search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அடையாள அட்டை"

    • 3பேருக்கு அடையாள அட்டை மற்றும் நூல்கள் எடுத்துச் செல்லும் பை வழங்கப்பட்டது
    • தன்னார்வலர்கள் நூலகத்திற்கு நேரடியாக வர இயலாதவர்களுக்கு நூல்களை வழங்குவர்.

    உடுமலை:

    உடுமலை அருகே உள்ள மலையாண்டிபட்டினம் ஊர் புற நூலகத்தில் நூலக நண்பர்கள் திட்டத்தில் தன்னார்வலர்கள் 3பேருக்கு அடையாள அட்டை மற்றும் நூல்கள் எடுத்துச் செல்லும் பை வழங்கப்பட்டது. நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடந்த அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சிக்கு நூலக வாசகர் வட்ட தலைவர் சிவராஜ் தலைமை வகித்தார். துணைத்தலைவர் மளிகை செல்வம், வாசகர் வட்ட உறுப்பினர் லட்சுமிபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூலகர் மலர்க்கொடி வரவேற்றார்.

    தன்னார்வலர்கள் நூலகத்திற்கு நேரடியாக வர இயலாதவர்களுக்கு நூல்களை வழங்குவர். இவர்கள் தங்கள் பகுதியில் உள்ள மக்களை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நூலகங்களில் உறுப்பினராக சேர்க்கவும் ஒரு முறை அதிகபட்சமாக 25 நூல்கள் வரை எடுத்துச் சென்று நூலக உறுப்பினர்களின் இல்லங்களுக்கு நேரடியாக வழங்கி வரும் இந்த திட்டத்தில் பத்மாவதி, கற்பகம், ராமராஜன் ஆகியோர் தன்னார்வலர்களாக இணைந்துள்ளனர். அவர்களுக்கு அடையாள அட்டை மற்றும் நூல் எடுத்து செல்லும் பை வழங்கப்பட்டது.

    • மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மருத்துவ முகாம் திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி (பொறுப்பு) சுவாமிநாதன் தலைமை தாங்கினார்.

    காது, மூக்கு, தொண்டை மருத்துவர்கள், மனநல மருத்துவர்கள், எலும்பு முறிவு மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து அடையாள அட்டை வழங்க பரிந்துரைத்தனர். அதன்படி 54 பேருக்கு அடையாள அட்டை வழங்க தேர்வு செய்யப்பட்டனர்.

    • இனிவரும் காலங்களில் மாதத்தின் முதல் மற்றும் 3-ம்வார செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெறும்
    • கலெக்டர் அறிவிப்பு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்தி றனாளிகளுக்கான மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம், இனிவரும் காலங்களில் மாதத்தின் முதல் மற்றும் 3-ம்வார செவ்வாய்கிழமை தோறும் நடைபெறும்.

    முதல் வார செவ்வாய் கிழமைகளில் அரக்கோணம், நெமிலி, சோளிங்கர், காவேரிப்பாக்கம் ஒன்றியங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கலாம்.

    எளிதில் வருவதற்கு ஏதுவாக அமைந்துள்ள மின்னல் ஊராட்சி என்.எல்.பி.திருமண மண்டபத்தில் நடைபெறும். 3 வார செவ்வாய்கிழமைகளில் கலவை,திமிரி, ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா மற்றும் காவேரிப்பாக்கம் ஆகிய ஒன்றியங்களை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் எளிதில் வருவதற்கு ஏதுவாக,ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பொது மக்கள் குறை தீர்வு நாள் கூட்ட அரங்கிலும் நடைபெற உள்ளது.

    ஜூன் மாத முதல் வார செவ்வாய்கிழமையான வருகிற 6-ந் தேதி அன்று மின்னல் ஊராட்சியில் நடைபெறுகிறது.

    அந்த சமயத்தில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனா ளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெறாது.

    மாற்றுத்திறனா ளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற, 5 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், ரேசன் அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல்களுடன் வரவேண்டும்.

    பழைய அடையாள அட்டை தவற விடப்பட்டிருப்பின் புதியதாக பெற வேண்டுமெனில் போலீஸ் நிலையத்தில் எப்.ஐ.ஆர். பெற்று வந்தும் விண்ணப்பித்தும் புது அட்டை பெற்றுக் கொள்ளலாம். பழைய அடையாள அட்டை இருப்பின் அதன் அசல் அவசியம் கொண்டு வர வேண்டும்.மேற்கண்ட தகவலை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

    • அஞ்சுகம் திருமண மண்டபத்தில் வேறு நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் வேறு இடத்திற்கு மாற்றப்படுகிறது.
    • ஆதார் அட்டை, குடும்ப அட்டையின் அசல் மற்றும் நகல்கள் 4 பாஸ்போர்ட் புகைப்படம் கொண்டு வரவேண்டும்

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது செவ்வாய்க்கிழமைகளில் அரசு மருத்துவமனை எதிரில் அமைந்துள்ள அஞ்சுகம் திருமண மண்டபத்தில் இதுவரை நடைபெற்று வந்தது.

    23.05.2023 அன்று அஞ்சுகம் திருமண மண்டபத்தில் வேறு நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் அன்றைய முகாம் மட்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறை தீர்க்கும் மையம் கூட்ட அரங்கில் (GDP HALL) நடைபெற உள்ளது.

    இம்முகாமில் தேசிய அடையாள டை பெறாத மாற்றுத்திறனாளிகள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்கள் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் 4 ஆகியவற்றுடன் முகாமில் கலந்துகொண்டு தேசிய அடையாள அட்டை பெற்று பயனடைந்திடுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ பரிசோதனை முகாம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.
    • 8 பேருக்கு வயது வரம்பு தளர்த்தி உதவித்தொகை வழங்க உத்தரவிடப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், மாற்றுத்திறனாளிக ளுக்கான மருத்துவ பரிசோதனை முகாம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

    கண், காது மூக்கு தொண்டை, எலும்பு முறிவு, நரம்பியல், மனநல மருத்துவர்கள், மாற்றுத்திறனாளிகளில் உடல் பாதிப்புகளை பரிசோதித்து, அடை யாள அட்டைக்கு பரிந்துரை த்தனர். நேற்றைய முகாமில், மாற்றுத்திறனாளிகள் 45 பேருக்கு புதிதாக அடையாள அட்டை வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன், அடையாள அட்டை வழங்கினார். 18 வயதுக்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகள் 8 பேருக்கு, வயது வரம்பு தளர்த்தி, மாதம் 1500 ரூபாய் உதவித்தொகை வழங்க உத்தரவிடப்பட்டது.

    • அடையாள அட்டை பெறாதவர்களுக்காக சிறப்பு முகாம்கள் 3 இடங்களில் நடைபெறுகிறது.
    • மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகலுடன் வந்து விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு மாற்றுத்திற னாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் மாற்று திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்றவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இதுவரை மாற்று த்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாதவர்களுக்காக சிறப்பு முகாம்கள் 3 இடங்களில் நடைபெறுகிறது.

    அதன்படி நாளை (செவ்வாய்க்கிழமை) தஞ்சை கோட்டத்தில் தஞ்சை மேம்பாலம் அருகில் உள்ள அரசு செவித்திறன் குறைபாடுடையோருக்கான மேல்நிலைப்பள்ளியிலும், 16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கும்பகோணம் கோட்டத்தில் கும்பகோணம் பஸ் நிலையம் அருகில் உள்ள கே.எம்.எஸ்.எஸ். வளாகத்திலும், 23-ந்தேதி பட்டுக்கோட்டை கோட்டத்தில் பட்டுக்கோட்டை தாசில்தார் அலுவலகம் எதிரில் உள்ள கிராமசேவை கட்டிடத்திலும் நடைபெறுகிறது.

    இதில் எலும்பு முறிவு டாக்டர், காதுமூக்குதொண்டை பிரிவு டாக்டர், மனநல டாக்டர், கண் டாக்டர் ஆகிய அரசு டாக்டர்கள் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மருத்துவச்சான்று வழங்க உள்ளனர். மேற்படி டாக்டர்கள் வழங்கும் சான்றிதழின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.

    தஞ்சை மாவட்டத்தில் இதுவரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் குடும்ப அட்டை, ஆதார் அட்டை நகல்கள் மற்றும் 6 புகைப்படத்துடன் இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் வந்து கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இதுவரை தனித்துவம் வாய்ந்த அடையாள அடடைக்கு விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள் மேற்படி முகாமில் கூறிய ஆவணங்களுடன் மாற்று த்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகலுடன் வந்து விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    முகாமிற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளி கட்டாயம் பின்பற்றவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கொேரானா, இதயம், புற்றுநோய், முடநீக்கு, கண் நோய் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
    • திருப்பூா் மாவட்டத்தில் 36 மருத்துவமனைகளில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம் 5.31 லட்சம் குடும்பங்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம் கொேரானா நோய்த் தொற்று சிகிச்சை, இதயம் மற்றும் இதய நெஞ்சக அறுவை சிகிச்சை, புற்றுநோய் மருத்துவம், முடநீக்கு அறுவை சிகிச்சை, கண் நோய் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு முக்கிய சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. திருப்பூா் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தாராபுரம், உடுமலை, காங்கயம், பல்லடம், அவிநாசி, மடத்துக்குளம், ஊத்துக்குளி உள்ளிட்ட 8 அரசு மருத்துவமனைகள், 28 தனியாா் மருத்துவமனைகள் என மொத்தம் 36 மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் திருப்பூா் மாவட்டத்தில் 5 லட்சத்து 31 ஆயிரத்து 260 குடும்பங்களுக்கு மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில், 2021 ம் ஆண்டு மே 7 ந் தேதி முதல் 2023 ம் ஆண்டு மாா்ச் 14 -ந் தேதி வரையில் 18,555 நபா்களுக்கு ரூ.4.84 கோடி மதிப்பீட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூா் மாவட்டத்தில் அட்டையாள அட்டை எடுக்காதவா்கள் குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல் மற்றும் வருமானச் சான்று (ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்குகீழ்) ஆகிய ஆவணங்களை தயாா் செய்து மாவட்ட கலெக்டர் அலுவலக தரை தளம் அறை எண் 3ல் வேலை நாட்களில் புகைப்படம் எடுத்து அடையாள அட்டை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம் கடந்த ஜனவரி 27ந் தேதி தொடங்கி நடைபெற்றது.
    • ஒன்றிய அளவிலான முகாம் கடந்த 14-ந் தேதியுடன் முடிவடைந்தது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பில் ஒன்றிய அளவிலான மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம் கடந்த ஜனவரி 27ந்தேதி ெதாடங்கி நடைபெற்றது.

    திருப்பூர், தாராபுரம், பல்லடம், உடுமலை, அவிநாசி, மடத்துக்குளம், காங்கயம், குண்டடம், ஊத்துக்குளி, குடிமங்கலம், பொங்கலூர்,வெள்ளகோவில், மூலனூர் ஒன்றியங்களில் முகாம் நடத்தப்பட்டது.அந்தந்த ஒன்றியங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள், ஆண், பெண் மாற்றுத்திறனாளிகள் முகாமில் பங்கேற்று, அடையாள அட்டை, உதவி உபகரணங்கள், வங்கி கடன் கேட்டு விண்ணப்பங்கள் அளித்தனர்.

    கண், எலும்பு முறிவு, காது - மூக்கு - தொண்டை, நரம்பியல், மனநல மருத்துவர்கள், மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்து அடையாள அட்டைக்கு பரிந்துரைத்தனர். ஒன்றிய அளவிலான முகாம் கடந்த 14-ந்தேதியுடன் முடிவடைந்தது.

    இது குறித்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் கூறுகையில், மாற்றுத்திறனாளிகளின் சிரமத்தை போக்கும்வகையில் திருப்பூர் மாவட்டத்தில் 13 ஒன்றியங்களிலும் மருத்துவ முகாம் நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 27 முதல் இம்மாதம் கடந்த 14ந் தேதி வரை முகாம் நடத்தப்பட்டுள்ளது.

    முகாமில் மாற்றுத்திறனாளிகள் மொத்தம் 349 பேருக்கு புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டைக்காக 430 விண்ணப்பங்கள், 21வகையான உதவி உபகரணங்கள் கேட்டு 112 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தொழில் துவங்குவதற்கான வங்கி கடன்கள் கேட்டு 32 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன என்றார்.

    • நலத்திட்ட உதவிகளுக்கு மாற்றுத் திறனாளிகள் தேர்வு செய்யும் முகாம் பல்லடம் மேற்கு அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.
    • மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் பெறுவதற்கான விண்ணப்பம் 65 நபர்களிடமிருந்து பெறப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை ஆகியவை இணைந்து நடத்திய மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குதல் மற்றும் நலத்திட்ட உதவிகளுக்கு மாற்றுத் திறனாளிகள் தேர்வு செய்யும் முகாம் பல்லடம் மேற்கு அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    இதில் மாற்றுத்திறனாளிகள் 36 நபர்களுக்கு அடையாள அட்டை வழங்கபட்டது. மேலும் இந்த முகாமில் அரசின் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வங்கி கடன் மானியம், மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் பெறுவதற்கான விண்ணப்பம் 65 நபர்களிடமிருந்து பெறப்பட்டது.

    இந்த முகாமில் திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் முருகேசன்,ஒருங்கிணைப்பாளர் பாலசுந்தரி, மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உதவித்தொகை பெற்று வரும் மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து பெற்றிட ஆதார் இணைத்தல் அவசியம்.
    • மாற்றுத்திறனாளிகள் எழுத்து பூர்வமாக நல அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-

    மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலமாக மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை பெற்று வரும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை தொடர்ந்து பெற்றிட ஆதார் இணைத்தல் அவசியமாகும்.

    ஆண்டிற்கு ஒரு முறை வழங்க வேண்டிய மாற்றுத்திறனாளி உயிருடன் உள்ளார் என்று சம்மந்தப்பட்ட கிராமத்திலுள்ள கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து சான்று பெற்று மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல் ஆகியவற்றுடன் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அறை எண் 6ல் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் 30.12.2022-ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க உதவித் தொகையினை தொடர்ந்து பெற்றிடவும் ஆதார் அட்டை எடுக்க இயலாத மாற்றுத்திறனாளிகள் எழுத்துபூர்வமாக மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பதிவு செய்திட வேண்டும்.

    மாத உதவித்தொகை பெறுபவர்கள் மட்டுமன்றி அடையாள அட்டை பெறாத அனைத்து மாற்றுத்திறனாளிகளும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகி தங்களது அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்த பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மத்திய அரசின் ஜவுளித் துறை அமைச்சகத்தின் சார்பில் வழங்கப்பட்டது.
    • நெசவாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    குடியாத்தம்:

    மத்திய அரசின் ஜவுளித் துறை அமைச்சகத்தின் சார்பில் காஞ்சிபுரத்தி லுள்ள நெசவாளர் சேவை மையத்தின் சார்பில் குடியாத்தம் பகுதியில் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு மத்திய அரசின் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி குடியாத்தம் கொண்டசமுத்திரம் ஊராட்சி காளியம்மன்பட்டி அவ்வை நகரில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு காஞ்சிபுரம் நெசவாளர் சேவை மைய உதவி இயக்குனர் ஆர்.சசிகலா தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் கலந்து கொண்டு நெசவாளர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க தலைவர்கள் டி.சங்கர், கு.மொழிமாறன், ஜி.வேலு, கைத்தறி சங்க பணியாளர் ரமேஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மீன்பிடி உரிமம், மீன்பிடி கலனிற்கான காப்புறுதி ஆவணம் மற்றும் குறியீடு இட்ட ஆதார் அடையாள அட்டை ஆகிய ஆவணங்கள் தவறாது எடுத்து செல்லவும்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர்லலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:-

    மீன் பிடிதடைக்காலம் முடிந்து மீன்பிடிப்புக்கு செல்லும் அனைத்து மீனவர்களும் உயிர்காப்பு சாதனங்கள், மீனவர் அடையாள அட்டை, மீன்பிடி–கலனின் பதிவுசான்று, மீன்பிடி உரிமம், மீன்பிடி கலனிற்கான காப்புறுதி ஆவணம் மற்றும் குறியீடு இட்ட ஆதார் அடையாள அட்டை ஆகிய ஆவணங்கள் தவறாது எடுத்து செல்லவும் தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டம் 1983 மற்றும் 2020 அரசாணை எண்.எம்.எஸ்.40, கால்நடை பராமரிப்பு மற்றும் மீனவளத்துறை (4) நாள் 25.03.2000-ன் மற்றும் வழிகாட்டுலின்படி செயல்படவும் அனைத்து மீன்பிடி விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு உரிமை யாளர்கள் கேட்டுக்ெகாள்ள ப்படுகிறார்கள்.

    தவறும் பட்சத்தில் தமிழ்நாடு கடல்மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டத்தி–ன்படி உரிய நடவடிக்கை மேற்ெகாள்ளப்படும். மேலும் மீன்வளம் மற்றும் மீன்வர்நலத்துறை வாயிலாக வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் அனைத்து ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார்.

    ×