என் மலர்
கிரிக்கெட் (Cricket)

சோபனா ஆஷா 5 விக்கெட் வீழ்த்தி அசத்தல்: 2 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது பெங்களூரு
- முதலில் ஆடிய பெங்களூரு 157 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய உ.பி. வாரியர்ஸ் 155 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.
பெங்களூரு:
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2-வது ஆட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற உ.பி. வாரியர்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த பெங்களூரு 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ரிச்சா கோஷ் 62 ரன்னும், மேகனா 53 ரன்னும் எடுத்தனர்.
தொடர்ந்து களமிறங்கிய உ.பி. வாரியர்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 2 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணி திரில் வெற்றிபெற்றது.
5 விக்கெட்டுகளை வீழ்த்திய பெங்களூரு வீராங்கனை சோபனா ஆஷாவுக்கு ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது.
Next Story






