search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில் நிலத்தை மீட்க கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு
    X

    ஆக்கிரமிப்பு செய்துள்ள கோவில் நிலஙகளை மீட்க வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த முள்ளனூர் கிராம மக்களை படத்தில் காணலாம்.

    கோவில் நிலத்தை மீட்க கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு

    • கோவிலுக்கு சொந்தமானது என 1023-ம் ஆண்டிலே கல்வெட்டில் பதியப்பட்டுள்ளது.
    • மண்டு மண்கோட்டைக்கு சொந்தமான நிலங்களை சிலர் தனியார் பெயரில் போலியாக பட்டா தயாரித்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டத்திற்கு காரிமங்கலம் அடுத்த முள்ளனூர் கிராம மக்கள் சிலர் திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டர் சாந்தியை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த பந்தாரஅள்ளி அருகே முள்ளனூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை செல்லியம்மன் கோவில் உள்ளது. இந்த சுற்றுவட்டாரங்களில் உள்ள 9 கிராமங்களில் இருந்தும் பொதுமக்கள் திரண்டு வந்து அம்மனுக்கு விழா எடுத்து தரிசனம் செய்வார்கள்.

    மேலும் இந்த கோவிலுக்கு சொந்தமான மண்டு நிலம் மற்றும் மண் கோட்டை புதைத்திருக்கும். இந்த நிலம் கோவிலுக்கு சொந்தமானது என 1023-ம் ஆண்டிலே கல்வெட்டில் பதியப்பட்டுள்ளது.

    இதற்கிடையே கோவில் மற்றும் மண்டு மண்கோட்டைக்கு சொந்தமான நிலங்களை சிலர் தனியார் பெயரில் போலியாக பட்டா தயாரித்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

    அந்த நபர் இந்த நிலங்களில் சில பகுதிகளை வேறுநபருக்கு விற்பனையும் செய்துள்ளதாகவும் தெரியவந்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து செல்லியம்மன் கோவில் மற்றும் மண்கோட்டைக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ள தனியாரிடமிருந்து மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

    இதுகுறித்து கலெக்டர் சாந்தி ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    Next Story
    ×