search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman arrested"

    • ராம் பாலாஜி, திருமணம் செய்ய போகும் பெண்தானே என நினைத்து வித்யா ஸ்ரீ கேட்கும் போதெல்லாம் பணத்தை வாரி இறைத்துள்ளார்.
    • வித்யா ஸ்ரீ -அஜித்குமார் இருவரையும் வாடிப்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

    சென்னை:

    சென்னை போரூர் முகலிவாக்கம் பகுதியில் வசித்து வருபவர் ராம் பாலாஜி. தொழில் அதிபரான இவர், ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார்.

    மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் ராம் பாலாஜி மதுரையில் திருமணம் ஒன்றில் பங்கேற்பதற்காக சென்றிருந்தார். அப்போது வித்யா ஸ்ரீ என்ற 31 வயது இளம்பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. வித்யா ஸ்ரீ தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டு இனிக்க இனிக்க பேசினார்.

    இதையடுத்து ராம் பாலாஜியின் செல்போன் எண்ணையும் அவர் வாங்கிக் கொண்டார். திருமண நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ராம்பாலாஜி சென்னை திரும்பிய பின்னர் செல்போனில் தொடர்பு கொண்டு வித்யா ஸ்ரீ பேசி வந்தார். அப்போது உங்களை எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது என்று ஆசை வார்த்தைகளை அள்ளி வீசி காதலில் வீழ்த்தினார்.

    நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று வித்யா ஸ்ரீ கூறினார். இதற்கு ராம் பாலாஜியும் சம்மதித்தார்.

    ராம் பாலாஜியிடம் பணம் இருப்பதை தெரிந்து கொண்ட வித்யா ஸ்ரீ கொஞ்சம் கொஞ்சமாக பணம் பறித்துள்ளார். தனது செலவுகளை கூறி வங்கி கணக்கையும் வித்யா ஸ்ரீ அனுப்பி வைத்துள்ளார்.

    இதையடுத்து ராம் பாலாஜி, திருமணம் செய்ய போகும் பெண்தானே என நினைத்து வித்யா ஸ்ரீ கேட்கும் போதெல்லாம் பணத்தை வாரி இறைத்துள்ளார். இப்படி ராம் பாலாஜியிடம் இருந்து வித்யா ஸ்ரீ ரூ.50 லட்சம் பணத்தை சுருட்டினார்.

    ராம் பாலாஜி திருமணம் பற்றி பேசும்போதெல்லாம் வித்யா ஸ்ரீ சாக்கு போக்கு சொல்லி காலம் தாழ்த்தி வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வித்யா ஸ்ரீயை ராம் பாலாஜியால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராம் பாலாஜி இதுபற்றி விசாரித்தார். அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மதுரை அலங்காநல்லூரை அடுத்த சிக்கந்த சாவடி பகுதியில் வசித்து வந்த வித்யா ஸ்ரீ வீட்டை காலி செய்துவிட்டு ஓட்டம் பிடித்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ராம் பாலாஜி தான் ஏமாற்றப்பட்டது குறித்து அலங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்குப் பதிவு செய்து வித்யா ஸ்ரீயை தேடி கண்டுபிடித்து கைது செய்தனர். அவரது நண்பரான அஜித்குமாரும் பிடிபட்டார். ராம்பாலாஜி இடமிருந்து ரூ.50 லட்சம் பணத்தை சுருட்டியதற்கு அஜித்குமார் உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    வித்யா ஸ்ரீ -அஜித்குமார் இருவரையும் வாடிப்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். வித்யா ஸ்ரீ இதுபோன்று வேறு யாரையும் ஏமாற்றி உள்ளாரா? என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அடகு கடையில் போலி நகைகளை வைத்து பணத்தை கொள்ளையடித்து செல்வது கடந்த ஒரு வருடமாகநடந்து வருகிறது
    • 10 பவுன் போலி நகையை அடகு வைத்து மர்மப் பெண் ஒருவர் அதற்கான பணத்தை வாங்கி சென்று விட்டார்,

    விழுப்புரம்:

    மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அடகு கடையில் போலி நகைகளை வைத்து பணத்தை கொள்ளையடித்து செல்வது கடந்த ஒரு வருடமாக தொடர்கதையாகி வருகிறது.இதுபோல் போலி நகையை அடகு வைத்து பணம் பறிக்கும் பெண் ஒருவரை கடந்த வாரம் போலீசார் கைது செய்தனர். மரக்காணம்- புதுவை சாலையில் ஒரு நகைக்கடை உள்ளது. இந்த நகை கடையில் கடந்த 6மாதத்திற்கு முன் 10 பவுன் போலி நகையை அடகு வைத்து மர்மப் பெண் ஒருவர் அதற்கான பணத்தை வாங்கி சென்று விட்டார். இதனைத் தொடர்ந்து நேற்று இரவு மீண்டும் அதே கடைக்கு ஒரு கும்பல் சென்று நகையை கொடுத்து பணம் கேட்டுள்ளனர்

    .அந்த கடைக்காரர் ஏற்கனவே பல லட்சங்களை இழந்திருந்ததால் மர்ம நபர்கள் கொடுத்த நகையை முறையாக சோதனை செய்துள்ளார். அப்போது அந்த கும்பல் கொடுத்த நகைகள் போலியானவை என தெரியவந்துள்ளது. இதனால் அந்த நகைக்கடையின் உரிமையாளர் மரக்காணம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அக் கும்பலை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் அந்த கும்பல் யார் இவர்களுடன் எந்தெந்த கும்பல் தொடர்பில் உள்ளது. இதுபோல் இவர்கள் எந்தெந்த இடங்களில் போலி நகைகளை அடகு வைத்து பணம் பறித்து சென்றுள்ளனர் என்ற முழு விவரமும் தெரியவரும் என போலீசார் கூறினர்.இதனால் அவர்களடம் போலீசார் தொடர்ந்து ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனிப்படை போலீசார் சத்யாவுடன் கோனியம்மன் கோவில் தேரோட்டத்தில் செயின் பறிக்க வந்த சத்யாவின் கணவர் உள்பட 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
    • தேரோட்டம் செல்லும் இடங்களுக்கு சென்று எந்த இடத்தில் செயின் பறிக்க முடியும், செயினை பறித்த பின்னர் எப்படி தப்பிப்பது என்பது குறித்து பார்வையிடுவோம்.

    கோவை:

    கோவையில் ஓடும் பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் செயின் மற்றும் பணத்தை பறித்து செல்லும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மாநகர போலீசார் சாதாரண உடையில் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் பூமார்க்கெட்டுக்கு பஸ்சில் வந்த பெண் ஒருவரிடம் இளம்பெண் ஒருவர் 2 பவுன் தங்க செயினை பறித்து தப்பி ஓட முயன்றார். இதனை பார்த்த அங்கு இருந்தவர்கள் அந்த இளம்பெண்ணை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை ஆர்.எஸ்.புரம் போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் அவர் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பெத்தநாயக்கன்பட்டியை சேர்ந்த வடிவேல் என்பவரது மனைவி சத்யா (வயது 32) என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது சத்யா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    நாங்கள் பழனி பெத்தநாயக்கன்பட்டியில் குடும்பத்துடன் வசித்து வருகிறோம். எங்களது குடும்பத்தில் உள்ளவர்கள் செயின் பறிப்பை தொழிலாக கொண்டுள்ளோம்.

    தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் நடைபெறும் திருவிழா மற்றும் தேரோட்ட நிகழ்ச்சிகளுக்கு குடும்பத்துடன் பக்தர் போல செல்வோம். அங்கு நகைகளை அணிந்து வரும் பெண்களை கண்காணித்து அவர்களை பின் தொடர்ந்து செல்வோம். பின்னர் கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவர்களுக்கே தெரியாமல் செயினை பறித்து விட்டு சென்று விடுவோம்.

    அதன்பின்னர் நாங்கள் எங்கள் சொந்த ஊருக்கு சென்று நகைகளை விற்று ஆடம்பரமாக வாழ்வோம். இப்படி தமிழகத்தில் திருவண்ணாமலை, பழனி, திருப்பதி, கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்த கோவில் திருவிழா மற்றும் தேரோட்ட நிகழ்ச்சியில் நாங்களை கைவரிசை காட்டி உள்ளோம்.

    கோவை கோனியம்மன் கோவில் தேரோட்டம் நாளை நடைபெற உள்ளது. இதில் பெண்களிடம் நகை பறிப்பதற்காக நான், எனது கணவர் மற்றும் உறவினர் பெண்கள் 3 பேர் என மொத்தம் 5 பேர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவைக்கு வந்தோம்.

    இங்கு வந்து தேரோட்டம் செல்லும் இடங்களுக்கு சென்று எந்த இடத்தில் செயின் பறிக்க முடியும், செயினை பறித்த பின்னர் எப்படி தப்பிப்பது என்பது குறித்து பார்வையிட்டோம். சம்பவத்தன்று நானும் எனது கணவரும் பஸ்சில் சென்றோம். அப்போது அங்கு இருந்த ஒரு பெண்ணிடம் செயினை பறிக்க முயன்ற போது சிக்கிக்கொண்டேன். போலீசார் என்னை கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் ரவிக்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, உமா, ஆனந்த மூர்த்தி, ஏட்டுக்கள் கார்த்திக், பூபதி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் சத்யாவுடன் கோனியம்மன் கோவில் தேரோட்டத்தில் செயின் பறிக்க வந்த அவரது கணவர் உள்பட 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • அமல்ராணி மற்றும் அவரது கணவர் கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் கருப்பசாமி நகரில் உள்ள வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்தி வந்தது தெரியவந்தது.
    • விபசார வழக்கில் அ.தி.மு.க. பெண் நிர்வாகி கணவருடன் கைது செய்யப்பட்ட சம்பவம் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    விருதுநகர்:

    விருதுநகர் பகுதியில் விபசாரம் நடப்பதாக பாண்டியன் நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கருப்பசாமி நகர் பகுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அங்குள்ள வீட்டில் விபசாரம் நடந்தது தெரியவந்தது. அங்கிருந்த 30 வயதுடைய பெண்ணை போலீசார் மீட்டனர்.

    இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் விபசாரம் செய்தது பாத்திமாநகரை சேர்ந்த சந்திரசேகரன் (வயது42), அவரது மனைவி அமல்ராணி (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    விபசாரத்துக்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் அமல்ராணி மாவட்ட அ.தி.மு.க. மகளிர் அணி துணைத்தலைவியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அமல்ராணி மற்றும் அவரது கணவர் கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் கருப்பசாமி நகரில் உள்ள வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்தி வந்தது தெரியவந்தது.

    விபசார வழக்கில் அ.தி.மு.க. பெண் நிர்வாகி கணவருடன் கைது செய்யப்பட்ட சம்பவம் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • இந்திரா, ராஜலட்சுமி என்பவரை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்த முயன்றுள்ளார்.
    • அனைத்து மகளிர் போலீசார் இந்திராவை கையும் களவுமாக பிடித்து விசாரணை செய்தனர்.

    கடலூர்:

    சிதம்பரம் அருகே திட்டுக்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி இந்திரா (வயது 45). இவர் சிதம்பரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் வால்காரை பகுதியைச் சேர்ந்த வீராசாமி மனைவி ராஜலட்சுமி (29) என்பவரை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்த முயன்றதாக சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அனைத்து மகளிர் போலீசார் இந்திராவை கையும் களவுமாக பிடித்து விசாரணை செய்ததில் ராஜலட்சுமியை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்த முயன்றது தெரியவந்தது. உடனே அனைத்து மகளிர் போலீசார் இந்திரா மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    • ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர், ஏட்டுகள் தலைமையில் தனிப்படை போலீசார் நகை பறிப்பில் ஈடுபடும் பெண் குறித்து தீவிர விசாரணை நடத்திவந்தனர்.
    • ஊத்துக்கோட்டை அருகே உள்ள சூளைமேனி பகுதியில் சந்தேகத்துக்கிடமாக சுற்றிய இளம்பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள கூனிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராணி(வயது 70). சில நாட்களுக்கு முன்பு இவரிடம் டிப்டாப் இளம்பெண் ஒருவர் பேச்சு கொடுத்து முதியோர் ஓய்வு தொகை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகளை கூறினார்.

    அப்போது மூதாட்டி ராணியிடம் அவர் அணிந்து இருந்த தங்க நகைகளை ஒரு முறை போட்டு பார்த்து கொடுத்து விடுவதாக கூறி நகையை சுருட்டிக்கொண்டு சென்று திருடி சென்று விட்டார்.

    இதேபோல் திருவள்ளூர் அருகே உள்ள பொன்னப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சாந்தி, பெரம்பூர் கிராமத்தை சேர்ந்த எல்லம்மாள் (60) ஆகியோரிடமும் இதேபோல் நகை பறிக்கப்பட்டது.

    நூதன முறையில் மூதாட்டிகளை குறிவைத்து நகை பறிப்பில் ஈடுபடும் டிப்-டாப் இளம்பெண் குறித்து ஊத்துக்கோட்டை மற்றும் பென்னாலூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் ஏழுமலை, ஏட்டுகள் ராவ்பகதூர், செல்வராஜ், லோகநாதன் ஆகியோரின் தலைமையில் தனிப்படை போலீசார் நகை பறிப்பில் ஈடுபடும் பெண் குறித்து தீவிர விசாரணை நடத்திவந்தனர்.

    இதற்கிடையே ஊத்துக்கோட்டை அருகே உள்ள சூளைமேனி பகுதியில் சந்தேகத்துக்கிடமாக சுற்றிய இளம்பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் அவர் அம்பத்தூர் அருகே உள்ள கல்யாணபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவரது மனைவி ஷீபா புஷ்பராணி (35) என்பதும் அவர் மூதாட்டிகளை குறிவைத்து முதியோர் உதவித்தொகை வாங்கித்தருவதாக பேச்சு கொடுத்து நூதன முறையில் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து ஷீபா புஷ்பராணியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 8 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. கைதான ஷீபா புஷ்ப ராணியை போலீசார் ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.

    • இன்ஸ்பெக்டர் நந்தகுமார் (பொ) சப்இன்ஸ்பெக்டர் தங்கவேல்மற்றும் போலீசார் தீவிர ரோந்துபணியில்ஈடுபட்டனர்.
    • தனலட்சுமி தனது வீட்டின் பின்புறம் எரிசாராய பாக்கெட்களை விற்றார்.


    பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் (பொ) சப்இன்ஸ்பெக்டர் தங்கவேல்மற்றும் போலீசார் தீவிர ரோந்துபணியில்ஈடுபட்டனர். அப்போது பண்ருட்டி காந்திநகர் மண்ணாங்கட்டி மனைவி தனலட்சுமி (வயது 39) என்பவர் தனது வீட்டின் பின்புறம் எரிசாராய பாக்கெட்களை விற்றார். இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்துஎரிசாராய பாக்கெட்களைபறிமுதல் செய்துபண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • போலீசார் ரோந்துபணியில்ஈடுபட்டுஇருந்தனர்.
    • எரிசாராய பாக்கெட்களை அரசு அனுமதிஇல்லாமல்விற்பனையில்ஈடுபட்டது தெரிய வந்தது.

    கடலூர்:

    பண்ருட்டி போலீஸ்இன்ஸ்பெக்டர் நந்தகுமார் (பொ)சப்இன்ஸ்பெக்டர் தங்கவேல்மற்றும் போலீசார் ரோந்துபணியில்ஈடுபட்டுஇருந்தனர். அப்போது பண்ருட்டி பாரதி நகர் வடக்கு தெரு முருகன் மனைவிகிருஷ்ணவேணி (வயது50).இவர்வீட்டின் பின்புறம் அரசால்தடைசெய்யப்பட்டஎரிசாராய பாக்கெட்களைஅரசு அனுமதிஇல்லாமல்விற்பனையில்ஈடுபட்டது தெரிய வந்தது.இதனை தொடர்ந்துஅவரை கைது செய்துஅவரிடம் இருந்து எரிசாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • போலீசார் ஆணைமடுவு கிராமத்தில் ரோந்துப்பணி மேற்கொண் டனர்.
    • நந்தினி என்பவர் வீட்டில் சாராயத்தை பதுக்கி விற்பனை செய்து கொண்டிருந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே வடபொன்பரப்பி சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் தலைமையிலான போலீ சார் ஆணைமடுவு கிராமத்தில் ரோந்துப்பணி மேற்கொண் டனர். அப்போது அதே ஊரை சேர்ந்த ஆனந்த் மனைவி நந்தினி என்பவர் வீட்டில் சாராயத்தை பதுக்கி விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்து அவர் மீது வழக்கு பதிந்து அவரிடம் இருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • ஜெயலட்சுமி வீட்டின் பின்புறம் அரசால் தடை செய்யப்பட்ட சாராய பாக்கெட்டுகளை அரசு அனுமதி இல்லாமல் விற்பனை செய்தது தெரிய வந்தது.
    • சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கடலூர்:

    புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் நேற்றுதீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பண்ருட்டி தாலுகா பெரியஎலந்தம்பட்டு புதுநகர் பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 70) என்பவர் வீட்டின் பின்புறம் அரசால் தடை செய்யப்பட்ட சாராய பாக்கெட்டுகளை அரசு அனுமதி இல்லாமல் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்து அவரிடம் இருந்து சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • ஒரு மர்ம ஆசாமி இவரது கழுத்தில் இருந்த ரூ.2லட்சம் மதிப்பிலான 6 பவுன் தங்கச் செயினை திருடிச் சென்று விட்டார்.
    • தனது பெயர் பூமிகா என்றும், சேலம் ஒன்றாவது வார்டு, 5 வது ரோட்டில் வசிப்பதாகவும் கூறினார்.

    கடலூர்:

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேற்று முன்தினம் ஆருத்ரா தரிசனம் நடந்தது. இதில் பல்வேறு பகுதியை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று நடராஜரை தரிசித்தனர். அதன்படி செங்கல்பட்டு மேட்டுத் ெதருவைச் சேர்ந்த ஹேமாவதி (வயது 81) தனது உறவினர்களுடன் ஆருத்ரா தரிசன விழாவில் கலந்து கொண்டார். அங்கு கூட்ட நெரிசலில் ஒரு மர்ம ஆசாமி இவரது கழுத்தில் இருந்த ரூ.2லட்சம் மதிப்பிலான 6 பவுன் தங்கச் செயினை திருடிச் சென்று விட்டார். இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் கோவிலுக்குள் சென்றனர். அங்குள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்த போது, சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஹேமாவதியின் கழுத்தில் இருந்த செயினை திருடும் காட்சி பதிவாகியிருந்தது.

    இதிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து அந்த பெண்ணை போலீசார் தேடுகின்றனர். அப்போது அவர் சிதம்பரம் நடராஜர் கோவில் அருகில் நின்று கொண்டிருப்பதை கண்ட போலீசார் அவரை சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரிடமிருந்த 6 பவுன் தங்கச் செயினை பறிமுதல் செய்த போலீசார் மூதாட்டி ஹேமாவதியிடம் வழங்கினர். விசாரணையில், தங்கச் செயினை பறித்தவர் தனது பெயர் பூமிகா என்றும், சேலம் ஒன்றாவது வார்டு, 5 வது ரோட்டில் வசிப்பதாகவும் கூறினார். இது போல ஒரு முகவரி இருக்குமா என்று சந்தேகமடைந்த போலீசார் பூமிகாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நோட்டும் அசல் ரூபாய் போல் இல்லாததால் சந்தேகமடைந்த பஞ்சவர்ணம் விருதுநகர் மேற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
    • துரைசெல்வியிடம் கள்ளநோட்டு கும்பல் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் பழக்கடை வைத்திருப்பவர் பஞ்சவர்ணம் (வயது40). இவரிடம் ஒரு பெண் பழம் வாங்கியுள்ளார். அவர் கொடுத்த 500 ரூபாய் நோட்டு கள்ளநோட்டு போல் இருந்துள்ளது. இதனால் வேறு ரூபாய் நோட்டை தருமாறு பஞ்சவர்ணம் கூறியுள்ளார்.

    உடனே அந்த பெண் முதலில் கொடுத்த 500 ரூபாயாயை வாங்கி கொண்டு வேறு ஒரு 500 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார். அந்த நோட்டும் அசல் ரூபாய் போல் இல்லாததால் சந்தேகமடைந்த பஞ்சவர்ணம் விருதுநகர் மேற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சம்பந்தப்பட்ட பெண் கொடுத்த 500 ரூபாய் நோட்டுகளை வாங்கி சோதனை செய்து பார்த்தனர். இதில் அவை இரண்டும் கள்ளநோட்டுகள் என்பது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து பழம் வாங்க வந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் சிவகாசி அருகே உள்ள வேண்டுராயபுரத்தை சேர்ந்த சுப்புதாய் (56) என்பதும், அவர் அதே பகுதியில் உள்ள துரைச்செல்வி என்பவரின் மகள் பெற்ற தொகையிலிருந்து இந்த நோட்டை எடுத்து வந்து பழம் வாங்கியதாக தெரிவித்தார்.

    இதையடுத்து வேண்டுராயபுரத்தில் உள்ள துரைசெல்வியின் வீட்டிற்கு சென்று போலீசார் அதிரடி சோதனை செய்தனர். அப்போது அங்கு கட்டு கட்டாக மறைத்து வைக்கப்பட்டிருந்த கள்ளநோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

    இதைத்தொடர்ந்து கள்ளநோட்டை புழக்கத்தில் விட்டதாக சுப்புதாயை போலீசார் கைது செய்தனர். துரைசெல்வியிடம் கள்ளநோட்டு கும்பல் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    துரைசெல்வி கள்ளநோட்டு கும்பலை சேர்ந்த சில நபர்களின் பெயர்களை தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் கள்ளநோட்டு கும்பலை கூண்டோடு பிடிக்க போலீசார் வலைவிரித்துள்ளனர்.

    கள்ளநோட்டை புழக்கத்தில் விட்டதாக பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×