search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்.பி.உதயகுமார்"

    • சமத்துவ சமுதாய திருமண விழாவில் பொதுமக்கள் உற்சாகமாக பங்கேற்க வேண்டும் என திண்டுக்கல் சீனிவாசன் பேட்டியளித்தார்.
    • அதிகாலை 4 மணி அளவில் யாகசாலை பூஜை நடந்தது.

    மதுரை

    ஜெயலலிதா பேரவையின் சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில், வருகிற பிப்ரவரி 23-ந் தேதி, டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோவில் 51 ஏழை, எளிய மணமக்களின் சமத்துவ சமுதாய திரும ணத்தை முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நடத்தி வைக்கிறார்.

    இந்த திருமணத்திற்கான முகூர்த்தக்கால் நடும் பணி டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோவிலில் நடந்தது. முன்னதாக அதிகாலை 4 மணி அளவில் யாகசாலை பூஜை நடந்தது. அதனைத் தொடர்ந்து ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் காலை 10 மணி அளவில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன் ஆகியோர் முகூர்த்தக்கால் நட்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, கே.டி.ராஜேந்திர பாலாஜி, இசக்கி சுப்பையா, ராஜலட்சுமி, அமைப்புச் செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், வி.வி.ராஜன் செல்லப்பா, சின்னதுரை, சுதா பரமசிவம், மாவட்ட செயலாளர்கள் எஸ்.பி.சண்முகநாதன், குட்டியப்பா எம்.எல்.ஏ., செந்தில்நாதன் எம்.எல்.ஏ, எம்.ஏ.முனியசாமி, ரவிச்சந்திரன், மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன்.

    மகளிர் இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், சட்டமன்ற உறுப்பினர் பெரிய புள்ளான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.சரவணன், நீதிபதி, தமிழரசன், மாநில பேரவை நிர்வாகிகள் இளங்கோவன், சதன் பிரபாகரன், வெற்றிவேல், சினிமா தயாரிப்பாளர் ஜி.என்.அன்புசெழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாவது:-

    எல்லோரும் சமம் என்பதன் அடிப்படையில், தனது மகள் திருமணத்தை ஆர்.பி. உதயகுமார் ஏழை-எளிய மணமக்களுடன் சேர்த்து நடத்துகிறார். இந்த திருமணத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்தி வைக்கிறார்.

    ஏற்கனவே அம்மா பேரவையின் சார்பில் 80 திருமணங்கள் நடந்தன.அதனைத் தொடர்ந்து 120 திருமணங்கள் நடை பெற்றன. தற்போது நடைபெறும் திருமணம் சமத்துவ சமுதாய திருமணமாகும். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக வருவார்.

    அதற்கு முன்னதாக இந்த திருமணவிழா ஒரு முத்தாய்ப்பாக அமையும். இந்த திருமணத்தில் பொது மக்கள் அனைவரும் உற்சா கமாக கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. நிவாரண உதவி வழங்கினார்.
    • கனமழை காரணமாக 20-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடி கிராம த்தில் கனமழை காரணமாக 20-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன.வீடுகள் இடிந்து தவிக்கும் மக்களுக்கு அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ. தலைமையில் நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    சாத்தங்குடி கிராமத்தில் மழையால் வீடுகளை இழந்த 20-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, பருப்பு. காய்கறி மற்றும் நிவாரண நிதியை ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ. வழங்கி ஆறுதல் கூறினார்.

    இதில் அ.தி.மு.க. மாவட்ட பொருளாளர் திருப்பதி, ஒன்றிய செயலாளர் அன்பழகன், மாவட்ட பேரவை செயலாளர் தமிழழகன், மாநில சார்பு அணி நிர்வாகிகள் வெற்றிவேல், சிவசுப்பிரமணி, யூனியன் சேர்மன் லதா ஜெகன், நிர்வாகிகள் சுகுமார், சாமிநாதன், பேரவை பாண்டி, வாகைகுளம் சிவசக்தி, ஆண்டிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • நீட் தேர்வு ரத்து நடவடிக்கை தி.மு.க. அரசு ஒரு மைல் தூரம் கூட முன்னேறவில்லை என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு.
    • ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் உயிர் பலியா வதை தொடர்ந்து கண்ணீ ரோடு நாம் பார்க்கிறோம்.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    நீட் தேர்வு நாடு முழுவதும் முக்கிய பொரு ளாக உள்ளது. இந்த கல்வி யாண்டில் நாடு முழுவதும் 497 நகரங்களில் உள்ள 3,570 மையங்களில் 17.78 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். இதில் தமிழகத்தில் 1.34 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதியதில் 51.30 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

    இந்த வரிசையை நாம் பார்க்கும்போது ஏற்கனவே 2020 கல்விஆண்டில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி யில் ஒரு லட்சம் பேர் நீட் தேர்வு எழுதினர்.ணதில் 57.44 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று இந்தியாவில் நாம் 15-வது இடம் பிடித்தோம். ஆனால் இன்றைக்கு ஒப்பிட்டு பார்த்தால் இந்திய அளவில் 28 வது இடத்திற்கு சென்ற வேதனையான புள்ளி விபரத்தை நாம் பார்க்கிற போது இது வேதனையிலும், வேதனை அளிப்பதாக அமைந்திருக்கிறது.

    அரசு பள்ளி மாண வர்களுக்கு மருத்துவ படிப்பு கிடைக்கும் வகை யில், எடப்பாடி பழனிசாமி. சமூக நீதிப் பாதையில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டினை கடந்த 2020 ஆம் ஆண்டு உருவாக்கிக் கொடுத்து, அதே கல்வி ஆண்டில் 435 மாணவ மாணவிகளுக்கு அவரே மருத்துவ படிப்பிற்கான ஆணைகளை வழங்கினார்.

    மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து, ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கினார். அதேபோல் எடப்பாடியார் கடந்த 2019 ஆம் ஆண்டு, நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் சிறப்பு மசோதா கொண்டு வந்து நிறைவேற்றி அதை ஜனாதிபதி ஒப்புதலுக்கும் அனுப்பி வைத்தார். அதே நிலையில் தான் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று உறுதியேற்று சவால் விடுத்தார் முதலமைச்சர். ஆனால் இதுவரை ஒரு மைல் தூரம் கூட முன்னேற வில்லை, நீட் தேர்வு ரத்து நடவடிக்கை தேக்கநிலையில் தான் உள்ளது.

    ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் உயிர் பலியா வதை தொடர்ந்து கண்ணீ ரோடு நாம் பார்க்கிறோம். இந்த ஆண்டும் மாணவர்கள் தற்கொலை என்ற செய்தி வேதனையிலும் வேதனை அளிக்கிற செய்தியாக இருக்கிறது.

    நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம். முதல் கையெழுத்திடுவோம் என்று மிகப்பெரிய பொய்யை சொல்லி மாணவர்கள் எதிர்காலத்தை நம்பிக்கையும் கேள்விக்குறியாகி இருக்கி றது அந்த அறிவிப்பு. இன்னும் எத்தனை உயிர்களை பலி கொடுக்கப் போகிறோம் என்கிற அச்சம் ஏற்படுகிறது.

    ஏழை மாணவர்கள் கனவை நனவாக்குவதற்கு நீட் தேர்வை ரத்து செய்ய எந்த நாளோ அந்த நாளை எதிர்பார்த்து நமது தமிழகம் நகர்ந்து கொண்டிருக்கிறது. நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா? என்று மாணவரிடத்தில் மிகப்பெரிய அச்சம், சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்

    • அரசு ஆஸ்பத்திரிக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்க ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார்.
    • மருத்துவ–மனையில் தேவையான மருத்துவர்கள், செவிலி–யர்களை நியமிக்க அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ. இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக மக்கள் நல்வா–ழ்வுத்துறை அமைச்சர் இன்று மதுரை வந்துள்ளார். அவர் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை இடத்தை ஆய்வு செய்ய வேண்டும்.த்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணிகள் எப்போது தொடங்கும் என்று தென் மாவட்ட மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

    தென் மாவட்ட மக்களுக்கு இந்த பணி எப்போது தொடங்கும் என இனிப்பான செய்தியை வழங்க அமைச்சர் முன் வர வேண்டும். அதேபோல் மருத்துவமனையை ஆய்வு செய்யும்போது தேவையான உபகரணங்களை வழங்க நிதி ஒதுக்க வேண்டும்.

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொரோனா காலகட்டத்தில் உயிரை பணயம் வைத்து செவிலியர்கள் சேவையாற்றினர். அவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.அவர்களுக்கு என்ன திட்டம் உள்ளது? என்று அரசு விளக்க வேண்டும். அவர்களின் எதிர்காலம் குறித்த அரசு நடவடிக்கையை அமைச்சர் தெளிவு படுத்த வேண்டும்.

    திருமங்கலம் அரசு மருத்துவமனையில் தேவையான மருத்துவ உபகரணங்கள் இல்லை, பேரையூர் ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களையும், பேரையூர் மருத்துவ–மனையில் தேவையான மருத்துவர்கள், செவிலி–யர்களை நியமிக்க அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மதுரை மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது டெங்கு ஒழிப்பு குறித்த முழுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக அரசு கூறி வருகிறது. அது குறித்து முழுமையான விளக்கத்தை அரசு அளிக்க வேண்டும்.சாமானிய மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கப்பட்ட அம்மா மினி கிளினிக்கை மீண்டும் கொண்டுவர அரசு முன்வருமா? என்று அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்தபோவதாக ஆர்.பி.உதயகுமார் அறிவித்துள்ளார்.
    • 5 மாவட்ட மக்களை திரட்டி மாபெரும் போரா ட்டத்தை நடத்துவோம்.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது-

    முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 137.50 அடியாக அதிகரித்து வரும் வேளையில், கடந்த 5-ம் தேதி இடுக்கி அணைக்கு செல்லும் வகையில், வினாடிக்கு 534 கன அடி நீரை தமிழக அதிகாரிகள் திறந்து விட்டனர். இதற்கு தமிழக விவசாயிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

    ரூல் கர்வ் முறைப்படி நீரை திறந்து விட வேண்டும் என்று கேரள முதலமைச்சர், தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதினார். அதன் அடிப்படையில் 534 கன அடி நீரை தமிழக அதிகாரிகள் 3 மதகுகள் மூலம் திறந்துள்ளனர். இதன் மூலம் 5 மாவட்ட விவசாயிகளின் வயிற்றில் அடித்து கொடுமையான சம்பவத்தை தி.மு.க. அரசு நிகழ்த்தியுள்ளது.

    இதனால் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் கடும் வறட்சி ஏற்படும் என்றும், தமிழக அரசின் சார்பில் சிறப்பு அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர்.

    மறைந்த முதல்வர் ஜெயலலிதா மாபெரும் சட்ட போராட்டம் நடத்தி, உச்ச நீதிமன்றத்தின் மூலம் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தி கொள்ளலாம், பேபி அணையை பழுது பார்த்த பின்பு 152 அடியாக உயர்த்தி கொள்ளலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்று தந்தார்.

    ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போதும், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போதும், 3 முறை முல்லை பெரியாறு அணைநீர் மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட்டது.

    எடப்பாடி பழனிசாமி தற்பொழுது முதலமைச்சராக இருந்திருந்தால், அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி காட்டி இருப்பார் என்று விவசாயிகள் மத்தியில் பேசி வருகின்றனர். தற்போது தி.மு.க. அரசு கேரளா அழுத்தத்தை தூக்கி எறிந்து, மக்களின் கோரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கூறி வருகின்றனர்.

    கேரளா அழுத்தத்திற்கு தமிழக அரசு அடிபணிய கூடாது என்று விவசாயிகள் குரல் எழுப்பி வருகின்றனர். விவசாயிகளின் இந்த உரிமையை தமிழக அரசு காக்க முன்வர வேண்டும். முல்லைப் பெரியாறு அணையில் 142 அடியை உயர்த்தாமல் உரிமை காக்க தவறி வருகிறது.

    முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் விவசாயிகளின் விரோத போக்கை தி.மு.க. அரசு தொடரருமேயானால், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், 5 மாவட்ட மக்களை திரட்டி மாபெரும் போரா ட்டத்தை நடத்துவோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அக்னிபத் திட்டத்தில் இளைஞர்கள் சேரவேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
    • இந்த திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும்.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர் பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

    இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என்பது பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.தற்போது அக்னிபத் திட்டத்தின் மூலம் தேசத்தின் நலனுக்காக இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு உருவாகி உள்ளது.

    பிரதமர் இளைஞர்களுக்காக 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்க ப்படும் என்று தெரிவித்தார் அதனைத்தொடர்ந்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அக்னிபத் என்ற திட்டத்தை வெளியிட்டார் அக்னிபத் என்பது போர்க்களப்பணி என்பதாகும்.

    இந்த திட்டத்தில் ராணுவம், கடற்படை, விமானப்படை உள்ளது வரும் 90 நாட்களில் 46,000 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள னர். இந்தத் திட்டத்திற்கு 17 முதல் 21 வரை வயதுவரம்பு உள்ளது தற்பொழுது இந்த ஓராண்டுக்கு மட்டும் சிறப்பு நிகழ்வாக 23 வயதாக உயர்த்தப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தில் 10 ஆண்டுகளோ அதற்கு மேலாக பணியாற்ற முடியாது. இந்த பணியில் 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே பணியாற்ற முடியும். அவர்களின் மாத சம்பளத்தில் 30 சதவீத தொகையை பங்களிப்பாக பிடித்து செய்யப்படும். நான்கு ஆண்டுகள் கழித்து பணி நிறைவுக்கு பிறகு அவர்களின் பிடித்தம் செய்யப்பட்ட தொகையுடன் அரசின் பங்களிப்பு தொகையாக இணையாக மத்திய அரசு வட்டியோடு சேர்த்து ரூ. 11.71 லட்சம் வழங்குகிறது. இதன் மூலம் இளைஞர்கள் சுயதொழில் தொடங்க முடியும் வாழ்வில் நம்பிக்கை ஆதாரமாக விளங்கும்.

    அக்னிபத் திட்டத்தில் பணியாற்றும் இளைஞர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது துணை ராணுவ படைகள், மத்திய, மாநில போலீஸ் பணிகளில் வேலைவாய்ப்பு கிடைப்பது மட்டுமல்லாது பொதுத்துறை தேர்வுகளில் 10 சதவீதம் பேருக்கு ஒதுக்கப்பட உள்ளது. சமுதாயத்தில் சிறந்த இளைஞர் படையாக உரு வாக வாய்ப்பு உள்ளது.

    தற்போது வேலை கிடைக்காத இளைஞர்கள் இந்த திட்டத்தின் மூலம் நாட்டுக்கு சேவை செய்யும் இளைஞர்களாக இருப்பார்கள்.

    சமுதாயத்திற்கு இந்த திட்டம் நல்ல பலனைத் தரும் இந்த பயிற்சியால் நாட்டுப்பற்று தேசப்பற்று, ஒழுக்கம், கடமை, கட்டுப்பாடு போன்ற அடிப்படை வாய்ப்புகள் அமையும். இந்த திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசா தமாக இருககும்.

    இளைஞர்களுக்கு புரிதல் இல்லாத காரணத்தால் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இளை ஞர்கள் இதை முழுமையாக புரிந்து கொண்டு அக்னிபத் திட்டத்தில் சேர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×