search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அணி"

    • பெண்கள் இறுதிப்போட்டியில் தெற்கு ரெயில்வே 3-2 என்ற கணக்கில் ஐ.சி.எப். அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.
    • 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் எஸ்.ஆர்.எம். அணி 2-0 என்ற கணக்கில் தமிழ்நாடு போலீசை தோற்கடித்தது.

    சென்னை:

    நெல்லை நண்பர்கள் கைப்பந்து கிளப், டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் பி.ஜான் மற்றும் ஏ.கே.சித்திரை பாண்டியன் நினைவு மாநில அளவிலான கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

    பெண்கள் இறுதிப்போட்டியில் தெற்கு ரெயில்வே 3-2 என்ற கணக்கில் ஐ.சி.எப். அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது. 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் எஸ்.ஆர்.எம். அணி 2-0 என்ற கணக்கில் தமிழ்நாடு போலீசை தோற்கடித்தது.

    பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் ஜெ. மேகநாத ரெட்டி, தமிழ்நாடு கைப்பந்து சங்க ஆயுட்கால தலைவர் ஆர்.அர்ஜூன் துரை, தமிழ்நாடு தடகள சங்கத் தலைவர் டபிள்யூ. ஐ.தேவாரம் ஆகியோர் பங்கேற்றனர். சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு 2 குரோ எச்.ஆர். கோப்பையுடன் ரூ.50 ஆயிரமும், 2-வது இடம் பிடித்த அணிக்கு ரோமா கோப்பையுடன் ரூ.40 ஆயிரமும், 3-வது இடம் பெற்ற அணிக்கு டாக்டர் போஸ் நினைவு கோப்பையுடன் ரூ.30 ஆயிரமும், 4-வது இடம் பெற்ற அணிக்கு ரூ.20 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட்டது.

    டாக்டர் ஜி.டி.போஸ் நினைவு ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனர் டாக்டர் அஜித் போஸ், ஷீபா அஜித் போஸ், வேளாங்கண்ணி கல்வி குழும செயலாளர் டாக்டர் தேவ் ஆனந்த், போட்டி அமைப்பு குழு நிர்வாகிகள் பி.ஜெகதீசன், ஏ.தினகர், சி.ஸ்ரீகேசவன், ஏ.பாக்யராஜ் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் ஆண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் ஜி.எஸ்.டி.-ஐ.ஓ.பி. அணிகள் மோதுகின்றன. 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் வருமான வரி-டி.ஜி.வைஷ்ணவா அணிகள் மோதுகின்றன.

    • கூடைப்பந்து அணிக்கு 13 வயதுக்குட்பட்டோருக்கான மாணவ- மாணவிகள் அணி தேர்வு வருகிற 29-ந் தேதி (சனிக்கிழமை) காலை 7:30 மணிக்கு கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது.
    • இந்த அணி தேர்வில் வரும் மாணவ - மாணவிகள் பிறப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் நகலுடன் நேரில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் மாவட்ட கூடைப்பந்து அணிக்கு 13 வயதுக்குட்பட்டோருக்கான மாணவ- மாணவிகள் அணி தேர்வு வருகிற 29-ந் தேதி (சனிக்கிழமை) காலை 7:30 மணிக்கு கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது. இந்த அணி தேர்வுக்கு 1.1.2010 தேதிக்கு பிறகு பிறந்தவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த அணி தேர்வில் வரும் மாணவ - மாணவிகள் பிறப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் நகலுடன் நேரில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விருதுநகரில் நடக்கும் மாநில அளவிலான போட்டிக்கு இந்த மாவட்ட வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு நடக்கிறது. மேற்கண்ட தகவல்களை மாவட்ட கூடைப்பந்து கழக செயலாளர் விஜயசுந்தரம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

    • 2 நாட்கள் நடக்கிறது
    • பல்வேறு வகையான போட்டிகளில் பங்கேற்பதற்கு தேர்வு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி ராஜேஷ் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் வருகிற ஏப்ரல் மாதம் வரை நடைபெற வுள்ள பல்வேறு வகை யான விளையாட்டுப் போட்டிகளுக்கு தமிழ் நாடு அணிக்கான வீரர்கள், வீராங்க னைகள் தேர்வு கீழ்க்கா ணும் விளையாட்டுகள் விவரப்படி நடைபெற உள் ளது. தேர்வு நடைபெறும் தேதி, இடம், நேரம் விவரம் வருமாறு:-

    வருகிற 14-ந்தேதி காலை 7 மணிக்கு சென்னை ஜவகர் லால் நேரு உள் விளையாட்ட ரங்கத்தில் கூடைப்பந்து போட்டிக்கு மாணவர்கள் 12 பேரும் மாணவிகள் 12 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். 13-ந்தேதி காலை 7 மணிக்கு சென்னை ஜவகர்லால் நேரு உள் விளையாட்டரங்கத்தில் கால்பந்து போட்டிக்கு மாணவிகள் 20 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    13-ந்தேதி காலை 7 மணிக்கு திருச்சி அண்ணா விளை யாட்டரங்கத்தில் வளை கோல்பந்து போட் டிக்கு மாணவர்கள் 18 பேர் தேர்வு செய்யப் பட உள்ளனர்.

    13-ந்தேதி காலை 7 மணிக்கு சிவகங்கை மாவட்ட விளை யாட்டு அரங்கத்தில் கோ-கோ போட்டிக்கு மாணவிகள் 15 பேர் தேர்வு செய்யப்பட உள் ளனர். 13-ந்தேதி காலை 7 மணிக்கு சென்னை ஜவகர்லால் நேரு விளையாட்டரங் கத்தில் கையுந்து பந்து போட் டிக்குமாணவர்கள் 12 பேரும், மாணவிகள் 12 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    வயது வரம்பை பொறுத் தவரையில் 1-1-2004 அன்று அல்லது அதற்குப் பின்னர் பிறந்த விளையாட்டு வீரராக இருத்தல் வேண்டும். ஆதார் கார்டு அல்லது பாஸ்போர்ட். பள்ளியில் பயில்வதற்கான சான்றிதழ், பிறப்பு சான்றி தழ் (குறைந்தபட்சம்) 5 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட தாக இருத்தல் வேண்டும். (அதாவது 2012 ஜனவரி மாதம் 1-ந் தேதி அல்லது அதற்கு முன் நக ராட்சி அல்லது கிராம பஞ்சாயத்தால் வழங்கப் பட்டது).

    தமிழ்நாடு அணி தேர்வு செய்யப்பட்ட பின்னர் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு உத்தரவாதம் அளிக்க இயலாது. தேர்வு போட்டிக்கு தினப்படி, பயணப்படி வழங்கப்பட மாட்டாது. எனவே இந்த தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் வீரர், வீராங்க னைகள் தேர்வு நடை பெறும் இடங்களில் குறிப் பிட்ட நாளில் தகுந்த ஆவ ணங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கோவில்களில் சிறப்பு வழிபாடுகளும் நடக்கிறது
    • கார்த்திகை, மார்கழி, தை ஆகிய 3 மாதங்களும் இனி எங்கு பார்த்தாலும் அய்யப்ப சரணகோஷம் ஒலிப்பதைதான் கேட்க முடியும்

    கன்னியாகுமரி:

    கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலங் களில் இருந்தும் வெளிநாடு களில் இருந்தும் அய்யப்ப பக்தர்கள் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு தரிச னத்துக்காக கார்த்திகை மாதம் 1-ந்தேதி அன்று மாலை அணிந்து 41 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டு கட்டி தலை யில் சுமந்து சென்று அய்யப்பனை தரிச னம் செய்வது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக சபரி மலை அய்யப்பன் கோவில் நடை நாளை (புதன்கிழமை) திறக்கப்பட உள்ளது.

    இதைத்தொடர்ந்து சபரிமலைக்கு இருமுடி கட்டி செல்லும் அய்யப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் 1-ந்தேதியான நாளைமறுநாள் கோவில்களுக்கு சென்று மாலை அணிந்து விரதம் தொடங்குகிறார்கள்.

    அதன்படி குமரி மாவட் டத்தில் உள்ள புகழ் பெற்ற கோவில்களான கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சுசீந்தி ரம் தாணுமாலய சுவாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், பூதப் பாண்டி பூதலிங்க சுவாமி கோவில், குமார கோவில் வேளிமலை சுப்ரமணியசாமி கோவில், பார்வதிபுரம் அய்யப்பன் கோவில், உள்பட பல்வேறு கோவில்களில் நாளை மறுநாள் அதிகாலையில் இருந்தே சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதம் தொடங்குகிறார்கள்.

    அதிலும் குறிப்பாக கன்னியாகுமரியில் முக்கட லும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடலில் அய்யப்ப பக்தர் கள் நாளை மறுநாள் அதிகாலையில் புனித நீராடிவிட்டு கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில் மற்றும் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சரண கோஷம் முழங்க துளசி மாலை அணிந்து விரதம் தொடங்கு கிறார்கள்.

    இதில் மண்டல பூஜை தரிசனத்துக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் 41 நாட்களும் மகரவிளக்கு தரிசனத்திற்கு செல்லும் அய்யப்ப பக்தர் கள் 60 நாட்களும் விரதம் கடைப்பிடிப்பது வழக்க மாகும். சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள்மாலை அணிவதற்காக நேற்று முதலே கடைகளில் துளசி மாலைகளை வாங்குவதற் காக படையெடுத்துச் சென்ற வண்ணமாக உள்ளனர். இதனால் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் விரதம் தொடங்கும் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலை மோதுகிறது.

    இந்த கடைகளில் துளசி மாலை மற்றும் முத்து மணி மாலைகள் விற்பனை படு ஜோராக நடந்து கொண்டிருக்கிறது. மேலும் இந்த கார்த்திகை மாதம் 30 நாட்களும் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் கார்த்திகை மாத சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. கார்த்திகை, மார்கழி, தை ஆகிய 3 மாதங்களும் இனி எங்கு பார்த்தாலும் அய்யப்ப சரணகோஷம் ஒலிப்பதைதான் கேட்க முடியும் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

    • இந்தி திணிப்பையும், ஓரே நுழைவு தேர்வையும் திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தி கோஷம்
    • கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் 39 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது.

    நாகர்கோவில்:

    இந்தி திணிப்பையும் ஒரே நுழைவு தேர்வையும் மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவரணி மற்றும் இளைஞர் அணி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    குமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட மாண வரணி, இளைஞர் அணி சார்பில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலா ளரும் மேயருமான மகேஷ் தலைமை தாங்கினார்.

    கிழக்கு மாவட்ட இளைஞ ரணி அமைப்பாளர் சிவராஜ் வரவேற்று பேசினார். முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், கிழக்கு மாவட்ட அவை தலைவர் எப்.எம். ராஜ ரத்தினம், பொருளா ளர் கேட்சன் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆஸ்டின், ராஜன், புஷ்பலீலா ஆல்பன் முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.எஸ். பார்த்தசாரதி, தாமரை பாரதி, துணை செயலாளர் பூதலிங்கம்,மாநகர செயலாளர் ஆனந்த், ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், பிராங்கி ளின், பாபு, லிவிங்ஸ்டன், மீனவரணி முன்னாள் அமைப்பாளர் நசரேத் பசலியான், தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் இ.என் சங்கர், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், மாநகராட்சி மண்டல தலைவர் ஜவகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ததேயுபிரேம்குமார் நன்றி கூறினார். இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட் டத்தில் கோஷங்கள் எழுப் பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் மேயர் மகேஷ் பேசுகையில் மத்திய அரசு இந்தியை எல்லா இடங்களிலும் திணித்து வருகிறது.

    தமிழகத்தில் ஒருபோதும் இந்தியை திணிக்க விட மாட்டோம். கடந்த நாடாளு மன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் 39 தொகுதி களில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் 40தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். கன்னியாகுமரி தொகுதியில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும். பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்த வேண்டும் என்பதே நமது நோக்கமாக இருக்க வேண்டும் என்றார்.

    • ஆறுமுகம் சுழற்கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி மாவட்ட அளவில் நடத்தப்படுகிறது
    • ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் போட்டிகள் துவங்க உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆறுமுகம் சுழற்கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி மாவட்ட அளவில் நடத்தப்படுகிறது.'நாக் அவுட்' முறையில் நடத்தப்படும் இப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு சுழற்கோப்பை, பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்படும். ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் போட்டிகள் துவங்க உள்ளது.

    இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் ஆர்வமுள்ள, திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் அணிகள் தங்கள் அணியை சங்க அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 93442 07615 என்ற எண்ணில் தகவல்களை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ×