search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "deserted"

    • இன்று புரட்டாசி மாதம் தொடங்கியுள்ளதால் மீன் கடைகள் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
    • இதனால் மீன்கள், இறைச்சிகள் விலை கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் குறைந்து உள்ளது.

    ஈரோடு:

    புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பார்கள். இந்த மாதத்தில் அசைவ பிரியர்கள் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி விடுவார்கள். இதனால் இறைச்சி கடைகள் வெறிச்சோடி காணப்படும்.

    இந்நிலையில் இன்று புரட்டாசி மாதம் பிறந்தது. இன்று வார விடுமுறை நாள் என்பதால் இறைச்சி கடைகள், மீன் கடைகளில் வழக்கமாக அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். வியாபாரமும் விறுவிறுப்பாக நடைபெறும்.

    இன்று புரட்டாசி மாதம் தொடங்கியுள்ளதால் மீன் கடைகள் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் பாலம் அருகே மீன் மார்க்கெட்டில் 30-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் உள்ளன. இன்று காலை முதலே மக்கள் கூட்டம் இன்றி மீன் மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுகிறது.

    ஒரு சிலர் மட்டுமே மீன்களை வாங்கி சென்றனர். இதேபோல் கோழி, ஆட்டு இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் மீன்கள், இறைச்சிகள் விலை கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் குறைந்து உள்ளது.

    • இன்று கூடிய ஜவுளி சந்தையில் வெளி மாநில வியாபாரிகள் வராததால் மொத்த வியாபாரம் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
    • கடந்த வாரம் 40 சதவீதத்திற்கு நடந்த மொத்த வியாபாரம் இந்த வாரம் 10 சதவீதம் கூட நடைபெறவில்லை என வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு ஜவுளி சந்தை யானது கனி மார்கெட், பன்னீர்செல்வம் பார்க், திருவேங்கடசாமி வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் வாரந்தோறும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் ஜவுளி சந்தை நடைபெற்று வருகிறது.

    வாரந்தோறும் நடைபெறும் இந்த ஜவுளி சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மற்றும் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் நேரடியாக வந்து ஜவுளிகளை மொத்த விலையில் வாங்கி செல்வார்கள்.

    இந்நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த வாரம் ஜவுளி சந்தையில் வியாபாரம் சுமாராக நடந்தது. இந்நிலையில் இன்று கூடிய ஜவுளி சந்தையில் வெளி மாநில வியாபாரிகள் வராததால் மொத்த வியாபாரம் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

    நாளை மறுநாள் ஓணம் பண்டிகை என்பதால் இன்று கூடிய ஜவுளி சந்தையில் கேரளா வியாபாரிகள் வரவில்லை. இதேபோல் கர்நாடகா, ஆந்திராவில் தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் அங்கிருந்தும் வெளி மாநில வியாபாரிகள் வரவில்லை.

    கடந்த வாரம் 40 சதவீதத்திற்கு நடந்த மொத்த வியாபாரம் இந்த வாரம் 10 சதவீதம் கூட நடைபெறவில்லை என வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.

    இதேப்போல் உள்ளூர் வியாபாரிகளும் அதிக அளவில் வராததால் ஜவுளி சந்தை வெறிச்சோடியது. இன்று நடந்த ஜவுளி சந்தையில் சில்லரை விற்பனை 30 சதவீதம் நடைபெற்றதாக வியா பாரிகள் தெரிவித்தனர்.

    • ஈரோடு ஜவுளி சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
    • சில்லரை வியாபாரம் 30 சதவீதம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு ஜவுளி சந்தை வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறுவது வழக்கம். இந்த ஜவுளி சந்தையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள், வெளிமாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து ஜவுளி ரகங்களை மொத்த விலைக்கு கொள்முதல் செய்து வருகின்றனர்.

    கொரோனா தாக்கம் காரணமாக ஜவுளி சந்தை வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக அதிலிருந்து மீண்டு வந்த நிலையில் நூல் விலை உயர்வு காரணமாக கடந்த சில வாரங்களாக ஜவுளி சந்தையில் வியாபாரம் மந்தமாக நடந்து வந்தது. இந்நிலையில் தொடர் முகூர்த்த நாள், பள்ளி திறப்பையொட்டி கடந்த வாரம் ஜவுளி சந்தையில் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது.

    அதேபோல் இந்த வாரமும் ஜவுளி சந்தையில் சில்லரை வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது. பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து திறக்கப்ப ட்டுள்ளன. இதனால் பள்ளி சீருடைகள் வாங்க பெற்றோர்கள் திரண்டனர். ஜவுளி சந்தையில் பள்ளி சீருடைகளுக்கு கிராக்கி நிலவுகிறது.

    இதேப்போல லஞ்ச் டவல், பனியன் ஜட்டிகள் விற்பனையும் சிறப்பாக இருந்தது. இன்று சில்லரை விற்பனை 30 சதவீதம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஆனால் அதேநேரம் மொத்த வியாபாரம் சுமாராகவே நடந்தது.

    இப்போதும் ஆந்திரா, கர்நாடகா மாநில வியாபாரிகள் அதிக அளவில் வந்து ஜவுளி ரகங்களை அள்ளி செல்வார்கள். ஆனால் இன்று ஆந்திரா, கர்நாடகா வியாபாரிகள் வரவில்லை. இதன் காரணமாக மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. 10 சதவீதம் அளவு கூட நடைபெறவில்லை. ஒரு சில கேரளா வியாபாரிகள் மட்டும் வந்திருந்தனர். ஆனி மாதம் தொடங்கி விட்டதால் அதிக அளவு முகூர்த்தம் இல்லை. இதனால் ஜவுளி வியாபாரம் சுமாராகவே நடந்தது.

    • சிதம்பரத்தில் இன்று வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
    • 50 கடைகளை மட்டும் மாற்றினால் இரு இடங்களில் மார்க்கெட் செயல்படுவதால் இரு இடங்களில் உள்ளவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும்.

    கடலூர்:

    சிதம்பரம் மேலவீதியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவரும் காய் கனி மார்க்கெட்டின் முன்புறம் நகராட்சி இடத்தில் இயங்கிவரும் 72 கடைகளை மட்டும் உழவர் சந்தை இயங்கிவந்த அண்ணா கலையரங்கிற்கு மாற்றப்பட உள்ளது.

    எனவே நகராட்சியின் திட்டத்தை கைவிடக்கோரி முதல்கட்டமாக அண்ணா கலையரங்கத்தில் உழவர் சந்தை அமைத்து மக்கள் யாரும் செல்லவில்லை. தற்போது அங்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், வேளாண் விற்பனை துறை அலுவலகம், வாடகை கார், வேன் நிறுத்தும் இடமாக உள்ளது.

    தற்போது உள்ள மார்க்கெட் பின்புறம் சொந்த இடத்திலும்,வக்போர்டுக்கு சொந்தமான இடத்திலும் இயங்கும் சுமார் 100 கடைகளும் வழக்கம்போல் இயங்கும் நிலையில் முன்புறம் உள்ள சுமார் 50 கடைகளை மட்டும் மாற்றினால் இரு இடங்களில் மார்க்கெட் செயல்படுவதால் இரு இடங்களில் உள்ளவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும்.

    இதனால் பின்புறம் உள்ள கடைகளுக்கு லாரிகளில் வரும் பொருட்களை ஏற்றி இறக்க ஏற்படும் சிரமங்கள் உருவாகும். பொதுமக்கள் ஒரே இடத்தில் காய், கனி, பூ, மளிகை பொருட்களை பார்த்து வாங்க கூடிய நிலை இல்லாமல் ஆங்காங்கே அலையவேண்டிய நிலை இருக்கும். எனவே நகராட்சியின் இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி இன்று முதல் கட்டமாக 24 மணிநேர கடையடைப்பு போராட்டமும் அதனை தொடர்ந்து பின்னர் காலவரையற்ற கடையடைப்பு போராட்ட மும் நடைபெறும் என காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

    அதன்படி இன்று சிதம்பரம் நகரில் கடை அடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    மத்திய அரசு பல கேடு விளைவிக்கும் திட்டங்களை கொண்டு வந்து தமிழகத்தை பாலை வனமாக்க முயற்சி செய்து வருகிறது என்று வைகோ குற்றம் சாட்டியுள்ளார். #vaiko #centralgovernment #cauveryissue

    பீளமேடு:

    ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ இன்று கோவை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது-

    அண்ணா மறைவுக்கு பிறகு தி.மு.க.வை கண்ணை இமை காப்பது போல் காத்து வரும் கலைஞருக்கு இன்று 95-வது பிறந்த நாள். அவரை மனமார வாழ்த்துகிறேன். அவரது கணீர் குரல் மீண்டும் ஒலிக்க இயற்கை அன்னையை பிரார்த்திக்கிறேன்.


    காவிரி மேலாண்மை வாரியத்தை அரசிதழில் வெளியிட்டது வெற்றி என முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் கூறி வருகிறார்கள்.

    இதில் நாம் ஏமாற்றப்பட்டு உள்ளோம். சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு நீதியை குழி தோண்டி புதைத்து விட்டு தமிழகத்துக்கு ஓர வஞ்சனை செய்து தீர்ப்பு வழங்கி உள்ளது.

    நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை முற்றிலும் மாற்றி உள்ளனர். இதற்கு தீர்வு கிடைக்க வேண்டும் எனில் எதிர் காலத்தில் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வு விசாரிக்க வேண்டும்.

    இல்லை என்றால் மேகதாது உள்ளிட்ட ஆறுகளின் குறுக்கே அணை கட்டுவதை தடுத்து நிறுத்த முடியாது.

    விவசாயிகளின் விளை நிலங்களை கார்ப்பரேட் கம்பெனிகள் வாங்கி எரிவாயு, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட கேடு விளைவிக்கும் திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வருகிறது.

    பல நல்ல திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வரட்டும். தமிழகம் வளம் பெறட்டும். அதனை நாங்கள் எதிர்க்கவில்லை.

    மத்திய அரசு பல கேடு விளைவிக்கும் திட்டங்களை கொண்டு வந்து தமிழகத்தை பாலை வனமாக்க முயற்சி செய்து வருகிறது.

    திருட்டு போன ராஜராஜ சோழன் சிலையை மீட்ட ஐ.ஜி. பொன். மாணிக்க வேலை பாராட்டுகிறேன். இது போன்ற நல்ல காவல் துறை அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #vaiko #centralgovernment #cauveryissue

    ×