search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ADMK Conference"

    • அ.தி.மு.க. மாநாட்டில் பங்கேற்று சென்ற பெண்கள் உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.
    • சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள புல்லகவுண்டன் பட்டியை சேர்ந்தவர் காளியப்பன். அதிமுக கிளை செயலாளரான இவரது ஏற்பாட்டில் நேற்று மதுரையில் நடந்த மாநாட்டிற்கு வேனில் கட்சியினர் சென்றனர். இரவு மாநாடு முடித்து விட்டு அவர்கள் ஊருக்கு புறப்பட்டனர்.

    விருதுநகர் அருகே சூலக்கரை சாத்தூர் ரோட்டில் மருளுத்து பகுதியில் சென்ற போது அங்குள்ள பாலத்தின் தடுப்பு சுவரில் ஒரு கார் மோதி விபத்துக்குள்ளாகி இருந்தது. இதை கவனிக்காத வேன் டிரைவர் கார் மீது பயங்கரமாக மோதினார்.

    இதில் வேனில் இருந்த புல்லகவுண்டன்பட்டியை சேர்ந்த துளசியம்மாள் (75), ராஜம்மாள்(75), சுப்புலட்சுமி (57), சாரதா(37), கவிதா (37), ஜெயமணி (67), சீனிவாசன் (60), தாயம்மாள் (72), துரைராஜ் (72), சிபியோன் ராஜ் (18) ஆகிய 10 பேர் படுகாயமடைந்தனர்.

    இவர்கள் அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கி டையில் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளான காரில் இருந்த 2 பேரையும் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    இது குறித்து விசாரித்த போது பணி ஓய்வு பெற்ற கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உள்பட 2 பேர் விபத்தில் சிக்கி காய மடைந்திருப்பது தெரிய வந்தது.

    இந்த விபத்து தொடர்பாக சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 50 ஆயிரம் பேர் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
    • மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தகவல் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 50 ஆயிரம் பேர் பங்கேற்றனர் என்று மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தெரிவித்துள்ளார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    மதுரையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அ.தி.மு.க.வின் எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

    தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து குடும்பம் குடும்பமாக அ.தி.மு.க. தொண்டர்களும், நிர்வாகிகளும் மற்றும் பொதுமக்களும் 50 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். எடப்பாடி பழனிசாமியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்பதே அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தமிழக மக்களின் எதிர் பார்ப்பாக உள்ளது.

    தமிழ்நாட்டின் உரிமை களையும், தமிழ் மக்கள் நலனையும் கருத்தில் கொண்டு மக்களுக்காக உழைக்கும் இயக்கம் அ.தி.மு.க. மட்டும்தான். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் மகத்தான வெற்றிக்கு இந்த மதுரை மாநாடு அடித்தளமாக அமையும்.

    புனித ஜார்ஜ்கோட்டை யில் மக்கள் விரும்பும் முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்பார். ஜெயலலிதாவிற்கு பிறகு அவரது விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்படுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மதுரை வந்த எடப்பாடி பழனிசாமிக்கு பூரண கும்பத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • வழியெங்கும் சாலையின் இருபுறமும் அ.தி.மு.க. தொண்டர்கள் நின்று எடப்பாடியார் வாழ்க என கோஷமிட்டனர்.

    மதுரை

    அ.தி.மு.க. பொதுச் செய லாளராக எடப்பாடி பழனி சாமி தேர்வு செய்யப்பட்ட பின்னர் மதுரையில் தமிழ் நாடே திரும்பிப்பார்க்கும் வகையில் பிரமாண்ட பொன்விழா எழுச்சி மாநாடு கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கான முன் னேற்பாடு பணிகளை பார் வையிடுவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி வருகை தந்து பணிகளை முடுக்கி விட்டார்.

    அனைத்து மாவட்டங்க–ளில் இருந்து அ.தி.மு.க. தொண்டர்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் வந்து மாநாட்டில் பங்கேற்று விட்டு, பத்திரமாக ஊர் திரும்பும் வகையில் மேற்கொள்ளப் பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்து நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோச னைக ளை யும் அவர் வழங்கினார்.

    25 ஆண்டுகளுக்கு பிறகு அ.தி.மு.க.வில் மாநில மாநாடு நடைபெறுவதால் கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா விசுவாசிகள், இளைஞர்கள் என லட்சக்கணக்கானோர் மாநாட்டில் திரண்டுள்ளனர்.

    மதுரையில் நடைபெறும் இந்த மாநாட்டிற்காக சேலத்தில் இருந்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் இருந்து காரில் மதுரை வருகை தந்தார். அவருக்கு கப்பலூர் தியாக ராஜர் மில் அருகே மதுரை மாநகர், மதுரை புறநகர், மதுரை கிழக்கு ஆகிய மாவட்ட கழகத்தின் சார்பில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், மாவட்ட கழகச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆகி–யோர் பூங்கொத்து கொடுத்து தொண்டர்கள் புடைசூழ எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர்.

    அதனைத் தொடர்ந்து பெண்கள் பூரண கும்ப மரியா தை கொடுத்தும், பல்வேறு கோவில்களில் இருந்து பிரசாதங்கள் சிவாச் சாரியார் வழங்கியும் வர வேற்றனர். தொடர்ந்து மேள தாளங்கள், ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    வழியெங்கும் சாலையின் இருபுறமும் அ.தி.மு.க. தொண்டர்கள் நின்று எடப்பாடியார் வாழ்க என கோஷமிட்டனர். அதனை ஏற்றுக்கொண்ட அவர் இரட்டை விரலை காண்பித் தபடி சென்றார். மாநாடு திடலை கடக்கும்போது ஏராளமான தொண்டர்கள் விண்ணதிர கோஷம் எழுப் பினர். பின்னர் அவர் ரிங் ரோடு அருகே உள்ள தனியார் ஓட்டலில் இரவில் தங்கினார். இன்று காலை மாநாட்டில் கலந்து கொண்டார்.

    • சிறு சிறு தங்குமிடங்கள் உள்பட சுமார் 600 லாட்ஜு கள் உள்ளன. லாட்ஜுகள் அனைத்தும் நிரம்பிவிட்டன.
    • அதிக பட்சமாக ரூ.16 ஆயிரத்து 514 வரை டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    மதுரையில் நாளை மறுநாள் (ஞாயிறு) அ.தி.மு.க. வீரவரலாற்று பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மாநிலம் முழுவதிலும் இருந்து தொண்டர்கள் செல்கிறார்கள்.

    வெளியூர்களில் இருந்து செல்பர்கள் நாளை மதுரை செல்லும்படி பயணத் திட்டத்தை வகுத்துள்ளார்கள்.

    இதனால் அங்குள்ள லாட்ஜுகளில் அறைகளை முன்பதிவு செய்துள்ளார் கள். சிறு சிறு தங்குமிடங்கள் உள்பட சுமார் 600 லாட்ஜு கள் உள்ளன. இந்த லாட்ஜுகள் அனைத்தும் நிரம்பிவிட்டன.

    இதே போல் திருமண மண்டபங்களையும் முன் பதிவு செய்துள்ளார்கள். 21-ந்தேதி ஆவணி மாதத்தின் முதல் முகூர்த்த நாள் என்பதால் திருமண வீட்டாரும் மண்டபங்களை முன்பதிவு செய்துள்ளார்கள். எனவே கட்சியினரை ஞாயிறு மாலையில் காலி செய்து விட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரிலேயே பல திருமண மண்டபங்களை வாடகைக்கு விட்டுள்ளார்கள்.

    சென்னையில் இருந்து மதுரை செல்லும் கட்சி பிரமுகர்கள் பலர் விமானங்களில் முன்பதிவு செய்துள்ளார்கள்.

    வழக்கமாக மதுரைக்கு விமான கட்டணம் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை இருக்கும். ஆனால் 19-ந்தேதி குறைந்த பட்ச கட்டணம் ரூ.12 ஆயிரம் என்று நிர்ணயித்துள்ளார்கள். அதிக பட்சமாக ரூ.16 ஆயிரத்து 514 வரை டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    இன்று அதிகாலை 5.55 மணிக்கு புறப்பட்ட இண்டிகோ விமான கட்டணம் ரூ.8,564, 10.30 மணிக்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமான கட்டணம் ரூ.10,297, 11.15 மணிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் ரூ.11,906.

    இதே போல் மாலை 4.55 மணி முதல் 7.40 மணி வரை செல்லும் 6 விமானங்களில் குறைந்தபட்சம் ரூ.11 ஆயிரம் முதல் ரூ.16,702 வரை டிக்கெட் கட்டணம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இன்றும், நாளையும் மொத்தம் 18 விமானங்கள் இயக்கப்படுகிறது. சிறிய விமானங்களில் 71 சீட்டும், பெரிய விமானங்களில் 210 இருக்கைகளும் இருக்கின்றன. ஒரு விமானத்தில் கூட இருக்கை காலி இல்லை. அனைத்து விமானங்களும் 'புல்' ஆகிவிட்டன.

    மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, செங்கோட்டை செல்லும் அனைத்து ரெயில்களிலும் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன.

    இதே போல் ஆம்னி பஸ்கள், அரசு பஸ்களிலும் இருக்கைகள் இல்லை.

    சென்னையில் இருந்து மதுரை செல்லும் பலர் கார், வேன்களை வாடகைக்கு அமர்த்தியும் செல்கிறார்கள். வேன்களுக்கு மதுரை சென்று வர ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை வாடகை வசூலிக்கப்படுகிறது.

    • இரவு 8 மணிக்கு மாநாடு நிறைவு பெற்று தொண்டர்கள் பாதுகாப்பாக வீடு செல்லவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
    • இது போன்ற வரவேற்பு ஏற்பாடுகள் முதன் முதலாக அ.தி.மு.க.வினர் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    அ.தி.மு.க. மாநாட்டை இதுவரையில் நடைபெறாத அளவிற்கு மிக பிரமாண்டமான முறையில் நடத்த கட்சி நிர்வாகிகள் அனைத்து அளவிலும் ஏற்பாடு செய்து உள்ளனர்.

    மாநாடு தொடங்கும் ஞாயிற்றுக்கிழமை 8 மணி முதல் ஒவ்வொரு நிமிடமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    இரவு 8 மணிக்கு மாநாடு நிறைவு பெற்று தொண்டர் கள் பாதுகாப்பாக வீடு செல்லவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியாக காலை 8 மணிக்கு கொடி ஏற்றப்படுகிறது. மாநாட்டு பந்தலில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றும் போது ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவி வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    10 நிமிடங்கள் வானத்தில் இருந்து பூ மழையாக பொழிய சென்னை மாவட்ட செயலாளர்கள் பால கங்கா, வெங்கடேஷ் பாபு, விருகை வி.என்.ரவி, தி.நகர் சத்யா, ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்துள்ளனர்.

    பின்னர் மாலை 4 மணிக்கு மீண்டும் எடப்பாடி பழனிசாமி மாநாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் போது ஹெலிகாப்டரில் இருந்து மலர்தூவி வரவேற்க திட்டமிடப்பட்டு உள்ளது. எடப்பாடி பழனிசாமி தங்கி இருக்கும் ஓட்டலில் இருந்து அவர் வெளியே புறப்பட்டு மாநாட்டு பந்தலுக்கு வரும் வரையில் அவரது காருக்கு மேலே ஹெலிகாப்டர் பறந்தவாறு மலர்களை தூவியவாறு வந்து கொண்டே இருக்கும்.

    இது போன்ற வரவேற்பு ஏற்பாடுகள் முதன் முதலாக அ.தி.மு.க.வினர் செய்தி ருப்பது குறிப்பிடத்தக்கது.

    காலையில் 10 நிமிடமும் மாலையில் 10 நிமிடமும் ஹெலிகாப்ட ரில் இருந்து எடப்பாடி பழனிசாமிக்கு மலர்களை தூவி வரவேற்க பல லட்சங்கள் செலவும் செய்துள்ளனர்.

    • மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு அம்மா பேரவையின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படும்.
    • முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அம்மா பேரவை தொண்டர் படைக்கு பயிற்சியை வழங்கினார்.

    மதுரை

    வருகிற 20-ந் தேதி அ.தி.மு.க. வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு மதுரையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அம்மா பேரவை, இளைஞர் பாசறை, மகளிர் அணியில் உள்ள தொண்டர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபட உள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து மாநாடு நடைபெறும் நாளில் அன்று காலை அ.தி.மு.க. பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. கொடியினை ஏற்றுகிறார். அந்த இடத்தில் அம்மா பேரவை தொண்டர் படையினர் சல்யூட் அடித்து ராணுவ மரியாதை போல் அணிவகுப்பு செய்கின்றனர். அதனுடைய ஒத்திக்கைகான அணிவகுப்பு வலையங் குளம் ரிங் ரோட்டில் உள்ள மாநாட்டு திடலில் நடைபெற்றது சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், அம்மா பேரவை செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் அம்மா பேரவை தொண்டர் படைக்கு பயிற்சியை வழங்கினார். அதனைத் தொடர்ந்து அவரது தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு மாநாடு முகப்பில் அணிவகுப்பு மரியாதை நிறைவடைந்தது. இந்த அணிவகுப்பில் முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், எஸ்.எஸ். சரவணன், தமிழரசன், சதன் பிரபாகரன், மாணிக்கம், டாக்டர் சரவணன், நிர்வாகிகள் இளங்கோவன், தனராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது:-

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமையில் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டின் ஆயத்த பணிகளை தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    வருகிற 20-ந் தேதி காலை பொதுச் செயலாளர் எடப்பாடியார் மாநாட்டு முகப்பு முன்பு அமைக்கப்ப ட்டுள்ள 51அடியுள்ள கொடிக்கம்பத்தில் அ.தி.மு.க. கொடியினை ஏற்றுகிறார். அப்போது அம்மா பேரவை தொண்டர் படையின் சார்பாக ராணுவ மரியாதை போல் சல்யூட் அடித்து அவருக்கு மரியாதை செய்யப்படுகிறது.

    இந்த தொண்டர் படை ராணுவ சிப்பாய் போல அணிவகுக்க உள்ளனர்.மேலும் இந்த தொண்டர் படையில் இளைஞர் பாசறை உள்ளிட்ட பல்வேறு அணிகள், பங்கேற்க உள்ளது. அதனை தொடர்ந்து மாநாட்டிற்கு வருகை தரும் தொண்டர்களுக்கு இருக்கைகள் ஏற்படுத்தித் தரவும், அவர்களுக்கு வேண்டிய குடிநீர், உணவு உள்ளிட்ட உரிய வழிகாட்டுதலை தொண்டர்படை களப்பணியாற்றும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உசிலம்பட்டியில் அ.தி.மு.க. மாநாடு அழைப்பிதழை முன்னாள் அமைச்சர் வழங்கினார்.
    • இதற்கான அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சி உசிலம் பட்டி நகர அலுவலகத்தில் நடந்தது.

    உசிலம்பட்டி

    மதுரையில் அ.தி.மு.க. எழுச்சி மாநாடு வருகிற 20- ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சி உசிலம் பட்டி நகர அலுவலகத்தில் நடந்தது. நகர செயலாளர் பூமாராஜா தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு மரக்கன்றுகளையும், அழைப்பிதழ்களையும் வழங்கினார்.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தமிழரசன், எஸ்.எஸ்.சரவணன், மாணிக்கம், பேரவை துணைச் செயலாளர்கள் வெற்றிவேல், இளங் கோவன், துரைதனராஜன், மாவட்ட கவுன்சிலர் சுதாகரன், மாணவரணி செயலா ளர் மகேந்திர பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் செல்லம்பட்டி ராஜா, சேடபட்டி பிச்சை ராஜன், ஏழுமலை வாசிமலை, நகர நிர்வாகிகள் லட்சுமணன், உக்கிரபாண்டி, ரகு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சங்கரன்கோவில் கோவில் வாசல் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
    • தொடர்ந்து ஆட்டோக்கள், பைக்குகள், செல்போன்களில் ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வு நடைபெற்றது.

    சங்கரன்கோவில்:

    மதுரையில் வருகிற 20-ந்தேதி அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறுகிறது.

    ஸ்டிக்கர் ஒட்டும்பணி

    இதுபற்றி மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக மாநாட்டிற்கான விளம்பர பதாதைகள் மற்றும் ஸ்டிக்கர்களை சங்கரன்கோவில் நகரில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள், செல்போன்களில் ஸ்டிக்கர்களை ஒட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. மகளிர் அணி துணைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜலெட்சுமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

    சங்கரன்கோவில் கோவில் வாசல் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் சுப்பையா பாண்டியன், ரமேஷ், வாசுதேவன், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தொடர்ந்து ஆட்டோக்கள், பைக்குகள், செல்போன்களில் ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வு நடைபெற்றது.

    கலந்து கொண்டவர்கள்

    இதில் மாவட்ட விவசாய அணி செயலாளர் பரமகுருநாதன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் காளிராஜ், நகர்மன்ற உறுப்பினர் சங்கரசுப்பிரமணியன், நகர அவைத் தலைவர் வேலுச்சாமி, குருவிகுளம் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் கிருஷ்ணசாமி, சங்கரன்கோவில் நகர அவைத் தலைவர் அய்யப்பன், ஜெயலலிதா பேரவை செயலாளர் சவுந்தர், மாநில பேச்சாளர்கள் கணபதி, ராமசுப்பிரமணியம், மாவட்ட மாணவரணி பொருளாளர் மாரியப்பன், அரசு ஒப்பந்ததாரர் குட்டி மாரியப்பன், நகர இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் நிவாஸ், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் தலைவர் குருசாமி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் இயக்குனர் வெள்ளைத்துரை, கிளைச் செயலாளர்கள் பாபு கதிரேசன், முருகன், சிவஞானராஜா, நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சுடலை, இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர் தங்கம், தகவல் தொழில் நுட்பப் பிரிவு துணைச் செயலாளர் செல்லத்துரை, நிர்வாகிகள் ஜிம் சுந்தர், ராஜ்குமார், முகமதுமீரான், முகமதுஅலிபா, ராமலட்சுமி மற்றும் சங்கரன்கோவில் போக்குவரத்து பணிமனை அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரை மாநாடு குறித்து மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் விழிப்புணர்வு பிரசார ஸ்டிக்கர்கள் ஒட்டும் நிகழ்ச்சி நேற்று காலை தூத்துக்குடி டூவிபுரத்தில் நடந்தது.
    • சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் எடப்பாடி பழனிசாமிதான் அடுத்த முதல்-அமைச்சர் என்ற சூழல் தமிழகத்தில் ஏற்பட்டு உள்ளது உள்ளது என்று சண்முகநாதன் கூறினார்.

    தூத்துக்குடி:

    மதுரையில் வருகிற 20-ந் தேதி அ.தி.மு.க. வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கிறது. இது குறித்து மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் விழிப்புணர்வு பிரசார ஸ்டிக்கர்கள் ஒட்டும் நிகழ்ச்சி நேற்று காலை தூத்துக்குடி டூவிபுரத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமை தாங்கி ஸ்டிக்கரை ஆட்டோ, கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றில் ஒட்டி தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, மாவட்ட அவைத்தலைவர் வக்கீல் திருப்பாற்கடல், மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவர் சுதாகர், முன்னாள் நகர மன்றத்தலைவர் இரா.ஹென்றி, மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் நடராஜன், பில்லா விக்னேஷ், கே.ஜெ. பிரபாகர், ஜெ.தன ராஜ், பகுதி செயலாளர்கள் சேவியர், ஜெய்கணேஷ், நட்டார்முத்து, ஒன்றியச் செயலாளர்கள் காசிராஜன், விஜயகுமார், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் அய்யாத்துரை பாண்டியன், முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி,ஜோதிமணி, மாநகராட்சி எதிர்கட்சி கொறடா வக்கீல் மந்திரமூர்த்தி, முன்னாள் அரசு வக்கீல்கள் சுகந்தன் ஆதித்தன், ஆண்ட்ரூ மணி, வக்கீல்கள் முனியசாமி, சரவணபெருமாள், பகுதி இளைஞரணி செயலாளர் திருச்சிற்றம்பலம், துணை செயலாளர் டைகர் சிவா, வட்ட செயலாளர்கள் முருகன், மனுவேல் ராஜ், மணிகண்டன் மற்றும் ரமேஷ்கிருஷ்ணன், பிராங்ளின் ஜோஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொன்விழா எழுச்சி மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது. எம்.ஜி.ஆர். தொடங்கிய இந்த இயக்கத்தை ஜெயலலிதா ஒரு எக்கு கோட்டையாக மாற்றினார். எம்.ஜி.ஆர். ஒரு தலைமுறை, ஜெயலலிதா ஒரு தலைமுறை. தற்போது 3-வது தலைமுறையாக எடப்பாடி பழனிசாமி 2 கோடியே 30 லட்சத்துக்கு மேலாக உறுப்பி னர்களை சேர்த்து உள்ளார். இதனால் உலகிலேயே 7-வது பெரிய கட்சியாக அ.தி.மு.க. உருவாகி உள்ளது. மதுரை மாநாடு சிறப்பாக அமையும். இதனால் தமிழகத்தில் உள்ள ஆளும் கட்சியும், எம்.பி.யும் இருக்கும் இடம் தெரியாமல் போ வார்கள். சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் எடப்பாடி பழனிசாமிதான் அடுத்த முதல்-அமைச்சர் என்ற சூழல் தமிழகத்தில் ஏற்பட்டு உள்ளது. மாநாட்டுக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் இருந்து சுமார் 1000 வாகனங்களில் 15 ஆயிரம் தொண்டர்கள் செல்ல உள்ளோம் என்று கூறினார்.

    ×