search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் ரவிச்சந்திரன்"

    • கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ரவிச்சந்திரன் வழங்கினார்.
    • இலவச வீட்டுமனை பட்டா உள்பட மொத்தம் 337 மனுக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடை பெற்றது. கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் பெற்றுக் கொண்டார்.

    தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல துறையின் மூலம் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 3-மாற்றுத் திறனாளிகளுக்கு காதொலி கருவிகள் தலா ரூ.8 ஆயிரத்து 500 வீதம் மொத்தம் ரூ.25 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ரவிச்சந்திரன் வழங்கினார்.

    மேலும் இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்திதரக் கோருதல், பட்டாமாறுதல், மாற்றத் திறனாளிகள் உதவித் தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 337 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசா ரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந் தப்பட்ட அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) ஷேக், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முருகானந்தம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராம சுப்பிரமணியன் மற்றும் அனைத்துத்துறை அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.

    • தென்காசி மாவட்டத்தில் பல்வேறு அரசு திட்டப்பணிகளை குழுவினர் பார்வையிட்டனர்.
    • ஆய்வில் டி.ஆர்.ஓ. பத்மாவதி உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட் டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதி மொழிக்குழு தலைவர் வேல்முருகன் தலைமையில், தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், சட்டமன்ற பேரவை செயலர் சீனிவாசன் மற்றும் உறுதிமொழிக்குழு உறுப்பி னர்கள் அண்ணாதுரை, அருள், மோகன், ராமலிங்கம், வில்வநாதன், ஜெயகுமார் ஆகியோர் முன்னிலையில் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட னர்.

    அதன்படி தென்காசி மாவட்டத்தில் பல்வேறு அரசு திட்டப் பணிகளை பார்வையிட்டனர். பின்னர் குற்றாலத்தில் உள்ள கலைவாணர் அரங்க த்தை புதுப்பித்தல் பணி நிறைவடைந்து பயன்பாட்டில் இருப்பதை பார்வையிட்டதோடு, குற்றலத்தில் தமிழ்நாடு தொழிலாளர் நல அரங்கம் வாரியத்தின் அமைப்புசார தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தங்குவத ற்கென உள்ள "திரு.வி.க. இல்லம்" எனும் விடுமுறை ஓய்வு இல்லம் புதுப்பித்தல் பணிகளை குழுவினர் பார்வையிட்டனர்.

    தொடர்ந்து குற்றாலம் பிரதான அருவி அருகில் சுற்றுலா பயணிகளுக்கு கூடுதலாக பெண்கள் உடைமாற்றும் அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும், கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு நிவாரணம் வழங்கவும், கோவில் சுவரில் ஏற்பட்டிருக்கும் தீக்கறையை விரைவில் சரி செய்ய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கவும் ஆய்வு மேற்கொண்டனர்.

    மேலும், புதிதாக கட்டப்பட்டுள்ள தென்காசி மாவட்ட போலீஸ் அலுவலக கட்டிடத்தையும், தென்காசி அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த அவசர கால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையத்திற்கு கட்டப்பட்டு வரும் புதிய கட்டிட பணிகளையும், தென்காசி அரசு மருத்துவமனையில் புதிய மாவட்ட மருந்துகிடங்கு கட்டுமான பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    ஆய்வின்போது டி.ஆர்.ஓ. பத்மாவதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, இணை இயக்குநர் (சுகாதார பணிகள்) பிரேமலதா, துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) முரளிசங்கர், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள் வில்லியம் ஜேசுதாஸ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • தென்காசியில் 3 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
    • தேர்வர்கள் காலை 8.30 மணிக்கு தேர்வு மையங்களுக்கு கண்டிப்பாக வர வேண்டும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் 2023-ம் ஆண்டு வட்டாரக் கல்வி அலுவலர் தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

    இத்தேர்வுக்காக தென்காசியில் உள்ள இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மஞ்சம்மாள் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் புனித மிக்கேல் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மையங்களில் மொத்தம் 974 தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

    தேர்வெழுத வருகை தரும் தேர்வர்கள் அனைவரும் காலை 8.30 மணிக்கு தேர்வு மையங்களுக்கு கண்டிப்பாக வருகை தர வேண்டும். தேர்வர்கள் அனைவரும் தீவிர பரிசோதனைக்கு பிறகே தேர்வு மையங்களின் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். காலை 9.30 மணிக்கு பின்னர் வரும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

    மேலும் தேர்வர்கள் செல்போன், லேப்டாப் மற்றும் கால்குலேட்டர்கள் போன்ற உபகரணங்களை தேர்வு மையங்களின் உள்ளே கொண்டு செல்ல அனுமதி கிடையாது.

    தேர்வில் முறைகேடு களில் ஈடுபட்டால் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளை தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு எழுத தடை விதிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    • மாசற்ற காற்று, மனிதர்களுக்கு மட்டுமல்ல பூமியின் அனைத்து உயிர்களுக்கும் இன்றியமையாத தேவையாகும்.
    • சர்வதேச தூய காற்று தினம் 2020-ம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நீல வானத்திற்கான சர்வதேச தூய காற்று தினம் 2023-ஐ முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசார வாகனத்தினை கலெக்டர் ரவிச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    காற்று மாசுபாடு பூமியின் சுற்றுச்சூழல், பல்லுயிர் மற்றும் காலநிலை ஆகியவற்றை மோசமாக பாதிக்கிறது. மாசற்ற காற்று, மனிதர்களுக்கு மட்டுமல்ல பூமியின் அனைத்து உயிர்களுக்கும் இன்றியமையாத தேவையாகும்.

    ஆகவே 2019-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அதன் நிலையான வளர்ச்சி குறித்த தனது 74-வது அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, காற்று மாசுபாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்து வதற்காக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 7-ந் தேதி நீல வானத்திற்கான சர்வதேச தூய காற்று தினம் கடந்த 2020-ம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

    இதன் நோக்கமானது 2030-ம் ஆண்டுக்குள் காற்று, நீர் மற்றும் மண்ணில் உள்ள வேதிப்பொருட்கள் போன்ற மாசுக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் நோய்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டியதன் அவசியத்தை அங்கீகரித்து அதன் மூலம் அனைவருக்கும் சுத்தமான காற்று என்ற தீர்மானத்தை ஐ.நா. ஏற்றுக்கொண்டது. எனவே காற்றின் தரம் மற்றும் கழிவு மேலாண்மை மூலம் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளை குறைக்க நாமும் நமது பங்களிப்பினை வழங்க வேண்டியது அவசியமாகும்.

    இந்த ஆண்டுக்கான செப்டம்பர் 7-ந் தேதி கொண்டாடப்படும் நீல வானத்திற்கான சர்வதேச தூய காற்று தினத்தின் கருப்பொருளான "தூய காற்றிற்காக ஒன்றி னைவோம்" என்பதை நாம் அனைவரும் நடைமுறைப் படுத்தி நீலவானின் தூய காற்றினை பெற்றிடுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் உதவி சுற்றுசூழல் பொறியாளர் சுகுமார், உதவி பொறியாளர் சுற்றுசூழல் ஜெபா , உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

    • தென்காசி மாவட்டத்தில் சரிவர மழை பெய்யாததால் விவசாயிகள் பெரிதும் சிரமம் அடைந்துள்ளனர்.
    • பயிரிட்ட விளைநிலங்கள் வெயிலின் தாக்கத்தால் கருகிவிட்டது.

    தென்காசி:

    தென்காசி எம்.எல்.ஏ.பழனி நாடார் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரனை அவரது அலுவலகத்தில் சந்தித்து மனு ஒன்றை வழங்கினார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தென்காசி மாவட்டத்தில் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் சரிவர மழை பெய்யாததால் விவசாயிகள் பெரிதும் சிரமம் அடைந்துள்ளனர். குற்றால அருவிகளிலும் தண்ணீர் வரத்து இல்லாததால் அதை நம்பி இருந்த ஆறு, குளங்களும் வறண்டு காணப்படுகின்றது. இதனால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பயிரிட்ட விளைநிலங்கள் வெயிலின் தாக்கத்தால் கருகிவிட்டது. மேலும் பொதுமக்கள் குடிநீருக்கு மிகவும் கஷ்டப்பட்டு வருவதால் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே தென்காசி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு போதிய நிவாரணம் வழங்க வேண்டும். குறிப்பாக எதிர்வரும் காலங்களில் இதுபோன்று நடைபெறாமல் இருக்க இரட்டைக்குளம், ஊத்துமலை உள்ளிட்ட ஏனைய கால்வாய்கள் பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

    • தேவிபட்டணம் ஊராட்சி தலைவர் ராமராஜ், கலெக்டர் ரவிச்சந்திரனிடம் மனு அளித்தார்.
    • ஊராட்சி நிர்வாகத்தை ஒழுங்காக நடத்த மாதந்தோறும் ரூ.50 ஆயிரம் தரவேண்டும் என்று கேட்கிறார்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் யூனியன் தேவிபட்டணம் ஊராட்சி தலைவராக தி.மு.க.வை சேர்ந்த ராமராஜ் இருந்து வருகிறார். இவர் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரனிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது நான் பஞ்சாயத்து தலைவராக வெற்றி பெற்றுவிட்டேன். அந்த சமயத்தில் தேர்தலில் தோல்வி அடைந்த நபர், காழ்புணர்ச்சியோடு தொடர்ச்சியாக என் மீது சாதிய தீண்டாமை செய்து வருகிறார். நான் படித்து வக்கீலாக உள்ளேன். எனக்கு இந்த நிகழ்வுகள் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.

    மேலும் ஊராட்சி நிர்வாகத்தை ஒழுங்காக நடத்த மாதந்தோறும் ரூ.50 ஆயிரம் தரவேண்டும் என்று கேட்கிறார். அதற்கு நான் மறுக்கவே, எனக்கு மிரட்டல் விடுத்து வருகிறார். ஏற்கனவே என்னை அவர் சாதியை சொல்லி திட்டியதாக நான் சிவகிரி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரை சில காரணங்களால் வாபஸ் பெற்றேன். தற்போது மீண்டும் மிரட்டி வருகிறார். அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையத்தை நாடுவேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அப்போது தேவி பட்டணம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மாடசாமி, வார்டு உறுப்பினர்கள் 8 பேர் கலந்து கொண்டனர்.

    • 10 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா உள்பட மொத்தம் 407 மனுக்கள் பெறப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் பெற்றுக்கொண்டார்.

    அதை்தொடர்ந்து மாற்றுத்தி றனாளிகள் நல துறையின் மூலம் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 10 மாற்றுத் திறனாளிகளுக்கு காதொலி கருவிகள் தலா ரூ.8,500 வீதம் மொத்தம் ரூ.85 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ரவிச்சந்திரன் வழங்கினார்.

    மேலும் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்திதர கோருதல், பட்டாமாறுதல், மாற்றுத்தி றனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 407 மனுக்கள் பெறப்பட்டது.

    பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் கலெக்டர் அறிவுறுத்தினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) ராஜமனோகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கரநாராய ணன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முருகானந்தம், மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
    • அதிகமான வாக்காளர்களை கொண்ட வாக்கு சாவடிகளை பிரிப்பது தொடர்பாக கூட்டத்தில் கருத்துக்கள் கேட்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தம் தொடர்பாக அனைத்து அங்கீகரி க்கப்பட்ட அரசியல் கட்சி யினருக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பாரதீய ஜனதா, ஆம்ஆத்மி, பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் தே.மு.தி.க. கட்சிகளின் சார்பாக அதன் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி தற்போது ள்ள வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு இணங்க 1,500 வாக்காளர்களுக்கு அதிகமான வாக்காளர்களை கொண்ட வாக்கு சாவடி களை இரண்டாக பிரித்து வாக்குசாவடி மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக விளக்க மளிக்கப்பட்டு அரசியல் கட்சியை சேர்ந்த பிரதிநிதிகளிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது.

    இதில் தென்காசி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) முருகானந்தம், வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் டி.ஆர்ஓ., லா வண்யா, தேர்தல் தனி தாசில்தார் ஹென்றி பீட்டர் மற்றும் வருவாய் தாசில் தார்கள், தேர்தல் தனித் துணை தாசில்தார்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • சிவகிரி வட்டம் பச்சேரி கிராமத்தில் வருகிற 20-ந்தேதி ஒண்டிவீரன் 252-வது வீரவணக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    • அனைவரும் கூட்டமாக செல்லாமல் 4 பேர்கள் வீதம் சென்று மரியாதை செலுத்திட முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம் பச்சேரி கிராமத்தில் வருகிற 20-ந்தேதி ஒண்டிவீரன் 252-வது வீரவணக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    மேலும் வருகிற (செப்டம்பர்) 1-ந்தேதி நெல்கட்டும்செவல் கிராமத்தில் பூலித்தேவன் 308-வது பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளூர், தென்காசி மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்தும் மற்றும் பிற மாவட்டத்தில் இருந்தும் வருகை தரும் பொதுமக்கள் மற்றும் சமுதாய அமைப்புகளை சேர்ந்தவர்கள் வருவார்கள்.

    இதையொட்டி தென்காசி மாவட்டம் முழுமைக்கும் இன்று மாலை 6 மணி முதல் 21-ந்தேதி முற்பகல் 10 மணி வரை மற்றும் 30-ந்தேதி மாலை 6 மணி முதல் 2-ந்தேதி காலை 10 மணி வரை குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144 தடை உத்தரவு அமலில் இருக்கும்.

    இந்த நேரங்களில், அனைவரும் கூட்டமாக செல்லாமல் 4 பேர்கள் வீதம் சென்று மரியாதை செலுத்திட முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கான அரசாணை கடந்த 7.12.2022-ம் ஆண்டு தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    • பரிந்துரைக்கப்பட்ட இடத்தில் நீதிமன்றமும், நீதிபதிகள் குடியிருப்பும் அமைவதற்கு ஆவணம் செய்ய வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் கலெக்டர் ரவிச்சந்திரனை சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    தென்காசி மாவட்டத்தில் அமைய இருக்கிற ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் மற்றும் குடியிருப்புககுக்கான இடம் ஆய்க்குடி கிராமம் சர்வே எண் 84-ல் 5.54 ஹெக்டேர் மற்றும் சர்வே எண் 97-ல் 1.95 ஹெக்டேர் ஆக மொத்தம் 18.5 ஏக்கர் நிலம் நீதிமன்றம் கட்டிடம் கட்டுவதற்காக பரிந்துரைக்கப்பட்டது. ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கான அரசாணை கடந்த 7.12.2022-ம் ஆண்டு தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசாணை எண் 917 ஆகும்.

    தற்போது நீதிமன்ற கட்டிடம் கட்டுவதற்கு பரிந்துரைக்கப்பட்ட இடத்தில் பிற கட்டிடங்கள் கட்டுவதற்கு பரிந்துரைக்கப்பட்டதாக அறிகிறோம். ஏற்கனவே மேற்கண்ட இடத்தில் நீதிமன்றமும், நீதிபதிகள் குடியிருப்பும் அமைவதற்கு ஆவணம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இது சம்பந்தமாக கலெக்டரிடம் சிவபத்மாதன் கூறுகையில், ஏற்கனவே பாதை பிள்ளையான் கட்டளைக்கு பாத்தியப்பட்ட இடத்தை இந்த இடத்திற்கு செல்வதற்கு வழிப்பாதை அமைத்து கொடுக்க வேண்டும் என்று ஏற்கனவே இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் குமரகுருபரனை சந்தித்து மனுக்களையும் வழங்கி இருக்கிறோம். அன்றைய தினத்தில் பொறுப்பில் இருந்த மாவட்ட கலெக்டர் ஆகாஷ், இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் வழிப்பாதை சம்பந்தமாக சில விதிமுறை கள் இருப்பதை சுட்டிக்காட்டி யதாக கூறினார்.

    அப்போது தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் சாமிதுரை, கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சீனித்துரை, மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் வேலுச்சாமி, வக்கீல்கள் சங்கத் தலைவர் புகழேந்தி, கைலாசம், மாட கண்ணு, வீரமணி கண்டன், ராஜா முத்துக்குமாரசாமி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • விழாவில் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
    • நிகழ்ச்சியில் பல்வேறு பள்ளிகளில் இருந்து 40 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றனர்.

    தென்காசி:

    தென்காசி அருகே உள்ள மேலகரம் அரசுப்பொது நூலகம் மற்றும் குறிஞ்சி வாசகர் பேரவை இணைந்து தென்காசி வட்டார பள்ளிகளில் முதலிடம் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு குறிஞ்சி வாசகர் பேரவை தலைவர் பழனியப்பன் தலைமை தாங்கினார். பொருளாளர் காசிவிஸ்வநாதன் முன்னிலை வகித்தார். வாசகர் பேரவை செயலர் சங்கரநாராயணன் வரவேற்று பேசினார்.

    விழாவில் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார். பல்வேறு பள்ளிகளில் இருந்து 40 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றனர். முன்னதாக தென்காசி நூலகர் சுந்தர் வாழ்த்துரை வழங்கினார். நன்நூலகர் செங்கோட்டை ராமசாமி விழாவை தொகுத்து வழங்கினார்.

    இவ்விழாவில் பள்ளி ஆசிரியர்கள் பெற்றோற்கள் மற்றும் குறிஞ்சி வாசகர் பேரவையினர் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மேலகரம் பொறுப்பு நூலகர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

    • அங்கன்வாடி கட்டிடம்,ரேசன் கடை கட்டிடம் கட்டும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் ஆய்க்குடி பேரூராட்சி பகுதியில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை தொடர்பான முகாம்களை நேரில் பார்வை யிட்டார்.

    ஆய்க்குடி பேரூராட்சியில் நபார்டு திட்டம் 2022-23-ன் தார்சாலை அமைத்தல் பணிகள், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2022-23-ன் அங்கன் வாடி கட்டிடம் மற்றும் 13-வது வார்டு பகுதியில் ரேசன் கடை கட்டிடம் கட்டும் பணிகள் , 15-வது நிதிக்குழு திட்டம் 2021-22-–ன் கீழ் மேற்கொ ள்ளப்பட்டு வரும் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுதல் மற்றும் போர்வெல் அமைத்தல் ஆகியவற்றை கலெக்டர் ஆய்வு செய்தார். மேலும் ஆய்க்குடி தனியார் திருமண மண்ட பத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் பகுதி –2-ன் கீழ் நடை பெறும் முகாமையும் பார்வை யிட்டார்.

    இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் ந.சாந்தி, துணைத் தலைவர் ச.மாரியப்பன் , 4-வது வார்டு உறுப்பினர் புண மாலை, முன்னாள் பேரூ ராட்சி மன்றத்தலைவர் சிவ குமார், இளநிலை பொறி யாளர் கோபி, பேரூ ராட்சி பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×