search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆரம்ப சுகாதார நிலையம்"

    • செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை.
    • 25 லட்ச ரூபாய் செலவில் புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை ராமசாமி நகரில் கட்டப்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா முடிந்தும் டாக்டர்கள் மருத்துவ பணியாளர் நியமிக்கப்படாமல் கட்டடம் காட்சிப்பொருளாக மாறி வருகிறது.

    உடுமலை நகராட்சியில் 33வது வார்டுகளில் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர் .மக்களின் அடிப்படை மருத்துவம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய திட்டங்களுக்காக நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் வக்கீல் நாகராஜன் வீதியில் செயல் படுகிறது.

    அங்கு தினமும் நூற்றுக்கணக்கான கர்ப்பிணிகள், தாய்மார்கள் வருவதால் இடம் நெருக்கடி ஏற்படுகிறது. நகரின் தெற்கு பகுதியில் 14 வார்டுகளில் வசிக்கும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வர வேண்டி உள்ளது.

    எனவே தெற்கு பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். ராமசாமி நகரில் 25 லட்ச ரூபாய் செலவில் புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டது.

    பணி முடிந்து கடந்த 2 மாதத்திற்கு முன் கட்டிடத்திற்கு திறப்பு விழா நடத்தப்பட்டது .ஆனால் இதுவரை நகரப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் சுகாதார நிலையம் செயல்படாமல் உள்ளது

    இது குறித்து சுகாதார துறையினர் கூறுகையில், நகர்ப்புற ஆரம்பசுகாதார நிலையங்களுக்கென அரசு உத்தரவு அடிப்படையில் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். பணி நியமனத்துக்கான உத்தரவு எதுவும் இதுவரை அரசால் வழங்கப்படவில்லை என்றனர்.

    • சிங்கம்புணரி அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தர மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு நடத்தினர்.
    • பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் நபீஷா பானு மற்றும் அனைத்து பிரிவு மருத்துவர்கள், செவிலியர்கள் உடனிருந்தனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள மு.சூரக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தரவுறுதி தரநிலைகள் குழுவினர் டெல்லியில் இருந்து வருகை தந்து ஆய்வு செய்தனர்.இந்த சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெறுவதற்காக தினந்தோறும் வெளி நோயாளிகள் அதிகம் வருகின்றனர். இங்கு 24 மணி நேரமும் பிரசவம் நடக்கிறது. இந்த குழுவை சேர்ந்த டாக்டர்கள் சசிகலா, கிர்திமன் மஹர்தா ஆகியோர் கட்டிட வசதி, வெளி நோயாளிகள் வருகை, மருத்துவ பரிசோதனை கருவிகளின் செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டனர்.

    நோயாளிகளின் விபரங்கள், அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், பிரசவமான குழந்தைகளின் எண்ணிக்கை, நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட சேவைகள் குறித்து தனித்தனியாக ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு மாலை வரை நீடித்தது. பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் நபீஷா பானு மற்றும் அனைத்து பிரிவு மருத்துவர்கள், செவிலியர்கள் உடனிருந்தனர்.

    • ராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 53-வது வார்டில் நகர்ப்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்பு சார்பில் 1044 குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன.
    • நகர்ப்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் இருந்தது சட்டமன்ற உறுப்பினரின் தீவிர முயற்சியால் அது தற்போது பெறப்பட்டுள்ளது.

    சென்னை:

    ராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 53-வது வார்டில் நகர்ப்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்பு சார்பில் 1044 குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன. அப்பகுதி மக்களும் அருகில் உள்ள ராமதாஸ் நகர் மற்றும் காட்பாடா பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான கட்டிடம் கட்டுவதற்கான கட்டுமான பணியினை ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் ஆர்.மூர்த்தி அடிக்கல் நாட்டில் துவங்கி வைத்தார். இந்த கட்டிடம் 6 மாதத்திற்குள் பணி நிறைவடையும் என அப்போது சட்டமன்ற உறுப்பினர் கூறினார்.

    நகர்ப்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் இருந்தது சட்டமன்ற உறுப்பினரின் தீவிர முயற்சியால் அது தற்போது பெறப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் மற்றும் கழிவுநீர் வசதி மின் வசதி உடற்பயிற்சி கூடம் திறந்த வெளி பூங்கா ஆகிய பணிகள் நடைபெறுவதை சட்டமன்ற உறுப்பினர் பார்வையிட்டார். அவருடன் மண்டல குழு தலைவர் ஸ்ரீராமுலு மேற்கு பகுதி செயலாளர் வ.பெ. சுரேஷ் மாமன்ற உறுப்பினர் வேளாங்கண்ணி வட்ட செயலாளர் கௌரீஸ்வரன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சுகாதார நிலையத்தில் ஒரு மருத்துவரும், மூன்று செவிலியா்களும், ஒரு மருந்தாளுநரும் பணியாற்றி வருகின்றனா்.
    • பொதுமக்கள் சிகிச்சைக்காக தனியாா் மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தலைமை வகித்தாா். இதில், உழவா் உழைப்பாளா் கட்சி மாவட்டத் தலைவா் ஆா்.ஈஸ்வரமூா்த்தி அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

    தாராபுரத்தை அடுத்துள்ள அலங்கியம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் தென்னை சாகுபடி செய்து வருகின்றனா். தேங்காய் பருப்பு விலை வீழ்ச்சியின் காரணமாக 2022 ஆம் ஆண்டு ஜனவரி முதல் அக்டோபா் வரையில் அரசின் நேரடி கொள்முதல் நிலையமானது காங்கயம், பொங்கலூா், உடுமலை, பெதம்பட்டி ஆகிய நான்கு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நடைபெற்றது.

    அலங்கியம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்களின் தேங்காய் பருப்பைக் கொண்டு செல்ல சிரமத்துக்குள்ளாகினா். ஆகவே, வரும் நாள்களில் தமிழக அரசு தேங்காய் பருப்பை நேரடியாக கொள்முதல் செய்தால் அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திலும் ஒரு கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மங்கலம் கிராம நீரினைப் பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச் சங்கத்தின் தலைவா் சி.பொன்னுசாமி அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

    திருப்பூா் மாநகராட்சி வாா்டு எண் 38, 39க்கு உள்பட்ட பெரியாண்டிபாளையம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் குளத்துப்புதூரில் இயங்கி வருகிறது. இந்த வாா்டுகளில் சுமாா் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்த சுகாதார நிலையத்தில் ஒரு மருத்துவரும், மூன்று செவிலியா்களும், ஒரு மருந்தாளுநரும் பணியாற்றி வருகின்றனா்.இங்கு கா்ப்பிணி பெண்கள், குழந்தைகளுக்கு தடுப்பூசியும் போடப்படுகிறது. இந்த சுகாதார நிலையத்தில் பணியாற்றும் ஊழியா்கள் குறிப்பிட்ட நேரத்தில் பணிக்கு வருவதில்லை.

    மாலையில் சிகிச்சை வரும் நபா்களை மறுநாள் காலையில் வரச்சொல்கின்றனா். இதனால் இப்பகுதி பொதுமக்கள் சிகிச்சைக்காக தனியாா் மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, மாநகராட்சி நகா் நல அலுவலா் சுகாதார நிலையத்தை நேரில் ஆய்வு செய்து நோயாளிகளுக்குமுறையான சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கூடுதல் படுக்கை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்
    • மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை

    திருவண்ணாமலை:

    தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் அடிப் படை வசதிகள், பராமரிப்பு குறித்து மத்திய அரசின் சுகாதார குழுவினர் கடந்த நவம்பர் மாதம் முதல் டிசம்பர் 5ம்தேதி வரை ஆய்வு செய்தனர். அதன்படி கிருஷ்ணகிரி, மதுரை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருப்பத்தூர். திருவண்ணாமலை, தர்மபுரி, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய 9 மாவட்டங்களில் 14 ஆரம்ப சுகாதார நிலையங்களை மத்திய அரசின் சுகாதார குழுவினர் ஆய்வு செய்தனர்.

    இதில் கலசப்பாக்கம் அடுத்த மேல்வில்வ ராயநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நவம்பர் மாதம் குஜராத் மாநிலத்தை சேர்ந்த டாக்டர் வியாஸ், சிக்கிம் மாநிலத்தை சேர்ந்த மிக்கியா லெப்சான் கொண்ட மருத்துவ க்குழுவினர்

    ஆய்வு செய்து அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தனர். இதில் 93.46 மதி

    ப்பெண்கள் பெற்று மேல்வில்வ ராயநல்லூர் சுகாதார நிலையம் முதலிடம் பெற்றது.

    இங்கு அடிப்படை வசதிகள், தரமான சிகிச்சை, நோயாளிகள் பராமரிப்பு உள்ளிட்டவற்றில் சிறப்பான செயல்பாடு உள்ளதாக தேசிய தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த அறிக்கை மத்திய அரசு மூலம் மாநில அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.

    பின்னர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரத்த வங்கி, கூடுதல் கட்டிடம், அறுவை சிகிச்சை மையம், கூடுதல் படுக்கை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படஉள்ளது.

    இந்த சுகாதார நிலையத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கி பல்வேறு வசதிகள் செய்து தருவதன் மூலம் மேல்வில்வராயநல்லூர். மேலாரணி, சேங்கபுத்தேரி, மோட்டூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறுவார்கள். தனி யார் மருத்துவமனைக்கு இணையாக அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கவேண்டும் என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    • குழந்தை பிறந்து சிறிது நேரத்திலேயே இறந்தது. மேலும் அரங்கநாயகியின் உடல்நிலை மிகவும் மோசமானது.
    • ஆரம்ப சுகாதார நிலையத்தில் தவறான சிகிச்சையால் தாய் மற்றும் குழந்தை இறந்ததாக கூறி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வ.புதுபட்டியை சேர்ந்தவர் ராம்குமார். இவரது மனைவி அரங்க நாயகி (வயது 19). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர், பிரசவத்திற்காக புதுபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று இரவு சேர்க்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு இன்று அதிகாலை 5 மணிக்கு பெண் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தை சிறிது நேரத்திலேயே பரிதாபமாக இறந்தது. மேலும் அரங்கநாயகியின் உடல்நிலை மிகவும் மோசமானது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சு மூலம் கொண்டு செல்லப்பட்டார்.

    ஆனால் ஆஸ்பத்திரி செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். பிறந்த குழந்தை மற்றும் தாய் அடுத்தடுத்து இறந்ததால் அவர்களது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் தாய் மற்றும் குழந்தையின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    ஆரம்ப சுகாதார நிலையத்தில் தவறான சிகிச்சையால் தாய் மற்றும் குழந்தை இறந்ததாக கூறி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    • வட்டவிளை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு
    • வட்டவிளை குளம் சீரமைக்க 47 லட்ச ருபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், பணியை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் உத்தரவு

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநக ராட்சிக்கு உட்பட்ட 41-வது வார்டுக்கு உட்பட்ட வட்டவிளை, ஈத்தாமொழி ரோடு, மேலபுது தெரு, பறக்கை ரோடு, பட்டாரியார் சாஸ்தா தெரு உள்ளிட்ட பகுதியில் மேயரும், தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளருமான மகேஷ், அனைத்து துறை அதிகாரிகளுடன் சென்று திடீர் ஆய்வு நடத்தினார்.

    ஆய்வின் போது பொது மக்களின் கோரிக்கையை ஏற்று வட்டவிளை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க அதிகாரிகளுக்கு உத்தர விட்டார். மேலும் வட்டவிளை குளம் சீரமைக்க 47 லட்ச ருபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், பணியை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

    மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலா வாணி, மாமன்ற உறுப்பி னர் அனிலா, தலைமை செயற்குழு உறுப்பினர் சதா சிவன், மாநகர துணை செயலாளர்கள் வேல் முருகன், ராஜன், பகுதி செயலாளர்கள் ஷேக் மீரான், துரை, மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் எம். ஜே ராஜன் உள்ளிட்ட பலரும் ஆய்வின் போது கலந்து கொண்டனர்.

    • கூட்டுறவு வங்கி இயக்குனர் வலுப்பூரசாமி,சுகாதார ஆய்வாளர் கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    • மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் சண்முகம், மாவட்ட கவுன்சிலர் பழனிசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூரில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சிகிச்சைக்கு வரும் புற நோயாளிகள் தங்குவதற்காக மாவட்ட ஊராட்சி நிதியில் இருந்து ரூ.7 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பில் காத்திருப்போர் அறைஅமைக்க பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை பொங்கலூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். சுந்தரவேல் வரவேற்றார். இந்த பூமி பூஜை நிகழ்ச்சியின்போது காத்திருப்போர் அறை அமைக்கும் பணியை ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ். குமார், மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் சண்முகம், மாவட்ட கவுன்சிலர் பழனிசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இதை தொடர்ந்து உகாயனூர் ஊராட்சியில் ரூ.6 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலும், சேமலைக்கவுண்டம்பாளையத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலும் கான்கிரீட் சாலை அமைப்பிற்கான பூமி பூஜையும் நடைபெற்றது. மேலும் நாச்சிபாளையம், பெருந்தொழுவு, மசநல்லாம்பாளையம் ஆகிய அரசு பள்ளிகளுக்கு ரூ. 4லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் மாணவர்களுக்கான இருக்கைகளும் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி தலைவர்கள் பாலசுப்ரமணியம், செல்வராஜ், மதிவதநேசன், தர்மராஜ், வலுப்பூர் அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் சிதம்பரம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் அனந்த கிருஷ்ணன், சந்திரன், சின்னச்சாமி மற்றும் ஆவின் இயக்குனர் குமார், கூட்டுறவு வங்கி இயக்குனர் வலுப்பூரசாமி,சுகாதார ஆய்வாளர் கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பூமி பூஜை நடந்தது
    • வந்தவாசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    வந்தவாசி:

    வந்தவாசியை அடுத்த வழூரில் உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் புதிய ஆய்வக கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை நேற்று நடைபெற்றது.

    வந்தவாசி ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் இந்த புதிய ஆய்வக கட்டிடம் கட்டப்பட உள்ளது. நிகழ்ச்சிக்கு திமுக மாவட்டச் செயலர் எம்.எஸ்.தரணிவேந்தன் தலைமை வகித்தார். வந்தவாசி ஒன்றியக்குழுத் தலைவர் ஜெயமணி ஆறுமுகம் முன்னிலை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் எம்.ஆர்.ஆனந்தன் வரவேற்றார்.

    வந்தவாசி எம்.எல்.ஏ. எஸ்.அம்பேத்குமார் பூமி பூஜை மற்றும் கட்டிட பணிகளை தொடங்கி வைத்தார்.

    வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலர் சு.வி.மூர்த்தி, வந்தவாசி நகர்மன்றத் தலைவர் எச்.ஜலால், திமுக ஒன்றியச் செயலார்கள் எஸ்.பிரபு, சி.ஆர்.பெருமாள், வழூர் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வி தனசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • நோயாளிகள் சிரமத்தை குறைக்க நடவடிக்கை
    • அங்கன்வாடி மையத்துக்கும் அவர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.

    இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மாநகராட்சி மேயர் மகேஷ் இன்று திடீரென சென்று ஆய்வு நடத்தினார். அங்குள்ள மருந்தகம், தடுப்பூசி போடும் பிரிவு, கணினி அறை உள்ளிட்ட பல இடங்களை ஆய்வு செய்தார்.

    அப்போது சுகாதார நிலைய வளாகத்தில் தண்ணீர் தேங்கி கிடந்தது. மேலும் ஆங்காங்கே கற்க ளும், மரக்கட்டைகளும் கிடந்தன. அவற்றை பார்வை யிட்ட மேயர் மகேஷ், அவற்றை உடனே அகற்ற வேண்டும் என்று சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.

    சுகாதார நிலையத்தில் கை கழுவும் வாஷ் பேஷனை சீரமைத்து தர வேண்டும் என்றும், சீமைக் கருவேல மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார். அப்போது, ஆரம்ப சுகாதார நிலை யத்தில் படிக்கட்டு வசதி சரி வர இல்லை. இதனால் நோயாளிகள் சிரமப்படு கிறார்கள் என்றும் பணியா ளர்கள் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் மகேஷ் அவர்களிடம் கூறினார். பின்னர் சுகாதார நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்துக்கும் அவர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    முன்னதாக அழகம்மன் கோவில் அருகே சாலை சீரமைப்பு பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். அதோடு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை நினைவு தினத்தையொட்டி கோட்டார் கவிமணி பள்ளியில் உள்ள அவரது சிலைக்கும் மேயர் மகேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி,மாநகர செயலாளர் ஆனந்த், கவுன்சிலர்கள் அக்‌ஷயா கண்ணன், கலாவாணி, ஜீவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வானூர் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 108 ஆம்புலன்ஸ் வசதி வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
    • மேல் தளம் சேதம டைந்துள்ளதால் மழை நீர் மருத்துவமனை முழுவதும் ஒழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே பொம்பூர் கிராமம் உள்ளது. இங்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றகர். பொம்பூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் மழை காலங்களில் மேல் தளம் சேதம டைந்து ள்ளதால் மழை நீர் மருத்து வமனை முழுவதும் ஒழுகும் நிலை ஏற்பட்டு ள்ளது.இதனால் நோயாளிகள் அவதி ப்படுகி ன்றனர். மேலும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி இல்லை இதனால் கர்ப்பிணி பெண் ஒருவர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்துக்கு வந்த போது மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டி யம்பாக்கம் ஆஸ்ப த்திரிக்கு எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் அந்த கர்ப்பிணி பெண் மரணம் அடைந்து உள்ளார். எனவே பொம்பூர் மருத்து வமனைக்கு உடனடியாக ஆம்புலன்ஸ் சேவை தொடங்க வேண்டும். இல்லை யென்றால் 108 ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். மேலும் ஆரம்ப சுகாதார நிலையத்தை சீரமைத்து சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர். 

    • ஆர்ப்பாட்டத்தை விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முத்துசாமி தொடங்கிவைத்தார்.
    • அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்றம் செய்யும் முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தென்காசி:

    வல்லம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க நிர்வாகி ஆறுமுகம் தலைமை தாங்கினார். வல்லம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்றம் செய்யும் முடிவை கைவிட வேண்டும். சுகாதார நிலையத்தை சீர்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நிர்வாகிகள் செல்லத்துரை, அருள்ராஜ், மல்லிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முத்துசாமி தொடங்கிவைத்தார். தென்காசி ஒன்றிய செயலாளர் முத்துசாமி முடித்துவைத்தார். நிர்வாகிகள் ரமேஷ், குத்தாலிங்கம், பேச்சியம்மாள், மாரியம்மாள், சீதை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    ×