search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women's Premier League"

    • முதலில் ஆடிய பெங்களூரு 157 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய உ.பி. வாரியர்ஸ் 155 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.

    பெங்களூரு:

    மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2-வது ஆட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற உ.பி. வாரியர்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த பெங்களூரு 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ரிச்சா கோஷ் 62 ரன்னும், மேகனா 53 ரன்னும் எடுத்தனர்.

    தொடர்ந்து களமிறங்கிய உ.பி. வாரியர்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 2 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணி திரில் வெற்றிபெற்றது.

    5 விக்கெட்டுகளை வீழ்த்திய பெங்களூரு வீராங்கனை சோபனா ஆஷாவுக்கு ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது.

    • மகளிர் பிரீமியர் லீக் ஏலம் மும்பையில் இன்று நடைபெற்றது.
    • இதில் இந்திய, ஆஸ்திரேலிய வீராங்கனைகள் ரூ.2 கோடிக்கு ஏலம் போயினர்.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றன.

    முதல் தொடரில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் கோப்பையை வென்று அசத்தியது.

    இதற்கிடையே, 2-வது மகளிர் பிரீமியர் லீக் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி-மார்ச்சில் நடத்தப்படுகிறது. இதையொட்டி வீராங்கனைகளின் மினி ஏலம் மும்பையில் இன்று நடைபெற்றது.

    ஏலப்பட்டியலில் 104 இந்தியர்கள், 61 வெளிநாட்டினர் என்று மொத்தம் 165 வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர். இவர்களில் 109 பேர் உள்ளூர் போட்டிகளில் மட்டும் ஆடியவர்கள்.

    5 அணிகளுக்கும் சேர்த்து மொத்தம் 30 இடம் காலியாக உள்ளது. இதில் வெளிநாட்டினருக்கான 9 இடங்களும் அடங்கும்.

    இந்நிலையில், இந்திய வீராங்கனை காஷ்வீ கவுதமை குஜராத் ஜெயன்ட்ஸ் அணி 2 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.

    இதேபோல், ஆஸ்திரேலிய வீராங்கனை அன்னபெல் சதர்லேண்டை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ரூ. 2 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது.

    மற்றொரு இந்திய வீராங்கனை விருந்தா தினேஷை உ.பி. வாரியர்ஸ் அணி 1.3 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.

    தென் ஆப்பிரிக்கா வீராங்கனை ஷப்னிம் இஸ்மாயிலை ரூ.1.2 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது.

    • மகளிர் பிரீமியர் லீக் தொடர் முதல் முறையாக இந்த ஆண்டு நடத்தப்பட்டது.
    • இத்தொடரின் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பை வென்றது.

    மும்பை:

    இந்தியாவில் தொடங்கப்பட்ட ஆடவருக்கான ஐ.பி.எல். தொடர் 16 ஆண்டுகள் தொடர்ந்து நடைபோட்டு வருகிறது. இதேபோன்று, மகளிருக்கான டி-20 போட்டியை முதல்முறையாக இந்த ஆண்டு பி.சி.சி.ஐ. வெற்றிகரமாக நடத்தியது. இதில் மும்பை, பெங்களூரு, டெல்லி, அகமதாபாத் ,லக்னோ ஆகிய 5 அணிகள் முதல் சீசனில் விளையாடியது.

    ஐ.பி.எல். போட்டிக்கு இணையாக நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் மும்பை அணி கோப்பையை வென்றது.

    இந்நிலையில், அடுத்த ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் போட்டிக்கான ஏலம் மும்பையில் டிசம்பர் 9-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • மகளிருக்கான டி20 போட்டி முதல்முறையாக இந்த ஆண்டு நடத்தப்பட்டது.
    • மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர்.

    இந்தியாவில் தொடங்கப்பட்ட ஆடவருக்கான ஐபிஎல் தொடர் 16 ஆண்டுகள் தொடர்ந்து நடைபோட்டு வருகிறது. இதேபோன்று, மகளிருக்கான டி-20 போட்டியை முதல்முறையாக இந்த ஆண்டு பிசிசிஐ வெற்றிகரமாக நடத்தியது. இதில் மும்பை, பெங்களூரு, டெல்லி, அகமதாபாத் ,லக்னோ ஆகிய ஐந்து அணிகள் முதல் சீசனில் விளையாடியது.

    ஐபிஎல் போட்டிக்கு இணையாக நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். இதில் மும்பை அணி கோப்பையை வென்றது.

    இந்நிலையில் மகளிர் பிரீமியர் லீக் தொடரை அடுத்தாண்டு முதல் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் சுழற்சி முறையில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

    • முதலில் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது.
    • நாட் ஷிவர் பிரண்ட்- ஹர்மன்பிரீத் கவுர் நிதானமாக ஆடி அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

    மும்பை:

    முதலாவது மகளிர் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடர், மும்பையில் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், உ.பி.வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை லீக் ஆட்டத்தில் மோதின. லீக் சுற்று முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்நிலையில், பெண்கள் பிரிமீயர் லீக் கோப்பை யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் இன்று இரவு நடந்தது. முதலில் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது. கேப்டன் மெக் லேனிங் 35 ரன்கள் சேர்த்தார். அதிரடியாக ஆடிய ஷிகா பாண்டே, ராதா யாதவ் இருவரும் தலா 27 ரன்கள் அடித்தனர்.

    இதையடுத்து 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் துவக்க வீராங்கனைகள் ஹெய்லி மேத்யூஸ் 13 ரன்களிலும், யஸ்திகா பாட்டியா 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் நாட் ஷிவர் பிரண்ட்- ஹர்மன்பிரீத் கவுர் ஜோடி நிதானமாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. கேப்டன் கவுர் 37 ரன்களில் அவுட் ஆனார்.

    மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நாட் ஷிவர் பிரண்ட் அரை சதம் கடக்க, மும்பை அணி 3 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டியது. நாட்ஷிவர் பிரண்ட் 60 ரன்களுடனும், அமலியா கெர் 14 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    மும்பை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் சேர்த்ததால், 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் முதலாவது மகளிர் பிரீமியர் லீக் கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி வென்றுள்ளது. 

    • 9வது விக்கெட்டுக்கு இணைந்த ஷிகா பாண்டே- ராதா யாதவ் ஜோடி அதிரடியாக ஆடியது.
    • மும்பை அணி தரப்பில் இஸ்சி வாங், ஹெய்லி மேத்யூஸ் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

    மும்பை:

    மகளிர் உலகக் கோப்பை பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி மும்பை பிரபோர்ன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது.

    கேப்டன் மெக் லேனிங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் மறுமுனையில் மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. மெக் லேனிங் 35 ரன்கள் சேர்த்து ஆறுதல் அளித்தார். ஷபாலி வர்மா 11 ரன், மாரிசான் கேப் 18 ரன்னில் விக்கெட்டை இழந்தனர். 9வது விக்கெட்டுக்கு இணைந்த ஷிகா பாண்டே- ராதா யாதவ் ஜோடி கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடியது.

    ஷிகா பாண்டே 17 பந்துகளில் 3 சிக்சர், 1 பவுண்டரி உள்பட 27 ரன்கள் (நாட் அவுட்) விளாசினார். ராதா யாதவ் 12 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 27 ரன்கள் (நாட் அவுட்) குவித்தார். இருவரும் சேர்ந்து 24 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்தனர். இதனால் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் என்ற கவுரவமான ஸ்கோரை எட்டியது.

    மும்பை அணி தரப்பில் இஸ்சி வாங், ஹெய்லி மேத்யூஸ் தலா 3 விக்கெட் கைப்பற்றினர். அமலியா கெர் 2 விக்கெட் எடுத்தார். இதையடுத்து 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்குகிறது.

    • பெண்கள் பிரிமீயர் லீக் கோப்பை யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் இன்று இரவு நடக்கிறது.
    • கோப்பையை கைப்பற்றும் அணிக்கு ரூ.6 கோடியும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.3 கோடியும் பரிசாக வழங்கப்படுகிறது.

    இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ஐ.பி.எல். போட்டியை போன்று பெண்களுக்கான பிரிமீயர் லீக் போட்டி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன்படி முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், உ.பி.வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றன.

    இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை லீக் ஆட்டத்தில் மோதின. லீக் சுற்று முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணி தலா 12 புள்ளிகள் பெற்றாலும் ரன்-ரேட் அடிப்படையில் முன்னிலை பெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலிடம் பிடித்து நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    பெண்கள் பிரிமீயர் லீக் கோப்பை யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடக்கிறது.

    இதில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்- மெக் லானிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை அணியை பொறுத்தமட்டில் முதல் 5 லீக் ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி கண்டு ஆதிக்கம் செலுத்தியது.

    அதன் பிறகு 2 ஆட்டங்களில் தோற்று சற்று சரிவை சந்தித்த அந்த அணி வெளியேற்றுதல் சுற்றில் உ.பி.வாரியர்சை எளிதில் வீழ்த்திய உற்சாகத்துடன் இந்த போட்டியில் களம் இறங்குகிறது.

    இந்த போட்டியில் கோப்பையை கைப்பற்றும் அணிக்கு ரூ.6 கோடியும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.3 கோடியும் பரிசாக வழங்கப்படுகிறது.

    இன்றைய போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:- மும்பை இந்தியன்ஸ்: யாஸ்திகா பாட்டியா, ஹெய்லி மேத்யூஸ், நாட் சிவெர், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), அமெலி கெர், பூஜா வஸ்ட்ராகர், ஹூமைரா காஸி, அமன்ஜோத் கவுர், இசி வோங், ஜிந்திமணி கலிதா, சாய்கா இஷாக். டெல்லி கேப்பிட்டல்ஸ்: மெக் லானிங் (கேப்டன்), ஷபாலி வர்மா, அலிஸ் கேப்சி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், மரிஜானே காப், ஜெஸ் ஜோனசென், தானியா பாட்டியா, அருந்ததி ரெட்டி, ராதா யாதவ், ஷிகா பாண்டே, பூனம் யாதவ் அல்லது தாரா நோரிஸ்.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ் 18, கலர்ஸ் தமிழ் ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் இறுதிப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.
    • டெல்லி அணியின் கேப்டன் மேக் லேனிங் 310 ரன் குவித்து முதல் இடத்தில் உள்ளார்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) ஐ.பி.எல். போட்டியை போலவே மகளிருக்கான பிரீமியர் லீக் போட்டி அறிமுகம் செய்தது.

    முதலாவது மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் போட்டி மும்பையில் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயின்ட்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, உ.பி. வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றன.

    ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதின. கடந்த 21-ந் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிந்தன. இதன் முடிவில் டெல்லி அணி முதல் இடத்தை பிடித்து இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதிபெற்றது. மும்பை, 2-வது இடத்தையும், உ.பி. வாரியர்ஸ் 3-வது இடத்தையும் பிடித்து 'பிளேஆப்' சுற்றுக்கு முன்னேறின. பெங்களூரு, குஜராத் அணிகள் முறையே 4-வது, 5-வது இடங்களை பிடித்து வெளியேறின.

    நேற்று எலிமினேட்டர் ஆட்டம் நடந்தது. இதில் மும்பை அணி 72 ரன் வித்தியாசத்தில் உ.பி. வாரியர்சை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர் 4 விக்கெட் இழப்புக்கு 182 ரன் குவித்தது. பின்னர் விளையாடிய உ.பி. வாரியர்ஸ் 110 ரன்னில் சுருண்டது.

    மகளிர் பிரீமியர் லீக் போட்டியின் இறுதி ஆட்டம் நாளை (26-ந் தேதி) நடக்கிறது. மும்பை பிராபோர்ன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இந்த போட்டியில் மேக் லேனிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் - ஹர்மன் பிரீத் கவூர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் இறுதிப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும மோதிய லீக் ஆட்டத்தில் தலா ஒன்றில் வெற்றி பெற்றன. மும்பை அணி 8 விக்கெட்டில் வென்று இருந்தது. டெல்லி அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது.

    டெல்லி அணியின் கேப்டன் மேக் லேனிங் 310 ரன் குவித்து முதல் இடத்தில் உள்ளார். மும்பை அணியில் புருன்ட் 272 ரன் எடுத்துள்ளார். மும்பை அணியின் சாய்னா இஷாக் 15 விக்கெட் வீழ்த்தி 2-வது இடத்தில் உள்ளார். 

    • முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய உ.பி. வாரியர்ஸ் அணி 17.4 ஓவர்களில் 110 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்று வரும் முதலாவது மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. 5 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் முதலிடத்தை பிடித்து நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இறுதிப்போட்டியில் டெல்லி அணியுடன் மோதும் அணியை முடிவு செய்வதற்கான எலிமினேட்டர் சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய நாட் ஷிவர் பிரன்ட் 72 ரன்கள் (நாட் அவுட்) விளாசினார்.

    இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய உ.பி.வாரியர்ஸ் அணி, மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. டாப் ஆர்டர் வீராங்கனைகள் விரைவில் ஆட்டமிழந்தனர். 56 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், கிரண் நவ்கிரே, தீப்தி சர்மா ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்க போராடியது.

    அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கிரண், 27 பந்துகளில், 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 43 ரன்கள் விளாசிய நிலையில், இஸ்சி வாங் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சிம்ரன் ஷாயிக், சோபி எக்லெஸ்டோன் ஆகிய இருவரும் அடுத்தடுத்த பந்துகளில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர். இதன்மூலம் வாங் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார்.

    தீப்தி சர்மா 16 ரன், அஞ்சலி சர்வானி, ராஜேஸ்வரி கயாக்வாட் தலா 5 ரன்னில் ஆட்டமிழக்க, உ.பி. வாரியர்ஸ் அணி, 17.4 ஓவர்களில் 110 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இஸ்சி வாங் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

    • அதிரடியாக ஆடிய மும்பை அணி வீராங்கனை நாட் ஷிவர் பிரன்ட் ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் விளாசினார்.
    • உ.பி. வாரியர்ஸ் அணியின் டாப் ஆர்டர் வீராங்கனைகள் விரைவில் ஆட்டமிழந்தனர்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்று வரும் முதலாவது மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. 5 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் முதலிடத்தை பிடித்து நேரடியாக இறுதிப்போடடிக்கு முன்னேறியது.

    இறுதிப்போட்டியில் டெல்லி அணியுடன் மோதும் அணியை முடிவு செய்வதற்கான எலிமினெட்டர் சுற்று ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி டெல்லி அணியுடன் இறுதிப்போட்டியில் மோதும்.

    எலிமினேட்டர் சுற்று போட்டியில் டாஸ் வென்ற உ.பி. வாரியர்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய நாட் ஷிவர் பிரன்ட் 72 ரன்கள் (நாட் அவுட்) விளாசினார்.

    இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய உ.பி.வாரியர்ஸ் அணி, மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. டாப் ஆர்டர் வீராங்கனைகள் விரைவில் ஆட்டமிழந்தனர். 56 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், கிரண் நவ்கிரே, தீப்தி சர்மா ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்க போராடியது. குறிப்பாக கிரண் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார்.

    • இறுதிப்போட்டிக்குள் நுழையும் 2-வது அணி எது? என்பதை நிர்ணயிக்கும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டம் இன்று நடக்கிறது.
    • இந்த மோதலில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும்.

    மும்பை:

    முதலாவது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. 5 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் (6 வெற்றி, 2 தோல்வி), மும்பை இந்தியன்ஸ் (6 வெற்றி, 2 தோல்வி) அணிகள் தலா 12 புள்ளிகள் பெற்று சமநிலை வகித்தன.

    ஆனால் ரன்-ரேட் (+1.856) அடிப்படையில் முன்னிலை வகித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலிடத்தை பிடித்து நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ரன் ரேட்டில் (+1.711) பின்தங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 2-வது இடத்தையும், 8 புள்ளிகள் பெற்ற உ.பி.வாரியர்ஸ் அணி (4 வெற்றி, 4 தோல்வி) 3-வது இடத்தையும் பெற்று 'பிளே-ஆப்'சுற்றுக்கு தகுதி பெற்றன.

    2 வெற்றி, 6 தோல்விகளுடன் தலா 4 புள்ளிகள் பெற்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் 4-வது இடத்தையும், குஜராத் ஜெயன்ட்ஸ் கடைசி இடத்தையும் பெற்று 'பிளே-ஆப்' சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறின.

    இந்த நிலையில் இறுதிப்போட்டிக்குள் நுழையும் 2-வது அணி எது? என்பதை நிர்ணயிக்கும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டம் மும்பை டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு நடக்கிறது. இதில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்-அலிசா ஹீலி தலைமையிலான உ.பி.வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இவ்விரு அணிகளுக்கும் இடையே நடந்த இரண்டு லீக் ஆட்டங்களில் முதலாவது ஆட்டத்தில் மும்பை அணியும் (8 விக்கெட் வித்தியாசம்), 2-வது ஆட்டத்தில் உ.பி.வாரியர்ஸ் அணியும் (5 விக்கெட்) வெற்றி பெற்றுள்ளன. இந்த மோதலில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும். தோல்வி காணும் அணி போட்டியில் இருந்து வெளியேறும்.

    இன்றைய போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    மும்பை இந்தியன்ஸ்:

    ஹெய்லி மேத்யூஸ், யாஸ்திகா பாட்டியா, நடாலி சிவெர், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), அமலியா கெர், பூஜா வஸ்ட்ராகர், இசபெல்லா வோங், அமன்ஜோத் கவுர், ஹூமைரா காஸி, ஜிந்திமணி கலிதா, சாய்கா இஷாக்.

    உ.பி.வாரியர்ஸ்:

    தேவிகா வைத்யா, அலிசா ஹீலி (கேப்டன்), கிரண் நவ்ஜிரி, தாலியா மெக்ராத், கிரேஸ் ஹாரிஸ், தீப்தி ஷர்மா, சோபி எக்லெஸ்டன், சிம்ரன் ஷேக், பார்ஷவி சோப்ரா, அஞ்சலி சர்வானி, ராஜேஸ்வரி கெய்க்வாட்.

    • மும்பை 2-வது இடத்தையும், உ.பி. 3-வது இடத்தையும் பிடித்து `பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறின.
    • இரு அணிகளும் மோதிய `லீக்’ சுற்றில் தலா ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றன.

    மும்பை:

    முதலாவது மகளிர் பிரீமியர் `லீக்' 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது.

    இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் ஜெயன்ட்ஸ், உ.பி.வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றன. `லீக்' ஆட்டத்தில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதின. கடந்த 4-ந்தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் `லீக்' சுற்று நேற்று முன்தினம் முடிவடைந்தது.

    இதன் முடிவில் டெல்லி, மும்பை அணிகள் தலா 6 வெற்றி, 2 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றன. நிகர ரன் ரேட் அடிப்படையில் டெல்லி முதல் இடத்தை பிடித்து நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    மும்பை 2-வது இடத்தையும், உ.பி. 3-வது இடத்தையும் பிடித்து `பிளே ஆப்' சுற்றுக்கு முன்னேறின. உ.பி. 8 புள்ளி (4 வெற்றி, 4 தோல்வி) பெற்றது. பெங்களூரு, குஜராத் தலா 4 புள்ளியுடன் (2 வெற்றி, 6 தோல்வி) 4-வது, 5-வது இடங்களை பிடித்து வெளியேறின.

    2 நாட்கள் ஓய்வுக்கு பிறகு எலிமினேட்டர் ஆட்டம் டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் நாளை (24-ந்தேதி) இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் மும்பை-உ.பி. அணிகள் மோதுகின்றன.

    வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் டெல்லியுடன் மோதும். இறுதி ஆட்டம் 26-ந்தேதி நடக்கிறது. தோல்வி அடையும் அணி வெளியேறும்.

    இதனால் வெற்றிக்காக மும்பை இந்தியன்ஸ், உ.பி. வாரியர்ஸ் அணிகள் கடுமையாக போராடும். இரு அணிகளும் மோதிய `லீக்' சுற்றில் தலா ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றன. எனவே நாளைய ஆட்டம் சுவாரசியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×