கிரிக்கெட் அணிகள் பதிவு செய்ய வேண்டுகோள்

ஆறுமுகம் சுழற்கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி மாவட்ட அளவில் நடத்தப்படுகிறதுஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் போட்டிகள் துவங்க உள்ளது.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர் :

திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆறுமுகம் சுழற்கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி மாவட்ட அளவில் நடத்தப்படுகிறது.'நாக் அவுட்' முறையில் நடத்தப்படும் இப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு சுழற்கோப்பை, பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்படும். ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் போட்டிகள் துவங்க உள்ளது.

இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் ஆர்வமுள்ள, திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் அணிகள் தங்கள் அணியை சங்க அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 93442 07615 என்ற எண்ணில் தகவல்களை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com