என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    கேப்டன் நாக்... உ.பி. வாரியர்ஸ் அணிக்கு 208 ரன்கள் இலக்கு நிர்ணயித்த குஜராத்
    X

    கேப்டன் நாக்... உ.பி. வாரியர்ஸ் அணிக்கு 208 ரன்கள் இலக்கு நிர்ணயித்த குஜராத்

    • குஜராத் அணியின் கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் அரை சதம் விளாசினார்.
    • 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட்டுகளை மட்டும் 207 ரன்கள் குவித்தது.

    5 அணிகள் இடையிலான மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி நவிமும்பையில் நேற்று தொடங்கியது. இதில் இன்று நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் ஆஷ்லி கார்ட்னெர் தலைமையிலான குஜராத் ஜெயன்ட்ஸ்-மெக் லானிங் தலைமையிலான உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் அணியின் கேப்டன் மெக் லேனிங் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி குஜராத் ஜெயன்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

    அதன்படி குஜராத் அணியின் தொடக்க வீராங்கனைகளாக சோபி டிவைன், பெத் மூனி களமிறங்கினர். இதில் பெத் மூனி 13 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து டிவைன் அனுஷ்கா சர்மா ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.

    டிவைன் 38 ரன்னிலும் அனுஷ்கா 44 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதனை தொடர்ந்து வந்த கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். அவர் 65 ரன்னில் வெளியேறினார்.

    அதனை தொடர்ந்து வந்த வீராங்கனைகள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால் 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட்டுகளை மட்டும் 207 ரன்கள் குவித்தது.

    Next Story
    ×