search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bangladesh India Series"

    • வங்கதேச அணி 14 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்களை மட்டுமே எடுத்தது.
    • 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 4-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று தொடரை வென்றது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 4-வது டி20 போட்டி இன்று சில்ஹெட்டில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

    இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா - ஷஃபாலி வர்மா களமிறங்கினர். இதில் ஷஃபாலி வர்மா 2 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து ஸ்மிருதி மந்தனா மற்றும் தயாளன் ஹேமலதா இருவரும் தலா 22 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். அதன்பின் மழை காரணமாக இப்போட்டி 14 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

    அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அதிரடியாக விளையாடி 39 ரன்களைச் சேர்த்தார். அவருக்கு துணையாக விளையாடிய ரிச்சா கோஷ் 24 ரன்களையும், சாஜனா 8 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் 14 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிர் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்களைச் சேர்த்தது.

    இதையடுத்து டக்வொர்த் லூயிஸ் முறைப்படி வங்கதேச மகளிர் அணிக்கு 125 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணியில் முர்ஷிதா கதும் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீராங்கனை திலாரா அக்தர் 21 ரன்களுக்கும், ருபாய ஹைதர் 13 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய கேப்டன் நிகர் சுல்தானா, சொர்மா அக்தர், ரிடு மோனி, ரபேயா கான் என அடுத்தடுத்து ஒற்றையிலக்க ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர்.

    இதில் இறுதிவரை களத்தில் இருந்த ஷொரிஃபா கதும் 11 ரன்களையும், நஹிதா அக்தர் 2 ரன்களையும் சேர்த்த நிலையிலும் வங்கதேச அணி 14 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய மகளிர் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 4-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    • இந்திய பெண்கள் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்களே எடுத்தது.
    • வங்காளதேச அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 87 ரன்கள் எடுத்தது.

    மிர்புர்:

    இந்தியா - வங்காளதேச அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதலாவது ஆட்டத்தில் வங்காளதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.

    இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய பெண்கள் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா ஆகியோர் களம் இறங்கினர்.

    இதில் மந்தனா 13 ரன், ஷபாலி வர்மா 19 ரன், அடுத்து களம் இறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 8 ரன், ஹர்மன்ப்ரீத் கவுர் 0 ரன், யாஷ்டிகா பாடியா 11 ரன், ஹார்லீன் தியோல் 6 ரன், தீப்தி சர்மா 10 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

    இறுதியில் இந்திய பெண்கள் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்களே எடுத்தது. இதையடுத்து 96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச பெண்கள் அணி ஆடியது.

    இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அந்த அணியின் கேப்டன் மட்டுமே இரண்டு இலக்க ரன்னை எட்டினார். மற்ற வீராங்கனை சொற்ப ரன்னில் வெளியேறினார். இதனால் வங்காளதேச அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 87 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

    • இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் எடுத்துள்ளது.
    • வங்காளதேசம் தரப்பில் சுல்தானா காதுன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    மிர்புர்:

    ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த நிலையில் இந்தியா-வங்காளதேசம் பெண்கள் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மிர்புரில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி மந்தனா -ஷஃபாலி வர்மா ஜோடி களமிறங்கினர். அதிரடியாக தொடங்கிய இந்திய அணி 33 ரன்னில் முதல் விக்கெட்டை இழந்தது. மந்தனா 13 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ஷஃபாலி வர்மா 19 ரன்னிலும் அடுத்து வந்த கேப்டன் கவூர் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தனர்.

    33 ரன்னில் முதல் விக்கெட்டை இழந்த இந்தியா அடுத்த ஒரு ரன் எடுப்பதற்க்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. சிறிது நேரம் தாக்குபிடித்த இந்திய அணி 48 ரன்னில் (யாஸ்திகா பாட்டியா 11 ரன்) 4-வது விக்கெட்டையும் 58 ரன்னில் (ஜெமிமா ரோட்ரிக்ஸ் 8 ரன்) 5-வது விக்கெட்டையும் இழந்தது. 61 ரன்னில் 6-வது விக்கெட்டையும் (ஹர்லீன் தியோல் 6) இந்திய அணி இழந்தது.

    இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் எடுத்துள்ளது. வங்காளதேசம் தரப்பில் சுல்தானா காதுன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ×