search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இறைச்சி"

    • (ஞாயிற்றுக்கிழமை) வள்ளலார் தினத்தையொட்டி இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகள் செயல்படாது.
    • எனவே இறைச்சி கடை உரிமையாளர்கள் தாங்கள் நடத்தும் இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகளை முழுமையான அளவில் மூடப்பட வேண்டும்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சிப் பகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நாளை(ஞாயிற்றுக்கிழமை) வள்ளலார் தினத்தையொட்டி இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகள் செயல்படாது. எனவே இறைச்சி கடை உரிமையாளர்கள் தாங்கள் நடத்தும் இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகளை முழுமையான அளவில் மூடப்பட வேண்டும்.

    அனைத்து இறைச்சி கடைகள் மற்றும் இறைச்சி கூடங்கள் முழுமையாக மூடப்பட்டுள்ளதா என்பதை சுகாதார அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கண்காணிக்கவும், மாநகராட்சியின் அறிவிப்பை செயல்படுத்தாத இறைச்சி கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    • பொங்கல் பண்டிகையொட்டி பெரும்பாலான வீடுகளில் முதல் நாள் மற்றும் 2-வது நாளான நேற்றும் சைவ உணவுகளை சமைத்து அதனை சாமிக்கு படையலிட்டு கும்பிடுவது வழக்கம். 3-வது நாளான காணும் பொங்கல் அன்று அசைவ பிரியர்கள் இறைச்சி வாங்கி உண்பார்கள்.
    • காணும் பொங்கல் பண்டிகையொட்டி சேலத்தில் இறைச்சி, மீன் கடைகளில் அலைமோதிய கூட்டம் அலைமோதியது.

    சேலம்:

    பொங்கல் பண்டிகை ஓட்டி நேற்று முன்தினம் சேலம் மாநகரில் பெரும்பாலான இறைச்சி மற்றும் மீன்கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    தொடர்ந்து நேற்று திருவள்ளுவர் தினத்தை ஒட்டி மீன் கடைகள் இறைச்சி கடைகளை அடைக்க மாநகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டு இருந்தது.

    இதையொட்டி இறைச்சி, மீன் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் அசைவ பிரியர்கள் கறி சாப்பிட முடியாமல் அவதி அடைந்தனர்.

    இந்த நிலையில், இன்று காலை சேலம் மாநகரில் உள்ள இறைச்சி கடைகள், மீன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. காலை முதலே இறைச்சி மற்றும் மீன் கடைகளில் கூட்டம் அலைமோதியது.

    இதைத்தொடர்ந்து1 மணி நேரம் வரை காத்து நின்று கடைகளில் இறைச்சியை பொதுமக்கள் வாங்கி சென்றனர். அதேபோல மீன் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.

    1 கிலோ ஆடு இறைச்சி ரூ.800-க்கு விற்பனையானது. அதேபோல சூரமங்கலம் பகுதியில் உள்ள மாநகராட்சி மீன் சந்தை மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள மீன் சந்தைகளிலும் மீன்கள் விற்பனை அதிக அளவில் நடந்தது.

    • தேவகோட்டையில் நாட்கணக்கில் வைத்து விற்கப்படும் இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • ஷாகுல் அமீது என்பவர் 10 நாட்களுக்கு மேல் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை விற்பது தெரியவந்தது.

    தேவகோட்டை,

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் 1 லட்சத்திற்கும் மேலான மக்கள் வசித்து வருகின்றனர்.

    இங்குள்ள இறைச்சி கடைகளில் விற்கப்படும் ஆட்டுக்கறி சுகாதாரமற்ற முறையிலும், நாட்கணக்கில் பதப்படுத்தப்பட்டு விற்கப்படுவதாகவும் புகார்கள் வந்தன.

    இது தொடர்பாக உணவு பாதுகாப்பு அதிகாரி வேல்முருகன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் உதவியாளர் மாணிக் கம் ஆகியோர் தலைமையில் தேவகோட்டை பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் அதிரடி சோதனை நடத்தி னர்.

    அப்போது நகைக்கடை பஜாரில் இறைச்சி கடை நடத்தி வரும் ஷாகுல் அமீது என்பவர் 10 நாட்களுக்கு மேல் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை விற்பது தெரியவந்தது. அவருக்கு சொந்தமாக அண்ணாநகர், ஆறாவயல், வெள்ளையன் ஊரணி ஆகிய பகுதி களிலும் இறைச்சி கடை கள் உள்ளன. இங்கும் கெட்டுப்போன இறைச்சி விற்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து மேற்கண்ட 4 கடைகளில் இருந்தும் 1000 கிலோ ஆட்டுக்கறி பறிமுதல் செய்யப்பட்டு சாகுல் அமீதுக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தேவகோட்டையில் இறைச்சி களுக்காக ஆடுகள் அறுக்கும் போது பரிசோதனை செய்து ரசீது வழங்கி கடைகளுக்கு இறைச்சிகளில் சீல் வைத்து அனுப்பப்படுவது வழக்கம்.

    ஆனால் இந்த நடைமுறை கடந்த சிலமாதங்களாக பின்பற்றப்படுவது இல்லை. இதனால் சுகாதாரமற்ற நாட்கணக்கில் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் விற்கப்பட்டு வருகிறது. இதனை வாங்கி உட்கொள்ளும் பொது மக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

    எனவே இனியாவது நகராட்சி நிர்வாகம் கடுமையாக கண்காணித்து ஆட்டு இறைச்சி விற்ப னைக்கு விதிகளை பின் பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

    • ஞாயிற்றுக்கிழமை மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி இறைச்சி எடுப்பதற்காக அதிகாலை முதலே அதிகளவில் அசைவ பிரியர்கள் கடை களில் குவிந்தனர்.
    • குறிப்பாக மீன் மற்றும் இறைச்சி மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் 500- க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய அளவில் மீன் கடைகள், இறைச்சிக் கடைகள் உள்ளன. இதேபோல் மீன் மார்க்கெட், இறைச்சி மார்க்கெட்டுகளும் உள்ளன.

    இந்த கடை மற்றும் மார்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் பண்டிகை சீசன் நாட்களில் மீன், ஆடு, கோழி இறைச்சி விற்பனை அதிகளவில் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இன்று ஞாயிற்றுக்கிழமை மற்றும்

    கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி இறைச்சி எடுப்பதற்காக அதிகாலை முதலே அதிகளவில் அசைவ பிரியர்கள் கடை

    களில் குவிந்தனர். குறிப்பாக மீன் மற்றும் இறைச்சி மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் ஆடு, கோழி இறைச்சி , மீன் விற்பனை அமோகமாக நடைபெற்றது. இன்று 1 கிலோ ஆட்டுக்கறி - ரூ.600- ரூ.700, பிராய்லர் கோழிக்கறி - ரூ.200, நாட்டுக்கோழி கறி - ரூ.560- ரூ.600, மீன் வகைகள் ( ரகத்தை பொறுத்து)- ரூ.125- ரூ.700, என்கிற விலையில் விற்கப்பட்டது.

    • காந்தி மியூசியத்தில் சமூக விரோதிகள் மது-,இறைச்சி சாப்பிடுவதாக பா.ஜ.க.வினர் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தனர்.
    • கல்வெட்டுகளின் எழுத்தும் அழிந்து பொலி விழந்து காணப்படுகிறது.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் மகா. சுசீந்திரன், நிர்வாகிகள் சீமான்சரவணன், முத்துக்குமார் ஆகியோர் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    மதுரை காந்தி மியூசியத்திற்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தினமும் வந்து செல்கின்றனர்.

    இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்று தந்த காந்தியடிகள், 'மது அருந்தக்கூடாது, மாமிசம் சாப்பிடக்கூடாது" என்று போதித்தார். ஆனால் காந்தி மியூசிய வளாகத்திற்குள் சமூக விரோதிகள் அத்துமீறி நுழைந்து மது அருந்தி, மாமிசம் சாப்பிட்டு வருகின்றனர்.

    இதைப்பார்த்து இங்கு வரும் சுற்றுலா பயணிகள் முகம் சுளித்து செல்கின்றனர். இதனால் வெளி நாட்டவர் மத்தியில் காந்தியின் பெயர், புகழுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. மதுரை உலக தமிழ் சங்கம் 1986-ந் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, 2016-ந் ஆண்டு திறக்கப்பட்டது. அதில் மாணவ- மாணவிகள் படித்து தெளிவுறும் வகையில் 1,330 திருக்குறள்களும், அதன் விளக்கவுரைகளும் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருந்தன. ஆனால் இன்று அவை கருவேல மரங்களால் சூழ்ந்து மறைக்கப்பட்டுள்ளது. கல்வெட்டுகளின் எழுத்தும் அழிந்து பொலி விழந்து காணப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    புகார் மனுவை படித்த கலெக்டர் அனீஷ்சேகர் உடனடியாக மனுவை மேல் நடவடிக்கைக்காக மாநகராட்சி கமிஷனர், போலீஸ் கமிஷனர், மற்றும் தமிழ் வளர்ச்சி துறைக்கு அனுப்பி வைத்து உத்தரவிட்டார்.

    • இன்று புரட்டாசி மாதம் தொடங்கியுள்ளதால் மீன் கடைகள் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
    • இதனால் மீன்கள், இறைச்சிகள் விலை கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் குறைந்து உள்ளது.

    ஈரோடு:

    புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பார்கள். இந்த மாதத்தில் அசைவ பிரியர்கள் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி விடுவார்கள். இதனால் இறைச்சி கடைகள் வெறிச்சோடி காணப்படும்.

    இந்நிலையில் இன்று புரட்டாசி மாதம் பிறந்தது. இன்று வார விடுமுறை நாள் என்பதால் இறைச்சி கடைகள், மீன் கடைகளில் வழக்கமாக அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். வியாபாரமும் விறுவிறுப்பாக நடைபெறும்.

    இன்று புரட்டாசி மாதம் தொடங்கியுள்ளதால் மீன் கடைகள் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் பாலம் அருகே மீன் மார்க்கெட்டில் 30-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் உள்ளன. இன்று காலை முதலே மக்கள் கூட்டம் இன்றி மீன் மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுகிறது.

    ஒரு சிலர் மட்டுமே மீன்களை வாங்கி சென்றனர். இதேபோல் கோழி, ஆட்டு இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் மீன்கள், இறைச்சிகள் விலை கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் குறைந்து உள்ளது.

    ×