search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கம்பி வேலி"

    • கழுத்தில் கம்பி சுற்றியபடி இருந்ததால், அந்த புலி தப்பித்து செல்ல முடியாமல் தவித்தது.
    • கம்பி வேலியில் சிக்கியதில் அந்த புலிக்கு உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டிருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் சிறுத்தை, புலி, காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் நிகழ்வு தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

    அங்குள்ள மானந்தவாடி பகுதியில் புகுந்த ரேடியோ காலர் பொருத்தப்பட்ட காட்டுயானை ஒன்று சிக்கிய நிலையில், மையம்பள்ளியை சேர்ந்த அஜிஷ் என்பவர் நேற்றுமுன்தினம் காட்டு யானை தாக்கி உயிரிழந்தார். அந்த யானையும் ரேடியோ காலர் பொருத்திய யானை என்பது கண்டறியப்பட்டது.

    வீட்டின் காம்பவுண்ட் சுவரை உடைத்துக்கொண்டு சென்று அஜிசை காட்டு யானை கொன்ற சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் போராட்டம் நடத்தினார்கள். யானை தாக்கி பலியான ஜிசின் குடும்பத்தினருக்கு நிவாரணத்தொகை மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று கேரள மாநில அரசு அறிவித்தது.

    வயநாடு மாவட்டத்தில் காட்டுயானைகள் அட்டகாசத்தை தடுக்கவும், அஜிசை கொன்ற யானையை பிடிக்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு கடிதமும் எழுதினார்.

    இந்நிலையில் கண்ணூர் கோட்டியூர் பன்னியமலை பகுதியில் விவசாய நிலத்தில் இருந்த கம்பி வேலியில் இன்று புலி ஒன்று சிக்கியது. அதனை தொழிலாளி ஒருவர் பார்த்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். கழுத்தில் கம்பி சுற்றியபடி இருந்ததால், அந்த புலி தப்பித்து செல்ல முடியாமல் தவித்தது. சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், அந்த புலியை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    கம்பி வேலியில் சிக்கியதில் அந்த புலிக்கு உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் புலியை அமைதிப்படுத்தி மீட்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

    • கமுதி அருகே கம்பி வேலிகளுக்குள் சிக்கி புள்ளிமான் பலியானது.
    • அந்த பகுதியில் உள்ள நாய்கள் கூட்டமாக குரைத்தபடி மானை துரத்தியுள்ளன.

    பசும்பொன்

    கமுதி-குண்டாறு பகுயில் கருவேல மரங்கள் அடர்ந்துள்ளன. இந்த பகுதியில் ஏராளமான புள்ளிமான்கள், மயில்கள், அரிய வகை வெள்ளை மயில்கள் வசித்து வருகின்றன. ஆனால் தற்போது நிலவி வரும் கடுமையான வெயில் காரணமாக இந்த பகுதி தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது.

    இதனால் மான்கள், மயில்கள் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் வருகின்றன. அங்கு சுற்றி திரியும் நாய்கள் அவைகளை துரத்தி கடித்து விடுகின்றன. இதனால் பல மயில்கள் மற்றும் மான்கள் இறந்து வருகின்றன.இந்த நிலையில் கமுதி-குண்டாறு கரை பகுதியில் சந்தன மாரியம்மன் கோவில் சுற்றுப்பகுதியில் விலங்கு கள் உள்ளே வராமல் தடுப்பதற்காக கம்பி வேலி போடப்பட்டுள்ளது. தண்ணீர் குடிப்பதற்காக அந்த பகுதிக்கு 7 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளி மான் ஒன்று வந்துள்ளது.

    அந்த பகுதியில் உள்ள நாய்கள் கூட்டமாக குரைத்தபடி மானை துரத்தியுள்ளன. இதில் பதற்றம் அடைந்த புள்ளி மான் தப்பிப்பதற்காக வேகமாக ஓடி கம்பி வேலிகளுக்குள் சிக்கியது. அதில் இருந்து வெளி வர முடியாமல் பரிதாபமாக இறந்தது.இது குறித்து தகவல் அறிந்த கமுதி தீயணைப்பு நிலைய அலுவலர் சந்திர சேகரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த புள்ளி மானை மீட்டனர். பின்னர் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். பேரூராட்சி வாகனம் மூலம் உடற்கூறு ஆய்வுக்காக கோட்டை மேட்டில் உள்ள கால்நடை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • தேனி மாவட்டம் பண்ண–புரம் பேரூராட்சியில் பொது கழிப்பிட கழிவுத்–தொட்டியில் தவறி விழுந்து 2 பேர் பலியாகினர்.
    • உயிரிழப்புகள் ஏற்படுவதை தவிர்க்க, பொது கழிப்பிடத் தொட்டிகளைச் சுற்றி இரும்பு கம்பி வேலி அமைக்க வேண்டும் என, பேரூராட்சிகள் துறை மாநில ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

    வாழப்பாடி:

    தேனி மாவட்டம் பண்ணபுரம் பேரூராட்சியில் பொது கழிப்பிட கழிவுத்–தொட்டியில் தவறி விழுந்து 2 பேர் பலியாகினர். இதனையடுத்து மற்ற பேரூராட்சி பகுதிகளிலும், இது போன்ற விபத்துகள், உயிரிழப்புகள் ஏற்படுவதை தவிர்க்க, பொது கழிப்பிடத் தொட்டிகளைச் சுற்றி இரும்பு கம்பி வேலி அமைக்க வேண்டும் என, பேரூராட்சிகள் துறை மாநில ஆணையர் செல்வராஜ் உத்தரவிட்டுள்ளார்.

    இதனைத்தொடர்ந்து, சேலம் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் கணேஷ்ராம் வழிகாட்டுதலின்படி, வாழப்பாடி பேரூராட்சியில், மக்கள் பயன்பாட்டில் உள்ள, 15 பொது கழிப்பிடங்களிலும் கழிவுத்தொட்டிகளை சுற்றியும், கல்தூண் நிறுத்தி இரும்பு கம்பி வேலி அமைக்கும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை வாழப்பாடி பேரூராட்சி தலைவர் கவிதா சக்கரவர்த்தி செயல் அலுவலர் கணேசன், உதவி பொறியாளர் தினேஷ்குமார் ஆகியோர் பார்வையிட்டனர்.

    • இரண்டாம் மண்டல பாசனத்தில் பி.ஏ.பி. வாய்க்காலில் 14,662 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற உள்ளது.
    • கால்வாய் ஷட்டர்களில் கழிவுகள் தேங்கி தண்ணீர் விரயமும் அதிகரிக்கிறது.

    உடுமலை :

    பி.ஏ.பி., பாசனத்திட்டத்தில் உடுமலை கால்வாய் வாயிலாக நான்கு மண்டலங்களில் 58 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வரும் இரண்டாம் மண்டல பாசனத்தில் இந்த வாய்க்காலில் 14,662 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற உள்ளது.

    இந்த கால்வாயில் போடிபட்டி, பள்ளபாளையம், அரசு கலைக்கல்லூரி பின்பகுதி, கணக்கம்பாளையம், எஸ்.வி., புரம், எஸ்.வி., மில் உட்பட பகுதிகளில், கால்வாயில் அனைத்து வகையான குப்பையும் கொட்டப்படுகிறது.குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவு கொட்டப்படுவதால் கால்வாயே காணாமல் போகும் அவல நிலையில் உள்ளது. பாசனத்துக்கு, கால்வாயில் தண்ணீர் திறக்கும் போது இத்தகைய குப்பை விளைநிலத்தில் தேங்குவதுடன், மண் வளத்தையும் பாதித்து வருகிறது. மேலும் பகிர்மான கால்வாய் ஷட்டர்களில் கழிவுகள் தேங்கி தண்ணீர் விரயமும் அதிகரிக்கிறது.

    பாசனத்துக்கு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கும் முன் பொதுப்பணித்துறை சார்பில் அவசர கதியில் உடுமலை வாய்க்காலில் உள்ள குப்பை அகற்றப்படுகின்றன.நீர் நிர்வாகம் மற்றும் மண் வளத்தை பாதிக்கும் இப்பிரச்னைக்கு, நிரந்தர தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் தரப்பில் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.பொதுப்பணித்துறை சார்பில் கால்வாயில், குப்பை கொட்டப்படுவதை தவிர்க்க குறிப்பிட்ட இடங்களில் கம்பி வேலி அமைக்க திட்டமிடப்பட்டது. திட்டத்துக்கான கருத்துரு தயாரிக்கப்பட்டு அரசு ஒப்புதலுக்கும் அனுப்பப்பட்டது.ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாசன திட்டத்தை பாதுகாக்க உடனடியாக அரசு நிதி ஒதுக்கி நடப்பு சீசனில், பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • எதிர்ப்பு தெரிவித்தவர்கள் சார்பில் தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
    • இங்கு சமூக விரோத செயல்களும், பாதுகாப்பு இல்லாத ஒரு சூழ்நிலையும் நிலவும் என்றனர்.

    பல்லடம் :

    பொங்கலூர் அருகே அலகுமலையில் கைலாசநாதர் கோயில் உள்ளது. இந்த கோயில் முன்பு கொடி கம்பம் மற்றும் தேர் ஆகியன நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த பகுதியில் பாதுகாப்பிற்காக கம்பி வேலி அமைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2019-ம் ஆண்டு அந்த பகுதியை சேர்ந்த ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தவர்கள் சார்பில் தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அப்போதைய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணைத் தலைவராக இருந்த முருகன் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். அதன் அடிப்படையில் கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலியில் இருபுறமும் நுழைவாயில் அமைக்கப்பட்டது.

    அந்த நுழைவாயில் பகல் நேரங்களில் திறக்கப்பட்டும், இரவு நேரங்களில் பூட்டப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் கோயிலின் அருகே உள்ள கேட் நிரந்தரமாகவும் மூடப்பட்டது. இந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரு பிரிவினர் நீதிமன்றத்தை நாடினர். நீதிமன்றமும் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என தெரிவித்தது. அதன் பின்னர் அமைதியான சூழ்நிலை நிலவி வந்தது. ஆனால் தற்போது அந்த கம்பி வேலியை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த சிலர் நேற்று கம்பி வேலி அகற்றும் போராட்டம் மற்றும் தலித் மக்களின் 12 ஏக்கர் பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்துள்ளதை மீட்கும் போராட்டம் என போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதனை தொடர்ந்து நேற்று கோயிலுக்கு சம்பந்தப்பட்ட பிரிவினர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று கூடினர். இதன் காரணமாக பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்டு வெற்றிச்செல்வன், அவிநாசி பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டனர் மேலும் சம்பவ இடத்திற்கு திருப்பூர் தெற்கு தாசில்தார் கோவிந்தராஜன், கோவில் செயல் அலுவலர் சரவணபவன் ஆகியோரும் வந்தனர்.

    போராட்டம் அறிவித்த தரப்பினரிடம் போலீஸ் துணை சூப்பிரண்டு வெற்றிசெல்வன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் சுசி. கலையரசன், பல்லடம் தொகுதி செயலாளர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் தரப்பில், இந்த கம்பி வேலியை முழுமையாக அகற்ற வேண்டும், பொதுமக்கள் சென்று வர எந்த விதமான தடையும் இருக்கக் கூடாது என்பதே எங்களது கோரிக்கை. மேலும் கோயிலின் அருகில் உள்ள கேட்டையும் திறந்து விட வேண்டும் என்று தெரிவித்தனர். இதற்கு போலீஸ் தரப்பில் திங்கட்கிழமை அமைதி பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ளலாம். அதுவரை அமைதி காக்குமாறு கேட்டுக் கொண்டனர். இதனை ஏற்று அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் கோயில் தரப்பில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தரப்பில் கூறும்போது, ஏற்கனவே 2010 முதல் என்ன நடைமுறை அறிவிக்கப்பட்டதோ அது அப்படியே தொடர வேண்டும். இதில் எந்த விதமான மாறுதலும் செய்யக்கூடாது. அப்படி செய்தால் இங்கு சமூக விரோத செயல்களும், பாதுகாப்பு இல்லாத ஒரு சூழ்நிலையும் நிலவும் என்று தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    ×