search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கழிவு நீர் கால்வாய்"

    • பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட பல வார்டுகளில் இருந்து கழிவு நீர், வார்டு எண்.8-க்கு உட்பட்ட அனைத்து வீதிகளின் வழியாக வந்து,
    • தி.மு.க. வட்டச் செயலாளர் ரத்தினசாமி மற்றும் கயாஸ் அகமது, விக்னேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட பல வார்டுகளில் இருந்து கழிவு நீர், வார்டு எண்.8-க்கு உட்பட்ட அனைத்து வீதிகளின் வழியாக வந்து, பின்னர் பச்சாபாளையம் குட்டையை அடையும் வகையில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டிருந்தது. இதனால் அடிக்கடி கழிவுநீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் நகர்மன்ற உறுப்பினர் சுகன்யா ஜெகதீஷிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து பட்டேல் வீதியில் வரும் கழிவு நீரை கருப்புராயன் கோவில் வீதி வழியாக செல்லாமல், பட்டேல் வீதி வழியாகவே செல்லும் வகையில் புதிய கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு திட்டமிடப்பட்டது. அதன்படி ரூ.4 லட்சம் மதிப்பில் இப்பணி நடைபெற உள்ளது. இதற்கான பூமி பூஜை நடந்தது. இதற்கு நகராட்சி தலைவர் கவிதா மணி தலைமை தாங்கி, பூமி பூஜையை தொடங்கி வைத்தார். நகர் மன்ற உறுப்பினர் சுகன்யா ஜெகதீஷ் முன்னிலை வகித்தார். இதில் நகராட்சி பணி மேற்பார்வையாளர் ராசுகுட்டி, திமுக .,விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஜெகதீஷ், ஒப்பந்ததாரர்கள் வெள்ளியங்கிரி, கார்த்திகேயன், தி.மு.க. வட்டச் செயலாளர் ரத்தினசாமி மற்றும் கயாஸ் அகமது, விக்னேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குடிநீரோடு கலக்கும் அபாயம் உள்ளது
    • அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் கவன குறைவால் நடந்துள்ளது

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அயிலம் ஊராட்சி, கவரபாளையம் பகுதியில் பொதுமக்கள் வசதிக்காக அரசு சார்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டது.

    இதில் கட்டி முடிக்கப்பட்ட கால்வாய் நடுவே குடிநீர் அடி பம்பு உள்ளது. குடிநீர் அடி பம்புவை அகற்றாமல் இருப்பதால் கழிவுநீர், குடிநீரோடு கலக்கும் அபாயம் உள்ளது. அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் கவன குறைவாலே இந்த தவறு நடந்துள்ளது என அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    அடி பம்பு அகற்றாமல் கழிவு நீர் கால்வாய் கட்டப்பட்ட சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • ராம் நகர் பகுதியில், முறையாக கழிவுநீர் கால்வாய் கழிவுகள் அகற்றப்படுவதில்லை.
    • மனுவாக தயாரித்து மீண்டும் நகராட்சி நிர்வாகத்திடம் அளிக்கப்படும்.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சி 14 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் ஈஸ்வரி அங்குள்ள ராம்நகர் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தினார். இது குறித்து அவர் கூறியதாவது:- 14வது வார்டு ராம் நகர் பகுதியில், முறையாக கழிவுநீர் கால்வாய் கழிவுகள் அகற்றப்படுவதில்லை. இதுகுறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.அதனால் தற்போது பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டு வருகிறது.இதனை மனுவாக தயாரித்து மீண்டும் நகராட்சி நிர்வாகத்திடம் அளிக்கப்படும்.

    இதற்கு மேலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் பொதுமக்களை திரட்டி போராட்டங்கள் நடத்தப்படும் என அவர் தெரிவித்தார். இதில் பாஜக., நகர தலைவர் வடிவேல், 18 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் சசிரேகா மற்றும் பாஜக., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • நீரோடை, தற்போது கழிவுநீர் கால்வாயாக மாறிவிட்டது.
    • குடிநீர் குழாய்கள் மீதும் கழிவுநீர் செல்வதாக அப்பகுதிபொதுமக்கள் கூறியிருந்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம் பாளையம் ஊராட்சி சாய் குரு கார்டன் பகுதியில் இருந்த நீரோடை, தற்போது கழிவுநீர் கால்வாயாக மாறிவிட்டது. கழிவு நீர் கால்வாய் அருகே குடிநீர் குழாய் இணை ப்புகளும் செல்கின்றன.

    இந்த நிலையில் கழிவுநீர் கால்வாயில் அதிகப்படியான சேறு, மற்றும் சகதிகள் சேர்ந்து விட்டன. இதனால் அதன் அருகில் செல்லும் குடிநீர் குழாய்கள் மீதும் கழிவுநீர் செல்வதாக அப்பகுதிபொதுமக்கள் கூறியிருந்தனர். இந்த நிலையில் கழிவு நீர் கால்வாயை, சுத்தம் செய்யுமாறு ஆறுமுத்தாம் பாளையம்ஊராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க ப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அந்தப் பகுதியில் திரண்ட பொது மக்கள் கழிவு நீர் கால்வாயை சுத்தம் செய்யாவிட்டால் ஊராட்சி மன்றஅலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த வார்டு உறுப்பினர் முத்துக்கு மாரசாமி, பொது மக்களிடம் பேச்சுவா ர்த்தை நடத்தி அவ ர்களை சமாதா னப்படுத்தி, இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் பாரதி சின்னப்பனுக்கு தகவல் அளித்தார்.

    இதையடுத்து கழிவு நீர் கால்வாய் சுத்தம் செய்வத ற்காக பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. பொதும க்களின் போராட்ட அறிவி ப்பால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    அந்த வழியே நடந்து செல்வோர் தவறி கழிவுநீர் கால்வாய்க்குள் விழும் அபாயம் உள்ளது என மாலைமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.

    பல்லடம்:

    பல்லடம் பஸ் நிலையம் முன்பு உள்ள பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. அதில் கழிவுநீர் கால்வாய்க்குள் இறங்கி சுத்தம் செய்ய 2 இடங்களில் குழிகள் போடப்பட்டுள்ளது. ஆனால் அந்த குழிகளுக்கு மூடிகள் போடப்படவில்லை. இதனால் அந்த வழியே நடந்து செல்வோர் தவறி கழிவுநீர் கால்வாய்க்குள் விழும் அபாயம் உள்ளது என மாலைமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.

    இதனைப் பார்த்த அரசு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்தக் கழிவு நீர் கால்வாய் குழிகளுக்கு மூடி அமைக்க அறிவுறுத்தினர். இதனையடுத்து கழிவு நீர் கால்வாய் குழிகளுக்கு பணியாளர்கள் மூடி அமைத்தனர்.

    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
    • ரூ. 1.80 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி ெதாடங்கி நடந்து வருகிறது

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அடுத்த ஜாப்ராபாத் ஊராட்சிக்குட்பட்ட பீர்ஜி தெருவில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ரூ. 1.80 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி கடந்த 2 மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டு பணிகள் நடைப்பெற்று வருகிறது.

    இந்த நிலையில் பீர்ஜி தெருவில் அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் அப்பகுதியில் உள்ள மின்கம்பத்துடன் சேர்த்து கட்டியுள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    மின்கம்பத்துடன் சேர்த்து கழிவு நீர் கால்வாயை கட்டிய ஒப்பந்ததாரர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தின் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×