search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அய்யப்பன்"

    • அன்னதானம் வழங்கப்பட்டது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கூடலூர்,

    கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி அண்ணா நகர் செந்தூர் முருகன் கோவிலில் இருந்து அய்யப்ப பக்தர்கள் சார்பில், திருத்தேர் வீதி உலா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் அய்யப்பன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க, பஜனை வழிபாடு மூலம் திருத்தேர் முக்கிய வீதிகள் வழியாக சூண்டி திருக்கல்யாண மலையை அடைந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் பெரிய சூண்டி சித்தி விநாயகர் கோவிலை இரவு 11 மணிக்கு அடைந்தது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் அய்யப்பன் அவதார நட்சத்திர தின விழா நடந்தது.
    • அய்யப்பன் பாடல்களை இசை வாத்தியங்களுடன் பக்தர்கள் பாடி மகிழ்ந்தனர்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் அகில பாரத அய்யப்பா சேவா சங்கத்தின் சார்பில் கலியுக வரதன் சபரிமலை அய்யப்பன் அவதார நட்சத்திர தினத்தை முன்னிட்டு விசேஷ பூஜை நடந்தது. சங்கத் தலைவர் முத்து இருளாண்டி தலைமை தாங்கினார்.

    செயலாளர் முத்துராஜ், பொருளாளர் முருகேசன் முன்னிலை வகித்தனர். பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அய்யப்பன் படத்திற்கு சிறப்பு பூஜை-தீபாராதனை நடந்தது. அய்யப்பன் பாடல்களை இசை வாத்தியங்களுடன் பக்தர்கள் பாடி மகிழ்ந்தனர். அன்னதானம் நடந்தது.

    • இரவு 8-30 மணிக்கு பாலக்காடு கடுக்கன் குன்னம் கிருஷ்ணன் குழுவினரின் பூஜை மற்றும் தாயம் வகை செண்டை மேளம் நடைபெறுகிறது.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடுமலை ஸ்ரீ தர்மசாஸ்தா சபரி யாத்திரை குழுவினர் செய்து வருகின்றனர்.

    உடுமலை :

    உடுமலை தில்லைநகரில் உள்ள ரத்னாம்பிகை உடனமர் ரத்தின லிங்கேஸ்வரர் ேகாவிலில் கேரள பாரம்பரிய முறைப்படி ஸ்ரீ அய்யப்பன் விளக்கு பூஜை நடைபெறுகிறது.வருகிற 10 ந்தேதி காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 7:30 மணிக்கு வாழைமரம் கொண்டு உருவாக்கும் அம்பலத்தில் அய்யப்ப சாமி பிரதிஷ்டை, 12 மணிக்கு உச்சிகால பூஜை, அய்யப்பன் விளக்கு சப்பரம், விளக்கு சங்கல்பம் ,மாலை 5 மணிக்கு உடுமலை ருத்ரப்பா நகர் ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் இருந்து தாளப்பொலியுடன் பாலை கொம்பு எழுந்தருளல், மாலை 7 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது.

    இரவு 8-30 மணிக்கு பாலக்காடு கடுக்கன் குன்னம் கிருஷ்ணன் குழுவினரின் பூஜை மற்றும் தாயம் வகை செண்டை மேளம் நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு ஸ்ரீ அய்யப்பன் சரித்திரம் உடுக்கை பாட்டு, பால் கிண்டி எழுந்தருளல், திரிஉழிச்சல், அய்யப்பனும் வாபரும், வெட்டும் -தடவும் நிகழ்ச்சியும் நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடுமலை ஸ்ரீ தர்மசாஸ்தா சபரி யாத்திரை குழுவினர் செய்து வருகின்றனர்.

    • "மெட்டல் டிடெக்டர்" சோதனைக்கு பிறகே தரிசனத்துக்கு அனுமதி
    • கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவி லில் பக்தர்களின் தரிச னத்துக்காக தினமும் அதிகாலை 4.30மணிக்கு திறக்கப்பட்டு பகல் 12.30 மணிக்கு அடைக்கப்படுவது வழக்கம். அதேபோல் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படுவது வழக்கம்.

    இந்த நிலையில் சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் நேற்று முதல் தொடங்கி உள்ளது. இதையடுத்து கோவில் நடை திறப்பு நேரம் கூடுதலாக 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி பகல் 1 மணிக்கும், இரவு 9 மணிக்கும் நடை அடைக்கப்படுகிறது.

    நேற்று முதலே பகவதி அம்மன் கோவிலில் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. சீசன் தொடங்கிய 2-வது நாளான இன்றும் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலை மோதியது.இதனால் பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் சுமார் 1 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு சென்றனர். கோவிலுக்கு செல்லும் பக்தர்கள்"சூட்கேஸ்", கைப்பை மற்றும் பெட்டிகள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும்போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் தீவிர சோதனை செய்த பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

    மேலும் திருப்பதி வெங்கடேஸ்வரபெருமாள், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி, நாகர்கோவில் நாகராஜா, மண்டைக்காடு பகவதி அம்மன் போன்ற கோவில்களிலும் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

    விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில்சென்று பார்ப்பதற்காக படகு துறையில் அய்யப்ப பக்தர் களின் கூட்டம் அலைமோதுகிறது. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரியில் பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • கோவில்களில் சிறப்பு வழிபாடுகளும் நடக்கிறது
    • கார்த்திகை, மார்கழி, தை ஆகிய 3 மாதங்களும் இனி எங்கு பார்த்தாலும் அய்யப்ப சரணகோஷம் ஒலிப்பதைதான் கேட்க முடியும்

    கன்னியாகுமரி:

    கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலங் களில் இருந்தும் வெளிநாடு களில் இருந்தும் அய்யப்ப பக்தர்கள் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு தரிச னத்துக்காக கார்த்திகை மாதம் 1-ந்தேதி அன்று மாலை அணிந்து 41 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டு கட்டி தலை யில் சுமந்து சென்று அய்யப்பனை தரிச னம் செய்வது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக சபரி மலை அய்யப்பன் கோவில் நடை நாளை (புதன்கிழமை) திறக்கப்பட உள்ளது.

    இதைத்தொடர்ந்து சபரிமலைக்கு இருமுடி கட்டி செல்லும் அய்யப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் 1-ந்தேதியான நாளைமறுநாள் கோவில்களுக்கு சென்று மாலை அணிந்து விரதம் தொடங்குகிறார்கள்.

    அதன்படி குமரி மாவட் டத்தில் உள்ள புகழ் பெற்ற கோவில்களான கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சுசீந்தி ரம் தாணுமாலய சுவாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், பூதப் பாண்டி பூதலிங்க சுவாமி கோவில், குமார கோவில் வேளிமலை சுப்ரமணியசாமி கோவில், பார்வதிபுரம் அய்யப்பன் கோவில், உள்பட பல்வேறு கோவில்களில் நாளை மறுநாள் அதிகாலையில் இருந்தே சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதம் தொடங்குகிறார்கள்.

    அதிலும் குறிப்பாக கன்னியாகுமரியில் முக்கட லும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடலில் அய்யப்ப பக்தர் கள் நாளை மறுநாள் அதிகாலையில் புனித நீராடிவிட்டு கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில் மற்றும் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சரண கோஷம் முழங்க துளசி மாலை அணிந்து விரதம் தொடங்கு கிறார்கள்.

    இதில் மண்டல பூஜை தரிசனத்துக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் 41 நாட்களும் மகரவிளக்கு தரிசனத்திற்கு செல்லும் அய்யப்ப பக்தர் கள் 60 நாட்களும் விரதம் கடைப்பிடிப்பது வழக்க மாகும். சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள்மாலை அணிவதற்காக நேற்று முதலே கடைகளில் துளசி மாலைகளை வாங்குவதற் காக படையெடுத்துச் சென்ற வண்ணமாக உள்ளனர். இதனால் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் விரதம் தொடங்கும் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலை மோதுகிறது.

    இந்த கடைகளில் துளசி மாலை மற்றும் முத்து மணி மாலைகள் விற்பனை படு ஜோராக நடந்து கொண்டிருக்கிறது. மேலும் இந்த கார்த்திகை மாதம் 30 நாட்களும் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் கார்த்திகை மாத சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. கார்த்திகை, மார்கழி, தை ஆகிய 3 மாதங்களும் இனி எங்கு பார்த்தாலும் அய்யப்ப சரணகோஷம் ஒலிப்பதைதான் கேட்க முடியும் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

    • மாலை 6 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் பங்கேற்பு

     ஊட்டி:

    ஊட்டியில் பிரசித்தி பெற்ற அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 9 -ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

    இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை பிரம்ம கலச பூஜை மற்றும் பரிகார கலச பூஜையும், மாலையில் சந்தியா தீபாராதனை, அதிவாச ஹோமம், பகவதி சேவை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    நேற்று காலை 9 மணி முதல் 10.30 மணி வரை 300 கலச பூஜை, கலச அபிஷேகம் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் 12 மணிக்கு நடைபெற்றது.

    இதில் கேரள மாநிலம், தீயன்னூா் கோவில் தந்திரி முரளிதரன் நம்பூதிரி, ஊட்டி அய்யப்பன் கோவில் மேல்சாந்தி கோவிந்தன் நம்பூதிரி ஆகியோா் கலந்துகொண்டு கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனா்.

    மாலை 6 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. இதில், திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.அத்தாழ பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இன்று நடந்தன. நடைபெறுகின்றன.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தலைவா் ஜெயராம் தாஸ், பொதுச் செயலாளா் ராமச்சந்திரன் தலைமையில் கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

    ×