search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அக்னிபத்"

    • இந்திய ராணுவத்தில் தகுதியான, துடிப்பான இளைஞர்களை சேர்ப்பதற்காக மத்திய பா.ஜ.க. அரசு அக்னிபத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
    • வருகிற செப்டம்பர் மாதம் 20-ந்தேதி முதல் அக்டோபர் மாதம் 1-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    சேலம்:

    இந்திய ராணுவத்தில் தகுதியான, துடிப்பான இளைஞர்களை சேர்ப்பதற்காக மத்திய பா.ஜ.க. அரசு அக்னிபத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

    இந்த திட்டத்தின் கீழ் அக்னி வீரர்கள் ஆள்சேர்ப்பு முகாம் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள டி.இ.ஏ. பப்ளிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வருகிற செப்டம்பர் மாதம் 20-ந்தேதி முதல் அக்டோபர் மாதம் 1-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    இந்த திருப்பூர் மண்டலத்தின் கீழ் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கோவை, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, நீலகிரி, தேனி, திருப்பூர் ஆகிய மாவட்டங்கள் வருகின்றன. இந்த மாவட்டங்களை சேர்ந்த ஆர்வம் உள்ள இளைஞர்கள் https://www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் வருகிற ஆகஸ்ட் மாதம் 3-ந்தேதி வரை பதிவு செய்ய வேண்டும்.

    பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் 14-ந்தேதிக்கு பிறகு அனுமதி கடிதம் வழங்கப்படும். இந்த ஆள்சேர்ப்பு முகாமில் ராணுவ பொதுப்பணிகள், தொழில் நுட்பப் பணிகள், ட்ரேட்ஸ்மேன், எழுத்தர், பணிமனை காப்பாளர் உள்ளிட்ட பணிகளுக்காக நடைபெறுகிறது.

    இப்பணியில் சேர வயது, கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை கடந்த 4-ந்தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவம், கடற்படையில் சேர சேலம், நாமக்கல் இளைஞர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
    • இதில் கடந்த 30-ந்தேதி வரை 2.72 லட்–சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    சேலம்:

    முப்படைகளில் 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை தேர்வு செய்யும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்து உள்ளது. 17½ வயது முதல் 21 வரையிலான இளைஞர்கள் இந்த திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். பின்னர் இந்த வயது வரம்பு 23 ஆக உயர்த்தப்பட்டது.

    இந்த திட்டத்துக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியபோதும், இந்த திட்டத்தை வாபஸ் பெற முடியாது என மத்திய அரசு அறிவித்தது. அதேநேரம் இந்த திட்டத்தின் கீழ் ஆள் எடுக்கும் பணிகளை விமானப்படை கடந்த மாதமே தொடங்கியது. இதில் கடந்த 30ந்தேதி வரை 2.72 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் பட்டப்படிப்பு படித்த இளம்பெண்கள் அதிக அளவில் விண்ணப்பித்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து கடற்படை மற்றும் ராணுவத்துக்கும் ஆள்சேர்க்கும் பணிகள் நேற்று முன்தினம் (1ந்தேதி) தொடங்கி விட்டது. குறிப்பாக ராணுவப்படை, கப்பற்படை, விமானப் படை ஆகிய பாதுகாப்பு படைகளில் சேர தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டுகின்றனர்.

    அந்த வகையில் இந்திய ராணுவம், கப்பற்படை, விமான படையில் அக்னிவீரர்களாக சேர்ந்து நாட்டுக்கு சேவை செய்ய சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள் போட்டி போட்டு விண்ணப்பித்து வருகிறார்கள்.

    • அக்னிபத் திட்டத்தில் இளைஞர்கள் சேரவேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
    • இந்த திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும்.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர் பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

    இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என்பது பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.தற்போது அக்னிபத் திட்டத்தின் மூலம் தேசத்தின் நலனுக்காக இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு உருவாகி உள்ளது.

    பிரதமர் இளைஞர்களுக்காக 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்க ப்படும் என்று தெரிவித்தார் அதனைத்தொடர்ந்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அக்னிபத் என்ற திட்டத்தை வெளியிட்டார் அக்னிபத் என்பது போர்க்களப்பணி என்பதாகும்.

    இந்த திட்டத்தில் ராணுவம், கடற்படை, விமானப்படை உள்ளது வரும் 90 நாட்களில் 46,000 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள னர். இந்தத் திட்டத்திற்கு 17 முதல் 21 வரை வயதுவரம்பு உள்ளது தற்பொழுது இந்த ஓராண்டுக்கு மட்டும் சிறப்பு நிகழ்வாக 23 வயதாக உயர்த்தப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தில் 10 ஆண்டுகளோ அதற்கு மேலாக பணியாற்ற முடியாது. இந்த பணியில் 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே பணியாற்ற முடியும். அவர்களின் மாத சம்பளத்தில் 30 சதவீத தொகையை பங்களிப்பாக பிடித்து செய்யப்படும். நான்கு ஆண்டுகள் கழித்து பணி நிறைவுக்கு பிறகு அவர்களின் பிடித்தம் செய்யப்பட்ட தொகையுடன் அரசின் பங்களிப்பு தொகையாக இணையாக மத்திய அரசு வட்டியோடு சேர்த்து ரூ. 11.71 லட்சம் வழங்குகிறது. இதன் மூலம் இளைஞர்கள் சுயதொழில் தொடங்க முடியும் வாழ்வில் நம்பிக்கை ஆதாரமாக விளங்கும்.

    அக்னிபத் திட்டத்தில் பணியாற்றும் இளைஞர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது துணை ராணுவ படைகள், மத்திய, மாநில போலீஸ் பணிகளில் வேலைவாய்ப்பு கிடைப்பது மட்டுமல்லாது பொதுத்துறை தேர்வுகளில் 10 சதவீதம் பேருக்கு ஒதுக்கப்பட உள்ளது. சமுதாயத்தில் சிறந்த இளைஞர் படையாக உரு வாக வாய்ப்பு உள்ளது.

    தற்போது வேலை கிடைக்காத இளைஞர்கள் இந்த திட்டத்தின் மூலம் நாட்டுக்கு சேவை செய்யும் இளைஞர்களாக இருப்பார்கள்.

    சமுதாயத்திற்கு இந்த திட்டம் நல்ல பலனைத் தரும் இந்த பயிற்சியால் நாட்டுப்பற்று தேசப்பற்று, ஒழுக்கம், கடமை, கட்டுப்பாடு போன்ற அடிப்படை வாய்ப்புகள் அமையும். இந்த திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசா தமாக இருககும்.

    இளைஞர்களுக்கு புரிதல் இல்லாத காரணத்தால் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இளை ஞர்கள் இதை முழுமையாக புரிந்து கொண்டு அக்னிபத் திட்டத்தில் சேர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று அவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பி பேசினர்.
    • ரெயில்வேயில் விரைவில் ஒப்பந்த அடிப்படையில் ஆள் எடுக்க உள்ளதாக பொய்யான பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று எஸ்.ஆர்.எம்.யூ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பழைய கட்டிடம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் சுப்பையா முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் தமிழரசன், சிவபெருமாள், இன்பரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அக்னிபத் திட்டத்தினால் இளைஞர்களின் கனவு தகர்ந்து போய்விட்டது. எனவே இந்த திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று அவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பி பேசினர்.

    இதற்கிடையே அக்னி பத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சந்திப்பு ரெயில்வே புதிய கட்டிடம் அருகே பிட் லைனில் தட்சின ரெயில்வே கார்மிக் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ரெயில்வே துறையின் விதிக்கு எதிராக இளைஞர்களை திரட்டி போராட்டம் நடத்துவதாக கூறி அக்னிபத் திட்ட எதிர்ப்பாளர்களை கண்டித்து அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

    மேலும் ராணுவத்தில் தற்போது ஆட்கள் எடுப்பதை போல ரெயில்வேயில் விரைவில் ஒப்பந்த அடிப்படையில் ஆள் எடுக்க உள்ளதாக பொய்யான பிரச்சாரங்களை சிலர் மேற்கொண்டு வருவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் எனவும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

    இதில் தென் மண்டல துணை பொதுச்செயலாளர் மணி, கோட்ட கூடுதல் செயலாளர் அருண்குமார், கிளை பொறுப்பாளர் ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் ஆா்ப்பாட்டம் நடத்தினர்.
    • ராமநாதபுரம் அரண்மனை முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா தலைமை தாங்கினார்.

    ராமநாதபுரம்

    மத்திய அரசின் அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சத்தியாக்கிரக போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ராமநாதபுரம் அரண்மனை முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா தலைமை தாங்கினார்.

    மாநில பொதுச் செயலாளர் ரமேஷ் பாபு, மாவட்ட பொருளாளர் ராஜாராம் பாண்டியன் முன்னிலை வகித்தனர். நகர் தலைவர் கோபி, மாவட்ட துணைத்தலைவர்கள் ஜோதிபாலன், காமராஜ், மணிகண்டன், சிறுபான்மையினர் பிரிவு மாவட்ட தலைவர் வாணி செய்யது இப்ராஹிம், வட்டார தலைவர் சேது பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

    இதே போல் ராமநாத புரம் மாவட்டத்தில் காங்கிரஸ் சாா்பில், பரமக்குடி, முதுகுளத்தூா், திருவாடானை ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது என்று மாவட்டத் தலைவா் செல்லத்துரை அப்துல்லா தெரிவித்தார்.

    • காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசுக்கு சொந்தமான பல்வேறு நிறுவனங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.
    • மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுரேஷ் இலவரசன் தலைமை தாங்கினார்.

    தென்காசி:

    அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசுக்கு சொந்தமான பல்வேறு நிறுவனங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக நேற்று தென்காசி ரெயில் நிலையம் முன்பு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பாக 50-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுரேஷ் இலவரசன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட பொதுச்செயலாளர் சந்தோஷ் முன்னிலை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சட்டநாதன் மாவட்ட துணை த்தலைவர் சங்கை கணேசன், சர்புதீன்,இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் ரமேஷ்,

    வாசுதேவநல்லூர் வட்டார தலைவர் ஏபிடி மகேந்திரன், தேங்காய் சித்திக், நகர தலைவர் பால்ராஜ்,கூட்டுறவு சொசைட்டி தலைவர் சுரேஷ், மாடசாமி ஜோதிடர், மாவட்ட வர்த்தக அணி துணைத் தலைவர் ரபீக், கடையநல்லூர் நகர காங்கிரஸ் தலைவர் இப்ராகிம்,

    சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் பிரேம் குமார், துணைத்தலைவர் ரிஸ்வான், நகர பொருளாளர் ஈஸ்வர், நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரபீக், சமூக ஊடகப் பிரிவு அப்துல் காதர், செங்கோட்டை நகர தலைவர் ராஜீவ் காந்தி, சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் முஹம்மது மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

    • ராணுவத்துக்கு ஆள் சேர்க்க அக்னிபத் என்ற புதிய திட்டத்தை கடந்த 14-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது.
    • அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெறவேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    புதுடெல்லி:

    மத்திய அரசின் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக போராட்டங்களும், வன்முறையும் அரங்கேறி வருகிறது. இந்த போராட்டம் மற்றும் வன்முறைக்கு பின்னணியில் இருப்பது யார்? என்பது குறித்து விசாரணை அமைப்புகள் ஆய்வு செய்து வருகின்றன.

    இதற்கிடையே, அக்னிபத் திட்டம் தொடர்பாக பொய்யான தகவல்கள் பரப்பிய சமூக ஊடக கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் அக்னிபத் திட்டம் குறித்து பொய்யான தகவல் பரப்பியதற்காக 35 வாட்ஸ்அப் குழுக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

    • அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
    • பேருந்துகள், ரெயில்களை எரிப்பவர்கள் ராணுவத்தில் சேர தகுதி அற்றவர்கள் என வி.கே. சிங் தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    ராணுவத்துக்கு ஆள் சேர்க்க அக்னிபத் என்ற புதிய திட்டத்தை கடந்த 14-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சில இடங்களில் ரெயில் எரிப்பு சம்பவங்களும், வன்முறைகளும் அரங்கேறியுள்ளன.

    அக்னிபத் திட்டத்திற்கு வட மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில், அந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் என காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    இந்நிலையில், மத்திய மந்திரியும், ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவ தளபதியுமான வி.கே.சிங் இந்த விவகாரம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    ராணுவம் என்பது வேலைவாய்ப்பு அளிக்கும் இடம் அல்ல. அது ஒரு கடையோ அல்லது நிறுவனமோ அல்ல.

    விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே ராணுவத்தில் இணையலாம். உங்களை யாராவது ராணுவத்தில் இணைந்து தான் ஆக வேண்டும் என கட்டாயம் எதுவும் இல்லை.

    அக்னிபத் திட்டத்தின்படி ராணுவத்தில் ஒருவர் 4 ஆண்டுகாலம் பணியாற்றிவிட்டால், அதன்பிறகு அவரது எதிர்காலத்தை பார்த்துக் கொள்ளும் திறன் அவருக்கே வாய்த்துவிடும். அவருக்கு யாருடைய ஆதரவும் தேவை இருக்காது.

    பேருந்துகள், ரெயில்களை எரிப்பவர்கள் இந்த பணியில் சேரத் தகுதி அற்றவர்கள். இவ்வாறு எரித்தால் ராணுவத்தில் வேலை கிடைத்து விடும் என்று யாராவது கூறினார்களா? என கேள்வி எழுப்பினார்.

    • அக்னிபத் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடந்து கொண்டிருக்கும் வேளையில் ரெயில்வே சொத்து, இடத்திற்கும், ரெயில்வே பயணிகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும் விதமாக இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டது.
    • மேலும் ரெயில் நிலையத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.

    தஞ்சாவூர்:

    திருச்சி மண்டல ரெயில்வே பாதுகாப்பு படை சீனியர் கமிஷனர் ராமகிருஷ்ணன், துணை கமிஷனர் சின்னதுரை ஆகியோரின் உத்தரவின் பேரில் மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் சுதீர்குமார் மேற்பார்வையில் கும்பகோணம் சப்- இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில் துணை சப்- இன்ஸ்பெக்டர்கள் லோகநாதன், விவேகானந்தன் மற்றும் திருச்சி ரெயில்வே பாதுகாப்பு சிறப்பு படை ஜவான்கள், போலீசார் ஆகியோர் பொதுமக்களின் அதிக பார்வைக்கு ஏற்புடையதாகவும் பொதுமக்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லக்கூடிய வகையில் ரூட் மார்ச் என்ற அணிவகுப்பு நடத்தப்பட்டது.

    நாடு முழுவதும் அக்னிபத் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடந்து கொண்டிருக்கும் வேளையில் ரெயில்வே சொத்து, இடத்திற்கும், ரெயில்வே பயணிகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும் விதமாக இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டது. மேலும் ரெயில் நிலையத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.

    இதேபோல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ரெயில்வே நிலையங்களிலும் பாதுகாப்பு படை போலீசாருக்கு அணி வகுப்பு பயிற்சி நடத்தப்பட்டது.

    • மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டம் 8 மாநிலங்களுக்கு பரவியுள்ளது.
    • இளைஞர்களின் நியாயமான கோரிக்கைக்கு காங்கிரஸ் துணை நிற்கும் என அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    அக்னிபத் என்ற புதிய ராணுவ ஆள்சேர்ப்பு திட்டத்தை மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. மத்திய அரசின் இந்தத் திட்டத்துக்கு வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

    பீகாரில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறையும் வெடித்தது. ரெயில்களுக்கும் தீ வைக்கப்பட்டது. இதனால் பல பகுதிகளில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இளைஞர்களின் நியாயமான கோரிக்கைக்கு காங்கிரஸ் கட்சி துணை நிற்கும் என்று தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, சோனியா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

    இளைஞர்கள் குரலைப் புறக்கணித்து புதிய ராணுவ ஆள்சேர்ப்பு திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருப்பது அதிருப்தி அளிக்கிறது.

    புதிய அக்னிபத் திட்டம் இலக்குகள் அற்றது. புதிய திட்டம் குறித்து முன்னாள் ராணுவ வீரர்கள் பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

    இளைஞர்களின் நலனைக் காக்க காங்கிரஸ் உறுதியுடன் துணைநிற்கும். உண்மையான தேசபக்தராக நாம் வன்முறை இன்றி அமைதியான வழியில் நமது எதிர்ப்பை காட்டுவோம் என தெரிவித்துள்ளார்.

    • அக்னிபத் திட்டத்திற்கு எதிராக 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்து வருகின்றன.
    • அரியானா மாநிலத்தின் குருகிராமில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    குருகிராம்:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்துக்கு இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் பீகார், உத்தர பிரதேசம், அரியானா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மத்திய அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சாலைகளில் டயர்களை கொளுத்தியும், பேருந்துகளை அடித்து நொறுக்கியும், ரெயில்களுக்கு தீ வைப்பு என இளைஞர்கள் ஆவேச நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்க்கும் 'அக்னிபத்' திட்டத்துக்கு எதிராக போராட்டம் வலுப்பெற்று வருவதால், நாடு முழுவதும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் வன்முறை வெடித்ததை தொடர்ந்து அரியானா மாநிலத்தின் குருகிராமில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    மேலும், அரியானாவில் போராட்டம் நடைபெறும் சில பகுதிகளில் இணைய சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன.

    • வேலையற்ற இளைஞர்களின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டும்.
    • நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நிலையான எதிர்காலம் இல்லை

    மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக தமிழகம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவி்த்துள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, வேலையற்ற இளைஞர்களின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டும் என்றும், அக்னிபாத் திட்டத்தின் மூலம் அக்னிப் பரீட்சை நடத்த வேண்டாம் என்றும் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து ராகுல் காந்தி மேலும் கூறியதாவது:-

    பதவி இல்லை, ஓய்வூதியம் இல்லை, இரண்டு ஆண்டுகளுக்கு நேரடி ஆட்சேர்ப்பு இல்லை, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நிலையான எதிர்காலம் இல்லை, ராணுவத்திற்கு உரிய மரியாதை இல்லை.

    பிரதமர் அவர்களே, நாட்டின் வேலையற்ற இளைஞர்களின் குரலைக் கேளுங்கள். அவர்களை அக்னிப் பாதையில் நடக்க விட்டு, அவர்களின் பொறுமை மீது அக்னிப் பரீட்சை நடத்த வேண்டாம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    ×