search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இந்திய பெண்கள் அணிக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இலங்கை
    X

    இந்திய பெண்கள் அணிக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இலங்கை

    • இலங்கை அணியில் காஞ்சனா 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    • இந்திய அணி தரப்பில் ரேணுகா சிங் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் இந்திய பெண்கள் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது ஒருநாள் போட்டி இன்று காலை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இலங்கை அணி பேட்டிங் செய்தது. ஹசினி பெரேரா 0, விஷ்மி குணரத்னே 3, மாதவி 0 என 11 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தடுமாறியது. இதனையடுத்து கேப்டன் அதபத்து-அனுஷ்கா ஜோடி நிதானமாக ஆடி ரன்களை கணிசமாக உயர்த்தினர்.

    நிதானமாக ஆடிய கேப்டன் அதபத்து 27 ரன்னிலும் அனுஷ்கா சஞ்சீவனி 25 ரன்னிலும் கவிஷா தில்ஹாரி 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அப்போது இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்நிலையில் 7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நிலாக்ஷி டி சில்வா-காஞ்சனா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    நிலாக்ஷி டி சில்வா 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மேக்னா சிங் ஓவரில் வெளியேறினார். அடுத்து வந்த ஓஷதி ரணசிங்கே 10 ரன்னில் அவுட் ஆனார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த காஞ்சனா 47 ரன்கள் எடுத்தார்.

    இதனால் 50 ஓவர் முடிவில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 173 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் ரேணுகா சிங் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    Next Story
    ×