என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெசவாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கிய காட்சி.நெசவாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கிய காட்சி.
குடியாத்தத்தில் நெசவாளர்களுக்கு அடையாள அட்டை
- மத்திய அரசின் ஜவுளித் துறை அமைச்சகத்தின் சார்பில் வழங்கப்பட்டது.
- நெசவாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம்:
மத்திய அரசின் ஜவுளித் துறை அமைச்சகத்தின் சார்பில் காஞ்சிபுரத்தி லுள்ள நெசவாளர் சேவை மையத்தின் சார்பில் குடியாத்தம் பகுதியில் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு மத்திய அரசின் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி குடியாத்தம் கொண்டசமுத்திரம் ஊராட்சி காளியம்மன்பட்டி அவ்வை நகரில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு காஞ்சிபுரம் நெசவாளர் சேவை மைய உதவி இயக்குனர் ஆர்.சசிகலா தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் கலந்து கொண்டு நெசவாளர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க தலைவர்கள் டி.சங்கர், கு.மொழிமாறன், ஜி.வேலு, கைத்தறி சங்க பணியாளர் ரமேஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






