search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டரிடம் மனு"

    இலவச மின்சாரத்தை பயன்படுத்த வேண்டுமேயானால் மின்சார கணக்கீட்டாளர் மற்றும் உதவி பொறியாளருக்கு பணம் தர வேண்டும் என மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்தது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் நாகல்நகர், பாரதிபுரம், வேடப்பட்டி பகுதிகளில் நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் 200 யூனிட் வரை உள்ளது.

    இந்நிலையில் தொடர்ந்து இலவச மின்சாரத்தை பயன்படுத்த வேண்டுமேயானால் மின்சார கணக்கீட்டாளர் மற்றும் உதவி பொறியாளருக்கு பணம் தர வேண்டும் என மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்தது.

    திண்டுக்கல் நாகல்நகர் பாரதிபுரத்தை சேர்ந்த நெசவாளர் மக்கள் 20க்கும் மேற்பட்டோர் பணம் கேட்டு மிரட்டும் மின்சார ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    • ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
    • குடிநீர், ரோடு வசதி செய்துதர வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு முன்னிலை வகித்தார். அப்போது் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பரமக்குடி எமனேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த கனகராஜ் மனைவி விசித்ராவுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் ஏற்கனவே ரூ.6 லட்சம் நிவாரண தொகை வழங்கப்பட்டது.

    நேற்று கூடுதல் நிவாரணமாக இலவச வீட்டுமனை பட்டாவினை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வழங்கினார். தொடர்ந்து ராமநாதபுரம் அருகே சக்கரகோட்டை டாக்டர் ஏ.பி.ஜே., அப்துல்கலாம் நகர் வீட்டு உரிமையாளர்கள், குடியிருப்போர் நலச்சங்கத்தினர் மனு அளித்தனர்.

    இதில், 50 குடும்பங்கள் வசிக்கும் பகுதி அருகே 2 டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. இதனால் மாணவர்கள், பெண்கள் ரோட்டில் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். இக்கடையை பூட்ட பலமுறை கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளவில்லை. மாறாக சம்பந்தமே இல்லாமல் வேறு பகுதியில் கடையை பூட்டியுள்ளனர்.

    எனவே பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள கடை எண் 6969 பூட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும், என வலியுறுத்தினர். உத்தரகோச மங்கை அரசு மேல்நிலை பள்ளியில் படிக்கும் வெள்ளா மருச்சுகட்டி கிராம மாணவர்கள் பெற்றோருடன் மனு அளித்தனர். பள்ளி நேரத்தில் பஸ் வசதியின்றி 4கி.மீ., நடந்து சிரமப்படுகிறோம். காலை 8 மணி, மாலை 5 மணிக்கு அரசு பஸ் இயக்க வேண்டும். மேலும் குடிநீர், ரோடு வசதி செய்துதர வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி கூட்டாம்புளி, சாத்தமங்கலம் கிராம மக்கள் காவிரி குடிநீர் வரவில்லை. சுகாதாரமற்ற குளத்து நீரை பயன்படுத்துகிறோம். சுகாதாரமான குடிநீர் குடம் ரூ.15க்கு விற்கின்றனர். உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும். புதிதாக ரேஷன் கடை கட்டித்தர வேண்டும், என வலியுறுத்தினர்.

    இக்கூட்டத்தில் வீட்டுமனைபட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்டவை தொடர்பாக 267 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் மாரிசெல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வேகத்தடை அமைக்க வேண்டும்
    • ஆரம்ப பள்ளி ஒன்றை துவக்க வேண்டும்.

    திருப்பூர்:

    வீரபாண்டி அடுக்குமாடி குடியிருப்போர் சங்கம் சார்பில் இன்று மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது; திருப்பூர் வீரபாண்டியில் தமிழ அரசால் கட்டப்பட்டு அண்மையில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்து அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருகிறோம்.

    இங்கு கழிவு நீர் சுத்தகரிப்பு தொட்டி பாரமரிப்பு இல்லாத காரணத்தால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. போதிய குடிநீர் கிடைக்கவில்லை. குடியிருப்பு பகுதி ரோட்டில் அடிக்கடி விபத்து நடப்பதால் வேகத்தடை அமைக்க வேண்டும்.

    குடியிருப்பு பகுதிகளை சுற்றி சுற்றுசுவர் அமைக்க வேண்டும். அருகில் உள்ள 3 மதுக்கடைகளை அகற்ற வேண்டும். எங்கள் பகுதியில் ரேஷன் கடை திறக்க வேண்டும். இந்த பகுதியில் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் ஆரம்ப பள்ளி ஒன்றை துவக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    தங்களது கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி கவனம் ஈர்த்தனர்.

    • கல்குவாரிக்கு தேவையான வெடி பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதா? என அப்பகுதி மக்களுக்கு சந்தேகம் எழுந்தது.
    • கண்டெய்னர் இங்கு வந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஏவலூர் கிராம எல்லை விவசாய நிலத்தில் கடந்த சில மாதங்களாக கண்டெய்னர் ஒன்று கிடந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியில் கல்குவாரி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் விவசாயம் சங்கம் சார்பில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. இதன் காரணமாக கல்குவாரி அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த பணிக்கான கண்டெய்னர் கொண்டுவரப்பட்டதா? இந்த கண்டெய்னரில் கல்குவாரிக்கு தேவையான வெடி பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதா? என அப்பகுதி மக்களுக்கு சந்தேகம் எழுந்தது.

    இது தொடர்பான புகாரின் பேரில் ரோஷனை இன்ஸ்பெக்டர் அன்னகுடி, வெள்ளிமேடுபேட்டை சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்மணி மற்றும் போலீசார் அங்கு விரைந்தனர். கேட்பாரற்று இருந்த கண்டெய்னரின் பூட்டை உடைத்து பார்த்தனர். இதில் கண்டெய்னர் காலியாக இருந்தது. இதனை தொடர்ந்து இந்த கண்டெய்னர் யாருடையது?, இது எவ்வாறு இங்கு வந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கண்டெய்னர் காலியாக இருந்ததால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் நீங்கி நிம்மதியடைந்தனர்.

    • இந்திரா இவரது 2 மகள்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
    • மகாதேவன் உடலை கிராமத்திற்கு கொண்டு வருவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை ) மக்கள் குறை கேட்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதில் கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொது மக்கள் தங்கள் கோரிக்கை கள் தொடர்பாக மனு அளிக்க நேரில் வந்தனர். இந்த நிலையில் புவனகிரி வட்டம் புதுப்பேட்டையை சேர்ந்த இந்திரா (வயது 48). இவரது 2 மகள்கள், உறவி னர்கள் மற்றும் மீனவம் காப்போம் மக்கள் இயக்கம் நிர்வாகி செந்தாமரை செல்வம் ஆகியோர் நேரில் வந்து கோரிக்கை மனு அளித்தனர்.

    கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மகாதேவன் (56). சவுதி அரேபியாவில் ஒப்பந்த அடிப்படையில் மீன் பிடி தொழில் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 10-ம் தேதி மகா தேவன் உடன் பணி புரிந்து வந்த நபர்கள் தொலைபேசி மூலம் எங்களை தொடர்பு கொண்டு எனது கணவர் இறந்துவிட்டதாக தெரி வித்தனர். இதனை கேட்ட இந்திரா அதிர்ச்சி அடைந்தார். மேலும் எனது கணவர் மகாதேவன் உடலை சவுதி அரேபியாவில் இருந்து எங்கள் கிராமத்திற்கு கொண்டு வருவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எனது கணவர் இறந்த நிலை யில் எங்களது குடும்பத் திற்கு அரசு உதவிகள் வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. 

    இந்த நிலையில் மனு அளிக்க கலெக்டர் அலுவல கத்தில் இருந்த இறந்த மகாதேவன் மகள் மதுமிதா என்பவர் தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்ததால் திடீரென்று மயக்கம் அடைந்தார். பின்னர் மயக்கம் அடைந்த மது மிதாவை அங்கு இருந்த அவரது தாய் மற்றும் உறவினர்கள் பாதுகாத்தனர். இதனைத் தொடர்ந்து மனைவி மற்றும் மகள்கள் கண்ணீர் மல்க இறந்த மகாதேவன் உடலை மீட்டு தர வேண்டி கோரிக்கை விடுத்தனர். இதன் காரண மாக கடலூர் கலெக்டர் அலுவலகம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    • இதுவரை 100 நாள் வேலை பணி பஞ்சாயத்து நிர்வாகம் வழங்கவில்லை.
    • நாங்கள் குடும்பத்துடன் வேலை இன்றி கஷ்டப்பட்டு வருகின்றோம்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த ஆர்.கோபிநாதம்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் 100 நாள் வேலை கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

    அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    மொரப்பூர் அடுத்த ஆர்.கோபிநாதம்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட ராமாபுரம் கிராமத்தில் 150 -க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம் .

    இந்த கிராமத்தில் உள்ள அனைவரும் கூலி வேலைக்குச் சென்றால் தான் பிழைக்க முடியும் என்ற சூழ்நிலை உள்ளது. இந்த நிலையில் கடந்த வருடம் எங்களுக்கு 12 நாட்கள் மட்டுமே 100 நாள் வேலை கொடுத்தனர்.

    பின்னர் இதுவரை 100 நாள் வேலை பணி பஞ்சாயத்து நிர்வாகம் வழங்கவில்லை. நாங்கள் குடும்பத்துடன் வேலை இன்றி கஷ்டப்பட்டு வருகின்றோம். அதனால் கலெக்டர் எங்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு 100 நாள் வேலை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் 11 மாதமாக சம்பளம் வழங்க வில்லை.
    • உரிய நடவடிக்கை எடுத்து அரசு பள்ளிகளில் பணிபுரியும் தூய்மை பணியா ளர்களான எங்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி, நடுநிலைப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் 11 மாதமாக சம்பளம் வழங்க வில்லை எனக் கூறி கலெக்டரிடம் நேற்று மனு கொடுத்தனர்.

    அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    தருமபுரி மாவட்டத்தில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பாக புது வாழ்வு திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் இருக்கும் கழிவறைகளை தினமும் தூய்மை பணி செய்ய கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மூலம் மாவட்டம் முழுவதும் இருக்கும் அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் நியமனம் செய்தனர்.

    அதன்பின் இப்பணியை சிறப்பாக செய்து வருகிறோம். ஆனால் மாதம், மாதம் எங்களுக்கு சம்பளம் கிடைப்பதில்லை. கொரோனா காலத்தில் இரண்டு வருட சம்பளம் கிடைக்கவில்லை. மேலும் தற்போது கடந்த 11 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. அதனால் தூய்மை பணி செய்யும் எங்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.

    அதனால் தாங்கள் இதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து அரசு பள்ளிகளில் பணிபுரியும் தூய்மை பணியா ளர்களான எங்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கோவிலுக்கு சொந்தமானது என 1023-ம் ஆண்டிலே கல்வெட்டில் பதியப்பட்டுள்ளது.
    • மண்டு மண்கோட்டைக்கு சொந்தமான நிலங்களை சிலர் தனியார் பெயரில் போலியாக பட்டா தயாரித்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டத்திற்கு காரிமங்கலம் அடுத்த முள்ளனூர் கிராம மக்கள் சிலர் திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டர் சாந்தியை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த பந்தாரஅள்ளி அருகே முள்ளனூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை செல்லியம்மன் கோவில் உள்ளது. இந்த சுற்றுவட்டாரங்களில் உள்ள 9 கிராமங்களில் இருந்தும் பொதுமக்கள் திரண்டு வந்து அம்மனுக்கு விழா எடுத்து தரிசனம் செய்வார்கள்.

    மேலும் இந்த கோவிலுக்கு சொந்தமான மண்டு நிலம் மற்றும் மண் கோட்டை புதைத்திருக்கும். இந்த நிலம் கோவிலுக்கு சொந்தமானது என 1023-ம் ஆண்டிலே கல்வெட்டில் பதியப்பட்டுள்ளது.

    இதற்கிடையே கோவில் மற்றும் மண்டு மண்கோட்டைக்கு சொந்தமான நிலங்களை சிலர் தனியார் பெயரில் போலியாக பட்டா தயாரித்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

    அந்த நபர் இந்த நிலங்களில் சில பகுதிகளை வேறுநபருக்கு விற்பனையும் செய்துள்ளதாகவும் தெரியவந்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து செல்லியம்மன் கோவில் மற்றும் மண்கோட்டைக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ள தனியாரிடமிருந்து மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

    இதுகுறித்து கலெக்டர் சாந்தி ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    • இலவச வீட்டு மனை பட்டா கேட்டு கலெக்டரிடம் மாற்றுத்திறனாளிகள் மனு கொடுத்தனர்.
    • நடவடிக்கை எடுப்பதில் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் தமிழ்நாடு அனைத்து வகைமாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் நலச்சங்கத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில் எங்கள் சங்கத்தை சேர்ந்த 15 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி பல ஆண்டுகளாக மனுக்கள் அளிக்கப்பட்டு வருகிறது.

    தற்போது வரை நடவடிக்கை எடுப்பதில் காலம் தாழ்த்தி வருகின்றனர். மாற்று திறனாளிகள் வறுமையில் வாடும் நிலையில் வீட்டு வாடகை கொடுக்க முடியாத நிலையில் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு முதல்வர் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சங்கத்தின் ராமேசுவரம் கிளை தலைவர் குமார், செயலாளர் லட்சுமணன், ராபின்சன் தலைமையில் 15 மாற்றுத்திறனாளிகள் கலெக்டர் ஜானி டாம் வர்கீசிடம் கோரிக்கை மனுவை வழங்கினர்.

    • பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி வேண்டும்.
    • கோவிந்தசாமி. எம்.எல்.ஏ மாவட்ட ஆட்சியரிடம், பொதுமக்களுடன், நேரில் சென்று மனுக்கள் கொடுத்தார்.

    தருமபுரி,

    பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட, கோழிமேக்கானூர் அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி, பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் ஆ.கோவிந்தசாமி. எம்.எல்.ஏ மாவட்ட ஆட்சியரிடம், பொதுமக்களுடன், நேரில் சென்று மனுக்கள் கொடுத்தார்.

    உடன், நகர கழக செயலாளர், தென்னரசு, கழக நிர்வாகிகள், தொல்காப்பியன், மற்றும் அனைத்து கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இருந்தனர்.

    • கணவர் ஏமாற்றி எழுதி வாங்கிய சொத்து ஆவணத்தை ரத்து செய்ய வேண்டும்.
    • ராமநாதபுரம் கலெக்டரிடம் பட்டதாரி பெண் மனு கொடுத்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்குத்தெருவை சேர்ந்த பட்டதாரி பெண் லுத்துபியா பேகம். இவர் மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

    எனக்கும், கீழக்கரை முகம்மது அப்துல் காதர் மரைக்கா (வயது50) என்ப வருக்கும் 2002-ம் ஆண்டு திருமணமானது. எங்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். திருமணத்தின்போது எனது தந்தை வரதட்சணையாக கொடுத்த வீட்டில் 20 வருடங்களாக கணவர் மற்றும் பிள்ளைகள் வசித்து வருகிறோம். கடந்த சில வருடங்களாக எனது கணவரின் நடத்தை மற்றும் அணுகுமுறையில் பல மாற்றங்கள் காணப்பட்டது.

    திருமணத்தின் போது எனது தந்தை 41 பவுன் நகை மற்றும் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்து திருமணம் செய்து வைத்தார். அதனை எனது கணவர் விற்றும், அடகு வைத்தும் ஊதாரித்தனமாக செலவு செய்தார். மேலும் எனது குடும்பத்தார் கொடுத்த ரூ.10 லட்சத்தையும் அபகரித்து விட்டார்.

    என்னை ஏமாற்றி எனக்கு சொந்தமான சொத்தை என்னிடமிருந்து பெற்றுக் கொண்டார். எங்களின் வாழ்வாதாரத்திற்காக அந்த சொத்து ஆவணத்தை ரத்து செய்து என்னிடம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

    • கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
    • பஞ்சாயத்து தலைவர் கையாடல் செய்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே மூக்கனூர் உலகுடை யாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மனுவில் கூறியுள்ளதாவது,   உலகுடையாம்பட்டு கிராமத்தில் பிரதம மந்திரி வீடுகட்ட திட்டம் மற்றும் தமிழக அரசின் வீடு கட்டும் திட்டத்தின் பயனாளிகள் பலரும் வீடு கட்டி வருகின்றனர். இதில் பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை பஞ்சாயத்து தலைவர் கையாடல் செய்துள்ளார்.

    மேலும் வீடு கட்டும் பயனாளிகளுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய பணத்தையும், அரசு அறிவித்த கூடுதல் தொகையையும் பயனாளிகளிடம் எனக்கு சேர வேண்டிய பணம் எனக் கூறி பெற்றுக் கொண்டதாகவும், இவ்வாறு அரசின் வீடு கட்டும் திட்டத்தில் பல்வேறு முறைகேடு செய்துள்ள மூக்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

    ×