என் மலர்
நீங்கள் தேடியது "மகளிர் கிரிக்கெட்"
- மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பை, பெங்களூரு, குஜராத், உபி, டெல்லி ஆகிய மாநிலங்கள் சார்பில் அணிகள் உள்ளது.
- மகளிர் பிரீமியர் லீக் தொடரில் தமிழகம் சார்பில் எந்த அணியும் இல்லை.
5 அணிகள் இடையிலான 4-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிவில் 12 புள்ளிகளுடன் முதலிடம் (6 வெற்றி, 2 தோல்வி) பிடித்த ஸ்மிர்தி மந்தனா தலைமையிலான பெங்களுரு ராயல் சேலஞ் சர்ஸ் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
2-வது இடம் பிடித்த குஜராத் ஜெயன்ட்சும் (5 வெற்றி, 3 தோல்வியுடன் 10 புள்ளி), 3-வது இடம் பெற்ற டெல்லி கேப்பிட்டல்சும் (4 வெற்றி, 4 தோல்வியுடன் 8 புள்ளி) இன்று வெளியேற்றுதல் சுற்றில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி காணும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும்.
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பை, பெங்களூரு, குஜராத், உபி, டெல்லி ஆகிய மாநிலங்கள் சார்பில் அணிகள் உள்ளது. இதில் தமிழகம் சார்பில் எந்த அணியும் இல்லை.
இந்நிலையில் சிஎஸ்கே-வின் அடுத்த கட்ட நடவடிக்கை மகளிர் கிரிக்கெட்டில் முதலீடு செய்வதாக இருக்கும் என்று சிஎஸ்கே தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி மகளிர் பிரீமியர் லீக் தொடரில் தமிழகத்தை அடையாளப்படுத்தும் வகையில் ஒரு அணி உருவாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
முதல் 3 சீசன்கள் முறையே மகளிர் கோப்பையை மும்பை, ஆர்சிபி, மும்பை அணிகள் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- உ.பி. வாரியர்ஸ் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது.
- கிரேஸ் ஹாரிஸ் 22 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் நேற்றைய 5வது லீக் ஆட்டத்தில் உ.பி. வாரியர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
நவி மும்பையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
உ.பி. வாரியர்ஸ் அணியின் தொடக்க வீராங்கனைகளாக கேப்டன் மேக் லென்னிங் , ஹெர்லின் டியோல் களமிறங்கினர்.
லென்னிங் 14 ரன்னிலும், டியோல் 11 ரன்னிலும் அவுட் ஆகினர். அடுத்து வந்த லிட்ச்பில்ட் 20 ரன்கள் , கிரன் 5 ரன்கள் எடுத்தனர். ஷிராவத் டக் அவுட் ஆனார்.
பின்னர் களமிறங்கிய டெண்ட்ரா , தீப்தி சர்மாவுடன் ஜோடி நிதானமாக ரன்கள் சேர்த்தது.
20 ஓவர்கள் முடிவில் உ.பி. வாரியர்ஸ் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது.
144 ரன்கள் வெற்றி இலக்குடன் பெங்களூரு அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா மற்றும் கிரேஸ் ஹாரிஸ் களமிறங்கினர்.
கிரேஸ் ஹாரிஸ் 22 பந்துகளில் அரைசதமும் 40 பந்துகளில் 85 ரன்களும் அடித்து ஷிகா பாண்டேவிடம் பந்தில் அவுட் ஆனார். மந்தனா ஆட்டமிழக்காமல் 47 ரன்கள் குவித்தார்.
இறுதியில் 12.1 ஓவர்களில் 9 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை பெங்களூரு அணி வீழ்த்தியது.
- மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் எடுத்தது.
- அதிகபட்சமாக ஹர்மன்பிரீத் கவுர் 74 ரன்கள் குவித்தார்.
நவிமும்பை:
மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் இன்றைய 3-வது லீக் ஆட்டத்தில் மும்பை - டெல்லி அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஜெமிமா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீராங்கனைகளாக அமேலியா கெர்- கமாலினி களமிறங்கினர். இதில் கெர் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். அதனை தொடர்ந்து கமாலினி 16 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து நாட் ஸ்கிவர்-பிரண்ட்- ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். இதில் அதிரடியாக விளையாடிய ஸ்கிவர் 46 பந்தில் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதனை தொடர்ந்து வந்த நிக்கோலா கேரி தொடக்க முதலே அதிரடியாக விளையாடி 12 பந்தில் 21 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதிரடியாக விளையாடிய கவுர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 42 பந்தில் 74 ரன்கள் குவித்தார்.
இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் எடுத்தது.
- தனி ஆளாக போராடிய லிட்ச் பீல்ட் 78 ரன்னில் அவுட் ஆனார்.
- உபி வாரியர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 197 ரன்கள் மட்டுமே எடுத்தது.
5 அணிகள் இடையிலான மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி நவிமும்பையில் நேற்று தொடங்கியது. இதில் இன்று நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் ஆஷ்லி கார்ட்னெர் தலைமையிலான குஜராத் ஜெயன்ட்ஸ்-மெக் லானிங் தலைமையிலான உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி குஜராத் ஜெயன்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
சோபி டிவைன், அனுஷ்கா சர்மா, கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் ஆகியோர் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 207 ரன்கள் எடுத்தது.
கடினமான இலக்கை நோக்கி உபி வாரியர்ஸ் அணியின் தொடக்க வீராங்கனைகளாக டியான்ட்ரா டோட்டின், மெக் லேனிங் இதில் டோட்டின் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து லேனிங் மற்றும் போப் லிட்ச்பீல்ட் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
குறிப்பாக போப் லிட்ச்பீல்ட் அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்தார். நிதானமாக விளையாடிய லேனிங் 27 பந்தில் 30 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்த வந்த வீராங்கனைகளான தியோல் (0), தீப்தி ஷர்மா (1) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தனி ஆளாக போராடிய லிட்ச் பீல்ட் 78 ரன்னில் அவுட் ஆனார்.
இறுதியில் உபி வாரியர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 197 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 10 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.
- குஜராத் அணியின் கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் அரை சதம் விளாசினார்.
- 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட்டுகளை மட்டும் 207 ரன்கள் குவித்தது.
5 அணிகள் இடையிலான மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி நவிமும்பையில் நேற்று தொடங்கியது. இதில் இன்று நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் ஆஷ்லி கார்ட்னெர் தலைமையிலான குஜராத் ஜெயன்ட்ஸ்-மெக் லானிங் தலைமையிலான உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் அணியின் கேப்டன் மெக் லேனிங் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி குஜராத் ஜெயன்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
அதன்படி குஜராத் அணியின் தொடக்க வீராங்கனைகளாக சோபி டிவைன், பெத் மூனி களமிறங்கினர். இதில் பெத் மூனி 13 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து டிவைன் அனுஷ்கா சர்மா ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.
டிவைன் 38 ரன்னிலும் அனுஷ்கா 44 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதனை தொடர்ந்து வந்த கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். அவர் 65 ரன்னில் வெளியேறினார்.
அதனை தொடர்ந்து வந்த வீராங்கனைகள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால் 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட்டுகளை மட்டும் 207 ரன்கள் குவித்தது.
- முதல் 4 ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 4-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
- தமிழகத்தை சேர்ந்த விக்கெட் கீப்பர் 17 வயதான கமலினிக்கு மட்டும் களம் காணும் வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை.
திருவனந்தபுரம்:
இந்தியாவுக்கு வந்துள்ள சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் 4 ஆட்டங்களிலும் இந்திய அணி வரிசையாக வெற்றி பெற்று தொடரில் 4-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா- இலங்கை மோதும் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி திருவனந்தபுத்தில் இன்று நடக்கிறது.
முதல் 3 ஆட்டங்களிலும் இலங்கையை 130 ரன்னுக்குள் சுருட்டிய இந்தியா அந்த இலக்கை 15 ஓவருக்குள் எட்டிப்பிடித்து அசத்தியது. ஆனால் கடந்த ஆட்டம் ஓரளவு சவால் நிறைந்ததாக காணப்பட்டது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி ஸ்மிர்தி மந்தனா, ஷபாலி வர்மா ஆகியோரது அரைசதத்தால் 221 ரன்கள் குவித்தது. 20 ஓவர் போட்டியில் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். பதிலுக்கு இலங்கை அணி 191 ரன்கள் எடுத்து நெருங்கியது. இன்றைய ஆட்டத்திலும் அத்தகைய சவாலை எதிர்பார்க்கலாம்.
இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில், 'உலகக் கோப்பையை வென்ற பிறகு எங்களது தரத்தை இன்னும் உயர்த்த வேண்டும். 20 ஓவர் கிரிக்கெட்டில் மேலும் ஆக்ரோஷமாக விளையாட வேண்டும் என விவாதித்தோம். அந்த வகையில் இது எங்கள் அனைவருக்கும் சிறந்த தொடராக அமைந்துள்ளது.' என்றார். தொடரை முழுமையாக வெல்லும் உத்வேகத்துடன் உள்ள இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த விக்கெட் கீப்பர் 17 வயதான கமலினிக்கு மட்டும் களம் காணும் வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை. இது சம்பிரதாய ஆட்டம் என்பதால் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம்.
இலங்கை அணியை பொறுத்தவரை ஆறுதல் வெற்றியோடு தாயகம் திரும்ப முயற்சிக்கும். அந்த அணியின் கேப்டன் சமாரி அட்டப்பட்டு கூறுகையில், '4-வது ஆட்டத்தில் பேட்டிங்கில் முன்னேற்றம் கண்டிருந்தோம். ஆனாலும் இன்னும் அதிரடியான ஷாட்டுகளை விளாசுவதில் முன்னேற்றம் தேவை. எங்களது பவுலர்கள் நன்றாக வீசவில்லை. ஆனால் அவர்கள் இளம் மற்றும் அனுபவமில்லாதவர்கள். இந்த தொடரில் இருந்து அவர்கள் நிறைய கற்றுக்கொள்வார்கள். கடைசி ஆட்டத்தில் தங்களது மிகச்சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்' என்றார்.
இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 221 ரன்கள் குவித்தது.
- ஸ்மிருதி மந்தனா 80 ரன்னும், ஷபாலி வர்மா 79 ரன்னும் எடுத்தனர்.
திருவனந்தபுரம்:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்துமுடிந்த 3 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை இந்திய அணி கைப்பற்றியது.
இரு அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக விளையாடினர். இந்திய அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 221 ரன்கள் குவித்தது. ஸ்மிருதி மந்தனா 80 ரன்னும், ஷபாலி வர்மா 79 ரன்னும் எடுத்தனர். ரிச்சா கோஷ் 40 ரன்கள் எடுத்தார்.
இந்நிலையில், இந்தப் போட்டியில் 80 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்மிருதி மந்தனா புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10,000 ரன்களைக் கடந்த வீராங்கனை என்ற சாதனையை படைத்தார் ஸ்மிருதி மந்தனா. மேலும் 10,000 ரன்களைக் கடந்த 2-வது இந்திய வீராங்கனை ஆனார். இந்தப் பட்டியலில் மிதாலி ராஜ் 10868 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். ஒட்டுமொத்தமாக 10,000 ரன்களைக் கடந்த 4வது வீராங்கனை ஆவார்.
- இலங்கைக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 3-0 என கைப்பற்றியுள்ளது.
- இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணி ஆறுதல் வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது.
திருவனந்தபுரம்:
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது.
முதல் 3 ஆட்டங்களின் முடிவில் இந்திய அணி வெற்றி பெற்று 3-0 என தொடரைக் கைப்பற்றி உள்ளது.
இந்திய அணி முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், 3வது போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் இலங்கையை வீழ்த்தியது.
இந்நிலையில், இந்தியா-இலங்கை மகளிர் அணிகள் மோதும் 4-வது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடக்கிறது. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தன் பயணத்தை தொடர முயற்சிக்கும்.
ஆனால் தொடரை இழந்துள்ள இலங்கை அணி ஆறுதல் வெற்றி பெற தீவிரம் காட்டும்.
- முதல் 2 ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி வெற்றிபெற்று 2-0 என முன்னிலை வகிக்கிறது.
- இன்றைய ஆட்டத்திலும் வென்று இந்திய அணி தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.
திருவனந்தபுரம்:
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது.
முதல் 2 ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்திய அணி முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் இலங்கையை வீழ்த்தியது.
இந்நிலையில், இந்தியா-இலங்கை மகளிர் அணிகள் மோதும் 3-வது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடக்கிறது.
இதில் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.
இலங்கை அணி தொடரை இழக்காமல் இருக்க வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
- அயர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா வென்றது .
- இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லாரா வால்வார்த் தொடர் நாயகி விருதை வென்றார்.
மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்து தென்ஆப்பிரிக்கா சாம்பியன் பட்டத்தை தவறவிட்டது. ஆனால் அந்த அணியின் கேப்டனும், தொடக்க பேட்டருமான லாரா வால்வார்த் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராகவும், இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராகவும் சதம் அடித்தார். ஒட்டுமொத்தமாக இந்த தொடரில் 9 இன்னிங்சில் 571 ரன்கள் குவித்தார்.
இதன்மூலம் மகளிருக்கான ஐசிசி ஒருநாள் பேட்டர்கள் தரவரிசையில் முதல் இடத்தில் முன்னேறினார். ஏற்கனவே முதல் இடம் பிடித்திருந்த ஸ்மிரிதி மந்தனா 2ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டார். இதனையடுத்து மீண்டும் ஸ்மிரிதி மந்தனா முதலிடம் பிடித்தார். லாரா வால்வார்த் 2 ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.
இந்நிலையில், அயர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3 -0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லாரா வால்வார்த் தொடர் நாயகி விருதை வென்றார்.
இதன்மூலம் மகளிருக்கான ஐசிசி ஒருநாள் பேட்டர்கள் தரவரிசையில் லாரா வால்வார்த் மீண்டும் முதல் இடத்துக்கு முன்னேறினார். ஏற்கனவே முதல் இடம் பிடித்திருந்த ஸ்மிரிதி மந்தனா 2ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
- கிரிக்கெட்டை விட நான் வேறு எதையும் அதிகமாக நேசிப்பதாக எனக்கு தோன்றவில்லை.
- ஒரு குழந்தையாக இருந்தபோதிலிருந்தே, பேட்டிங் மீதான அந்த வெறி எப்போதும் இருந்தது.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா. சமீபத்தில் இந்திய அணி மகளிர் உலகக் கோப்பையை வெல்வதில் மந்தனா முக்கிய பங்காற்றினார்.
இந்த சூழலில் 29 வயதான மந்தனாவும், பிரபல இசையமைப்பாளர் மத்தியபிரதேசத்தை சேர்ந்த பலாஷ் முச்சாலும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் மோதிரம் மாற்றி நிச்சயம் செய்து கொண்டனர்.
இதனையடுத்து இருவரின் திருமணம் கடந்த 23-ம் தேதி நடப்பதாக இருந்த நிலையில் மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாசுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டடு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதனால் திருமணம் காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது.
இதற்கிடையே மந்தனாவின் வருங்கால கணவர் பலாஷ் முச்சல் வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமாகப் பேசியதாகக் கூறப்படும் 'ஸ்கிரீன்ஷாட்கள்' இணையத்தில் வேகமாக பரவின. இதைதொடர்ந்து பலாஸ் உடன் இருக்கும் திருமண புகைப்படங்களை மந்தனா நீக்கினார்.
அதனை தொடர்ந்து, திருமணம் தள்ளிவைக்கப்பட்ட சில வாரங்களுக்கு பின் ஸ்மிருதி மந்தனா, தனது திருமணம் ரத்து செய்யப்பட்டது என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.
இந்நிலையில் கிரிக்கெட்டை விட நான் வேறு எதையும் அதிகமாக நேசிப்பதாக எனக்கு தோன்றவில்லை என ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
கிரிக்கெட்டை விட நான் வேறு எதையும் அதிகமாக நேசிப்பதாக எனக்கு தோன்றவில்லை. இந்திய ஜெர்சியை அணிவதுதான் எங்களை இயக்கும் உந்துசக்தி. எல்லாப் பிரச்சனைகளையும் ஒதுக்கி வைத்துவிடும். அந்த ஒரு எண்ணமே வாழ்க்கையில் கவனம் செலுத்த உதவுகிறது. ஒரு குழந்தையாக இருந்தபோதிலிருந்தே, பேட்டிங் மீதான அந்த வெறி எப்போதும் இருந்தது. அதை யாரும் புரிந்துகொள்ளவில்லை. ஆனால் என் மனதில், நான் எப்போதும் ஒரு உலக சாம்பியன் என்று அழைக்கப்பட வேண்டும் என்றே விரும்பினேன்.
என ஸ்மிருதி மந்தனா கூறினார்.
- இந்தியா - இலங்கை அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
- இந்த தொடர் டிசம்பர் 21-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை நடைபெறுகிறது.
இலங்கை மகளிர் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
அதன்படி இந்த டி20 தொடர் டிசம்பர் 21-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை நடக்கிறது. முதல் 2 போட்டிகள் விசாகப்பட்டினத்திலும் 3 போட்டிகள் திருவனந்தபுரத்திலும் நடைபெறுகிறது.
முதல் டி20 டிசம்பர் 21-ந் தேதியும் 2-வது டி20 போட்டி 23-ந் தேதியும் விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து 3,4,5-வது டி20 போட்டிகள் முறையே 26, 28, 30 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரத்திலும் நடைபெறுகிறது.






