search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Youtube"

    தொழில்நுட்பக் குறைபாடு காரணமாக பிரபல சமூக வலைதளமான யூடியூப் இணையதளம் முடங்கியுள்ளதால் அதனை சரிசெய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர். #YouTubeDOWN #YouTube
    கூகுளின் பிரபல சமூக வலைதளமான யூடியூப் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியது.

    இண்டர்நெட்டில் தெரியாத தகவல்களை தேடி தெரிந்து கொள்வதை போன்று, வீடியோக்களை பார்த்து பல விஷயங்களை தெரிந்து கொள்ள வழி செய்யும் சேவை தான் யூடியூப். பொழுதுபோக்கில் துவங்கி செய்திகள், மற்றும் பல்வேறு தகவல்களை யூடியூப் மூலம் நாம் தினமும் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

    உலகம் முழுக்க யூடியூப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தொழில்நுட்ப குறைபாடு காரணமாக யூடியூப் இணையதளம் முடங்கியுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.



    சர்வர் பிரச்சனையால் யூடியூப் முடங்கியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து யூடியூப் நிறுவனம் அதன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,

    யூடியூப் வேலை செய்யாதது குறித்த உங்களது தகவலுக்கு நன்றி. யூடியூப் டிவி மற்றும் யூடியூப் மியூசிக்கை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக ஏற்பட்ட குறைபாட்டை சரி செய்யும் பணி விரைந்து நடந்து வருகிறது. விரைவில் சரிசெய்யப்படும், தடங்கல்களுக்கு வருந்துகிறோம்.

    இவ்வாறு கூறியுள்ளது. #YouTubeDOWN #YouTube

    ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோபோனில் வாட்ஸ்அப், மேம்படுத்தப்பட்ட ஃபேஸ்புக் செயலிகளை தொடர்ந்து யூடியூப் ஆப் அப்டேட் வழங்கப்படுகிறது. #JioPhone2 #YouTube



    ஜியோஸ்டோரில் யூடியூப் செயலி கிடைக்கும் என ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது. அந்த வகையில் ஜியோபோன் 2 மற்றும்  ஜியோ 1 மாடல்களை பயன்படுத்துவோர் இனி யூடியூப் செயலியை பயன்படுத்தலாம்.

    கைஓ.எஸ்.-க்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கும் யூடியூப் செயலி ஜியோபோனில் பயன்படுத்த சிறப்பான அனுபவத்தை வழங்கும். ஜியோபோன்களில் வாட்ஸ்அப் வசதி சமீபத்தில் வழங்கப்பட்ட நிலையில், தற்சமயம் யூடியூப் செயலிக்கான அப்டேட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    யூடியூப், வாட்ஸ்அப் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஃபேஸ்புக் ஆப் உள்ளிட்டவை ஜியோபோன்களுக்கு ஏற்கனவே அறிவித்தபடி வழங்கப்பட்டு விட்டது என ரிலையன்ஸ் ஜியோ தலைவர் தெரிவித்தார்.

    ஜியோபோன் மற்றும் ஜியோபோன் 2 மாடல்களுக்கான யூடியூப் ஆப் ஜியோ ஆப் ஸ்டோரில் கிடைக்கிறது. செயலியை டவுன்லோடு செய்து வீடியோக்களை சீராக பார்த்து ரசிக்கலாம். கைஓ.எஸ். தளம் என்றாலும், ஆன்ட்ராய்டில் உள்ளதை போன்றே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்திய தேசிய கீதமான 'ஜன கண மன அதிநாயக ஜெய கே!’ என்னும் நாட்டுப்பற்றுப் பாடலின் ‘பியானோ இசை’ யூடியூபில் 15 நாட்களில் 7 கோடி பார்வையாளர்களை ஈர்த்து சாதனை படைத்துள்ளது. #Pianorendition #JanaGanaMana
    புதுடெல்லி:

    வங்காள மொழி கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் இயற்றிய  'ஜன கண மன அதிநாயக ஜெய கே!’ என்னும் நாட்டுப்பற்று பாடல் இந்தியாவின் தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

    நாட்டில் நடைபெறும் சுதந்திர தினம், குடியரசு விழா மற்றும் முக்கிய அரசு நிகழ்ச்சிகளின் இறுதியில் இப்பாடல் பாடப்பெற்று இந்தியர்கள் அனைவரும் எழுந்து நின்று அசையாமல் மரியாதை செலுத்துவது வழக்கமாக உள்ளது.

    இந்த தேசிய கீதத்தை முறையாக முழுமையாக  52 விநாடிகளுக்குள் பாடி முடிக்க வேண்டும் என்பது மரபாக இருந்து வருகிறது.

    இந்நிலையில், இந்த ஆண்டின் இந்திய சுதந்திர திருநாளை முன்னிட்டு மும்பையை சேர்ந்த பிரபல ‘பியானோ’ கலைஞர் ஷயான் இட்டாலியா என்பவர் வெகு நேர்த்தியாகவும், இனிமையாகவும் 'ஜன கண மன' பாடலை வாசித்து தனது நாட்டுப்பற்றை நிலைநாட்டியுள்ளார்.


    பர்ஹாத் விஜய் அரோரா இயக்கத்தில் உருவான இந்த இசை வீடியோ, கடந்த 29-7-2018 அன்று யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த வீடியோ வெளியான முதல் நாளில் சுமார் 50 லட்சம் மக்கள் இதை பார்த்து, பகிர்ந்ததால் மிக பரவலான வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில், இன்றைய நிலவரப்படி சுமார் 7 கோடியே 25 லட்சம் மக்களின் பேராதரவுடன் 15 நாட்களில் மாபெரும் சாதனையை இந்த பியானோ இசை உருவாக்கியுள்ளது.

    யூடியூபில் அதிக பார்வையாளர்களை தேசிய கீதமாக பிரான்ஸ் நாட்டு நாட்டுப்பற்றுப் பாடல் இதற்கு முன்னர் சுமார் 3.6 கோடி பார்வையாளர்களை கவர்ந்திருந்தது. அந்த சாதனையை நமது 'ஜன கண மன அதிநாயக ஜெய கே!’ பியானோ இசை தற்போது முறியடித்துள்ளது, குறிப்பிடத்தக்கது. #Pianorendition  #JanaGanaMana #YouTube #Pianorendition 

    இந்த வீடியோவைக் காண.., https://www.youtube.com/watch?v=YNpqyL3Z_6A
    சோனி பிக்சர்ஸ் நிறுவனம் யூடியூபில் ரெட்-பேன்ட் டிரெயிலருக்கு பதில் முழு திரைப்படத்தையும் பதிவேற்றம் செய்திருக்கிறது.


    சோனி பிக்சர்ஸ் நிறுவனம் ரெட்-பேன்ட் டிரெயிலருக்கு பதில் காலி தி கில்லர் முழு திரைப்படத்தையும் யூடியூபில் பதிவேற்றம் செய்திருக்கிறது. 

    இதுகுறித்து வெளியாகியிருக்கும் தகவல்களில் சோனி நிறுவனம் 89 நிமிடங்கள் 46 நொடிகள் ஓடக்கூடிய முழு திரைப்படத்தையும் ஜூலை 3-ம் தேதி தனது யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்ததாக கூறப்படுகிறது. CBR.com எனும் வலைத்தளம் இந்த விஷயத்தை முதலில் கண்டறிந்ததாக கூறப்படுகிறது.

    யூடியூப் தளத்தில் இருந்து திரைப்படம் எடுக்கப்படும் வரை முழு திரைப்படமும் எட்டு மணி நேரம் லைவில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த காலகட்டத்தில் திரைப்படத்தை சுமார் ஏழு ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்த்து இருந்தாக கூறப்படுகிறது.

    தவறுதலாக பதிவேற்றம் செய்யப்பட்ட திரைப்படத்தை தவரவிட்டவர்கள் இனி யூடியூபில் பணம் செலுத்தி இந்த திரைப்படத்தை பார்க்க முடியும். ஒரு மணி நேரம் 29 நிமிடங்கள் ஓடக்கூடிய காலி தி கில்லர் திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் ஜெர்மனியில் வெளியிடப்பட்டது. ஜான் மேத்யூஸ் இயக்கிய இந்த திரைப்படத்தின் டிவிடி கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் வெளியிடப்பட்டது.
    யூடியூப் ஆன்ட்ராய்டு செயலியில் டேக் எ பிரேக் எனும் புதிய வசதி சேர்க்கப்பட்டு இதற்கான அப்டேட்கள் வெளியிடப்படுகின்றன.
    புதுடெல்லி:

    கூகுள் I/O 2018 நிகழ்வில் பொது மக்கள் தொழில்நுட்பத்துடன் அளவுக்கு அதிகமாக ஒன்றிவிடுவதை தவிர்க்க செய்யும் வெல்பீயிங் எனும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. கூகுளின் வீடியோ ஸ்ட்ரீமிங் வலைத்தளமான யூடியூப் இந்த திட்டத்தின் கீழ் வருகிறது. 

    அந்த வகையில் யூடியூப் செயலியை பயன்படுத்துவோர் முன்கூட்டியே இடைவெளி காலத்தை நிர்ணயித்து யூடியூபிடம் தெரிவிக்கலாம். இதன் மூலம் நீண்ட நேரம் யூடியூப் பயன்படுத்தும் போது குறிப்பிட்ட கால அளவில் இடைவெளி எடுக்க முடியும். யூடியூப் ஆன்ட்ராய்டு செயலியில் டேக் எ பிரேக் (Take a Break) அம்சம் இந்த வசதியை வழங்குகிறது.

    ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் யூடியூப் செயலியை பயன்படுத்தும் பெரும்பாலானோருக்கு இதற்கான அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் யூடியூப் செட்டிங்ஸ் ஆப்ஷனில் இடைவெளி காலத்தை ஒவ்வொரு 15, 30, 60, 90 அல்லது 180 நிமிடங்களுக்கு தேர்வு செய்ய முடியும். வாடிக்கையாளர் இந்த கால அளவை தேர்வு செய்ததும், குறிப்பிட்ட நேரத்தில் யூடியூப் வீடியோ தானாக பாஸ் (Pause) ஆகி விடும். 



    இனி வாடிக்கையாளர்கள் விரும்பினால் இடைவெளி எடுக்கவோ அல்லது தொடர்ந்து வீடியோக்களை பார்க்கவோ முடியும். விரும்புவோர் தேர்வு செய்யும் வகையில் கிடைக்கும் இந்த ஆப்ஷனை ஸ்விட்ச் ஆஃப் செய்யவும் முடியும். இத்துடன் இரண்டு புதிய அம்சங்கள் யூடியூப் செயலியில் சேர்க்கப்பட்டுள்ளன.

    அந்த வகையில் டிசேபிள் சவுன்ட்ஸ் & வைப்ரேஷன்ஸ் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இதனை தேர்வு செய்ததும் வாடிக்கையாளர் விரும்பும் நேரத்திற்கு யூடியூப் ஆன்ட்ராய்டு செயலியில் இருந்து நோட்டிஃபிகேஷன்கள் எதுவும் வராது. ஷெட்யூல்டு டைஜஸ்ட் எனும் மற்றொரு அம்சம் வாடிக்கையாளர்கள் விரும்பும் நேரத்தில் ஒரு நாளைக்கு ஒரு முறை அனைத்து நோட்டிஃபிகேஷன்களையும் அனுப்பும்.

    ஆன்ட்ராய்டு இயங்குதளத்துக்கான யூடியூப் (13.17.55) பதிப்பில் டேக் எ பிரேக் அம்சம் சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்த அம்சத்தை யூடியூப் செட்டிங்ஸ் -- ஜெனரல் -- டேக் எ பிரேக் ஆப்ஷன்களை தேர்வு செய்யலாம். இதேபோன்று நோட்டிஃபிகேஷன் அம்சம் செட்டிங்ஸ் -- நோட்டிஃபிகேஷன் ஆப்ஷன்களை தேர்வு செய்யலாம்.

    புதிய அப்டேட் கொண்டிருக்கும் அம்சங்கள் அனைத்தும் புதியவை, இவை வாடிக்கையாளர்கள் தொழில்நுட்பத்திற்கு அடிமையாகாமல் இருக்க உதவுகிறது. ஆன்ட்ராய்டு பி இயங்குதளத்தில் கூகுளின் டிஜிட்டல் வெல்பீயிங் திட்டம் சார்ந்து பல்வேறு அம்சங்களை அறிமுகம் செய்ய கூகுள் திட்டமிட்டுள்ளது.
    ×