search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசாரிபள்ளம்"

    • டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு படி நடவடிக்கை
    • கடந்த இரண்டு மாதங்களில் 70-க்கு மேற்பட்டோரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனை செய்பவர்களின் வங்கி கணக்குகளை முடக்க டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து குமரி மாவட்டத்தில் கஞ்சா வியாபாரிகளின் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் 70-க்கு மேற்பட்டோரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஆசாரிப்பள்ளம் பகுதியில் கஞ்சா வழக்கில் வடசேரியைச் சேர்ந்த காட்வின் எட்வர்ட், பெருவிளையை சேர்ந்த சந்திரகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இதை யடுத்து காட்வின் எட்வர்ட் மற்றும் அவரது தாயாரின் வங்கி கணக்குகளும் சந்திரகுமாரின் வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.

    • உணவு சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம்
    • தரமற்ற உணவு தயாரித்ததால் அதிகாரிகள் நடவடிக்கை

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கிறார்கள்.

    மேலும் அங்கு ஆயிரக்கணக்கான நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு உணவருந்த வசதியாக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி வளாகத்தில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.மேலும் தனியார் மூலமாகவும் உணவகம் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த உணவகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உணவருந்திய 4 பேருக்கு திடீர் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து 4 பேரும் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    இது பற்றிய தகவல் அறிந்ததும் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் அங்கு சென்று பார்வையிட்டார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களிடம் நலம் விசாரித்தார். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மாநகராட்சி அதிகாரிகளும் சோதனை நடத்தினார்கள்.

    இந்த நிலையில் உணவகத்தை சீல் வைத்து மூட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து மாநகர நகர்நல அதிகாரி பொறுப்பு ஜான் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மாதவன் பிள்ளை, ராஜேஷ், தியாகராஜன், வருவாய் ஆய்வாளர் ஆல்ரின்,வருவாய் உதவியாளர் முருகன் ஆகியோர் இன்று காலை அந்த உணவகத்திற்கு சென்றனர்.

    அங்கு மதியம் உணவு தயார் செய்து வைக்கப்பட்டிருந்தது. அந்த உணவை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அங்கு தயார் செய்த உணவுகள் அனைத்தையும் மாநகராட்சி வண்டியில் ஏற்றினார்கள். பின்னர் அந்த உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

    ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி உணவகம் சீல் வைக்கப்பட்டதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில் உணவகத்தில் உள்ள உணவு கூடம் மிக மோசமாக இருந்தது.

    மேலும் இங்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டபோது தயாரிக்கப்பட்ட உணவு தரமற்ற முறையில் தயார் செய்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட தாக தெரிவித்தனர்.

    • மின் பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் நிறுத்தப்படுகிறது
    • மின்வாரிய செயற் பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல்

    நாகர்கோவில்:

    மின்வாரிய செயற் பொறியாளர் வெளி யிட்டுள்ள அறிக்கை யில் கூறி இருப்பதாவது:-

    குமரி மாவட்டம் முழு வதும் மின் பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் நிறுத் தப்படுகிறது. இதையொட்டி நாளை (9-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை காவல்கிணறு மின் நிலையத்தில் இருந்து கண்ணுபொத்தை காலணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

    வருகிற 11-ந் தேதி கன்னியாகுமரி மின் வினியோகத்தில் இருந்து கன்னியாகுமரி, கோவளம், ராஜாவூர், மயிலாடி, வழுக்கம்பாறை, கீழமணக்குடி, அழகப்பபுரம், சுசீந்திரம், கொட்டாரம், சாமிதோப்பு, அஞ்சுகிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை யும், பார்வதி புரத்தில் சிவபுரம், களியங்காடு, ஆரம்பாறை, கணியாகுளம், இலந்தையடி, பாறையடி, பண்டாரதோப்பு, உழ வன்கோணம் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

    வல்லன்குமாரன்விளை மின்வினியோக நிலை யத்தில, இருந்து வருகிற 12-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வல்லன்குமாரன்விளை மற்றும் தடிக்காரன் கோணம், வடசேரி, ஆசாரிபள்ளம் உப மின் நிலையங்களிலும், அதனை சார்ந்துள்ள பகுதிகளிலும் மற்றும் நாகர்கோவில் பெருவிளை, சுங்கான்கடை, வடசேரி, கிருஷ்ணன்கோவில், எம்.எஸ்.ரோடு, காலேஜ் ரோடு, கோர்ட்டு ரோடு, கே.பி.ரோடு, பால்பண்ணை, நேசமணிநகர், ஆசாரி பள்ளம், தோப்பூர், வேம்பனூர், அனந்தன்நகர், பார்வதிபுரம், புத்தேரி, இறச்ச குளம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.

    பார்வதிபுரம் மின் நிலையத்தில் இருந்து வருகிற 13-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வதிபுரம் சானல்கரை ரோடு, எஸ்.எஸ்.நகர், கிறிஸ்டோபர் நகர், பெருவிளை, கே.பி.ரோடு, அருள்மாதா தெரு, கோட்டவிளை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

    வருகிற 14-ந் தேதி வெட்டூர்ணிமடம் கிறிஸ்துநகரில் பாக்யாதெரு, ராஜா தெரு, ஆன்றனி தெரு, வாட்டர் டேங்க் ரோடு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

    • மருத்துவமனை வளாகத்தில் மயங்கிய நிலையில் கிடந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மனநிலை பாதித்தோர் வார்டு அருகில் முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார்.

    அவரைப் பார்த்த மருத்துவ கல்லூரி பணியாளர்கள் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி சிவசங்கரன் கொடுத்த புகாரின் பேரில் ஆசாரிபள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    முதியவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

    • இரணியல் அருகே உள்ள ஆளூர் அண்ணாநகர் காலனியை சேர்ந்த விவசாயி விஷமருந்தை மதுவுடன் கலந்து குடித்து மயங்கி இறந்தார்.
    • உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.‌
    • அவரது மனைவி ஏஞ்சல் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள ஆளூர் அண்ணாநகர் காலனியை சேர்ந்தவர் குமரேசன் (வயது 49), விவசாயி. குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் குடும்பத்தை கவனிக்க முடியாமல் அவதிப்பட்டார்.

    இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் விஷமருந்தை மதுவுடன் கலந்து குடித்து மயங்கினார். அவரை உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.‌

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குமரேசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது மனைவி ஏஞ்சல் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×