search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தினக்கூலி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரசு சார்பில் மாதந்தோறும் வழங்கப்பட்ட ரூ.10,000 சமீபத்தில் நிறுத்தப்பட்டது.
    • நடிகர் பவன் கல்யாணின் 'பீமலா நாயக்'கின் திரைப்படத்தில் பாட வாய்ப்பு கிடைத்ததை அடுத்து மொகிலையா புகழ்பெற்றார்.

    தெலுங்கானாவை சேர்ந்தவர் தர்ஷனம் மொகிலையா. இவர் கின்னரா என்ற பழங்குடி இசைக்கருவியை இசைக்கும் கலைஞர்களில் எஞ்சியிருப்பவர். கின்னேரா என்பது வீணை போன்ற ஒரு சரம் கொண்ட கருவியாகும்.

    அரிய இசைக்கருவியான 'கின்னரா'வை புதுப்பித்ததற்காக, தர்ஷனம் மொகிலையாவுக்கு 2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

    இதையடுத்து அப்போதைய முதல்-மந்திரி சந்திரசேகர் ராவை சந்தித்த தர்ஷன் மொகிலையாவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு ஐதராபாத்தில் அரசு சார்பில் ஒரு வீட்டு மனை ஒதுக்குவதாகவும், அதன் கட்டுமானம் மற்றும் இதர செலவுகளுக்காக 1 கோடி ரூபாய் வழங்குவதாகவும் முதல்-மந்திரி தெரிவித்தார்.

    இந்நிலையில், நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்ற தர்ஷன் மொகிலையாவின் தற்போதைய நிலை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

    ஐதராபாத் அருகே துர்க்காயமஞ்சலில் உள்ள கட்டுமான தளத்தில் மொகிலையா வேலை பார்த்து வருகிறார். இதுகுறித்து மொகிலையா கூறும் போது, "எனது மகன்களில் ஒருவன் வலிப்பு நோயால் அவதிப்படுகிறான். எனக்கும், என் மகனுக்கும் மருந்துக்கு மட்டும் மாதம் 7,000 ரூபாய் தேவைப்படுகிறது. பிறகு வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் இதர செலவுகள் உள்ளன. அரசு சார்பில் மாதந்தோறும் வழங்கப்பட்ட ரூ.10,000 சமீபத்தில் நிறுத்தப்பட்டது. ஏன் நிறுத்தப்பட்டது என்று தெரியவில்லை. இதுகுறித்து கேட்ட போது, அதிகாரிகளால் எதுவும் செய்ய முடியவில்லை என்றார்.

    மேலும் ரூ.1 கோடி மானியத்துடன் ராங்காரெட்டி மாவட்டத்தில் 600 சதுர அடி கொண்ட இடத்தை ஒதுக்குவதாக அரசு கூறியது. ஆனால் அந்த ஒதுக்கீடு இன்னும் நிலுவையில் இருக்கிறது என்றார்.

    முன்னதாக, நடிகர் பவன் கல்யாணின் 'பீமலா நாயக்'கின் திரைப்படத்தில் பாட வாய்ப்பு கிடைத்ததை அடுத்து மொகிலையா புகழ்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சுய உதவி குழு என பல ஆண்டுகளாக பணி புரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் இதர பணியாளர்களை நிரந்தரம் செய்திட வேண்டும்.
    • தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த கூட்டுறவு சங்கத்திற்கு கட்ட வேண்டிய தொகை 2 கோடி 31 லட்சம் உடனடியாக செலுத்த வேண்டும்.

    கடலூர்:

    மாநிலங்களில் 20 வகை நிரந்தர பணியிடங்களில் தனியாருக்கு வழங்கிடும் அரசாணையை உடனடியாக திரும்ப பெற வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தினக்கூலி, கான்ட்ராக்ட், சுய உதவி குழு என பல ஆண்டுகளாக பணி புரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் இதர பணியாளர்களை நிரந்தரம் செய்திட வேண்டும். கடலூர் மாநகராட்சியில் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த கூட்டுறவு சங்கத்திற்கு கட்ட வேண்டிய தொகை 2 கோடி 31 லட்சம் உடனடியாக செலுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி சி.ஐ.டி.யு சார்பில் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    • சுமார் 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
    • நாள் ஒன்றுக்கு ரூ.400 தினக்கூலி வழங்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணிபுரியும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியுள்ளதாவது, நாங்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம், வடக்கனந்தல், தியா கதுருகம் மணலூர்பேட்டை, சின்னசேலம் ஆகிய பேரூராட்சிகள் மற்றும் உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி ஆகிய நகராட்சிகளில் தினக்கூலி அடிப்படையில் தமிழக அரசின் டெங்கு காய்ச்சல்,மலேரியா, யானைக்கால், கொரோனா உள்ளிட்ட நோய் தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

    எங்களுக்கு தினமும் நாள் ஒன்றுக்கு ரூ.289 தினக்கூலியாக வழங்குகின்றனர். இந்த பணத்தை வைத்து வாழ்க்கை நடத்த மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் எங்களைப் போன்று ஊராட்சிகளில் பணிபுரியும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு ரூ.400 தினக்கூலி வழங்கப்படுகிறது. இதே போல் எங்களுக்கும் நாள் ஒன்றுக்கு ரூ.400 தினக்கூலி வழங்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேற்கண்டவாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் மனு மீது நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

    • பொருளாளர் கிறிசாந்துமேரி மற்றும் துணை தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • இதில் சி.பி.ஐ.எம். மாவட்ட செயலாளர் செல்ல சாமி உள்பட ஆண்கள், பெண் கள் கலந்து கொண்டு கோரிக்கை களை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    நாகர்கோவில், அக். 27-

    குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூ ராட்சிகளிலும் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆண்டிற்கு 150 நாட்கள் வேலையில் ரூ.600 கூலி வழங்க வேண்டும்.

    அரசு அறிவித்த தினக்கூலி ரூ.281-ஐ குறைக்காமல் வழங்கிடவும், நிலுவையில் உள்ள ஊதிய பாக்கியை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகளை வலியு றுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் குமரி மாவட்ட கிளை சார்பில் இன்று நாகர்கோவில் மாநகராட்சி பூங்கா முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். பொருளாளர் கிறிசாந்துமேரி மற்றும் துணை தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சி.பி.ஐ.எம். மாவட்ட செயலாளர் செல்ல சாமி உள்பட ஆண்கள், பெண் கள் கலந்து கொண்டு கோரிக்கை களை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    • விவசாய தொழிலாளிக்கு தேசிய அளவில் ஒருங்கிணைந்த மத்திய சட்டமும் தனித்துறையை உருவாக்கக் வேண்டும்.
    • விவசாய தொழிலாளிக்கு இலவச வீட்டு மனை தொகுப்பு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும்

    அவினாசி :

    அவினாசியில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய மாநாடு நடைபெற்றது. அதில் கிராமப்புற 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளிக்கு தினசரி கூலி ரூ. 600 வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறியிருப்பதாவது:- விவசாய தொழிலாளிக்கு தேசிய அளவில் ஒருங்கிணைந்த மத்திய சட்டமும் தனித்துறையை உருவாக்கக் வேண்டும். சொந்தமாக இடமோ வீடு இல்லாத விவசாய தொழிலாளிக்கு இலவச வீட்டு மனை தொகுப்பு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். கிராமப்புற தொழிலாளர்களின் குடும்பங்கள் சிறு குறு தொழில்கள் செய்திடவும், கால்நடைகள் வளர்ப்பில் கிராமப்புற தொழிலாளர்களின் குடும்பங்கள் சிறு குறு தொழில்கள் செய்திடவும், கால்நடைகள் வளர்ப்பில் கூட்டுறவு வங்கிகள் மூலம் மானியத்தில் கடன் வழங்க வேண்டும்.

    தேசிய வேலை உறுதி திட்டத்தில் வேலை நாட்கள் 200 ஆக உயர்த்தி இதில் பணியாற்றும் தொழிலாளிக்கு கூலி உயர்வு ரூ.600 வழங்க வேண்டும். ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் வேலை வழங்குவதை கைவிட்டு தொடர்ந்து வேலை வழங்க வேண்டும். தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை பூண்டி நகராட்சி ,அவினாசி பேரூராட்சி பகுதிகளில் அமல்படுத்த வேண்டும். சேவூர் பகுதியில் 30 வருடங்களுக்கு முன்பு இலவச வீட்டு மனை வழங்கிய இடத்தை வகை மாற்றம் செய்ய வேண்டும். ரேஷன் கடைகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் தரமாகவும் சரியான அளவில் வழங்க வேண்டும். 60 வயதான அனைவருக்கும் முதியோர் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பழுதடைந்துள்ள அரசு தொகுப்பு வீடுகளை பராமரிப்பு செய்ய ரூ.2 லட்சம் மானியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • பல ஆண்டுகளாக தினக்கூலியாக பணிபுரிந்து வரும் பண்ணை தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
    • ஓய்வு பெற்ற பணியாளர்கள் அனைவருக்கும் விடுபடாமல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் காட்டுத்தோட்டம் வேளாண் ஆராய்ச்சி நிலைய பண்ணை தொழிலாளர் சங்க கூட்டம் வனிதா தலைமையில் தஞ்சையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், காட்டுத் தோட்டம் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் பல ஆண்டுகளாக தினக்கூலியாக பணிபுரிந்து வரும் பண்ணை தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,

    தினக்கூலி ரூ. 750 ஆக உயர்த்தப்பட வேண்டும், ஓய்வு பெற்ற பணியாளர்கள் அனைவருக்கும் விடுபடாமல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    முன்னதாக கூட்டத்தில் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி தலைவராக வேம்பு, செயலாளராக வனிதா, பொருளாளராக கிருஷ்ணவேணி, துணைத் தலைவராக பிரபாகரன், துணைச் செயலாளராக பரிமளா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் ஏ.ஐ.டி.யூ.சி மாநில செயலாளர் சந்திரகுமார், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜன், பண்ணை தொழிலாளர் சங்கத்தின் மாநில பொது செயலாளர் அரசப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஊரக வேலை திட்ட நாட்களை 150 நாட்களாக மாநில அரசு உயர்த்த வேண்டும்.
    • தினக்கூலியை மாநில அரசு பங்காக ரூ.100 சேர்த்து ரூ.381 ஆக கூலியை உயரத்தி வழங்கிட வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றிய செயலர் இளைய பெருமாள் தலைமையில் ஊரக வேலைத்திட்டத்தை சிதைக்காமல் செயல்ப டுத்திட கோரியும், தேர்தல் வாக்குறுதிப்படி ஊரக வேலைத் திட்ட நாட்களை 150 நாட்களாக மாநில அரசு உயர்த்த வேண்டும் எனவும். தினக்கூலியை மாநில அரசு பங்காக ரூ.100 சேர்த்து ரூ.381 ஆக கூலியை உயரத்தி வழங்கிட வேண்டும் எனவும், காலை 7 மணிக்கு வேலைத் தளத்திற்க்கு வரச் சொல்லி கட்டபப்படுத்துவதை கைவிட வலியுறித்தியும், தாலிக்கு தங்கம் வழங்கும் திருமண உதவி திட்டத்தை தொடர்ந்திட கோரியும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் 300 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதே போன்று தலை ஞாயிறு ஊராட்சிஒன்றிய அலுவலகம் முன்பு அலெக்சாண்டர் தலைமை யில் 80 பேர் கோரி க்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப ட்டதுடன் உடனடியாக ஒன்றிய, தமிழக அரசுகள் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

    ×