன்றவை நேர்த்தியாகவும், தரமாகவும் உற்பத்தி செய்யப்படுவதால் ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், கீரிஸ், இங்கிலாந்து, ஸீவிடன், டென்மார்க் நாடுகளுக்கும் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    ஆண்டுக்கு ரூ.4000 கோடி வரை நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் இந்த தொழில் 2030&ம் ஆண்டுக்குள் ரூ.25,000 கோடி ஆர்டர் என்ற இலக்குடன் செயல்பட்டாலும், தற்போது கடுமையாக உயர்ந்து வரும் நூல் விலையால் உற்பத்தி கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது.

    இதுதொடர்பாக கரூரில் ஹோம் லைன் டெக்ஸ்டைல்ஸ் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வரும் ஆர்.ஸ்டீபன் பாபு கூறும்போது, கரூரில் பிரதான தொழிலாக ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நடக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக ஜவுளி கண்காட்சி நடைபெறவில்லை.

    இந்த ஆண்டு ஜெர்மனி பிராங்க்பர்ட் என்ற நகரில் ஜவுளி கண்காட்சி ஜுன்.21 முதல் ஜுன்.24 வரை நான்கு நாட்கள் நடைபெற்றது. இதில் கரூரில் இருந்து 33 ஏற்றுமதியாளர்களும், இந்தியாவில் இருந்து 300 ஏற்றுமதியாளர்களும் இந்த கொரோனா காலத்திற்கு பிறகு கலந்து கொண்டனர்.

    இந்த கண்காட்சியை இந்தியா சார்பில் தமிழகம், பானிபட், கேரளா, ஆந்திரா, லூதியானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட ஐரோப்பா நாடுகளில் இருந்து எதிர்பார்த்ததை விட ஏராளமான இறக்குமதியாளர்கள் அதிக எதிர்பார்ப்போடு பார்வையிட்டனர்.

    இதில் கரூரில் உற்பத்தி செய்யப்படும் குஷன், பெட்ஷீட், திரைச்சீலை உள்ளிட்ட பொருட்களுக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது. ஆனால் இறக்குமதியாளர்கள் எதிர்பார்த்தது பழைய விலையே. ஆனால் தற்போது கரூர் மாவட்டத்தில் நூல்களின் விலை 100 மடங்கு அதிகமாக இருக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் முதல் இதுநாள் வரை மூலப்பொருளான நூலின் விலை 20 முதல் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

    வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் இந்திய ஜவுளியை நாடினாலும், உலகளாவிய பொருளாதார மந்த நிலையில் அவர்கள் இந்திய ஜவுளி உற்பத்திக்கு கடந்த டிசம்பர் மாதம் கொடுத்த விலையில் தான் வழங்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

    இதுகுறித்து கண்காட்சி தொடக்க விழாவில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை அமைச்சக செயலர் உபேந்திரபிரசாத்சிங்கிடம், இந்திய ஜவுளி உற்பத்தியாளர்கள் சார்பில், இந்தியாவில் கடுமையாக உயர்ந்துள்ள நூல் விலை குறித்தும், ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகை 9 சதவீதத்தில் இருந்து 0.5 சதவீதமாக குறைந்தது குறித்தும் தெரிவித்தோம்.

    செயலரும் இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக கூறினார். மத்திய ஜவுளி அமைச்சகம் விரைந்து நடவடிக்கை எடுத்தால் உலக ஜவுளி கண்காட்சியில் கிடைக்க இருக்கும் ரூ.3500 கோடி ஆர்டர் நமக்கு கிடைக்கும். இல்லேயல் சீனாவுக்கோ, வங்கதேசத்துக்கோ சென்று விடும்.

    எனவே மத்திய ஜவுளி அமைச்சகம் நூல் விலை உயர்வை பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்றும், ஊக்கத் தொகையை மீண்டும் 9 சதவீதம் வழங்கும் என்ற நம்பிக்கையில் அனைத்து ஜவுளி உற்பத்தியாளர்களும் காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

    • பெரும்பாலானவர்களுக்கு 100 நாட்கள் வேலை உத்தரவாதம் செய்யவில்லை.
    • நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், எவ்வித வருமானமும் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

    மடத்துக்குளம்,

    மடத்துக்குளம் ஒன்றிய பி.டி.ஓ., விடம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், தாலுகா செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்டோர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    ஊராட்சியில் கடந்த சில மாதங்களாக தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்படவில்லை. கடந்த நிதியாண்டிலும் பெரும்பாலானவர்களுக்கு 100 நாட்கள் வேலை உத்தரவாதம் செய்யவில்லை.

    நடப்பு நிதியாண்டிலும் வேலை மறுக்கப்பட்டு வருகிறது.இதனால் திட்ட சம்பளத்தைவாழ்வாதாரமாக கொண்டுள்ள நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், எவ்வித வருமானமும் இல்லாமல் தவித்து வருகின்றனர். இது குறித்து ஆய்வு செய்து, திட்ட விதிகளின்படி, தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நடப்பு ஆண்டு வரை சொத்துவரி, குடிநீர் கட்டணத்தை முறையாக செலுத்தியிருக்க வேண்டும்.
    • 100 நாள் திட்டத்தின் மூலமாக, ஆதி திராவிடர் காலனியில் உள்ள ஏழை, எளிய மக்கள் அதிகம் பயன்பெறுகின்றனர்.

    திருப்பூர்,

    வேலை உறுதி திட்டத்தில் நடப்பு ஆண்டில்,281 ரூபாய் தினக்கூலி வழங்கப்படுகிறது. 100 நாள் திட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வேலை உறுதி திட்ட பணியாளர்எவ்வகையிலும் வரி நிலுவை வைத்திருக்க கூடாது.

    நடப்பு ஆண்டு வரை சொத்துவரி, குடிநீர் கட்டணத்தை முறையாக செலுத்தியிருக்க வேண்டும். அதுமட்டுமல்ல சமூக பாதுகாப்பு திட்டத்தில் ஓய்வூதிய உதவி பெறுபவராகவும் இருக்க கூடாது என திடீர் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.வரி நிலுவை இருக்க கூடாது என்ற விதிமுறை நியாயமானதாக இருந்தாலும், ஓய்வூதிய உதவி பெறுவோருக்கு பணி வாய்ப்பை மறுக்க கூடாதென ஏழை, எளிய மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    இதுகுறித்து திருப்பூர் மாவட்ட வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் சிலர் கூறியதாவது:-

    100 நாள் திட்டத்தின் மூலமாக, ஆதி திராவிடர் காலனியில் உள்ள ஏழை, எளிய மக்கள் அதிகம் பயன்பெறுகின்றனர்.வீட்டுவரி, குடிநீர் கட்டணம் நிலுவை இருக்க கூடாது என்கின்றனர். அவர்களுக்கு வேலை வழங்கி, சம்பளத்திலேயே பிடித்தம் செய்து கட்டலாம்.மாறாக பணி வாய்ப்பை பறிக்க கூடாது. விதவைகள், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதிய உதவி பெற்றாலும் 100 நாள் திட்டத்தில் உழைப்புக்கு சம்பளம் பெறும் வாய்ப்பை மறுக்க கூடாது. தேவையற்ற கட்டுப்பாடுகளை நீக்க தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×