search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருணாநிதி சிலை"

    • சேலத்தில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட ஈரடுக்கு பஸ் நிலையத்தை முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.
    • ஒரே நேரத்தில் 80 பஸ்கள் நிறுத்தும் அளவிற்கு பஸ் நிலையம் சீரமைக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 3 நாள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை சேலம் வந்தார்.

    தனி விமானம் மூலம் சேலம் வந்த அவரை ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் ஆகியோர் வரவேற்றனர்.

    இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் 5 ரோடு அருகே உள்ள ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். பின்னர் இரவு அஸ்தம்பட்டியில் உள்ள விருந்தினர் மாளிகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தங்கினார்.

    சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழுஉருவ வெண்கல சிலை நிறுவப்பட்டு உள்ளது. இந்த சிலையை இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    இதனை தொடர்ந்து நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு பழைய பஸ் நிலையத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். மேலும் அவர் மறுசீரமைப்பு செய்யப்பட்ட நேரு கலையரங்கம், போஸ் மைதானம், வ.உ.சி. மார்க்கெட், பெரியார் பேரங்காடி ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.

    இதை தொடர்ந்து சேலம் அருகே உள்ள கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு 50 ஆயிரத்து 202 பயனாளிகளுக்கு ரூ.170.32 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.

    விழாவில் மேட்டூர் மற்றும் எடப்பாடி நகராட்சிகளில் புதிய பஸ் நிலையங்கள் அமைக்கும் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேட்டூரில் ரூ.6.7 கோடி செலவிலும், எடப்பாடியில் ரூ. 5 கோடி மதிப்பிலும் புதிய பஸ் நிலையங்கள் கட்டப்படுகின்றன.

    போடிநாயக்கன்பட்டி ஏரி, மூக்கனேரி, அல்லிக்குட்டை ஏரி புனரமைத்து அழகுப்படுத்தும் பணிகள், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல்வேறு சாலைப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

    மேலும் உத்தமசோழபுரம்-திருமணிமுத்தாற்றின் குறுக்கே மற்றும் தென்னங்குடிபாளையம்-வசிஷ்ட ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலங்கள் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். மொத்தம் ரூ.235.82 கோடி யில் 331 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

    விழாவில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ரூ.653 கோடியில் இளம்பிள்ளை கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் இளம்பிள்ளை, ஆட்டையாம்பட்டி, பனமரத்துப்பட்டி, மல்லூர், இடங்கண சாலை ஆகிய 5 பேரூராட்சிகள் மற்றும் சேலம், வீரபாண்டி, பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 778 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்தில் முதற்கட்டமாக 301 குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் மற்றும் ரூ.102 கோடியில் கட்டப்பட்டுள்ள சேலம் அரசு சட்டக்கல்லூரிக்கான மாணவ, மாணவியர் விடுதிகளுடன் கூடிய நிரந்தர கட்டிடம் உள்பட சேலம் மாவட்டத்தில் ரூ.1,367.47 கோடியில் முடிவுற்ற 390 பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    • தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை சேலம் வந்தார்.
    • சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு 16 அடி உயரத்தில் முழுஉருவ வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் அண்ணா பூங்காவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு முழு உருவச்சிலை (வெண்கலம்) அமைக்கப்படும் என கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற சேலம் மாநகராட்சி சிறப்பு கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து அண்ணா பூங்கா வளாகத்தில் மண்டபம் கட்டுமான பணி மற்றும் கருணாநிதி சிலை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வந்தது.

    சுமார் 1,713 சதுரடி பரப்பில் மண்டபம் அமைக்கப்பட்டு, அங்கு 20 அடி உயரத்தில் பிரமாண்டமாக கருணாநிதியின் முழுஉருவ வெண்கல சிலை நிறுவப்பட்டது.

    இதையடுத்து இன்று காலை அவரது சிலை திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.

    தி.மு.க. தொண்டர்கள் புடைசூழ தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் கருணா நிதியின் முழு உருவச்சிலையை திறந்து வைத்தார். அப்போது கட்சியினர் மகிழ்ச்சி பொங்க, ஆரவாரத்துடன் கலைஞர் புகழ் வாழ்க என கோஷங்கள் எழுப்பினர். பிரமாண்ட கருணாநிதி சிலையை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு செல்கின்றனர்.

    கருணாநிதியையும், சேலத்தையும் பிரித்து பார்க்க முடியாது. திரையுலகில் உச்சம் தொடவும், அரசியல் அஸ்திவாரத்திற்கும் கருணாநிதி வாழ்வில் சேலம் முக்கிய பங்காற்றி உள்ளது. கருணாநிதிக்கு திருவாரூரை தாய் வீடு என்றால், சேலத்தை அவரது புகுந்த வீடு என்று குறிப்பிடும் அளவுக்கு சேலத்துடன் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. திருவாரூரில் வசித்தபோது நாடகத்துறையில் இருந்த அவர் திரைப்படத்துறைக்கு வந்தது சேலத்தில்தான்.

    சேலம் மாடர்ன் தியேட்டர்சில் இணைந்து அவர் மந்திரி குமாரி படத்துக்கு கதை வசனம் எழுதினார். அதன் தொடர்ச்சியாக பல்வேறு படங்களுக்கு அவர் கதை வசனம் எழுத தொடக்கமாக அமைந்தது சேலம். அந்த காலத்தில் தனது தாயார் அஞ்சுகம் அம்மாளுடன் சேலம் கோட்டை பகுதியில் ஹமீத் சாகிப் தெருவில் கருணாநிதி ரூ.50 வாடகைக்கு குடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதன் மூலம் சேலத்துக்கும் கருணாநிதிக்கும் உள்ல நெருங்கிய தொடர்பை அறியலாம். அவருக்கு சேலத்தில் பிரமாண்டமான சிலை அமைந்திருப்பது சேலத்துக்கு கிடைத்த பெருமை என்று தி.மு.க. தொண்டர்கள் நெகிழ்ச்சியுடன் கூறினர்.

    • தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்பு
    • இன்று 100-வது பிறந்த நாள்

    நாகர்கோவில் :

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமையில் ஒழுகினசேரியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தின் முன்புள்ள கருணாநிதியின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து கருணாநிதி படத்திற்கு மலர் தூவி நிர்வாகிகள் மரியாதை செலுத்தினார்கள்.

    நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் கேட்சன், துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் தில்லை செல்வம், ஒன்றிய செயலாளர்கள் சுரேந்திர குமார், பிராங்கிளின், லிவிங்ஸ்டன், மாவட்ட துணை செயலாளர் பூதலிங்கம், மாநகராட்சி மண்டல தலைவர் ஜவகர், தொழிலாளர் அணி அமைப்பாளர் இ.என்.சங்கர் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    இதைத்தொடர்ந்து தி.மு.க. அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஒடிசாவில் ெரயில் விபத்தில் பலியான ெரயில் பயணிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. மேயர் மகேஷ் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.

    கருணாநிதி பிறந்தநாளையொட்டி நாகர்கோவில் நகர பகுதியில் உள்ள 52 வார்டுகளிலும் கருணாநிதி படம் அலங்கரித்து வைக்கப்பட்டு நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். அகஸ்தீஸ்வரம், தோவாளை, ராஜாக்கமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளிலும் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் கருணாநிதி படம் அலங்கரித்து வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

    • வாழ்நாளெல்லாம் கொள்கை வானுயர வள்ளுவருக்குக் கலைஞர் சிலை எடுத்த குமரி மண்ணில், கலைஞரின் திருவுருவச்சிலையைத் திறந்து வைத்தேன்.
    • நவீனத் தமிழ்நாட்டைக் கட்டியெழுப்ப அவர் செலுத்திய உழைப்பையும் தமிழ் நிலத்தில் அவர் செய்த சாதனைகளையும் காலத்துக்கும் எடுத்துச் சொல்லும் சின்னம்தான் அவரது சிலைகள்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-

    வாழ்நாளெல்லாம் கொள்கை வானுயர வள்ளுவருக்குக் கலைஞர் சிலை எடுத்த குமரி மண்ணில், கலைஞரின் திருவுருவச்சிலையைத் திறந்து வைத்தேன்.

    நவீனத் தமிழ்நாட்டைக் கட்டியெழுப்ப அவர் செலுத்திய உழைப்பையும் தமிழ் நிலத்தில் அவர் செய்த சாதனைகளையும் காலத்துக்கும் எடுத்துச் சொல்லும் சின்னம்தான் அவரது சிலைகள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தி.மு.க. அலுவலகத்திற்குள் சென்ற நிர்வாகிகள் பலத்த சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்கும் வகையில் தி.மு.க. அலுவலகத்தின் முன் பகுதியில் சாலையின் இருபுறமும் வாழை தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ஒழுகின சேரியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக 6 அடி உயரத்தில் பீடம் அமைக்கப்பட்டு அதன்மேல் 8½ அடி உயரத்தில் கருணாநிதி சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவ சிலையை திறந்து வைத்தார். பின்னர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    இதைத் தொடர்ந்து அமைச்சர்கள் கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், ஐ. பெரியசாமி, மனோ தங்கராஜ் ஆகியோரும் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்கள்.

    இதைத் தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த 25 அடி உயர கொடிக்கம்பத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியேற்றினார். பின்னர் கட்சி அலுவலகத்திற்குள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்றார். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பேராசிரியர் அன்பழகன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    முன்னதாக விழாவிற்கு வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், மேயருமான மகேஷ், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், மாநில மீனவர் அணி செயலாளர் ஏ.ஜே. ஸ்டாலின், மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், மாநகர செயலாளர் ஆனந்த் ஆகியோர் புத்தகம், பொன்னாடை வழங்கி வரவேற்றனர்.

    கட்சி அலுவலகத்திற்குள் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நினைவு பரிசு வழங்கினார்கள். கட்சி அலுவலகத்திற்குள் நிர்வாகிகள் 80 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

    இதைத் தொடர்ந்து கருணாநிதியின் சிலையை தயார் செய்த மீஞ்சூரைச்சேர்ந்த தீனதயாளனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசையும், தங்க மோதிரத்தையும் வழங்கி கவுரவப்படுத்தினார். பின்னர் மேயர் மகேஷ் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்தின் மாதிரி நினைவு பரிசை அவர் வழங்கினார்.

    முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன், மாவட்ட பொருளாளர் கேட்சன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.எஸ்.பார்த்தசாரதி, தாமரை பாரதி, சதாசிவம் ஒன்றிய செயலாளர்கள் பாபு, சுரேந்திரகுமார், மாநகரச் செயலாளர் ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர். முதலமைச்சர் வருகையையடுத்து அவ்வை சண்முகம் சாலையில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டு இருந்தது.

    தி.மு.க. அலுவலகத்திற்குள் சென்ற நிர்வாகிகள் பலத்த சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்கும் வகையில் தி.மு.க. அலுவலகத்தின் முன் பகுதியில் சாலையின் இருபுறமும் வாழை தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தது.

    • குமரி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணம் செய்கிறார்.
    • 7-ந்தேதி காலை நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தின் புதிய கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் இன்று அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணம் செய்கிறார். இதற்காக அவர் 6-ந் தேதி மாலை நாகர்கோவில் வருகிறார். அன்று நாகர்கோவிலில் நடைபெறும் தோள்சீலை போராட்ட 200-வது ஆண்டு மாநாட்டில் பங்கேற்று பேசுகிறார்.

    இந்த நிகழ்ச்சியில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனும் கலந்து கொள்கிறார். இதுபோல தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்று பேசுகிறார்கள்.

    மறுநாள் 7-ந்தேதி காலை நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைக்கிறார். அதன்பின்பு நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் அமைக்கப்பட்டு உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உருவ சிலையை திறந்து வைத்து பேசுகிறார்.

    அன்று மதியம் அவர் குமரி மாவட்ட நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு தூத்துக்குடி புறப்பட்டு செல்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 157-வது வார்டில் குடிநீர் வாரியம் சார்பில் நடந்த பணியால் ஆங்காங்கே கல், மண் போன்ற கழிவுகள் அகற்றப்படாமல் சாலை யிலே உள்ளன.
    • ஆலந்தூர் பகுதி, நேரு நெடுஞ்சாலையில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு சிலை வைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ஆலந்தூர்:

    ஆலந்தூர் மண்டல குழு கூட்டம் மண்டலக்குழு தலைவர் என்.சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் காங்கிரஸ் கவுன்சிலர் நாஞ்சில் பிரசாத் பேசும்போது, 165-வது வார்டில் புதிதாக சேர்க்கப்பட்ட 7 தெருக்கள் இன்னும் என்னுடைய வார்டில் சேர்க்கப்படவில்லை. இதுகுறித்து நடந்து முடிந்த 6 மண்டல கூட்டத்திலும் பேசிவிட்டேன். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

    அ.தி.மு.க. கவுன்சிலர் உஷா கூறும்போது, 157-வது வார்டில் குடிநீர் வாரியம் சார்பில் நடந்த பணியால் ஆங்காங்கே கல், மண் போன்ற கழிவுகள் அகற்றப்படாமல் சாலை யிலே உள்ளன. இதனால் ஆய்வுக்கு செல்லும்போது 2 முறை வழுக்கி விழுந்து விட்டேன் என்றார்.

    இதுகுறித்து கேள்வி நேரத்தின் போது மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் தான் இதற்கு காரணம் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் சரமாரியாக குற்றச்சாட்டு கூறியதால் பரபரப்பாக இருந்தது.

    இதைத்தொடர்ந்து ஆலந்தூர் பகுதி, நேரு நெடுஞ்சாலையில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு சிலை வைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மொத்தம் 20 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

    • கருணாநிதி சிலையின் அருகே கட்டப்பட்டுள்ள கலைஞர் நூலகத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
    • தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கள்ளிப்பட்டி கிராமத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலை 8 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ளது. சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார்.

    மேலும், சிலையின் அருகே கட்டப்பட்டுள்ள கலைஞர் நூலகத்தையும் முதலமைச்சர் திறந்து வைத்தார். பள்ளி மாணவர்களுக்கு ஒரு லட்சம் மரக்கன்றுகளையும் வழங்கி உரையாற்றினார்.

    அப்போது, கருணாநிதியின் மகனாக அல்லாமல் திமுகவின் நேர்மையான தொண்டனாக சிலையை திறந்து வைப்பதாகவும், 4 ஆண்டுகளில் ஈரோடு மாவட்டத்தில் நான் திறந்து வைத்த மூன்றாவது வெண்கலச் சிலை இது என்றும் குறிப்பிட்டார். மேலும், தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  உறுதியளித்தார்.

    • ஆராஞ்சி கிராமத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடக்கம்.
    • அருணாசலேஸ்வரர் கோவில் சிவாச்சாரியார்களுக்கு நலத்திட்ட உதவி.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக திருவண்ணாமலை சென்றார். மாவட்ட எல்லையான கீழ்பென்னாத்தூரில் மாவட்ட தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர் எ.வ.வேலு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து மேளதாளத்துடன் பிரம்மாண்டமாக வரவேற்றனர்.

    கீழ்பென்னாத்தூர் தாலுகா ஆராஞ்சி கிராமத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் இல்லம் தேடி கல்வி திட்டம் நிகழ்ச்சியை அவர் தொடங்கி வைத்தார். இது தமிழகத்தில் 2 லட்சமாவது இல்லம் தேடி கல்வி மையமாகும்.

    தொடர்ந்து மாலையில் திருவண்ணாமலை மாடவீதி பெரிய தெருவில் உள்ள பழைய மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சிவாச்சாரியார்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார். 

    பின்னர் திருவண்ணாமலை வேலூர் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அண்ணா நுழைவு வாயிலை திறந்து வைத்த முதலமைச்சர், பின்னர் வெண்கலத்தினால் செய்யப்பட்ட கருணாநிதியின் உருவச்சிலையையையும் திறந்து வைத்தார். கிரிவலப்பாதையில் திருவண்ணாமலை நகரத்தை நோக்கியபடி கருணாநிதி சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து ஈசான்ய மைதானத்தில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களின் கவலைகளைப் போக்கும் அரசாக திராவிட மாடல் அரசு திகழ்ந்து வருகிறது என்றார். தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், அண்ணாவின் ஆசைகள், கலைஞரின் கனவுகளை நிறைவேற்றிய திருப்தி தமக்கு உள்ளது என்றும் குறிப்பிட்டார்.  

    முதலமைச்சரின் வருகையையொட்டி திருவண்ணாமலையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏடிஜிபி தாமரைக்கண்ணன் தலைமையில் ஒரு ஐஜி, 3 டி.ஐ.ஜி., 7 போலீஸ் சூப்பிரண்டு உட்பட 2,200 போலீசார் திருவண்ணாமலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    • திருவண்ணாமலை வேலூர் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அண்ணா நுழைவு வாயிலை திறந்து வைக்கிறார்.
    • கிரிவலப்பாதையில் திருவண்ணாமலை நகரத்தை நோக்கியபடி கருணாநிதி சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று திருவண்ணாமலை வந்தார். திருவண்ணாமலை மாவட்ட எல்லையான கீழ்பென்னாத்தூரில் மாவட்ட தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர் எ.வ.வேலு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து மேளதாளத்துடன் பிரம்மாண்டமாக வரவேற்றனர்.

    இதைத்தொடர்ந்து கீழ்பென்னாத்தூர் தாலுகா ஆராஞ்சி கிராமத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் இல்லம் தேடி கல்வி திட்டம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இது தமிழகத்தில் 2 லட்சமாவது இல்லம் தேடி கல்வி மையமாகும்.

    இதுவரை இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் 7.26 லட்சம் தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர். 2 லட்சம் கற்பிக்கும் தன்னார்வலர்கள், 34 லட்சம் கற்கும் மாணவர்கள் உள்ளனர். இந்த திட்டத்தில் தினமும் 3 லட்சம் மணி நேரம் கற்பிக்கப்படுகிறது.

    இதனைத் தொடர்ந்து இன்று மாலையில் திருவண்ணாமலை மாடவீதி பெரிய தெருவில் உள்ள பழைய மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சிவாச்சாரியார்களுக்கு ஆடைகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

    இதையடுத்து திருவண்ணாமலை வேலூர் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அண்ணா நுழைவு வாயிலை திறந்து வைக்கிறார். பின்னர் வெண்கலத்தினால் செய்யப்பட்ட கருணாநிதியின் உருவச்சிலையை திறந்து வைக்கிறார். கருணாநிதியின் சிலை மட்டும் 8 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதன் பீடம் 13 அரை அடி உயரம் அமைந்துள்ளது. மொத்தமாக 21 அடி உயரத்தில் கருணாநிதி சிலை பிரமாண்டமாக உள்ளது.

    கிரிவலப்பாதையில் திருவண்ணாமலை நகரத்தை நோக்கியபடி கருணாநிதி சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து ஈசான்ய மைதானத்தில் நடைபெறும் தி.மு.க. பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.

    தொடர்ந்து நாளை காலை 9 மணி அளவில் திருவண்ணாமலை அருணை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர் திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் நடைபெறும் அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.1,103 கோடி மதிப்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், கட்டி முடிக்கப்பட்ட திட்டங்களை தொடங்கி வைத்து பல்வேறு துறைகளில் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி விழா பேருரை ஆற்றுகிறார்.

    இதில் ஒரு லட்சத்து 67 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.674 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. மேலும் ரூ.429 கோடி மதிப்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி கட்டி முடிக்கப்பட்ட திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்காக சுமார் 15,000 பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட பந்தல் மேடை அமைக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையொட்டி திருவண்ணாமலையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ஏடிஜிபி தாமரைக்கண்ணன் தலைமையில் ஒரு ஐஜி, 3 டி.ஐ.ஜி., 7 போலீஸ் சூப்பிரண்டு உட்பட 2,200 போலீசார் திருவண்ணாமலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்காக இன்று சென்னை வரும் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. #Karunanidhi
    சென்னை:

    மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அண்ணா அறிவாலயத்தில் 9 அடி உயரத்தில் வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. பளிங்கு கற்களால் பீடம் அமைத்து அதன் மீது சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அண்ணா அறிவாலயத்தில் இருந்த அண்ணா சிலையும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    இன்று மாலை 5 மணி அளவில் 2 சிலைகளும் திறக்கப்பட உள்ளன. இதற்கான விழா இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி விழாவில் கலந்து கொண்டு கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் அவருடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்கிறார்.

    நிகழ்ச்சிக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். பொதுச்செயலாளர் க அன்பழகன் வரவேற்கிறார். துரைமுருகன், ஜெ அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். ஆந்திரா முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோரும் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார்கள். சிலை திறப்பு விழா முடிந்ததும் சோனியாவும், ராகுலும் மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்துகிறார்கள்.

    அதன்பிறகு மாலை 5.30 மணிக்கு ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் எதிர்க்கட்சி தலைவர்களின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    கூட்டத்தில் சோனியா, ராகுல் மற்றும் 3 மாநில முதல்-மந்திரிகளும் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்துக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். ஒரே மேடையில் தலைவர்கள் பேசுகிறார்கள். சிலை திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் முதலில் சோனியா காந்தி மட்டுமே பங்கேற்பதாக இருந்தது.

    ஆனால் நேற்று பிற்பகலில்தான் ராகுலும் கூட்டத்தில் பங்கேற்க போகும் தகவல் வெளியானது. கடைசி நேரத்தில் ராகுலின் பயணத் திட்டம் திடீரென முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சோனியா- ராகுல் ஆகியோர் இன்று மாலை 4.30 மணிக்கு ஒரே விமானத்தில் சென்னை வருகிறார்கள். கிண்டி நட்சத்திர ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின்பு சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

    சோனியா - ராகுல் வருகையையொட்டி சென்னையில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    கருணாநிதி சிலை திறப்பு விழாவையொட்டி இன்று காலையிலேயே அண்ணா அறிவாலயம் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது. டெல்லியில் இருந்து வந்திருந்த பாதுகாப்பு அதிகாரிகள் சிலை திறக்கப்படும் இடத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    இதேபோல் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை சுற்றிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை போலீசாரோடு ஒருங்கிணைந்து டெல்லி அதிகாரிகள் பாதுகாப்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். விழா முடிந்ததும் இன்று மாலையே சோனியா, ராகுல் ஆகியோர் டெல்லி புறப்பட்டு செல்கின்றனர்.



    முக ஸ்டாலின் திமுக தலைவரான பின்பு டெல்லி சென்று சோனியா, ராகுலை சந்தித்துப் பேசினார். அங்கு நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்திலும் கலந்து கொண்டார். தற்போது முக ஸ்டாலின் கூட்டும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் சோனியா, ராகுல் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டம் 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுக்குப் பின்பு நடப்பதால் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

    வருகிற 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக தேர்தலை சந்திக்க கூட்டணியை பலப்படுத்தும் கூட்டமாக இது அமையும் என்று திமுக நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    கருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் கமல்ஹாசன் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை.
    ×