search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை தில்லை நகர் அய்யப்பன் கோவிலில்  10-ந்தேதி சிறப்பு வழிபாடு
    X

    உடுமலை தில்லை நகர் அய்யப்பன் கோவிலில் 10-ந்தேதி சிறப்பு வழிபாடு

    • இரவு 8-30 மணிக்கு பாலக்காடு கடுக்கன் குன்னம் கிருஷ்ணன் குழுவினரின் பூஜை மற்றும் தாயம் வகை செண்டை மேளம் நடைபெறுகிறது.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடுமலை ஸ்ரீ தர்மசாஸ்தா சபரி யாத்திரை குழுவினர் செய்து வருகின்றனர்.

    உடுமலை :

    உடுமலை தில்லைநகரில் உள்ள ரத்னாம்பிகை உடனமர் ரத்தின லிங்கேஸ்வரர் ேகாவிலில் கேரள பாரம்பரிய முறைப்படி ஸ்ரீ அய்யப்பன் விளக்கு பூஜை நடைபெறுகிறது.வருகிற 10 ந்தேதி காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 7:30 மணிக்கு வாழைமரம் கொண்டு உருவாக்கும் அம்பலத்தில் அய்யப்ப சாமி பிரதிஷ்டை, 12 மணிக்கு உச்சிகால பூஜை, அய்யப்பன் விளக்கு சப்பரம், விளக்கு சங்கல்பம் ,மாலை 5 மணிக்கு உடுமலை ருத்ரப்பா நகர் ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் இருந்து தாளப்பொலியுடன் பாலை கொம்பு எழுந்தருளல், மாலை 7 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது.

    இரவு 8-30 மணிக்கு பாலக்காடு கடுக்கன் குன்னம் கிருஷ்ணன் குழுவினரின் பூஜை மற்றும் தாயம் வகை செண்டை மேளம் நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு ஸ்ரீ அய்யப்பன் சரித்திரம் உடுக்கை பாட்டு, பால் கிண்டி எழுந்தருளல், திரிஉழிச்சல், அய்யப்பனும் வாபரும், வெட்டும் -தடவும் நிகழ்ச்சியும் நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடுமலை ஸ்ரீ தர்மசாஸ்தா சபரி யாத்திரை குழுவினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×