search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏகாதசி விரதம்"

    • ஏகாதசி திதி என்றாலே விஷ்ணுவின் வழிபாட்டு நாள்தான்.
    • ஸ்ரீ ரங்கத்தில் சந்தன மண்டபத்தில் விசேஷ திருமஞ்சனம் நடைபெறும்.

    மகாவிஷ்ணுவின் அருளை வாரி தரும் ஏகாதசி விரதம். ஏகாதசி திதி என்றாலே விஷ்ணுவின் வழிபாட்டு நாள்தான். நாம் இருக்கும் விரதங்களில் ஏகாதசி விரதம்தான் அதிகம் புண்ணியம் அளிக்கும் விரதமாக கருதப்படுகிறது. இன்று ஸ்ரீ ரங்கத்தில் நம் பெருமாளுக்கு சந்தன மண்டபத்தில் விசேஷ திருமஞ்சனம் நடைபெறும்.

    ஏகாதசியில் விரதம் இருப்பவர்களுக்கு வாழ்க்கையில் இருக்கும் எல்லா நலன்களும் கிடைக்கும் என விஷ்ணு புராணம் நமக்கு விளக்குகிறது. திதிகளில் பதின்றொவது திதியாக வருவது ஏகாதசி, வளர்பிறை, தேய்பிறை முறையே ஒவ்வொரு மாதத்திற்கும் இரண்டு ஏகாதசிகள் உண்டு. இப்படி ஆண்டுக்கு 24 ஏகாதசிகள் இருக்கின்றன. அவற்றிற்கு வெவ்வேறு பெயர்கள், சிறப்பு பலன்கள் உள்ளன.

    அதிகாலையில் எழுந்து, குளிர்ந்த நீரில் நீராடி, விஷ்ணு பகவானை வழிபட வேண்டும். அன்றைய தினம் முழுவதும் விரதம் இருந்து, மறுநாள் காலை பூஜை செய்த பின் விரதம் முடிக்க வேண்டும். விரதம் இருக்கும்போது திருமாலின் நாமத்தை உச்சரிக்கவேண்டும்.

    தேவையுள்ள எளியவர்களுக்கு உணவு, உடை போன்ற அத்தியாவசியப் பொருட்களை தானம் செய்யலாம். ஏகாதசி அன்று பெருமாளுக்கு நெல்லிக்காய் நைவேத்தியம் வைத்து வழிபடலாம். உங்கள் வீட்டின் அருகே ஏதேனும் நெல்லிமரம் உண்டெனில் அதற்கு தீபாராதனை, தூபராதனை காட்டி வழிபடுங்கள். இந்த பாசுரத்தை சொல்லி வழிபடுங்கள்.

    `துப்புடையாரை அடைவதெல்லாம்

    சோர்விடத்துத் துணையாவ ரென்றே

    ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன்

    ஆனைக்குநீ அருள்செய் தமையால்

    எய்ப்புஎன்னை வந்துநலியும்போது

    அங்குஏதும் நானுன்னை நினைக்க

    மாட்டேன்

    அப்போதைக்கு இப்போதே சொல்லி

    வைத்தேன்

    அரங்கத் தரவணைப் பள்ளியானே!'

    • ஆமலகி ஏகாதசி செல்வ வளத்தையும், வெற்றிகளையும் தரக்கூடியது.
    • பகவான் ஸ்ரீமன் நாராயணனை துதிக்க வேண்டும்.

    மாசி மாதத்தில் வளர்பிறை, தேய்பிறை இரண்டிலுமே வரும் ஏகாதசி தனித்துவமானவை. இந்த ஏகாதசிகளில் விரதமிருந்தால் திருமாலின் அருள் பரிபூரணமாகக்கிடைக்கும். வாழும் போதே துன்பங்கள் இன்றி, இன்பமான வாழ்க்கை வாழ வழிசெய்யும். மாசி மாதம் வளர்பிறையில் வரும் ஆமலகி ஏகாதசி செல்வ வளத்தையும், வெற்றிகளையும் தரக்கூடியது.

    இந்த ஏகாதசியில் விரதம் இருந்து, நெல்லி மரத்திற்கு பூஜை செய்து வழிபட்டால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். இதனால், வீட்டில் உள்ள பணம் தொடர்பான பிரச்னைகள் நீங்கி, செல்வச் செழிப்பு ஏற்படும். ஏகாதசி உபவாசம் இருந்து பகவான் ஸ்ரீமன் நாராயணனை துதிக்க வேண்டும். அன்று இந்த பாசுரம் பாடலாம்.

    ``சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில்

    சொல்லு சொல்லு என்று சுற்றும் இருந்து

    ஆர்வினவிலும் வாய் திறவாதே

    அந்தகாலம் அடைவதன்முன்னம்

    மார்வம்என்பதுஓர் கோயில்அமைத்து

    மாதவன்என்னும் தெய்வத்தைநாட்டி

    ஆர்வம்என்பதுஓர் பூஇடவல்லார்க்கு

    அரவதண்டத்தில் உய்யலும்ஆமே''.

    • ஏகாதசிக்கு சமமான விரதம் இல்லை என்று அக்னி புராணம் கூறுகிறது.
    • பாற்கடலில் இருந்து அமிர்தம் வெளிப்பட்ட நாள் ஏகாதசி.

    ஏகாதசிக்கு சமமான விரதம் இல்லை என்று அக்னி புராணம் கூறுகிறது.

    இந்நன்னாளில் விரதம் இருப்போருக்கு திருமாலே பரமபத வாசலைத் திறந்து வைத்து அருள்பாலிப்பார் என்பது ஐதீகம்.

    விரதங்களில் சிறந்தது ஏகாதசி விரதம் என்று உமையவளிடம் பரமசிவனே கூறுகிறார்.

    பல்வேறு புராணங்கள் ஏகாதசி விரதத்தின் பெருமையையும், அதனால் அளப்பரிய நலனைப் பெறலாம் என்றும் அழுத்தம் திருத்தமாகச் சொல்கின்றன.

    பாற்கடலில் இருந்து அமிர்தம் வெளிப்பட்ட நாள் ஏகாதசி.

    அந்த அமிர்தத்தைப் போன்று விஷ்ணுவின் அருளை நமக்கு அளிக்கக்கூடிய விரதம் ஏகாதசி விரதம்.

    இந்த விரதத்தை எவரெல்லாம் மேற்கொள்கிறார்களோ, அவர்களுக்கு எல்லா வகையிலும் மேன்மை உண்டாகும்.

    அவர்களுக்கு மரண பயமோ நரக வாசமோ இல்லை.

    • ஆடி 18-ம் பெருக்கிற்கு தனி சக்தி உண்டு. ஆடி மாதம் என்பது கடக மாதம்.
    • ஆடி 18 அன்று பூசம் நட்சத்திரத்தை விட்டு விட்டு ஆயில்யம் நட்சத்திரத்திற்கு சூரியன் மாறுவார்.

    ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கேற்ப பழைய காலத்தில் மழை இருந்தது. சித்திரை, வைகாசி, ஆனி இந்த மூன்று மாதங்களில் இருக்கக் கூடிய காய்ச்சல் முடிந்து ஆடி மாதத்தில் நன்றாக மழைபொழிந்து எல்லா விளை நிலங்களும் விதைக்கப்படக் கூடிய அளவிற்கு புது வெள்ளம் வரும். இந்த புது வெள்ளத்துடன் வரக்கூடியதுதான் ஆடிப்பெருக்கு.

    சங்க நூல்களில்பெண்கள் ஆற்றிற்கு விழா எடுத்தார்கள். ஆற்றை ஒரு கன்னிப்பெண்ணாக நினைத்து வணங்கினார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதில் சப்த கன்னிகளுக்கான வழிபாடு என்பது அன்றைக்கு விசேடமானது. பெருக்கெடுத்து ஓடி வரும் அந்த புது வெள்ளம், புது நீர் வரும் போது தாலியை மாற்றிக் கொள்ளுதல், கன்னிப்பெண்கள் மஞ்சள் கயிற்றைச் சுற்றிக் கொள்வது. நல்ல வரன் வரவேண்டும் என்று வேண்டிக் கொள்வது, சுமங்கலிகள் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள்.

    ஆடி 18-ம்பெருக்கிற்கு தனி சக்தி உண்டு. ஆடி மாதம் என்பது கடக மாதம். இந்த கடக ராசியில் புனர்பூசம், ஆயில்யம் என்ற 3 நட்சத்திரங்கள் இருக்கிறது. இந்த ஆடி 18 அன்று பூசம் நட்சத்திரத்தை விட்டு விட்டு ஆயில்யம் நட்சத்திரத்திற்கு சூரியன் மாறுவார். அந்த சனி நட்சத்திரத்தை விட்டு விட்டு புதன் நட்சத்திரத்திற்கு சூரியன் வரும் போது அது ஒருவித சக்தியைக் கொடுக்கும்.

    இதனால்தான் இந்த நாட்களில் இது போன்றெல்லாம் செய்வது செய்ய வேண்டிய பழக்கத்தை நம் மூதாதையர்கள் ஏற்படுத்தி வைத்துள்ளனர்.

    ஏகாதசி விரதம் இருக்கும் முறை

    ஏகாதசியை விட சிறந்த விரதம் கிடையாது என்று பதினெட்டு புராணங்களும் கூறுகின்றன. அதனால், ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, விரதத்திற்கு தயாராக வேண்டும்.

    அன்றைய தினம் துளசி இலைகளை பறிக்கக் கூடாது, அதனால், அதை முதல் நாளே பறித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அன்றைய தினம் முழுவதும் துளசி தீர்த்தம் மட்டும் அருந்தி விரதம் இருப்பது நல்லது. முடியாதவர்கள்,பழங்களை நிவேதனம் செய்து சாப்பிடலாம். சிறிது பலகாரங்களையும் ஏற்றுக் கொள்ளலாம். எக்காரணம் கொண்டும் பகலில் தூங்கக் கூடாது.

    இரவில் கண்டிப்பாக பஜனை செய்ய வேண்டும். இது முடியாவிட்டால், விஷ்ணுபற்றிய நூல்களைபடிக்கலாம்.

    இந்த விரதம் இருந்தால் பாவங்கள் நீங்கும், உடல் ஆரோக்கியமாகும், வீட்டில் செல்வம்பெருகும், சந்ததி வளரும் என்பது நம்பிக்கை.

    வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள், மறுநாள் துவாதசி அன்று 'பாரணை' என்னும் விரதத்தை மேற்கொள்வார்கள். ஏகாதசி மரணமும், துவாதசி தகனமும் யோகிகளுக்கு கூட கிடைக்காது என்ற சொல் வழக்கில் இருந்தே இந்த விரதங்களின் சிறப்பை உணர்ந்து கொள்ளலாம்.

    ×