search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆயிரம்"

    • 3 ஊழியர்கள் மீது போலீசில் புகார்
    • சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கன்னியாகுமரி :

    நாகர்கோவில் கோட்டார் ஈழவர் சன்னதி தெருவை சேர்ந்தவர் குமரன் என்ற நயினார் குமார் (வயது 53). இவர் சுசீந்திரம் அருகே உள்ள நல்லூரில் மதுபானக் கூடம் நடத்தி வருகிறார்.

    இங்கு மேஜையில் வைத்திருந்த ரூ. 94 ஆயிரத்து 406 திடீரென மாயமானது. இதுகுறித்து அங்குள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது மதுபானக்கூடத்தில் வேலை பார்த்த ஊழியர்கள் பணத்தை எடுப்பது தெரியவந்தது.

    இது தொடர்பாக அவர்களிடம் நயினார் குமார் கேட்டுள்ளார். அப்போது அவர்கள் பணத்தை திரும்ப தருவதாக கூறினார்களாம். ஆனால் நீண்ட நாட்களாகியும் பணத்தை தராமல் இழுத்தடித்துள்ளனர்.இதனை தொடர்ந்து நயினார் குமார், பணம் திருட்டு தொடர்பாக சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் மதுபான கூடத்தில் வேலை பார்த்த திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் பகுதியை சேர்ந்த அந்தோணி சவரிமுத்து (45), களக்காடு சந்திரன் (44), ராமநாதபுரம் மாவட்டம் வேப்பன்குளம் நம்புவேல் (40) ஆகிய 3 பேர் பணத்தை திருடியதாக குறிப்பிட்டுள்ளார். அதன் பேரில் சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு ஏற்பாடு
    • அமைச்சர் துரைமுருகன், ஜெகத்ரட்சகன் எம்.பி. வருகை எதிரொலி

    கன்னியாகுமரி :

    அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கொட்டாரத்தில் உள்ள தி.மு.க அலுவலகத்தில் நடந்தது. தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் பாபு தலைமை தாங்கினார். கூட்டத்தில் தி.மு.க. மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் தில்லைசெல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    கூட்டத்தில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.பார்த்தசாரதி, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், அகஸ்தீஸ்வ ரம் பேரூராட்சி தலைவி அன்பரசி ராமராஜன், தென்தாமரைகுளம் பேரூராட்சி தலைவி கார்த்திகா பிரதாப், சுசீந்திரம் பேரூராட்சி தலைவர் அனுசுயா, கொட்டா ரம் பேரூராட்சி தலைவி செல்வ கனி, ஒன்றிய துணை செயலா ளர்கள் பாலசுப்பிரமணியம், பிரேமலதா, கொட்டாரம் பேரூர் செயலாளர் வைகுண்டபெருமாள், மாவட்ட பிரதிநிதிகள் பிரேம் ஆனந்த், தமிழ்மாறன், வினோத், ஒன்றிய பிரதிநிதி மரியநேசன், ஒன்றிய தி.மு.க. பொறியாளர் அணி அமைப்பாளர் தமிழன் ஜானி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாகர்கோ வில் வடசேரி வஞ்சி யாதித்தன் புதுத்தெருவில் இன்று மாலை 5 மணிக்கு தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனைகள் விளக்க பொதுக்கூட்டம் நடக்கிறது.

    இதில் தி.மு.க. பொதுச் செயலாளரும் தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரை முருகன், தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள். இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் துரைமுருகன், ஜெகத்ரட்ச கன் எம்.பி. ஆகியோர் இன்று காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு தூத்துக்குடி வருகிறார்கள்.

    பின்னர் அவர்கள் அங்கு இருந்து கார் மூலமாக புறப்பட்டு மதியம் 12 மணிக்கு கன்னியாகுமரிக்கு வருகிறார்கள். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கும் வகையில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தெற்கு ஒன்றிய எல்லை பகுதிகளான சுசீந்திரத்தில் இருந்து பொற்றையடி, அச்சன்குளம், கொட்டாரம், பெருமாள்புரம், மகாதான புரம் ரவுண்டானா சந்திப்பு, கன்னியாகுமரி வரையிலும், வட்டக்கோட் டையில் இருந்து லீபுரம், பஞ்ச லிங்கபுரம், விவே கானந்தபுரம், கன்னியாகுமரி வரையிலும் சாலையின் இருபுறமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தி.மு.க. கொடிகள் பறக்க விடப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு செய்துள்ளார். சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சாலையின் இருபுறமும் தி.மு.க. கொடி பறக்க விடப்பட்டு உள்ளது. இது தி.மு.க தொண்டர்கள், நிர்வாகிகளிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • ஏ.வி.எம்.கால்வாயை தூர்வார ரூ.4 கோடியில் திட்டமதிப்பீடு
    • மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் தகவல்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடந்தது. மீனவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் அரவிந்த் பெற்றுக் கொண்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து மீனவர்கள் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் நாட்டு படகுகள், விசைப்படகுகள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்று இருந்த நிலையில் தற்பொழுது ஒரு ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து கேட்டு கூட்டம் முறையாக நடத்த வேண்டும். ஜூன், ஜூலை மாதங்களில் குளச்சல் பகுதியில் உள்ள மீனவர்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ளும் வகையிலும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் சின்னமுட்டம் பகுதி மீனவர்கள் தங்களது பதிவை புதுப்பித்துக் கொள்ளும் வகையிலும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

    கோவளம் பகுதியில் தூண்டில் வளைவுப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே உடனடியாக அந்த பணியை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறும்பனை பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும்.

    மண்டைக்காடுபுதூர் முதல் குளச்சல் வரை உள்ள ஏ.வி.எம். கால்வாயில் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். சைமன் காலனி ஊராட்சி பகுதியில் குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. அதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தூத்தூர் ஊராட்சி பகுதியில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கன்னியாகுமரி ஜீரோ பாயிண்ட் பகுதியில் உள்ளூர் வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரியில் சீசன் தொடங்கி இருப்பதால் நடைபாதையில் கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே நடைபாதை கடைகளை அகற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். இதற்கு பதில் அளித்து கலெக்டர் அரவிந்த் கூறியதாவது:-

    மீனவர்கள் தங்களது படகுகளை புதுப்பித்துக் கொள்வது தொடர்பாக கருத்து கேட்டு கூட்டம் நடத்தப்பட்டு முடிவு செய்யப்படும். ஏற்கனவே கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. மேற்கு மாவட்டத்தில் ஒரு மாதமும், கிழக்கு மாவட்டத்தில் ஒரு மாதமும் படகுகளை புதுப்பித்துக் கொள்ள அவகாசம் வழங்கப்படும்.

    மேற்கு மாவட்டத்தில் வருகிற 30-ந் தேதி குளச்சலில் வைத்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும். எந்த மாதத்தில் படகு புதுப்பிக்க வேண்டும் என்பது குறித்து கூட்டத்தில் முடிவு செய்யப்படும். கோவளத்தில் தூண்டில் வளைவு பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. பெரியகாட்டில் ரூ.6 கோடி செலவில் தூண்டில் வளைவு அமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேல்மிடாலம் ரேஷன் கடைகளில் மண்எண்ணெய், பாமாயில் இந்த மாதம் குறைவாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாதம் கிடைக்காதவர்களுக்கு அடுத்த மாதம் முன்னுரிமை அடிப்படையில் மண்எண்ணெய், பாமாயில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஏ.வி.எம். கால்வாயை தூர்வாரும் பணிக்கு ரூ.4 கோடியே 8 லட்சத்தில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.

    குமரி மாவட்டத்தை பொறுத்த வரை கடந்த 2 ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இடித்து அகற்றப்பட்டு உள்ளது.

    சைமன் காலனி பகுதியில் குப்பைகளை அகற்றுவது தொடர்பாக பஞ்சாயத்து தலைவருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். தூத்தூர் ஊராட்சியில் கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் முடிவடைந்ததும் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். கன்னியாகுமரியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படவில்லை. வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்களுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2 லட்சத்து 47 ஆயிரம் விலை நிலங்கள் பாசன வசதி பெறுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • இந்த ஆண்டு 100 அடியை எட்டுவதால் முன்கூட்டியே பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படலாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகமாக வந்தது.

    இந்நிலையில் கடந்த 3 நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் சற்று குறைந்துள்ளதால் அணைக்கு வரும் தண்ணீன் அளவும் குறைந்தது. இருந்த போதிலும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது.

    105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 99.14 அடியாக உள்ளது. இன்று இரவு அல்லது நாளை மாலைக்குள் பவானிசாகர் அணை 100 அடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அணைக்கு நீர்வரத்து ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ளது. இன்று வினாடிக்கு 1,072 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தடப்பள்ளி - அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கன அடி, பவானி ஆற்றுக்கு 100 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடி என மொத்தம் 905 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பவானிசாகர் அணையில் அதிகபட்சமாக 100அடிக்கு மேல் தண்ணீர் தேக்கி வைக்கக் கூடாது என்பது பொதுப்பணித்துறையின் விதி ஆகும். இன்னும் ஒரு நாளில் 100 அடியை பவானிசாகர் அணை எட்டி விடும் என்பதால் அதன் பிறகு பவானிசாகருக்கு வரும் நீர் முழுவதும் பவானி ஆற்றுக்கு திறந்து விடப்படும். இதனால் பவானி ஆற்றங்கரை பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

    வரலாற்றில் 67 ஆண்டுகளில் இதுவரை 27 முறை 100 அடியை அணை எட்டி உள்ளது. தற்போது 28-வது முறையாக அணை 100 அடியை எட்ட உள்ளது. பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 47 ஆயிரம் விலை நிலங்கள் பாசன வசதி பெறுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    வழக்கமாக ஆகஸ்ட் 15-ந் தேதி கீழ் பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு 100 அடியை எட்டுவதால் முன்கூட்டியே பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படலாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • ஈரோட்டில் நடந்த மெகா முகாமில் 19 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது சுகாதார துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
    • 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் தொடங்கின. இதற்காக மாவட்டம் முழுவதும் 4260 ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு மக்கள் நலனை முதன்மையாகக் கொண்டு மக்களை தேடி மருத்துவம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் 12 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள், 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை, இரு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டே முன் களப்பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது.

    இதன்படி ஈரோடு மாவட்டத்தில் நேற்று அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் என மொத்தம் 3, 194 மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை தடுப்பூசி முகாம் நடந்தது.

    இதுபோல் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையம் உட்பட பல்வேறு பகுதிகளிலும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இரண்டாம் தடுப்பூசி போடாதவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இந்த தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

    1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் தொடங்கின. இதற்காக மாவட்டம் முழுவதும் 4260 ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதற்காக 66 வாகனங்களும் பயன்படுத்தப்பட்டன. இருந்தாலும் ஒரு சில மையங்கள் தவிர அனைத்து மையங்களில் மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. தடுப்பூசி போட மக்கள் ஆர்வம் காட்டவில்லை. குறிப்பாக இரண்டாம் தடுப்பூசி போடவேண்டியவர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டவில்லை.

    இதேபோல் பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கு மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். ஒரு சிலர் மட்டுமே ஆர்வத்துடன் வந்து தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர். நேற்று நடந்த மெகா தடுப்பூசி முகாமில் வரும் 19 ஆயிரத்து 59 பேர் மட்டுமே தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்.

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 6 நாட்களாக மீண்டும் கொரோனா தினசரி பாதிப்பு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் அருகிலிருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று தவறாமல் செலுத்தி கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். 

    ×