search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் கைது"

    • பெண் 12 முறை கருச்சிதைவு அடைந்ததாகவும், பிரசவத்தின் மூலம் 5 குழந்தைகள் இருப்பதாகவும் ஏமாற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
    • மோசடிக்கு கூட்டாளி ஒருவரும் உதவி செய்துள்ளார்.

    இத்தாலியை சேர்ந்த பார்பரா ஐயோலே என்ற 50 வயதான பெண் ஒருவர் கடந்த 24 ஆண்டுகளில் 17 முறை கர்ப்ப நாடகமாடியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த தகவல், இணையத்தில் பேசு பொருளாகி வருகிறது.

    பார்பரா மாநில அரசு வழங்கிய மகப்பேறு உதவித்தொகைகளை பெறுவதற்காகவும், வேலையில் இருந்து ஓய்வு பெறுவதற்காகவும் இதுபோன்று நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதற்காக அவர் போலி மருத்துவ ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளார். அவர் 12 முறை கருச்சிதைவு அடைந்ததாகவும், பிரசவத்தின் மூலம் 5 குழந்தைகள் இருப்பதாகவும் ஏமாற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது இந்த மோசடிக்கு கூட்டாளி ஒருவரும் உதவி செய்துள்ளார். இதைத்தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    • சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனை செய்தபோது, அதில் 12 பெட்டிகளில் 576 மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.
    • புதுச்சேரியில் இருந்து தியாகதுருகத்திற்கு மது பாட்டில்களை கடத்தி சென்றதும் தெரியவந்தது.

    கடலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையிலான போலீசார், நேற்று நள்ளிரவு கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி விசாரணை நடத்தினர். அந்த காரில் இருந்த பெண் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனை செய்தபோது, அதில் 12 பெட்டிகளில் 576 மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. அந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்திய போது அவர், தியாகதுருகத்தை சேர்ந்த கோவிந்தன் மனைவி விஜயா (43) என்பதும், புதுச்சேரியில் இருந்து தியாகதுருகத்திற்கு மது பாட்டில்களை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து விஜயாவை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • அன்னதானப்பட்டி போலீசார் மணியனூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • மணியனூர் பாரதி நகரில் மளிகைக் கடையில் வைத்து புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் அன்னதானப்பட்டி போலீசார் மணியனூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மணியனூர் பாரதி நகரில் மளிகைக் கடையில் வைத்து புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து மளிகைக் கடையில் புகையிலைப் பொருட்கள் விற்றதாக பரிமளா (40) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    • மதுரையில் அடகு கடை உரிமையாளரிடம் ரூ. 1¼ லட்சம் திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.
    • அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா பகுதிகளை ஆய்வு செய்தனர்.

    மதுரை

    மதுரை சிம்மக்கல் எல்.என்.பி. அக்ரஹாரத்தை சேர்ந்தவர் சுதர்சன் (வயது35). இவர் ஜான்சி ராணி பூங்கா பகுதியில் உள்ள மதார்கான் டதோர் தெருவில் தங்க நகை அடகு கடை நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு சுதர்சன் கடையை பூட்டி விட்டு ரூ. 1 லட்சத்து 31 ஆயிரத்தை பையில் வைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். பணப்பையை மோட்டார் சைக்கிளில் தொங்க விட்டிருந்தார். வீட்டுக்கு சென்ற அவர் பணப்பையை எடுத்துச்செல்லவில்லை. சிறிது நேரம் கழித்து பணப்பை குறித்து ஞாபகம் வந்ததும் சுதர்சன் உடனே வீட்டின் வெளியே வந்து மோட்டார் சைக்கிளை பார்த்தார்.

    அப்போது அதில் இருந்த பணப்பை திருடு போயிருந்தது. இதுகுறித்து அவர் திலகர் திடல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா பகுதிகளை ஆய்வு செய்தனர். அப்போது செல்லூர் கல் பாலம் காளிதோப்பு பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் மனைவி யோகபிரியா (வயது 31) பணப்பையை திருடிச்சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    • விமல்ராஜா வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டு சென்னையில் வசித்து வருகிறார்.
    • பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே உள்ள ஈச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விமல்ராஜா. இவருக்கும் திருச்சி மாவட்டம், தாத்தையார்பேட்டையை சேர்ந்த நடேசன் மகள் கோகிலா (28) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இந்த நிலையில் கோகிலாவிற்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் இரு வீட்டார்களும் பேசி விமல்ராஜாவையும் கோகிலாவையும் பிரித்து வைத்துள்ளனர். தற்போது விமல்ராஜா வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டு சென்னையில் வசித்து வருகிறார்.

    விமல்ராஜா தன்னை பிரிந்ததற்கும், 2-வது திருமணம் செய்ததற்கும் அவரது அக்காள் கணவர் தனபால் (வயது 50) காரணம் என்று கோகிலா சந்தேகம் அடைந்தார். இதையடுத்து சம்பவத்தன்று ஈச்சம்பட்டியில் உள்ள தனபாலின் வீட்டிற்கு வந்த கோகிலா அவரது மோட்டார்சைக்கிள்களுக்கு தீ வைத்தார்.

    இதுகுறித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து கோகிலாவை கைது செய்தனர்.

    அஞ்சலை (வயது 59) என்பவர் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சப்-இன்ஸ்பெ க்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் கிடங்குடையாம்பட்டு கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.அப்போது அங்குள்ள காட்டுக்கொட்டாய் பகுதி யில் அரசம்பட்டை சேர்ந்த அஞ்சலை (வயது 59) என்பவர் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதை பார்த்த போலீசார் அஞ்சலையை கைது செய்து, அவரிடமிருந்து 12 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • கடந்த சில தினங்களாக கிராம் கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டு வந்த தங்கம் தற்போது கிலோ கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
    • விமானத்தில் வந்த பணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

    கே.கே. நகர்:

    திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளான மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் வரும் பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவதும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.

    அந்த வகையில் கடந்த சில தினங்களாக கிராம் கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டு வந்த தங்கம் தற்போது கிலோ கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ஒரு மணிக்கு சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் விமானம் திருச்சி வந்தது.

    இந்த விமானத்தில் வந்த பணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் பயணம் செய்த பெண் பயணி ஒருவரை தனியே அழைத்து சென்று சோதனை செய்தபோது அவர் தனது உள்ளாடையின் பின்பகுதியில் தங்கத்தை பேஸ்ட் வடிவில் மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது .

    விசாரணையில் அந்த பெண் பயணி பாண்டிச்சேரியை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரிடம் இருந்து 909.5 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ. 55.07 லட்சம் ஆகும்.

    • மதுரை மாட்டுத்தாவணியில் 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
    • இது தொடர்பாக ஆந்திர பெண் கைது செய்யப்பட்டார்.

    மதுரை

    மதுரை மாவட்ட, நகர் பகுதிகளில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் இளைஞர்கள், கல்லூரி மாணவர்களை குறிவைத்து சமூக விரோத கும்பல் கஞ்சா விற்று வருகிறது. இந்தநிலையில் மதுரை மாட்டுத்தாவணி பின்புறம் உள்ள மீன் மார்க்கெட் அருகே கழிவு நீரேற்றும் நிலையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து மாட்டுத்தாவணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெள்ளதுரை, போலீசார் அந்தப்பகுதியில் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது அங்கு ஒரு இளம்பெண் கட்டை பையுடன் சந்தேகத்திற்கி டமான வகையில் நின்றி ருந்தார். உடனே போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    ஆனால் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதையடுத்து போலீசார் அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது, அதில் 5 கிலோ 300 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அதிர்ச்சி யடைந்த போலீசார் அந்த பெண்ணை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

    இதில் அவர் ஆந்திர மாநிலம் ராயபுரம் இந்தூர் காலனியை சேர்ந்த லோகேஷ்வர பிரசாத் மனைவி பத்ம சலபக்கா பத்மஸ்ரீ(வயது 32) என தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து ஏ.டி.எம்கார்டு உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

    அவர் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி மதுரையில் சிலரிடம் விற்க வந்துள்ளார். அவரிடம் கஞ்சாவை கொடுத்து அனுப்பியது யார்? மதுரையில் உள்ள கூட்டாளிகள் விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒரு பெண் பயணி, கிரீன் சேனல் வழியாக செல்ல முயன்றார்.
    • பெண் மீது சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், அவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    துபாயில் இருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு வந்த விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் கொச்சி நெடும்பச்சேரி விமான நிலையத்தில் துபாய் விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது ஒரு பெண் பயணி, கிரீன் சேனல் வழியாக செல்ல முயன்றார். அவர் மீது சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், அவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவரது உடலில் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பெண், சானிட்டரி நாப்கினுக்குள் வைத்திருந்த 679 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.29 லட்சம் ஆகும். சானிட்டரி நாப்கினுக்குள் மறைத்துவைத்து தங்கத்தை கடத்தி வந்த அந்த பெண் திருப்பூரை சேர்ந்தவர் ஆவார். அவரை சுங்கத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை
    • கலெக்டர் உத்தரவு

    கண்ணமங்கலம்:

    சந்தவாசல் அருகே உள்ள கேளூர் காலனியை சேர்ந்தவர் பரிமளா (வயது 45) என்பவர் கடந்த மாதம் 20-ந் தேதி தனது வீட்டின் பின்புறம் சாராயத்தை பதுக்கி வைத்திருந்ததை கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சந்தவாசல் சப் - இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் கண்டுபிடித்து, பறிமுதல் செய்து அழித்தனர்.

    இவர் ஏற்கனவே பலமுறை சாராய வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்பதால் பரிமளாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி. கார்த்திகேயன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    இதையடுத்து கலெக்டர் முருகேஷ், பரிமளாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். 

    • பிரபல தனியார் நிறுவனத்தில் பணமுதலீடு செய்து வந்தார்.
    • இந்துமதி நூதன முறையில் பணமோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.

    கொளத்தூர்:

    சென்னை, பெரவள்ளூர், எஸ். ஆர். பி காலனி 8-வது தெருவை சேர்ந்தவர் ஜெரி மெசாக். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    இவர் பிரபல தனியார் நிறுவனத்தில் பணமுதலீடு செய்து வந்தார். இவருக்கு அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த அனகாபுத்தூரைச் சேர்ந்த இந்துமதி (31) என்பவர் பணமுதலீடு சம்பந்தமாக உதவி செய்து வந்ததாக தெரிகிறது.

    இதற்கிடையே வேலையை விட்டு நின்ற இந்துமதி தொடர்ந்து வீட்டில் இருந்தபடி பணமுதலீடு சம்பந்தமாக ஆலோசனை வழங்கி உதவி செய்து வருவதாக ஜெர்ரி மெசாக்கிடம் கூறினார். மேலும் அவரிடம் சிறுக சிறுக முதலீடு செய்ய பணத்தையும் வாங்கினார். ஜெர்ரி மெசாக் தனது மனைவி மற்றும் மகளின் பெயரில் ரூ.72 லட்சத்து 50 ஆயிரம் செலுத்தி இருந்தார். இதற்கான ரசீது மற்றும் மெயில் சம்பந்தமான பதிவுகளை சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் இருந்து அனுப்புவதாக இந்துமதி அனுப்பி வைத்து உள்ளார்.

    இதற்கிடையே ஜெர்ரி மெசாக் தனது முதலீடு பணத்தை சரி பார்த்தபோது அதில் ரூ.44 லட்சம் தனது கணக்கில் இல்லை என்பது தெரிந்தது. இந்துமதி நூதன முறையில் பணமோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து ஜெர்ரி மெசாக், பெரவள்ளுர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்துமதியை கைது செய்தனர்.

    • சொத்துக்களை அபகரிக்க முயன்ற சாந்தி, சந்திரசேகர் உள்பட 11 பேரை போலீசார் தேடி வந்தனர்.
    • முதல் குற்றவாளியான சாந்தியை போலீசார் கைது செய்ய மற்ற 10 பேர்களை தேடி வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் கான்வென்ட் ரோடு பகுதியில் உள்ள நிலத்தை நாகர்கோவிலைச் சேர்ந்த லெட்சுமணன் என்பவரிடம் இருந்து கடந்த 1968-ம் ஆண்டில் விருதுநகரைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரும், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரும் இணைந்து வாங்கினர்.

    இதில் தனது பகுதியான 97 செண்ட் நிலத்தை கொடைக்கானலைச் சேர்ந்த விஸ்வா உருமின் என்பவருக்கு சங்கர் விற்பனை செய்துள்ளார். இந்த விற்பனை தொடர்பாக பத்திரம் பதிந்து தருவதில் விஸ்வா உருமின், சங்கர் மற்றும் சந்திரசேகர் ஆகியோருக்கு இடையே கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது.

    இதனிடையே கடந்த 2012-ம் ஆண்டு சங்கர் இறந்து விட்டார். கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் சாந்தி. இவரது கணவர் பெயர் சந்திரசேகர். இந்த பெயர் ஒற்றுமையை பயன்படுத்தி போலியான ஆவணம் தயார் செய்த சாந்தி இந்த சொத்துக்களை அபகரிக்க முயன்றார்.

    இதற்காக போலியான ஆவணத்தை தயார் செய்து சங்கர் தனது மகள் சாந்தி, மருமகன் சந்திரசேகர் உள்ளிட்டவர்களுக்கு தானஷெட்டில்மென்ட் எழுதி கொடுத்தார். இந்த போலி ஆவணம் தயார் செய்து ரூ.பல கோடி மதிப்பிலான நிலத்தை அபகரிக்க உடந்தையாக இருந்த சாந்தியின் கணவர் சந்திரசேகர், இவர்களின் மகன் சித்தார்த், கிருஷ்ணசாமி, கொடைக்கானலைச் சேர்ந்த கணேசன், போலி ஆவணம் தயாரிக்க உதவிய ஆவண எழுத்தர்கள் மருதுபாண்டி, கில்பர்ட், பத்திரபதிவு செய்த முன்னாள் சார் பதிவாளர் முருகேசன், இந்த ஆவணத்தை தயாரிக்க உதவிய வக்கீல்கள் சுதாகர், முகமது மைதீன், ராகவேந்திரன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கரின் மனைவி ஜெயந்தியின் பவர் ஏஜெண்டான கோபி கொடைக்கானல் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையில் இருந்து வந்த நிலையில் போலி ஆவணம் தயாரித்து பல கோடி ரூபாய் சொத்துக்களை அபகரிக்க முயன்ற சாந்தி, சந்திரசேகர் உள்பட 11 பேரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் முதல் குற்றவாளியான சாந்தியை போலீசார் கைது செய்ய மற்ற 10 பேர்களை தேடி வருகின்றனர்.

    ×