search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டரிடம் மனு"

    • கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் தவறான ஆபரேசன் செய்த டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
    • கடலூர் அரசு மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதம் 19-ந் தேதி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தேன்.

    கடலூர்

    பண்ருட்டி சிறுவத்தூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி பத்மாவதி. இவர்கள் தங்கள் குழந்தைகளுடன் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்தனர். பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகவனிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடலூர் அரசு மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதம் 19-ந் தேதி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தேன் அன்றைய தினம் எனக்கு ஆபரேஷன் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. இதனை தொடர்ந்து 11 நாட்கள் கழித்து எனக்கு தொடர்ந்து வயிற்று வலி இருந்ததால் கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மீண்டும் சேர்க்கப்பட்டேன்.

    ஆனால் வலி நிற்காத காரணத்தினால் அக்டோபர் மாதம் 15 -ந் தேதி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டேன். இந்த நிலையில் தவறான ஆபரேசன் செய்ததாக டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தோம்.

    இதனை தொடர்ந்து 2 முறை அரசு மருத்துவமனை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஆனால் இதற்கு இதனால் வரை பதில் மனு வழங்கவில்லை. ஆகையால் இது சம்பந்தமாக உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இதனை தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகவன் உடனடியாக கடலூர் அரசு மருத்துவமனை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பத்மாவதி அளித்த புகாரின் அடிப்படையில் அது சம்பந்தமாக விசாரணை நடத்தியது தொடர்பாக ஆவண கோப்புகளை உடனடியாக எடுத்து வந்து இதற்கான தீர்வை ஏற்படுத்த வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டார். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. 

    • பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் கோரிக்கை மனுக்களை கலெக்டர் சமீரனை சந்தித்து அளித்தனர்
    • பரிசு தொகுப்பில் சர்க்கரை மற்றும் பச்சரிசி உடன் ரூ.1000 மட்டும் வழங்கப்பட உள்ளது.

    கோவை,

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் கோரிக்கை மனுக்களை கலெக்டர் சமீரனை சந்தித்து அளித்தனர்.

    பாரதீய ஜனதா விவசாய அணி சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் வர இருக்கும் விவசா யிகளின்பண்டிகையான தைப் பொங்கல் அன்று தமிழக மக்களுக்கு வழங்க இருக்கும் பரிசு தொகுப்பில் சர்க்கரை மற்றும் பச்சரிசி உடன் ரூ.1000 மட்டும் வழங்கப்பட உள்ளது.

    இத்துடன் சேர்த்து விவசாயிகள் பயிரிட்ட செங்கரும்பு, வெல்லம், தேங்காய் ஆகியவற்றை சேர்த்து தமிழக மக்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இதனை வழங்குவதன் மூலம் தமிழக விவசாயிகள் வாழ்வாதாரத்தை காப்பற்ற கோரி தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இதனை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என கூறி இருந்தனர்.

    கோவை கணபதி கட்டபொம்மன் வீதியைச் சேர்ந்த சிவலிங்கம்என்பவர் கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார்.அப்போது அவர் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்மாவில் ஈடுபட்டார். உடனே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி எழுந்து செல்ல கூறினர். பின்னர் அவர் கலெக்டரிடம் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- நான் கணபதி விளாங்குறிச்சி பகுதியில் ஒரு இடத்தை ஒப்பந்தம் மூலம் வாடகைக்கு எடுத்து தொழில் நடத்தி வந்தேன். அந்த இடத்தில் மர்ம நபர்கள் உள்ளே புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்தி திருடி சென்று விட்டனர். இது குறித்து கோவில்பாளையம் போலீசில் புகார் அளித்தேன். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகின்றனர். எனவே கலெக்டர் இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அத்திக்குட்டை பகுதி பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    கோவை காளப்பட்டி அருகே உள்ள அத்திக் குட்டை அண்ணா நகர் பகுதியில் 50 ஆண்டுகளாக 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அரசு ஒதுக்கிய இந்த இடத்துக்கு இதுவரை பட்டா கொடுக்கவில்லை.

    கடந்த 1990-ம் ஆண்டு கோவை மாவட்ட கலெக்டரும், கடந்த 2004-ம் ஆண்டு தமிழக கவர்னரும் பட்டா வழங்க உத்தரவிட்டனர்.

    2010-ம் ஆண்டு உயர் நீதிமன்ற உத்தரவில் அனைத்து தரப்பினரையும் விசாரித்து பட்டா வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால் தற்போது வரை பட்டா வழங்க நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அத்திக்குட்டை அண்ணா நகர் குடியிருப்பு தாரர்களுக்கு நில அளவை செய்து பட்டா வழங்க வேண்டும்.

    • உரிமையை ஊட்டி நகரமன்றத்திற்கு மீண்டும் வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
    • அரசிற்கு பரிந்துரை செய்து நிதியினை பெற்றுத்தர வேண்டும்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊட்டி நகரமன்ற தலைவர் வாணீஸ்வரி மற்றும் துணை தலைவர் ரவிகுமார் தலைமையில் நகரமன்ற உறுப்பினர்கள் கலெக்டரை சந்தித்து நகராட்சியில் மேற்கொள்ள வேண்டிய முக்கிய வளர்ச்சி பணிகள் குறித்த மனுவினை வழங்கினர். அந்த மனுவில் ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டிடம் கட்டுவதற்கான அனுமதியினை எளிதில் பெற ஏதுவாக 1500 சதுரடி வரையிலான கட்டிடங்கள் கட்டுவதற்கான அனுமதி வழங்கும் உரிமையை ஊட்டி நகரமன்றத்திற்கு மீண்டும் வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பெய்து வந்த கன மழை காரணமாக அனைத்து சாலைகளும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. தடுப்புசுவர்கள், மழை நீர் கால்வாய்கள் சேதமடைந்துள்ளது. இவற்றை சரிசெய்திட சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய அரசிற்கு பரிந்துரை செய்து நிதியினை பெற்றுத்தர வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. நிகழ்ச்சியில் ஊட்டி நகர மன்ற உறுப்பினர்கள் ஜார்ஜ், முஸ்தபா, எல்கில் ரவி, தம்பி இஸ்மாயில், ரமேஷ், கீதா, நாகமணி, ரீட்டா, விஷ்னுபிரபு, ரகுபதி, கஜேந்திரன், செல்வராஜ், திவ்யா, மீனா, பிளோரினா, மேரி பிளோரினா, வினோதினி, வனிதா, அனிதாலட்சுமி, விசாலாட்சி, அபுதாகீர், நாதன், நாகராஜ், ரஜினிகாந்த், உமா நித்யசத்யா, ராஜலட்சுமி, ராஜேஸ்வரி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

    • பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் வழங்கப்பட்டது
    • பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்த வலியுறுத்தல்

    திருப்பத்தூர்:

    தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் மாநில பொருளாளர் சி. ஜெயக்குமார் தமிழக அரசுக்கு கோரிக்கை மனுவை கலெக்டர் அமர்குஷ்வாஹாவிடம் அளித்துள்ளார் அதன் விவரம் வருமாறு:-

    தமிழக முதல்வர், அன்றைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த போதும் சரி, திமுக தேர்தல் அறிக்கையிலும் சரி, சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரைக் சென்ற இடங்களிலும் சரி, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் அதிக எதிர்பார்ப்பான பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவோம் என்றார்.

    ஆட்சிக்கு வநது 18 மாதங்கள் கடந்தும் இதுவரை அது பற்றின அறிவிப்புகள் ஏதும் இல்லாதது ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திற்கு பிறகு பஞ்சாப் அரசு கூட தனது மாநிலத்தில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்தியுள்ளது.

    ஏன் தற்போது இமாச்சல பிரதேச அரசு பொறுப்பெற்றவுடன் பழைய ஓய்வூதிய திட்டத்தை தனது முதல் கூட்டத்திலேயே செயல்படுத்த அறிவித்துள்ளார்கள் தமிழக முதல்வர் அவர்களும் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பை வருகிற ஜன-1 புத்தாண்டு தினத்தில் அறிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

    மேலும் ஜூலை மாதம் முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வை இதுவரை வழங்காமல் இருப்பது அரசு ஊழியர்களின் மத்தியில் ஆசிரியர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 100 ஆண்டுகளுக்கு முன்பு, அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு, அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்கியுள்ளது.
    • மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் கிராம மக்கள் தனித்தனியாக மனு அளித்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி அடுத்த அன்னசாகரம் கிராமத்தில் இந்து அறநிலைய துறைக்கு சொந்தமான விநாயகர் சிவசுப்பிரமணியசாமி கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலுக்கு சொந்தமாக அருகில் உள்ள இடத்தில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு, அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு, அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்கியுள்ளது.

    அதில் அந்த மக்கள் வீடு கட்டி, பல தலைமுறைகளாக தற்பொழுது வரை வசித்து வருகின்றனர். இந்நிலையில் அதே பகுதியைச் சார்ந்த ஒருவர் கோவில் நிலம் முழுவதையும், ஆக்கிரமிப்பு செய்து, இறந்து போன தந்தை பெயரில் போலியாக ஆவணங்களை தயாரித்து உள்ளார்.

    தொடர்ந்து கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்களை கட்டி வந்துள்ளார். ஆனால் அரசு வழங்கிய இடத்தில் வீடு கட்டி வசித்து வரும் கிராம மக்களை, கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து, போலியாக பட்டா பெற்றுள்ளதாக பல்வேறு அலுவலகங்களில் மனு கொடுத்தும், தொடர்ந்து கிராம மக்களை மிரட்டியும் வந்துள்ளார்.

    இதனை தொடர்ந்து கடந்து சில நாட்களுக்கு முன்பு மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் சார் ஆட்சியர் இந்த பகுதிகளை விசாரணை செய்து கிராம மக்களுக்கு வழங்கப்பட்ட இடம் அரசு வழங்கியது தான் என அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

    இதையடுத்து அரசு நிலத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும் என கூறி அன்னசாகரம் கிராமத்தைச் சார்ந்த 300-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் தனித்தனியாக கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் கிராம மக்கள் தனித்தனியாக மனு அளித்தனர்.

    கிராம மக்களுக்கு உரிய பாதுகாப்பை மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தேசிய கொள்கைப்படி மாநகராட்சி நிர்வாகம் சாலை யோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கியுள்ளது.
    • பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்

    திருப்பூர் : 

    திருப்பூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் பழைய பேருந்து நிலையம் உள் பகுதியில் சுமார் 30 ஆண்டு காலமாக பொதுமக்களுக்கு மலிவு விலையில் 2க்கு 2 அளவுள்ள தள்ளுவண்டியில் 30 பேர் கடலை, பொரி வியாபாரம் செய்து வருகிறோம்.

    தேசிய கொள்கைப்படி மாநகராட்சி நிர்வாகம் சாலை யோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கியுள்ளது. தற்போது திருப்பூர் பழைய பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. அங்கு போக்குவரத்து , பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். 

    • திருப்பத்தூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
    • மீன் மார்க்கெட்டில் பார்மலின் திரவம் கலக்கப்பட்டு விற்கப்படுவதை தடுப்பதற்கு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டியிடம் மக்கள் உரிமை கூட்டணி மாநில பொதுச் செயலாளர் விஸ்டம் கமருதீன் மனு அளித்தார். அதில், நகரில் செயல்பட்டு வரும் மருதுபாண்டியர் அரசு மருத்துவ மனையில் விபத்து போன்ற காலகட்ட ங்களில் ஏற்படும் இறப்புகளை தவிர்ப்பதற்காக அவசர சிகிச்சை பிரிவை ஏற்படுத்த வேண்டும்.

    பொது பிரிவுக்கு என்று மட்டும் தற்சமயம் மருத்துவர்கள் இருந்து வரும் நிலையில் காது, மூக்கு, தொண்டை மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு என்று மருத்துவர்களை நிரந்தரமாக பணியமர்த்த வேண்டும். நகரில் செயல்பட்டு வரும் மீன் மார்க்கெட்டில் பார்மலின் திரவம் கலக்கப்பட்டு விற்கப்படுவதை தடுப்பதற்கு துறை சார்ந்த அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. அப்போது மாவட்ட தலைவர் சதக்கத்துல்லா உடனிருந்தார்.

    • சுமார் 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
    • நாள் ஒன்றுக்கு ரூ.400 தினக்கூலி வழங்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணிபுரியும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியுள்ளதாவது, நாங்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம், வடக்கனந்தல், தியா கதுருகம் மணலூர்பேட்டை, சின்னசேலம் ஆகிய பேரூராட்சிகள் மற்றும் உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி ஆகிய நகராட்சிகளில் தினக்கூலி அடிப்படையில் தமிழக அரசின் டெங்கு காய்ச்சல்,மலேரியா, யானைக்கால், கொரோனா உள்ளிட்ட நோய் தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

    எங்களுக்கு தினமும் நாள் ஒன்றுக்கு ரூ.289 தினக்கூலியாக வழங்குகின்றனர். இந்த பணத்தை வைத்து வாழ்க்கை நடத்த மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் எங்களைப் போன்று ஊராட்சிகளில் பணிபுரியும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு ரூ.400 தினக்கூலி வழங்கப்படுகிறது. இதே போல் எங்களுக்கும் நாள் ஒன்றுக்கு ரூ.400 தினக்கூலி வழங்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேற்கண்டவாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் மனு மீது நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

    • ராசமுத்து (வயது 67), இவரது மனைவி தனம் (60) ஆகியோர் தங்களின் உறவினர்களுடன் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர்.
    • இந்நிலையில் எங்கள் வீட்டின் அருகில் குடியிருக்கும் துணை தாசில்தார், வணிக வரித்துறை ஊழியர் ஆகியோர் எங்களை அடிக்கடி மிரட்டி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் முருங்கப்பட்டி அருகே உள்ள பெத்தாம்பட்டி கிராமத்தை சேர்ந்த ராசமுத்து (வயது 67), இவரது மனைவி தனம் (60) ஆகியோர் தங்களின் உறவினர்களுடன் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- நாங்கள் பெத்தாம்பட்டியில் 45 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்களுக்கு தவமணி என்கிற ராஜகணபதி, தமிழன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகனுக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். நாங்கள் கூட்டு குடும்பமாக, விசைத்தறி தொழில் செய்து வருகிறோம்.

    இந்நிலையில் எங்கள் வீட்டின் அருகில் குடியிருக்கும் துணை தாசில்தார், வணிக வரித்துறை ஊழியர் ஆகியோர் எங்களை அடிக்கடி மிரட்டி வருகின்றனர். ஏற்கனவே எங்களுக்குள் நிலப் பிரச்சனை தொடர்பாக முன் விரோதம் இருந்து வருகிறது.

    நேற்று முன்தினம், எங்கள் நிலத்தை அளந்து சர்வேயர் எல்லை கல் நட்டார். அடுத்த சில மணி நேரத்தில், துணை தாசில்தார், வணிக வரித்துறை ஊழியர் ஆகிய இருவரும் அடியாட்களுடன் வந்து என்னையும், எனது மனைவி மற்றும் மகன்களை தாக்கிவிட்டு சென்றனர். தற்போது எனது மூத்த மகன் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுபற்றி இரும்பாலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இதுகுறித்து விசாரித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளனர்.

    • கடந்த 2005-ம் ஆண்டு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார்.
    • 3 ஆண்டுகள், கடிதம் வழியாக தொடர்பில் இருந்த பழனிவேல், அதன் பிறகு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக குடும்பத்தாருடன் எந்தவித தொடர்பும் இல்லாமல் உள்ளார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வீரகனூர் பகுதியை சேர்ந்த பழனிவேல் என்பவர் கடந்த 2005-ம் ஆண்டு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். சுமார் 3 ஆண்டுகள், கடிதம் வழியாக தொடர்பில் இருந்த பழனிவேல், அதன் பிறகு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக குடும்பத்தாருடன் எந்தவித தொடர்பும் இல்லாமல் உள்ளார்.

    இந்நிலையில், பழனிவேலை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்த முகவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, முறையான பதில் கிடைக்கவில்லை. மேலும் பழனிவேல் சவுதியில் வேலை பார்ப்பதாக நண்பர் ஒருவர் மூலம் அவரது குடும்பத்திற்கு தெரியவந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவரை எவ்வாறு தொடர்பு கொள்வது என தெரியாமல் அவரது குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.

    இதனை அடுத்து வெளிநாட்டில் உள்ள தங்களின் தம்பியை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பழனிவேலின் சகோதரி பழனியம்மாள் கண்ணீர் மல்க, சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனு அளித்து உள்ளார். 

    • புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி 3 நாள் நடை பயணமாக வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
    • சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் நீதி கேட்டு 3 நாட்கள் நடை பயணம் நடந்தது.

    ராமநாதபுரம்

    சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அப்துல்கலாம் நினைவிடத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி நீதி கேட்டு 3 நாட்கள் நடை பயணம் நடந்தது. நேற்று மாலை பட்டினங்காத்தான் இ.சி.ஆர். சாலையில் இருந்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான அரசு அலுவலர்கள் நடைபயணம் மேற்கொண்டு கலெக்டர் அலுவலகம் வந்தனர். அங்கு நடந்த விளக்க கூட்டத்திற்கு சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கத்தின் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். மாநில தணிக்கையாளர் ஊரக வளர்ச்சித் துறை சோமசுந்தர் வரவேற்றார். தமிழ்நாடு விடுதிகள் காப்பாளர் சங்கத்தின் மாநில செயலாளர் மணிமொழி, சி.பி.எஸ்.ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார், வருவாய்த்துறை சீனி முகம்மது உள்பட பலர் பேசினர். ஊரக வளர்ச்சித்துறை மாவட்ட தலைவர் ராஜேந்திரன், பத்திரப் பதிவுத்துறை சுரேஷ், கருவூலத்துறை கிருஷ்ணமூர்த்தி, மருத்துவத்துறை சின்னபாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமநாதன் நன்றி கூறினார். இதைத் தொடர்ந்து சி.பி.எஸ். ஒழிப்பு இயக்க நிர்வாகிகள் கலெக்டர் ஜானி டாம் வர்கீசை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

    • 25-க்கும் மேற்பட்டோர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
    • மின்வாரியத்திற்கு டெபாசிட் செலுத்தியும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை.

    கிருஷ்ணகிரி,

    பர்கூர் அடுத்த மல்லப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட மரிமானப்பள்ளி கிராமம் இருளர் காலனியை சேர்ந்த, 25-க்கும் மேற்பட்டோர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    பர்கூர் தாலுகா, மல்லப்பாடி ஊராட்சி மரிமானப்பள்ளி கிராம இருளர் காலனியில், 33 குடும்பங்களை சேர்ந்த, 90 பேர், 60 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்களுக்கு மின்சாரம், குடிநீர், சாலைவசதி, ஜாதி சான்றிதழ், சுகாதார நிலையம் போன்ற எந்த அடிப்படை வசதியும் இல்லை. எங்கள் வீடுகளும் சிதிலமடைந்து உள்ளன. குடிநீருக்காக, 3 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் அவலம் உள்ளது.

    இந்நிலையில் மின் இணைப்பு பெறுவதற்காக மின்வாரியத்திற்கு டெபாசிட் செலுத்தியும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. மின் கம்பங்கள் மற்றும் தளவாடங்கள் கொண்டு வந்து வைக்கப்பட்டு ஒரு மாதம் ஆகியும் மின் இணைப்பு கொடுக்கவில்லை. அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் குழந்தைகள் இருளிலும், மழையிலும், விஷக்கடி பயத்தாலும் அவதிப்பட்டு வருகின்றனர். தற்காலிக பட்டா வழங்கப்படும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முறைப்படி இடத்தை அளவீடு செய்து நிரந்தர பட்டா வழங்க வில்லை. குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் இல்லாததால் கல்வி தொடர முடியாமல் குழந்தை தொழிலாளர்களாக உருவாகின்றனர். எனவே இப்பகுதி மக்களின் அடிப்படை உரிமைகளை நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×