search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அ.தி.மு.க. மாநாடு"

    • அ.தி.மு.க. மாநாட்டில் பங்கேற்று சென்ற பெண்கள் உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.
    • சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள புல்லகவுண்டன் பட்டியை சேர்ந்தவர் காளியப்பன். அதிமுக கிளை செயலாளரான இவரது ஏற்பாட்டில் நேற்று மதுரையில் நடந்த மாநாட்டிற்கு வேனில் கட்சியினர் சென்றனர். இரவு மாநாடு முடித்து விட்டு அவர்கள் ஊருக்கு புறப்பட்டனர்.

    விருதுநகர் அருகே சூலக்கரை சாத்தூர் ரோட்டில் மருளுத்து பகுதியில் சென்ற போது அங்குள்ள பாலத்தின் தடுப்பு சுவரில் ஒரு கார் மோதி விபத்துக்குள்ளாகி இருந்தது. இதை கவனிக்காத வேன் டிரைவர் கார் மீது பயங்கரமாக மோதினார்.

    இதில் வேனில் இருந்த புல்லகவுண்டன்பட்டியை சேர்ந்த துளசியம்மாள் (75), ராஜம்மாள்(75), சுப்புலட்சுமி (57), சாரதா(37), கவிதா (37), ஜெயமணி (67), சீனிவாசன் (60), தாயம்மாள் (72), துரைராஜ் (72), சிபியோன் ராஜ் (18) ஆகிய 10 பேர் படுகாயமடைந்தனர்.

    இவர்கள் அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கி டையில் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளான காரில் இருந்த 2 பேரையும் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    இது குறித்து விசாரித்த போது பணி ஓய்வு பெற்ற கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உள்பட 2 பேர் விபத்தில் சிக்கி காய மடைந்திருப்பது தெரிய வந்தது.

    இந்த விபத்து தொடர்பாக சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 50 ஆயிரம் பேர் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
    • மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தகவல் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 50 ஆயிரம் பேர் பங்கேற்றனர் என்று மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தெரிவித்துள்ளார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    மதுரையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அ.தி.மு.க.வின் எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

    தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து குடும்பம் குடும்பமாக அ.தி.மு.க. தொண்டர்களும், நிர்வாகிகளும் மற்றும் பொதுமக்களும் 50 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். எடப்பாடி பழனிசாமியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்பதே அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தமிழக மக்களின் எதிர் பார்ப்பாக உள்ளது.

    தமிழ்நாட்டின் உரிமை களையும், தமிழ் மக்கள் நலனையும் கருத்தில் கொண்டு மக்களுக்காக உழைக்கும் இயக்கம் அ.தி.மு.க. மட்டும்தான். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் மகத்தான வெற்றிக்கு இந்த மதுரை மாநாடு அடித்தளமாக அமையும்.

    புனித ஜார்ஜ்கோட்டை யில் மக்கள் விரும்பும் முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்பார். ஜெயலலிதாவிற்கு பிறகு அவரது விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்படுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மதுரை வந்த எடப்பாடி பழனிசாமிக்கு பூரண கும்பத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • வழியெங்கும் சாலையின் இருபுறமும் அ.தி.மு.க. தொண்டர்கள் நின்று எடப்பாடியார் வாழ்க என கோஷமிட்டனர்.

    மதுரை

    அ.தி.மு.க. பொதுச் செய லாளராக எடப்பாடி பழனி சாமி தேர்வு செய்யப்பட்ட பின்னர் மதுரையில் தமிழ் நாடே திரும்பிப்பார்க்கும் வகையில் பிரமாண்ட பொன்விழா எழுச்சி மாநாடு கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கான முன் னேற்பாடு பணிகளை பார் வையிடுவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி வருகை தந்து பணிகளை முடுக்கி விட்டார்.

    அனைத்து மாவட்டங்க–ளில் இருந்து அ.தி.மு.க. தொண்டர்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் வந்து மாநாட்டில் பங்கேற்று விட்டு, பத்திரமாக ஊர் திரும்பும் வகையில் மேற்கொள்ளப் பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்து நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோச னைக ளை யும் அவர் வழங்கினார்.

    25 ஆண்டுகளுக்கு பிறகு அ.தி.மு.க.வில் மாநில மாநாடு நடைபெறுவதால் கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா விசுவாசிகள், இளைஞர்கள் என லட்சக்கணக்கானோர் மாநாட்டில் திரண்டுள்ளனர்.

    மதுரையில் நடைபெறும் இந்த மாநாட்டிற்காக சேலத்தில் இருந்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் இருந்து காரில் மதுரை வருகை தந்தார். அவருக்கு கப்பலூர் தியாக ராஜர் மில் அருகே மதுரை மாநகர், மதுரை புறநகர், மதுரை கிழக்கு ஆகிய மாவட்ட கழகத்தின் சார்பில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், மாவட்ட கழகச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆகி–யோர் பூங்கொத்து கொடுத்து தொண்டர்கள் புடைசூழ எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர்.

    அதனைத் தொடர்ந்து பெண்கள் பூரண கும்ப மரியா தை கொடுத்தும், பல்வேறு கோவில்களில் இருந்து பிரசாதங்கள் சிவாச் சாரியார் வழங்கியும் வர வேற்றனர். தொடர்ந்து மேள தாளங்கள், ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    வழியெங்கும் சாலையின் இருபுறமும் அ.தி.மு.க. தொண்டர்கள் நின்று எடப்பாடியார் வாழ்க என கோஷமிட்டனர். அதனை ஏற்றுக்கொண்ட அவர் இரட்டை விரலை காண்பித் தபடி சென்றார். மாநாடு திடலை கடக்கும்போது ஏராளமான தொண்டர்கள் விண்ணதிர கோஷம் எழுப் பினர். பின்னர் அவர் ரிங் ரோடு அருகே உள்ள தனியார் ஓட்டலில் இரவில் தங்கினார். இன்று காலை மாநாட்டில் கலந்து கொண்டார்.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்பு
    • மாநாடு வெற்றி பெற 101 தேங்காய் உடைத்து, துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

    நாகர்கோவில் :

    மதுரையில் நாளை (20-ந்தேதி) அ.தி.மு.க. எழுச்சி மாநாடு நடக்கிறது. இதை யொட்டி எம்.ஜி.ஆரை போற்றும் வித மாக நாகர்கோ வில் கவுன்சிலர் அக்ஷயா கண்ணன் ஏற்பாட்டில் கேக் வெட்டப்பட்டது. இதற்கு தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன் முன்னிலை வகித்தார்.

    வடசேரியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தி 51-வது ஆண்டை கொ ண்டாடும் விதமாக 51 கிலோ கேக் வெட்டி மாநாடு வெற்றி பெற 101 தேங்காய் உடைத்து, துண்டு பிரசுரங்கள் வழங்கப்ப ட்டன.

    மாநாட்டிற்கு பொது மக்களை அழைக்கும் நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், மாவட்ட இணை செயலாளர் சாந்தினி பகவதியப்பன், பகுதி செயலாளர்கள் ஜெயகோபால், முருகே ஸ்வரன், ஜெவின் விசு, ஆர ல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார், மாநகராட்சி கவுன்சிலர் ஸ்ரீலிஜா, ஜெயலலிதா பேரவை செயலாளர் ராஜாராம், தொழிற்சங்க செயலாளர் சுகுமாரன், முன்னாள் நகர செயலாளர்கள் சந்துரு, சந்திரன், ஒன்றிய செயலா ளர் மகாராஜா பிள்ளை, வீராசாமி, பொன் சுந்தர்நாத், பொன்சேகர் ராஜ்குமார், ராதாகிருஷ்ணன், அசோக்குமார், தோவாளை வடக்கு ஒன்றிய பிரதிநிதி ஆரல்கிருஷ்ணன், பொருளாளர் வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு அம்மா பேரவையின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படும்.
    • முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அம்மா பேரவை தொண்டர் படைக்கு பயிற்சியை வழங்கினார்.

    மதுரை

    வருகிற 20-ந் தேதி அ.தி.மு.க. வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு மதுரையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அம்மா பேரவை, இளைஞர் பாசறை, மகளிர் அணியில் உள்ள தொண்டர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபட உள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து மாநாடு நடைபெறும் நாளில் அன்று காலை அ.தி.மு.க. பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. கொடியினை ஏற்றுகிறார். அந்த இடத்தில் அம்மா பேரவை தொண்டர் படையினர் சல்யூட் அடித்து ராணுவ மரியாதை போல் அணிவகுப்பு செய்கின்றனர். அதனுடைய ஒத்திக்கைகான அணிவகுப்பு வலையங் குளம் ரிங் ரோட்டில் உள்ள மாநாட்டு திடலில் நடைபெற்றது சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், அம்மா பேரவை செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் அம்மா பேரவை தொண்டர் படைக்கு பயிற்சியை வழங்கினார். அதனைத் தொடர்ந்து அவரது தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு மாநாடு முகப்பில் அணிவகுப்பு மரியாதை நிறைவடைந்தது. இந்த அணிவகுப்பில் முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், எஸ்.எஸ். சரவணன், தமிழரசன், சதன் பிரபாகரன், மாணிக்கம், டாக்டர் சரவணன், நிர்வாகிகள் இளங்கோவன், தனராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது:-

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமையில் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டின் ஆயத்த பணிகளை தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    வருகிற 20-ந் தேதி காலை பொதுச் செயலாளர் எடப்பாடியார் மாநாட்டு முகப்பு முன்பு அமைக்கப்ப ட்டுள்ள 51அடியுள்ள கொடிக்கம்பத்தில் அ.தி.மு.க. கொடியினை ஏற்றுகிறார். அப்போது அம்மா பேரவை தொண்டர் படையின் சார்பாக ராணுவ மரியாதை போல் சல்யூட் அடித்து அவருக்கு மரியாதை செய்யப்படுகிறது.

    இந்த தொண்டர் படை ராணுவ சிப்பாய் போல அணிவகுக்க உள்ளனர்.மேலும் இந்த தொண்டர் படையில் இளைஞர் பாசறை உள்ளிட்ட பல்வேறு அணிகள், பங்கேற்க உள்ளது. அதனை தொடர்ந்து மாநாட்டிற்கு வருகை தரும் தொண்டர்களுக்கு இருக்கைகள் ஏற்படுத்தித் தரவும், அவர்களுக்கு வேண்டிய குடிநீர், உணவு உள்ளிட்ட உரிய வழிகாட்டுதலை தொண்டர்படை களப்பணியாற்றும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்த வெற்றி ஜோதி தொடர் ஓட்டமானது, மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளுக்கும் சென்றடைந்து.
    • வருகிற 20-ந்தேதி மதுரையில் நடை பெறவுள்ள மாநாட்டில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம், ஜோதி ஒப்படைக்க படவுள்ளது.

    ஓசூர்,

    மதுரையில், வருகிற 20ந் தேதி அதி.மு.க. எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி, கிருஷ்ணகிரி மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், வெற்றி ஜோதி தொடர் ஓட்டம் நடைபெறுகிறது.

    இதனை, ஓசூரில் நேற்று கட்சியின் கொள்கைபரப்பு செயலாளர் தம்பிதுரை எம்.பி, துணை  பொது செயலாளர் கே.பி.முனுசாமி, மற்றும் முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி, கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல். ஏ. ஆகியோர் தலைமை தாங்கினர்.

    மேலும் இதில், தமிழ்செல்வம் எம்.எல்.ஏ, முன்னாள் எம்.பி. பெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ. சி.வி.ராஜேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சதீஷ்குமார், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சிட்டி ஜெகதீசன், ஓசூர் மாநகர பகுதி செயலாளர்கள் அசோகா, பி.ஆர். வாசுதேவன், ராஜி, மஞ்சுநாத், மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் நாராயணன் மற்றும் வட்ட செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    இந்த வெற்றி ஜோதி தொடர் ஓட்டமானது, மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளுக்கும் சென்றடைந்து.

    பின்னர் வருகிற 20-ந்தேதி மதுரையில் நடைபெறவுள்ள மாநாட்டில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம், ஜோதி ஒப்படைக்க படவுள்ளது.

    • உசிலம்பட்டியில் அ.தி.மு.க. மாநாடு அழைப்பிதழை முன்னாள் அமைச்சர் வழங்கினார்.
    • இதற்கான அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சி உசிலம் பட்டி நகர அலுவலகத்தில் நடந்தது.

    உசிலம்பட்டி

    மதுரையில் அ.தி.மு.க. எழுச்சி மாநாடு வருகிற 20- ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சி உசிலம் பட்டி நகர அலுவலகத்தில் நடந்தது. நகர செயலாளர் பூமாராஜா தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு மரக்கன்றுகளையும், அழைப்பிதழ்களையும் வழங்கினார்.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தமிழரசன், எஸ்.எஸ்.சரவணன், மாணிக்கம், பேரவை துணைச் செயலாளர்கள் வெற்றிவேல், இளங் கோவன், துரைதனராஜன், மாவட்ட கவுன்சிலர் சுதாகரன், மாணவரணி செயலா ளர் மகேந்திர பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் செல்லம்பட்டி ராஜா, சேடபட்டி பிச்சை ராஜன், ஏழுமலை வாசிமலை, நகர நிர்வாகிகள் லட்சுமணன், உக்கிரபாண்டி, ரகு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×