search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    100 நாள்  திட்டத்தில் வேலை வழங்கப்படாததால் தவிக்கும் தொழிலாளர்கள்
    X

     கோப்புபடம்

    100 நாள் திட்டத்தில் வேலை வழங்கப்படாததால் தவிக்கும் தொழிலாளர்கள்

    • பெரும்பாலானவர்களுக்கு 100 நாட்கள் வேலை உத்தரவாதம் செய்யவில்லை.
    • நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், எவ்வித வருமானமும் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

    மடத்துக்குளம்,

    மடத்துக்குளம் ஒன்றிய பி.டி.ஓ., விடம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், தாலுகா செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்டோர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    ஊராட்சியில் கடந்த சில மாதங்களாக தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்படவில்லை. கடந்த நிதியாண்டிலும் பெரும்பாலானவர்களுக்கு 100 நாட்கள் வேலை உத்தரவாதம் செய்யவில்லை.

    நடப்பு நிதியாண்டிலும் வேலை மறுக்கப்பட்டு வருகிறது.இதனால் திட்ட சம்பளத்தைவாழ்வாதாரமாக கொண்டுள்ள நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், எவ்வித வருமானமும் இல்லாமல் தவித்து வருகின்றனர். இது குறித்து ஆய்வு செய்து, திட்ட விதிகளின்படி, தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×