search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீட் தேர்வு ரத்து நடவடிக்கை: ஆர்.பி.உதயகுமார் தாக்கு
    X

    நீட் தேர்வு ரத்து நடவடிக்கை: ஆர்.பி.உதயகுமார் தாக்கு

    • நீட் தேர்வு ரத்து நடவடிக்கை தி.மு.க. அரசு ஒரு மைல் தூரம் கூட முன்னேறவில்லை என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு.
    • ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் உயிர் பலியா வதை தொடர்ந்து கண்ணீ ரோடு நாம் பார்க்கிறோம்.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    நீட் தேர்வு நாடு முழுவதும் முக்கிய பொரு ளாக உள்ளது. இந்த கல்வி யாண்டில் நாடு முழுவதும் 497 நகரங்களில் உள்ள 3,570 மையங்களில் 17.78 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். இதில் தமிழகத்தில் 1.34 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதியதில் 51.30 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

    இந்த வரிசையை நாம் பார்க்கும்போது ஏற்கனவே 2020 கல்விஆண்டில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி யில் ஒரு லட்சம் பேர் நீட் தேர்வு எழுதினர்.ணதில் 57.44 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று இந்தியாவில் நாம் 15-வது இடம் பிடித்தோம். ஆனால் இன்றைக்கு ஒப்பிட்டு பார்த்தால் இந்திய அளவில் 28 வது இடத்திற்கு சென்ற வேதனையான புள்ளி விபரத்தை நாம் பார்க்கிற போது இது வேதனையிலும், வேதனை அளிப்பதாக அமைந்திருக்கிறது.

    அரசு பள்ளி மாண வர்களுக்கு மருத்துவ படிப்பு கிடைக்கும் வகை யில், எடப்பாடி பழனிசாமி. சமூக நீதிப் பாதையில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டினை கடந்த 2020 ஆம் ஆண்டு உருவாக்கிக் கொடுத்து, அதே கல்வி ஆண்டில் 435 மாணவ மாணவிகளுக்கு அவரே மருத்துவ படிப்பிற்கான ஆணைகளை வழங்கினார்.

    மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து, ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கினார். அதேபோல் எடப்பாடியார் கடந்த 2019 ஆம் ஆண்டு, நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் சிறப்பு மசோதா கொண்டு வந்து நிறைவேற்றி அதை ஜனாதிபதி ஒப்புதலுக்கும் அனுப்பி வைத்தார். அதே நிலையில் தான் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று உறுதியேற்று சவால் விடுத்தார் முதலமைச்சர். ஆனால் இதுவரை ஒரு மைல் தூரம் கூட முன்னேற வில்லை, நீட் தேர்வு ரத்து நடவடிக்கை தேக்கநிலையில் தான் உள்ளது.

    ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் உயிர் பலியா வதை தொடர்ந்து கண்ணீ ரோடு நாம் பார்க்கிறோம். இந்த ஆண்டும் மாணவர்கள் தற்கொலை என்ற செய்தி வேதனையிலும் வேதனை அளிக்கிற செய்தியாக இருக்கிறது.

    நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம். முதல் கையெழுத்திடுவோம் என்று மிகப்பெரிய பொய்யை சொல்லி மாணவர்கள் எதிர்காலத்தை நம்பிக்கையும் கேள்விக்குறியாகி இருக்கி றது அந்த அறிவிப்பு. இன்னும் எத்தனை உயிர்களை பலி கொடுக்கப் போகிறோம் என்கிற அச்சம் ஏற்படுகிறது.

    ஏழை மாணவர்கள் கனவை நனவாக்குவதற்கு நீட் தேர்வை ரத்து செய்ய எந்த நாளோ அந்த நாளை எதிர்பார்த்து நமது தமிழகம் நகர்ந்து கொண்டிருக்கிறது. நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா? என்று மாணவரிடத்தில் மிகப்பெரிய அச்சம், சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்

    Next Story
    ×