சுசீந்திரம் அருகே தனியார் மதுபானக்கூடத்தில் ரூ.95 ஆயிரம் திருட்டு

3 ஊழியர்கள் மீது போலீசில் புகார் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சுசீந்திரம் அருகே தனியார் மதுபானக்கூடத்தில் ரூ.95 ஆயிரம் திருட்டு
Published on

கன்னியாகுமரி :

நாகர்கோவில் கோட்டார் ஈழவர் சன்னதி தெருவை சேர்ந்தவர் குமரன் என்ற நயினார் குமார் (வயது 53). இவர் சுசீந்திரம் அருகே உள்ள நல்லூரில் மதுபானக் கூடம் நடத்தி வருகிறார்.

இங்கு மேஜையில் வைத்திருந்த ரூ. 94 ஆயிரத்து 406 திடீரென மாயமானது. இதுகுறித்து அங்குள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது மதுபானக்கூடத்தில் வேலை பார்த்த ஊழியர்கள் பணத்தை எடுப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக அவர்களிடம் நயினார் குமார் கேட்டுள்ளார். அப்போது அவர்கள் பணத்தை திரும்ப தருவதாக கூறினார்களாம். ஆனால் நீண்ட நாட்களாகியும் பணத்தை தராமல் இழுத்தடித்துள்ளனர்.இதனை தொடர்ந்து நயினார் குமார், பணம் திருட்டு தொடர்பாக சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் மதுபான கூடத்தில் வேலை பார்த்த திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் பகுதியை சேர்ந்த அந்தோணி சவரிமுத்து (45), களக்காடு சந்திரன் (44), ராமநாதபுரம் மாவட்டம் வேப்பன்குளம் நம்புவேல் (40) ஆகிய 3 பேர் பணத்தை திருடியதாக குறிப்பிட்டுள்ளார். அதன் பேரில் சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com