search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Waste water channel"

    • பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட பல வார்டுகளில் இருந்து கழிவு நீர், வார்டு எண்.8-க்கு உட்பட்ட அனைத்து வீதிகளின் வழியாக வந்து,
    • தி.மு.க. வட்டச் செயலாளர் ரத்தினசாமி மற்றும் கயாஸ் அகமது, விக்னேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட பல வார்டுகளில் இருந்து கழிவு நீர், வார்டு எண்.8-க்கு உட்பட்ட அனைத்து வீதிகளின் வழியாக வந்து, பின்னர் பச்சாபாளையம் குட்டையை அடையும் வகையில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டிருந்தது. இதனால் அடிக்கடி கழிவுநீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் நகர்மன்ற உறுப்பினர் சுகன்யா ஜெகதீஷிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து பட்டேல் வீதியில் வரும் கழிவு நீரை கருப்புராயன் கோவில் வீதி வழியாக செல்லாமல், பட்டேல் வீதி வழியாகவே செல்லும் வகையில் புதிய கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு திட்டமிடப்பட்டது. அதன்படி ரூ.4 லட்சம் மதிப்பில் இப்பணி நடைபெற உள்ளது. இதற்கான பூமி பூஜை நடந்தது. இதற்கு நகராட்சி தலைவர் கவிதா மணி தலைமை தாங்கி, பூமி பூஜையை தொடங்கி வைத்தார். நகர் மன்ற உறுப்பினர் சுகன்யா ஜெகதீஷ் முன்னிலை வகித்தார். இதில் நகராட்சி பணி மேற்பார்வையாளர் ராசுகுட்டி, திமுக .,விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஜெகதீஷ், ஒப்பந்ததாரர்கள் வெள்ளியங்கிரி, கார்த்திகேயன், தி.மு.க. வட்டச் செயலாளர் ரத்தினசாமி மற்றும் கயாஸ் அகமது, விக்னேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குடிநீரோடு கலக்கும் அபாயம் உள்ளது
    • அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் கவன குறைவால் நடந்துள்ளது

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அயிலம் ஊராட்சி, கவரபாளையம் பகுதியில் பொதுமக்கள் வசதிக்காக அரசு சார்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டது.

    இதில் கட்டி முடிக்கப்பட்ட கால்வாய் நடுவே குடிநீர் அடி பம்பு உள்ளது. குடிநீர் அடி பம்புவை அகற்றாமல் இருப்பதால் கழிவுநீர், குடிநீரோடு கலக்கும் அபாயம் உள்ளது. அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் கவன குறைவாலே இந்த தவறு நடந்துள்ளது என அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    அடி பம்பு அகற்றாமல் கழிவு நீர் கால்வாய் கட்டப்பட்ட சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
    • ரூ. 1.80 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி ெதாடங்கி நடந்து வருகிறது

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அடுத்த ஜாப்ராபாத் ஊராட்சிக்குட்பட்ட பீர்ஜி தெருவில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ரூ. 1.80 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி கடந்த 2 மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டு பணிகள் நடைப்பெற்று வருகிறது.

    இந்த நிலையில் பீர்ஜி தெருவில் அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் அப்பகுதியில் உள்ள மின்கம்பத்துடன் சேர்த்து கட்டியுள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    மின்கம்பத்துடன் சேர்த்து கழிவு நீர் கால்வாயை கட்டிய ஒப்பந்ததாரர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தின் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • செந்தில்குமார் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    • வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வளையாம்பட்டு பகுதியில், சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலை உள்ளது.

    இந்த சாலைக்கு அருகில் செல்லும் சர்வீஸ் சாலையில் ஏராளமான கழிவு நீர், மழை நீர் தேங்கி நிற்கிறது. இந்த வழியாக தினசரி 100-க்கும் மேற்பட்ட பஸ், லாரி மோட்டார் சைக்கிள்கள் செல்கின்றன.

    மேடு பள்ளங்கள் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்று வாணியம்பாடி தொகுதி எம் எல் ஏ கோ.செந்தில்குமார் அந்த இடங்களை ஆய்வு செய்து உடனடியாக மழைநீர் மற்றும் கழிவுநீர் செல்ல கால்வாய்களை அமைக்கவும், அதற்கான உரிய நடவடிக்கை எடுக்க கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

    ஆய்வின்போது வளையாம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் திருப்பதி கவுண்டர் ஒன்றிய குழு உறுப்பினர் வசந்தி அருள்ராஜ், வார்டு கவுன்சிலர் எம். சத்தியப்பன், முன்னாள் கவுன்சிலர்கள் பாரதிதாசன், வரதன், செல்வராஜ் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    ×