search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை
    X

    மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை

    • இனிவரும் காலங்களில் மாதத்தின் முதல் மற்றும் 3-ம்வார செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெறும்
    • கலெக்டர் அறிவிப்பு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்தி றனாளிகளுக்கான மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம், இனிவரும் காலங்களில் மாதத்தின் முதல் மற்றும் 3-ம்வார செவ்வாய்கிழமை தோறும் நடைபெறும்.

    முதல் வார செவ்வாய் கிழமைகளில் அரக்கோணம், நெமிலி, சோளிங்கர், காவேரிப்பாக்கம் ஒன்றியங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கலாம்.

    எளிதில் வருவதற்கு ஏதுவாக அமைந்துள்ள மின்னல் ஊராட்சி என்.எல்.பி.திருமண மண்டபத்தில் நடைபெறும். 3 வார செவ்வாய்கிழமைகளில் கலவை,திமிரி, ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா மற்றும் காவேரிப்பாக்கம் ஆகிய ஒன்றியங்களை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் எளிதில் வருவதற்கு ஏதுவாக,ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பொது மக்கள் குறை தீர்வு நாள் கூட்ட அரங்கிலும் நடைபெற உள்ளது.

    ஜூன் மாத முதல் வார செவ்வாய்கிழமையான வருகிற 6-ந் தேதி அன்று மின்னல் ஊராட்சியில் நடைபெறுகிறது.

    அந்த சமயத்தில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனா ளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெறாது.

    மாற்றுத்திறனா ளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற, 5 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், ரேசன் அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல்களுடன் வரவேண்டும்.

    பழைய அடையாள அட்டை தவற விடப்பட்டிருப்பின் புதியதாக பெற வேண்டுமெனில் போலீஸ் நிலையத்தில் எப்.ஐ.ஆர். பெற்று வந்தும் விண்ணப்பித்தும் புது அட்டை பெற்றுக் கொள்ளலாம். பழைய அடையாள அட்டை இருப்பின் அதன் அசல் அவசியம் கொண்டு வர வேண்டும்.மேற்கண்ட தகவலை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×