search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women's Cricket"

    • அதிரடியாக விளையாடி இலங்கை பெண்கள் அணியின் கேப்டன் சாமரி அத்தபத்து 80 ரன்கள் குவித்தார்.
    • டி20 தொடரை நியூசிலாந்து பெண்கள் அணி கைப்பற்றியது.

    நியூசிலாந்து மகளிர் அணி 3 ஒருநாள் போட்டி 3 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை சென்றது. முதலில் நடந்த ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது. இதனையடுத்து டி20 தொடர் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற களமிறங்கிய இலங்கை பெண்கள் அணி 14.3 ஓவரில் 143 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் டி20 போட்டிகளில் முதன் முறையாக நியூசிலாந்து அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றியை இலங்கை அணி பதிவு செய்துள்ளது. அதிரடியாக விளையாடி இலங்கை பெண்கள் அணியின் கேப்டன் சாமரி அத்தபத்து 80 ரன்கள் எடுத்து ஆட்டநாயகி விருதை தட்டிச்சென்றார்.

    • இந்திய பெண்கள் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்களே எடுத்தது.
    • வங்காளதேச அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 87 ரன்கள் எடுத்தது.

    மிர்புர்:

    இந்தியா - வங்காளதேச அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதலாவது ஆட்டத்தில் வங்காளதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.

    இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய பெண்கள் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா ஆகியோர் களம் இறங்கினர்.

    இதில் மந்தனா 13 ரன், ஷபாலி வர்மா 19 ரன், அடுத்து களம் இறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 8 ரன், ஹர்மன்ப்ரீத் கவுர் 0 ரன், யாஷ்டிகா பாடியா 11 ரன், ஹார்லீன் தியோல் 6 ரன், தீப்தி சர்மா 10 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

    இறுதியில் இந்திய பெண்கள் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்களே எடுத்தது. இதையடுத்து 96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச பெண்கள் அணி ஆடியது.

    இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அந்த அணியின் கேப்டன் மட்டுமே இரண்டு இலக்க ரன்னை எட்டினார். மற்ற வீராங்கனை சொற்ப ரன்னில் வெளியேறினார். இதனால் வங்காளதேச அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 87 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

    • இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் எடுத்துள்ளது.
    • வங்காளதேசம் தரப்பில் சுல்தானா காதுன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    மிர்புர்:

    ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த நிலையில் இந்தியா-வங்காளதேசம் பெண்கள் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மிர்புரில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி மந்தனா -ஷஃபாலி வர்மா ஜோடி களமிறங்கினர். அதிரடியாக தொடங்கிய இந்திய அணி 33 ரன்னில் முதல் விக்கெட்டை இழந்தது. மந்தனா 13 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ஷஃபாலி வர்மா 19 ரன்னிலும் அடுத்து வந்த கேப்டன் கவூர் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தனர்.

    33 ரன்னில் முதல் விக்கெட்டை இழந்த இந்தியா அடுத்த ஒரு ரன் எடுப்பதற்க்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. சிறிது நேரம் தாக்குபிடித்த இந்திய அணி 48 ரன்னில் (யாஸ்திகா பாட்டியா 11 ரன்) 4-வது விக்கெட்டையும் 58 ரன்னில் (ஜெமிமா ரோட்ரிக்ஸ் 8 ரன்) 5-வது விக்கெட்டையும் இழந்தது. 61 ரன்னில் 6-வது விக்கெட்டையும் (ஹர்லீன் தியோல் 6) இந்திய அணி இழந்தது.

    இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் எடுத்துள்ளது. வங்காளதேசம் தரப்பில் சுல்தானா காதுன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்கள் சேர்த்தது.
    • தொடரின் சிறந்த வீராங்கனை விருது தீப்தி சர்மாவுக்கு வழங்கப்பட்டது.

    சில்ஹெட்:

    வங்காளதேசத்தில் பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் 6 முறை சாம்பியனான இந்திய அணி, இலங்கையை எதிர்கொண்டது.

    டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதிக ரன்கள் குவித்து இந்தியாவுக்கு நெருக்கடி அளிக்கும் வியூகத்துடன் களமிறங்கிய இலங்கை, சற்றும் எதிர்பாராத வகையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்களே சேர்த்தது. அதிகபட்சமாக இனோகா ரணவீரா 18 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் ரேணுகா சிங் 3 விக்கெட் கைப்பற்றினார். ராஜேஸ்வரி, சினேஹ ராணா தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 66 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்தியா, 8.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது. ஸ்மிருதி மந்தனா அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 51 ரன்கள் (நாட் அவுட்) குவித்தார். இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இதன்மூலம் ஏழாவது முறையாக இந்திய அணி ஆசிய கோப்பையை வென்றுள்ளது.

    இன்றைய போட்டியின் சிறந்த வீராங்கனையாக ரேணுகா சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடரின் சிறந்த வீராங்கனை விருது தீப்தி சர்மாவுக்கு வழங்கப்பட்டது.

    • டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
    • இந்தியா தரப்பில் ரேணுகா சிங் 3 விக்கெட் கைப்பற்றினார்.

    சில்ஹெட்:

    வங்காளதேசத்தில் நடைபெற்று வரும் 8-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. நடப்பு சாம்பியன் வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின. பாகிஸ்தான், தாய்லாந்து அணிகள் அரையிறுதியில் தோற்றன. இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இன்று நடக்கிறது. இதில் 6 முறை சாம்பியனான இந்திய அணி, இலங்கையை எதிர்கொண்டது.

    டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதிக ரன்கள் குவித்து இந்தியாவுக்கு நெருக்கடி அளிக்கும் வியூகத்துடன் களமிறங்கிய இலங்கை, சற்றும் எதிர்பாராத வகையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

    6 ரன்னில் அவுட் ஆனதும் மனமுடைந்து வெளியேறிய இலங்கை அணி கேப்டன் சமாரி அட்டப்பட்டு

    6 ரன்னில் அவுட் ஆனதும் மனமுடைந்து வெளியேறிய இலங்கை அணி கேப்டன் சமாரி அட்டப்பட்டு

    இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்களே சேர்த்தது. அதிகபட்சமாக இனோகா ரணவீரா 18 ரன்கள் அடித்தார்.

    இந்தியா தரப்பில் ரேணுகா சிங் 3 விக்கெட் கைப்பற்றினார். ராஜேஸ்வரி, சினேஹ ராணா தலா 2 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 66 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது. 

    • இந்திய மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது.
    • இந்திய வீராங்கனை தீப்தி சர்மா 68 ரன் குவித்து களத்தில் இருந்தார்.

    லண்டன்:

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி ஏற்கனவே கைப்பற்றி இருந்தது.

    இந்நிலையில் இரு அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 45.4 ஓவர்களில் 169 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. அதிகபட்சமாக 68 ரன்கள் குவித்த தீப்தி ஷர்மா கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். மந்தனா 50 ரன்னும், பூஜா 22 ரன்னும் எடுத்தனர். 


    இதையடுத்து 170 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 43.4 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சார்லோட் டீன் 47 ரன்னும், எம்மா லாம்ப் 21 ரன்னும் எடுத்தனர். எமி ஜோன்ஸ் 28 ரன் அடித்தார். இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக ரேணுகா சிங் 4 விக்கெட்டுகளும், ஜூலன் கோஸ்வாமி மற்றும் கெய்க்வாட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், தீப்தி சர்மா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 


    இதன்மூலம் இந்திய மகளிர் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் ஒருநாள் தொடரை 3-0 என கைப்பற்றியது. இந்த போட்டியுடன் இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா மற்றும் தீப்தி வர்மா மற்றுமே அரைசதம் அடித்தனர்.
    • 5 இந்திய வீராங்கனைகள் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினர்.

    லண்டன்:

    ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது.

    அடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி ஏற்கனவே கைப்பற்றி உள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.

    இந்த போட்டியுடன் இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

    அதன்படி இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்தது. இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய வீராங்கனைகள் சொற்ப ரன்னில் வெளியேறினர். இதில் 5 வீராங்கனைகள் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா மற்றும் தீப்தி சர்மா ஆகியோர் அரைசதம் அடித்தனர். இங்கிலாந்து தரப்பில் கேட் கிராஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இறுதியில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்கள் எடுத்தது. இதனால் 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கும்.

    • பெண்கள் ஹாக்கி போட்டியில் 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் கானாவை சந்திக்கிறது.
    • டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன் போட்டிகளில் இந்திய அணிகள் களம் காணுகிறது.

    ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி முதலாவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. பர்மிங்காம் 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் உள்ள அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நேற்று இரவு கோலாகலமாக தொடங்கியது.

    இதில் இன்று நடைபெறும் பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வலுவான ஆஸ்திரேலியாவை (மாலை 3.30 மணி) எதிர்கொள்கிறது.

    அதே போல், பெண்கள் ஹாக்கி போட்டியில் 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் கானாவை (மாலை 6.30 மணி) சந்திக்கிறது. டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன் போட்டிகளில் இந்திய அணிகள் களம் காணுகிறது. நீச்சல், ஸ்குவாஷ், குத்துச்சண்டை போட்டிகளில் இந்திய வீரர்கள் கால் பதிக்கிறார்கள்.

    • லம்ப் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
    • இங்கிலாந்து அணி தரப்பில் நடாலி ஸ்கிவர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    மகளிர் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சி ட்ரையான் 88 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி தரப்பில் நடாலி ஸ்கிவர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனையடுத்து 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகளாக டாமி பியூமண்ட்- லம்ப் ஜோடி களமிறங்கியது. 1 ரன் எடுத்த நிலையில் டாமி பியூமண்ட் அவுட் ஆனார். அடுத்து வந்த சோபியா டங்க்லி 22 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    லம்ப்- நடாலி ஸ்கிவர் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். நடாலி ஸ்கிவர் 55 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை பறிகொடுத்தார். ஒரு பக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க வீராங்கனை லம்ப் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அவர் 102 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் முறையில் வெளியேறினார்.

    இறுதியில் இங்கிலாந்து பெண்கள் அணி 32.1 ஓவரில் 219 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி வருகிற 15-ந் தேதி நடக்கிறது.

    • ஷவாலி வர்மா 71 ரன்னிலும் மந்தனா 94 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
    • 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இலங்கை அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 173 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக காஞ்சனா 46 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் ரேனுகா சிங் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகளாக ஷவாலி வர்மா-மந்தானா ஆடினர். இலங்கை அணியின் பந்து வீச்சை சிறப்பான முறையில் எதிர் கொண்டு ரன்களை குவித்தனர்.

    25.4 ஓவரில் இந்திய அணி விக்கெட் ஏதும் விட்டுக் கொடுக்காமல் 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷவாலி வர்மா 71 ரன்னிலும் மந்தனா 94 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனால் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஜூலை 7-ந் தேதி நடக்கிறது.

    • இலங்கை அணியில் காஞ்சனா 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    • இந்திய அணி தரப்பில் ரேணுகா சிங் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் இந்திய பெண்கள் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது ஒருநாள் போட்டி இன்று காலை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இலங்கை அணி பேட்டிங் செய்தது. ஹசினி பெரேரா 0, விஷ்மி குணரத்னே 3, மாதவி 0 என 11 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தடுமாறியது. இதனையடுத்து கேப்டன் அதபத்து-அனுஷ்கா ஜோடி நிதானமாக ஆடி ரன்களை கணிசமாக உயர்த்தினர்.

    நிதானமாக ஆடிய கேப்டன் அதபத்து 27 ரன்னிலும் அனுஷ்கா சஞ்சீவனி 25 ரன்னிலும் கவிஷா தில்ஹாரி 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அப்போது இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்நிலையில் 7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நிலாக்ஷி டி சில்வா-காஞ்சனா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    நிலாக்ஷி டி சில்வா 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மேக்னா சிங் ஓவரில் வெளியேறினார். அடுத்து வந்த ஓஷதி ரணசிங்கே 10 ரன்னில் அவுட் ஆனார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த காஞ்சனா 47 ரன்கள் எடுத்தார்.

    இதனால் 50 ஓவர் முடிவில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 173 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் ரேணுகா சிங் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • அதிரடியாக விளையாடிய சமாரி அதபத்து அரை சதம் அடித்து அசத்தினார்.
    • இலங்கை கேப்டன் சமாரி அதபத்து சிறந்த வீராங்கனை விருதை தட்டி சென்றார்.

    இலங்கை-இந்தியா பெண்கள் அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக கேப்டன் கவூர் 39 ரன்கள் எடுத்தார்.

    இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணியின் விஷ்மி குணரத்னே முதல் ஓவரில் வெளியேறினார். அடுத்து வந்த மாதவி 13 ரன்னில் வெளியேறினார். இந்நிலையில் கேப்டன் சமாரி அதபத்து- நிலாக்ஷி டி சில்வா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    அதிரடியாக விளையாடிய கேப்டன் சமாரி அதபத்து அரை சதம் அடித்து அசத்தினார். நிலாக்ஷி டி சில்வா 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் முறையில் வெளியேறினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சமாரி அதபத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். அவர் 48 பந்தில் 80 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். இதில் 14 பவுண்டரிகளும் 1 சிக்சரும் அடங்கும்.

    17 ஓவரில் இலங்கை அணி 141 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இலங்கை கேப்டன் சமாரி அதபத்து சிறந்த வீராங்கனை விருதை தட்டி சென்றார். 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    ×