search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளத்துப்புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
    X

    குளத்துப்புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • சுகாதார நிலையத்தில் ஒரு மருத்துவரும், மூன்று செவிலியா்களும், ஒரு மருந்தாளுநரும் பணியாற்றி வருகின்றனா்.
    • பொதுமக்கள் சிகிச்சைக்காக தனியாா் மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தலைமை வகித்தாா். இதில், உழவா் உழைப்பாளா் கட்சி மாவட்டத் தலைவா் ஆா்.ஈஸ்வரமூா்த்தி அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

    தாராபுரத்தை அடுத்துள்ள அலங்கியம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் தென்னை சாகுபடி செய்து வருகின்றனா். தேங்காய் பருப்பு விலை வீழ்ச்சியின் காரணமாக 2022 ஆம் ஆண்டு ஜனவரி முதல் அக்டோபா் வரையில் அரசின் நேரடி கொள்முதல் நிலையமானது காங்கயம், பொங்கலூா், உடுமலை, பெதம்பட்டி ஆகிய நான்கு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நடைபெற்றது.

    அலங்கியம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்களின் தேங்காய் பருப்பைக் கொண்டு செல்ல சிரமத்துக்குள்ளாகினா். ஆகவே, வரும் நாள்களில் தமிழக அரசு தேங்காய் பருப்பை நேரடியாக கொள்முதல் செய்தால் அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திலும் ஒரு கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மங்கலம் கிராம நீரினைப் பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச் சங்கத்தின் தலைவா் சி.பொன்னுசாமி அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

    திருப்பூா் மாநகராட்சி வாா்டு எண் 38, 39க்கு உள்பட்ட பெரியாண்டிபாளையம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் குளத்துப்புதூரில் இயங்கி வருகிறது. இந்த வாா்டுகளில் சுமாா் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்த சுகாதார நிலையத்தில் ஒரு மருத்துவரும், மூன்று செவிலியா்களும், ஒரு மருந்தாளுநரும் பணியாற்றி வருகின்றனா்.இங்கு கா்ப்பிணி பெண்கள், குழந்தைகளுக்கு தடுப்பூசியும் போடப்படுகிறது. இந்த சுகாதார நிலையத்தில் பணியாற்றும் ஊழியா்கள் குறிப்பிட்ட நேரத்தில் பணிக்கு வருவதில்லை.

    மாலையில் சிகிச்சை வரும் நபா்களை மறுநாள் காலையில் வரச்சொல்கின்றனா். இதனால் இப்பகுதி பொதுமக்கள் சிகிச்சைக்காக தனியாா் மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, மாநகராட்சி நகா் நல அலுவலா் சுகாதார நிலையத்தை நேரில் ஆய்வு செய்து நோயாளிகளுக்குமுறையான சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×