அ.தி.மு.க. மாநாடு அழைப்பிதழ் வழங்கிய முன்னாள் அமைச்சர்

உசிலம்பட்டியில் அ.தி.மு.க. மாநாடு அழைப்பிதழை முன்னாள் அமைச்சர் வழங்கினார்.இதற்கான அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சி உசிலம் பட்டி நகர அலுவலகத்தில் நடந்தது.
அ.தி.மு.க. மாநாடு அழைப்பிதழ்  வழங்கிய முன்னாள் அமைச்சர்
Published on

உசிலம்பட்டி

மதுரையில் அ.தி.மு.க. எழுச்சி மாநாடு வருகிற 20- ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சி உசிலம் பட்டி நகர அலுவலகத்தில் நடந்தது. நகர செயலாளர் பூமாராஜா தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு மரக்கன்றுகளையும், அழைப்பிதழ்களையும் வழங்கினார்.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தமிழரசன், எஸ்.எஸ்.சரவணன், மாணிக்கம், பேரவை துணைச் செயலாளர்கள் வெற்றிவேல், இளங் கோவன், துரைதனராஜன், மாவட்ட கவுன்சிலர் சுதாகரன், மாணவரணி செயலா ளர் மகேந்திர பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் செல்லம்பட்டி ராஜா, சேடபட்டி பிச்சை ராஜன், ஏழுமலை வாசிமலை, நகர நிர்வாகிகள் லட்சுமணன், உக்கிரபாண்டி, ரகு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com