search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "widespread rain"

    • மீனவர்கள் உடனே கரை திரும்பவேண்டும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
    • துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    கடலூர், நவ.22-

    வங்ககடலில் குறைந்த காற்றழுத்தம் வலுவிழந்து ள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் சுமார் 45 கி.மீ. முதல் 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே மீனவ ர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம். நெடுங்கடல் தூரத்தில் மீன்பிடிக்கும் மீனவர்கள் உடனே கரை திரும்பவேண்டும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    அதன்படி கடலூர் மாவட்டத்தில் மீன்வளத்து றை அதிகாரிகள் 49 மீனவ கிராமங்களுக்கும் எச்சரி க்கை அறிவிப்பு விடுத்து ள்ளனர். இதனைத்தொ டர்ந்து கடலூர் மாவட்ட த்தில் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை. இன்று காலை யும் அவர்கள் வீட்டி லேயே முடங்கினர். இதனால் துறைமுக பகுதி யில் படகுகள் ஓய்வெடு த்தன. வானிலை ஆய்வு மையம் அறிவித்தப்படி கடலில் சீற்றம் அதிகம் உள்ளது. இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வானிலை அறிவித்தப்படி இன்று காலை முதல் கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. கடலூர் நகர் பகுதியான திருப்பாதிரிபுலியூர், மஞ்ச க்குப்பம், செம்மண்டலம், பாதிரிகுப்பம், துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இதனால் அலு வலகம், பள்ளிக்கு செல்வோர் குடைபிடித்தப்படி சென்றதை காண முடிந்தது.

    • முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
    • நீர் நிலைகளில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை

    வேலூர்:

    தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    பரவலாக மழை

    வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று காலை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் லேசான சாரல் மழை பெய்தது. இந்த மாவட்டத்தில் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மற்ற வகுப்பு மாணவர்கள் மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்பட்டன.

    ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி முதல் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி வரையிலும் சென்னை பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் கடும் பனிமூட்டம் நிலவியது.பகலிலும் வாகனங்கள் விளக்கை போட்டபடி சென்றன.மேலும் கடும் குளிரும் வாட்டி வதைப்பதால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி யுள்ளனர்.

    கண்காணிப்பு மையம்

    கலெக்டர் அலுவல கங்களில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கண்காணிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் மழை பாதிப்பு குறித்து இந்த அலுவலகம் மற்றும் அருகில் உள்ள தாலுகா அலுவலகங்களில் தகவல் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

    தண்ணீர் தேங்க கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு பொதுமக்களை தங்க வைப்பதற்கான பள்ளி, சமுதாய கூடங்களும் தயார் நிலையில் உள்ளன.

    பாலாறு, பொன்னை ஆறு, கவுண்டன்யா ஆறு மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை, செய்யாறு, ஆரணி ஆறு, நாகநதி ஆறுகளிலும் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

    இந்த ஆறுகளில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளன. மழை வெள்ளம் எப்போது வேண்டுமானாலும் பெருக்கெடுத்து வரலாம் என்பதால் பொதுமக்கள் ஆறு மற்றும் நீர் நிலைகளில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டது.
    • மாவட்டம் முழுவதும் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடலூர்:

    வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால் கடலூர் மாவட்டம் சிதம்பரம், குமராட்சி, கீரப்பாளையம், குறிஞ்சிப்பாடி ,குள்ளஞ்சாவடி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டது. தற்போது தொடர் மழை பெய்து வருவதால் பெரும்பாலான விளைநிலங்களில் தண்ணீர் வடியாமல் பயிர்கள் அழுகி வரும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    நேற்று கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் புவனகிரி சேத்தியாத்தோப்பு காட்டுமன்னார்கோவில் பரங்கிப்பேட்டை குறிஞ்சிப்பாடி கடலூர் தொழுதூர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனை தொடர்ந்து நேற்று தொடர் மழை காரணமாக ஒரு குடிசை வீடும் மற்றும் 4 கால்நடைகளும் இறந்துள்ளன இது மட்டும் இன்றி மாவட்டம் முழுவதும் முக்கியசாலைகள் அனைத்தும் பெரிய அளவிலான பள்ளம் ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது இந்த நிலையில் வங்கக்கடலில் வருகிற 9 -ந் தேதி உருவாக உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதிகாற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    எனவே கடலூர் மாவட்டம் முழுவதும் தாழ்வான பகுதிகளில் தற்போது தண்ணீரை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மாவட்டம் முழுவதும் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும் ஏரிகள் நிரம்பி உள்ள நிலையில் தொடர் மழை பெய்தால் தண்ணீர் வெளியேற்றும் நடவடிக்கை தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    கடலூர் மாவட்டத்தில் மழை அளவு மில்லி மீட்டர் அளவில் பின்வருமாறு:- புவனகிரி - 27.0, சேத்தியாதோப்பு- 20.4, அண்ணாமலைநகர் - 16.0, கீழ்செருவாய் - 13.0, காட்டுமன்னார்கோயில் - 12.0,பெல்லாந்துறை - 9.2, சிதம்பரம் - 7.0, லால்பேட்டை - 6.0, பரங்கிப்பேட்டை - 5.6, . குறிஞ்சிப்பாடி - 5.0, தொழுதூர் - 4.0, கொத்தவாச்சேரி - 3.0, ஸ்ரீமுஷ்ணம் - 2.1 , கலெக்டர் அலுவலகம் - 0.8, கடலூர் - 0.7 மொத்தம் - 131.80 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. 

    • மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது
    • தண்டராம்பட்டில் அதிகபட்சமாக 40 மில்லி மீட்டர் கொட்டியது

    திருவண்ணாமலை

    திருவண்ணாமலை நகரப் பகுதியில் மேகம் மந்தமாக காணப்பட்டது. சில இடங்களில் சாரல் மழை பெய்தது.செங்கம், செய்யாறு, போளூர், ஆரணி வந்தவாசி பகுதிகளில் மிதமான மழை பெய்தது. மற்ற இடங்களில் சாரல் மழை பெய்தது அதிகபட்சமாக தண்டராம்பட்டில் 40 மில்லி மீட்டர் மழை பெய்தது. இன்று காலையில் பல இடங்களில் மேகம் மந்தமாக காணப்பட்டது.

    மழை காரணமாக குளிர்ந்த காற்றும், குளிர்ச்சியான சீதோஷண நிலை காணப்பட்டது. அதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பரவலாக மழை பெய்து வருவதால் ஏரி குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

    திருவண்ணாமலையில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:

    திருவண்ணாமலை-3.1, ஆரணி-20.6, செய்யாறு-35.8, செங்கம்-35.8, ஜமுனாமரத்தூர்-15, வந்தவாசி-12.2, போளூர்-25.6, தண்டராம்பட்டு-41, கலசபாக்கம்-7, சேத்துப்பட்டு-1.2, கீழ்பென்னாத்தூர்-10.8, வெம்பாக்கம்-6.

    • கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
    • இன்று காலையும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று அதிகாலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது .

    கன மழை

    சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி, ஜங்சன் உள்பட அனைத்து பகுதிகளிலும் கன மழை பெய்தது. சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக பெய்த கன மழையால் சாலைகளில் மழைநீருடன், சாக்கடை நீரும் கலந்து ஆறாக ஓடியது.

    சேலத்தில் திடீரென பெய்த இந்த கன மழையால் பெரமனூர் நாராயண பிள்ளை தெரு, பச்சப்பட்டி, தாதகாப்பட்டி, அம்மாப்பேட்டை, கிச்சிப்பாளையம் நாராயணநகர் உள்பட பல பகுதிகளில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    இேத போல சேலம் மாவட்டம் ஓமலூர், ஆத்தூர், எடப்பாடி, சங்ககிரி உள்பட பல பகுதிகளில் கன மழை பெய்தது . இந்த மழையால் தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த பகுதிகளில் எ ங்கு பார்த்தாலும் வெள்ள காடாக காட்சி அளித்தது.

    442.7 மி.மீ. மழை

    மாவட்டத்தில் அதிகபட்சமாக ஓமலூரில் 67.4 மி.மீ. மழை பெய்துள்ளது. சேலம் 63, ஆத்தூர் 58.2, எடப்பாடி 53, சங்ககிரி 51, பெத்த நாயக்கன்பாளையம் 28.5, தம்மம்பட்டி 25.4, கரியகோவில் 22, கெங்கவல்லி 20, வீரகனூர் 18, ஏற்காடு 11, காடையாம்பட்டி 10, மேட்டூர் 9.2, ஆனைமடுவு 6 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 442.7 மி.மீ. மழை பெய்துள்ளது. இன்று காலையும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.

    • விழுப்புரம் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை சுற்றி அதிகாலை முதலே வானில் கருமேகங்கள் சூழ்ந்து இதமான சூழ்நிலை ஏற்பட்டது.
    • வயல்வெளிகளில் பயிர் செய்துள்ள நெல் மணிலா, மரவள்ளி கிழங்கு போன்ற பயிர்களுக்கு தேவையான தண்ணீர் கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    விழுப்புரம்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலநிலை நிலவுவதை ஒட்டி ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் காலை முதலே மழை பெய்து வந்த வண்ணம் உள்ளது. இந்த மழை விழுப்புரம் மாவட்ட மற்றும் விழுப்புரத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும் பெய்து வருகிறது. 

    விழுப்புரம் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை சுற்றி அதிகாலை முதலே வானில் கருமேகங்கள் சூழ்ந்து இதமான சூழ்நிலை ஏற்பட்டது. இதனை எடுத்து மழை பெய்யத் தொடங்கி தொடர்ந்து பெய்த வண்ணம் உள்ளது. இதனால் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் மழையில் நனைந்தபடியே சென்றனர். இந்த மழை விழுப்புரம் பெரும்பாக்கம் காணை, மாம்பழப்பட்டு, அய்யூர், அகரம், சிந்தாமணி, முண்டியம்பாக்கம், இருவேல்பட்டு, அரசூர், சாலையாகரம், இணங்காடு, செங்காடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்த வண்ணம் உள்ளது.

    இதே போன்று மரக்காணம் பகுதிகளில் காலை 6 மணி முதல் கன மழை பெய்து வருகிறது. இந்த மழையால் வயல்வெளிகளில் பயிர் செய்துள்ள நெல் மணிலா, மரவள்ளி கிழங்கு போன்ற பயிர்களுக்கு தேவையான தண்ணீர் கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் காலை முதல் பெய்த கன மழையால் மத்திய மாநில அரசுக்கு சொந்தமான உப்பள பகுதிகளில் சுமார் 3500 ஏக்கர் நீரில் சூழ்ந்துள்ளது. தொடர்ந்து விட்டுவிட்டு பெய்து வரும் இந்த மழையினால் 2 மாதங்களாக உப்பல பகுதிகளில் உப்பு உற்பத்தி நடைபெறவில்லை. இதனால் 5000 -க்கும் மேற்பட்ட உப்பு உற்பத்தி தொழிலாளர்கள் வேலையின்றி பாதிப்படைந்துள்ளனர்.

    மேலும் இந்த மழை மரக்காணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான ஆலத்தூர், கந்தாடு, வண்டி பாளையம், நடுக்குப்பம், அனுமந்தை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்த வண்ணம் உள்ளது

    • சேலம் மாநகரத்தில் பல்வேறு பகுதி களில் மழை பெய்தது.
    • இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர்தேங்கியது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆங்கங்கே மழை பெய்து

    வருகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் வெயில் வாட்டி வதைத்தது. மாலையில் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்று வீசியது. சேலம் மாநகரத்தில் பழைய பஸ்நிலையம், அம்மா பேட்டை, அஸ்தம்பட்டி, கொண்ட லாம்பட்டி, ஜங்ஷன், 4 ரோடு, செவ்வாய்ப்பேட்டை உள்பட பல்வேறு பகுதி களில் மழை பெய்தது. இதில் மழையில் சாக்கடை நீருடன் மழைநீருடன் கலந்து கால்வாயில் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் மாவட்டத்தில் காடையாம்பட்டி, எடப்பாடி,மேட்டூர், ஒமலூர், கெங்கவல்லி, ஆத்தூர், ஆகிய பகுதி களில் பலத்தமழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர்தேங்கியது.

    சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- ஓமலூர்- 11.2 மி.மீ, மேட்டூர் - 6.2, காடையாம்பட்டி- 6, சேலம்- 5.8, கெங்கவல்லி - 4, எடப்பாடி-1.2, ஆத்தூர்-1 மீ.மீ மழை பதிவாகி உள்ளது.

    • செய்யாறு தண்டரை அணைக்கட்டு நிரம்பி வழிகிறது
    • விவசாயிகள் மகிழ்ச்சி

    செய்யாறு:

    செய்யாறு பகுதியில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

    ெசய்யாற்றின் கிளை நதிகளான ஆரணி கமண்டல நாக நதி, கிளியாறு போன்ற ஆறுகள் மூலம் ஏற்பட்ட மழை நீர் செய்யாற்றில் கலந்து நீர்வரத்து செய்யாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தண்டரை அணைக்கட்டு வழிந்தோடுகிறது.

    தண்டரை அணைக்கட்டில் இருந்து மாவட்டத்திலேயே மிகப்பெரிய ஏரியான மாமண்டூர் ஏரிக்கு கால்வாய் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    இதனால் 16 ஏரிகள் நீர் நிரம்புவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.
    • கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருகம், ரிஷிவந்தியம், சங்கராபுரம், திருக்கோவிலூர் ஆகிய வட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருகம், ரிஷிவந்தியம், சங்கராபுரம், திருக்கோவிலூர் ஆகிய வட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. மழையின் அளவு மி. மீட்டரில் பின்வருமாறு, கள்ளக்குறிச்சி 6, தியாகதுருகம் 9, விருகாவூர் 15, சின்னசேலம் 10, அரியலூர் 2, கடுவனூர் 3, கலையநல்லூர் 22, கீழ்பாடி 4, மூரார்பாளையம் 12, மூங்கில்துறைப்பட்டு 8, ரிஷிவந்தியம் 22, சூளாங்குறிச்சி 2, வடசிறுவலூர் 16, மாடாம்பூணடி 7, மணலூர்பேடடை 0, திருக்கோவிலூர் 4, திருப்பாலபந்தல் 11, வேங்கூர் 5, ஆதூர் 2.5, எறையூர் 0, ஊ.கீரனூர் 16, என்ற அளவில் மழை பெய்துள்ளது. இதில் அதிகபட்சமாக கலையநல்லூர் மற்றும் ரிஷிவந்தியம் ஆகிய பகுதிகளில் 22 மி.மீட்டரும், குறைந்த பட்சமாக அரியலூர் மற்றும் சூளா ங்குறிச்சி ஆகிய பகுதிகளில் 2 மி.மீட்டர் மழையும் பெய்து ள்ளது. மேலும் கள்ள க்குறிச்சி மாவட்ட த்தில் பெய்த மொத்த மழை அளவு 176.5 மி.மீட்ட ராகவும், சராசரி 8.40 மி.மீட்டர் அளவா கவு ம் உள்ளது.

    • சுவர் இடிந்து கார், பைக் சேதம் ஒருவர் படுகாயம்
    • குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி

    வேலூர்:

    வேலூரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. எனினும் மாலை வேளை களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    நேற்று பகலில் 95.5 டிகிரி வெப்பம் பதிவானது. பிற்பகலில் அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன் இருந்தது.

    இந்த நிலையில் மாலை 6.30 மணி அளவில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரம் பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான இடங் களில் மழைநீர் தேங்கியது.

    வேலூர் மக்கான் அம்பேத்கர் நகர் அருகே சாலையோரம் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சில நிறுவனங்களும், குடோன்களும் உள்ளன.

    இந்த நிலையில் இரவு 9.30 மணி அளவில் திடீரென கட்டிடத்தின் மேல் தளத்தின் நடைபாதை சுவர் இடிந்து விழுந்தது. அப்போது அதன் கீழே நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் சேதமானது. இதில் அங்கிருந்த ஒருவருக்கு காலில்காயம் ஏற்பட்டது.

    இதேபோல் குடியாத்தம், கே.வி.குப்பம் பகுதிகளில் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் குண்டும், குழியுமான சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். மழையின் காரணமாக இரவில் குளிர்ந்த காற்று வீசிய தால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • அரக்கோணத்தில் பலத்த மழை
    • ஒரு மணி நேரம் போராடி உடலை மீட்டனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த குருவரா ஜப்பேட்டை பள்ளிக்கூட மேட்டுத்தெரு பகுதியில் ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. மனோகரன் அவரது தாய் அலமேலுடன் (89) வசித்து வந்தார். தொடர் மழை காரணமாக வீட்டின் மேற்கூரை (ஓட்டு வீடு) நள்ளிரவில் இடிந்து விழுந்தது. அலமேலு படுத்திருந்த கட்டிலின் மீது மேற்கூரை விழுந்ததில் அவர் இடிபாடுக்குள் சிக்கி இறந்தார்.

    இதுகுறித்து தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மூதாட்டி உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    சுமார் ஒரு மணி நேரம் போராடி மூதாட்டி உடலை மீட்டனர். அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அவரது உடலை அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஈரோட்டில் 2-வது நாளாக பரவலாக மழை பெய்தது.
    • அதிகபட்சமாக நம்பியூரில் 61 மி.மீ பதிவானது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் அக்னி நட்சத்திர வெயில் முடிந்த பிறகும் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்து வந்தது. குறிப்பாக பகல் நேரங்களில் அனல் காற்றுடன் வெயில் கொளுத்தியது. வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்றும் இடியுடன் கனமழை பெய்தது.

    ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று இரவு முழுவதும் இடியுடன் கூடிய மழை பெய்தது. கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகள் மழைநீரால் நிரம்பியது.

    மேலும் பல்வேறு இடங்கள் குண்டும், குழியுமாக காட்சி அளித்தது. ஈரோடு வ.உ.சி. காய்கறிகள் மார்க்கெட்டில் வழக்கம்போல் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளித்தது. இதன் காரணமாக பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர்.

    இதேப்போல் மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக நம்பியூர் பகுதியில் 61 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    இதேபோல் பெருந்துறை, சென்னிமலை, வரட்டுப்பள்ளம், கொடுமுடி, கொடிவேரி போன்ற பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மழையால் வெப்பமான சூழ்நிலை மாறி குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை மில்லி மீட்டரில் வருமாறு:-

    நம்பியூர்-61, பெருந்துறை-37, சென்னிமலை-35, சத்தியமங்கலம்-16, மொடக்குறிச்சி-11, கொடுமுடி-8.2, கொடிவேரி-8, கோபி-7.6, குண்டேரிபள்ளம்-6.4, கவுந்தப்பாடி-6.4, ஈரோடு-5, அம்மாபேட்டை-1.2.

    ×