search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "spotted deer sacrifice"

    • கமுதி அருகே கம்பி வேலிகளுக்குள் சிக்கி புள்ளிமான் பலியானது.
    • அந்த பகுதியில் உள்ள நாய்கள் கூட்டமாக குரைத்தபடி மானை துரத்தியுள்ளன.

    பசும்பொன்

    கமுதி-குண்டாறு பகுயில் கருவேல மரங்கள் அடர்ந்துள்ளன. இந்த பகுதியில் ஏராளமான புள்ளிமான்கள், மயில்கள், அரிய வகை வெள்ளை மயில்கள் வசித்து வருகின்றன. ஆனால் தற்போது நிலவி வரும் கடுமையான வெயில் காரணமாக இந்த பகுதி தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது.

    இதனால் மான்கள், மயில்கள் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் வருகின்றன. அங்கு சுற்றி திரியும் நாய்கள் அவைகளை துரத்தி கடித்து விடுகின்றன. இதனால் பல மயில்கள் மற்றும் மான்கள் இறந்து வருகின்றன.இந்த நிலையில் கமுதி-குண்டாறு கரை பகுதியில் சந்தன மாரியம்மன் கோவில் சுற்றுப்பகுதியில் விலங்கு கள் உள்ளே வராமல் தடுப்பதற்காக கம்பி வேலி போடப்பட்டுள்ளது. தண்ணீர் குடிப்பதற்காக அந்த பகுதிக்கு 7 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளி மான் ஒன்று வந்துள்ளது.

    அந்த பகுதியில் உள்ள நாய்கள் கூட்டமாக குரைத்தபடி மானை துரத்தியுள்ளன. இதில் பதற்றம் அடைந்த புள்ளி மான் தப்பிப்பதற்காக வேகமாக ஓடி கம்பி வேலிகளுக்குள் சிக்கியது. அதில் இருந்து வெளி வர முடியாமல் பரிதாபமாக இறந்தது.இது குறித்து தகவல் அறிந்த கமுதி தீயணைப்பு நிலைய அலுவலர் சந்திர சேகரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த புள்ளி மானை மீட்டனர். பின்னர் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். பேரூராட்சி வாகனம் மூலம் உடற்கூறு ஆய்வுக்காக கோட்டை மேட்டில் உள்ள கால்நடை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ×