search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "people happy"

    • மாநகரம் முழுவதும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
    • கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு ஆங்காங்கே மழைநீர் சாலைகளில் பாய்ந்தது.

     திருப்பூர்:

    திருப்பூர் மாநகரில் நேற்று காலை வெயில் அடித்தது. மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 5 மணி அளவில் திடீரென மழை கொட்டித்தீர்த்தது. மாநகரம் முழுவதும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நொய்யல் ஆற்றில் மழைநீர் அதிகமாக பாய்ந்தது. சமீபத்தில் தான் நொய்யல் ஆறு, ஜம்மனை ஓடை, சங்கிலிப்பள்ளம் ஓடை ஆகியவை தூர்வாரப்பட்டது. இதன்காரணமாக மழைநீர் தடையின்றி பாய்ந்தது.

    கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு ஆங்காங்கே மழைநீர் சாலைகளில் பாய்ந்தது. திருப்பூர் மாநகராட்சி 45-வது வார்டுக்கு உட்பட்ட சத்யாநகர் பகுதியில் மழைநீர் செல்ல வழியில்லாமல் 3 வீடுகளுக்குள் புகுந்தது. அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். ஊத்துக்குளி அருகில் உள்ள காட்டுப்பகுதியில் மின்னல் தாக்கியதன் காரணமாக பனைமரம் தீப்பற்றி எரிந்தது.பலத்த மழையிலும் பச்சை மரம் தீப்பற்றி எரிவதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட காங்கயம், வெள்ளகோவில் உள்பட பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:-

    திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகம்-55, கலெக்டர் முகாம் அலுவலகம் -68.50, திருப்பூர் தெற்கு அலுவலகம்-12,கலெக்டர் அலுவலகம்-113, அவினாசி தாலுகா அலுவலகம்-17, ஊத்துக்குளி தாலுகா அலுவலகம்-32, தாராபுரம்-42, மூலனூர்-36, குண்டடம்-25, உப்பாறு அணை-12, நல்லதங்காள் ஓடை-6, அமராவதி அணை-2, திருமூர்த்தி அணை-12, திருமூர்த்தி அணை ஐபி-11, காங்கயம்-33, வெள்ளகோவில் ஆர்.ஐ., அலுவலகம்- 52, வட்டமலை கரை ஓடை- 31.40, பல்லடம்-6. மாவட்டம் முழுவதும் மொத்தம் 565.90 மி.மீ., மழை பெய்துள்ளது. பலத்த மழை காரணமாக திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதியில் குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது. திருப்பூர் மாநகரில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.மேலும் சிதலமடைந்த சாலைகள் மழையால் சேறும் சகதியுமாக மாறியுள்ளன.  

    • திடீரென கருமேகங்கள் திரண்டு பலத்த மழை கொட்டியது. இடியுடன் சுமார் அரை மணிநேரம் வெளுத்து வாங்கியது.
    • வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதால் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. சென்னையில் 109 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொது மக்களும் வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இதேபோல் காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் உள்ளது. கடந்த சில நாட்களாக 100 டிகிரி வரை வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

    இந்நிலையில் காஞ்சிபுரத்தில் இன்று காலை 7 மணியளவில் திடீரென கருமேகங்கள் திரண்டு பலத்த மழை கொட்டியது. இடியுடன் சுமார் அரை மணிநேரம் வெளுத்து வாங்கியது.

    இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இதேபோல் காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள ஓரிக்கை, செவிலிமேடு, ஒலிமுகமது பேட்டை, தாமல், ஏனாத்தூர், வையாவூர், அய்யம்பேட்டை, வாலாஜாபாத், குருவிமலை, களக்காட்டூர் பரந்தூர், சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

    காலையிலேயே இடியுடன் கூடிய மழை பெய்ததால் வாகன ஓட்டிகளும் பொது மக்களும் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பி நிம்மதி அடைந்தனர். தொடர்ந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதால் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.

    வண்டலூர், ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் சில இடங்களில் லேசான மழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலையில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.

    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.
    • கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருகம், ரிஷிவந்தியம், சங்கராபுரம், திருக்கோவிலூர் ஆகிய வட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருகம், ரிஷிவந்தியம், சங்கராபுரம், திருக்கோவிலூர் ஆகிய வட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. மழையின் அளவு மி. மீட்டரில் பின்வருமாறு, கள்ளக்குறிச்சி 6, தியாகதுருகம் 9, விருகாவூர் 15, சின்னசேலம் 10, அரியலூர் 2, கடுவனூர் 3, கலையநல்லூர் 22, கீழ்பாடி 4, மூரார்பாளையம் 12, மூங்கில்துறைப்பட்டு 8, ரிஷிவந்தியம் 22, சூளாங்குறிச்சி 2, வடசிறுவலூர் 16, மாடாம்பூணடி 7, மணலூர்பேடடை 0, திருக்கோவிலூர் 4, திருப்பாலபந்தல் 11, வேங்கூர் 5, ஆதூர் 2.5, எறையூர் 0, ஊ.கீரனூர் 16, என்ற அளவில் மழை பெய்துள்ளது. இதில் அதிகபட்சமாக கலையநல்லூர் மற்றும் ரிஷிவந்தியம் ஆகிய பகுதிகளில் 22 மி.மீட்டரும், குறைந்த பட்சமாக அரியலூர் மற்றும் சூளா ங்குறிச்சி ஆகிய பகுதிகளில் 2 மி.மீட்டர் மழையும் பெய்து ள்ளது. மேலும் கள்ள க்குறிச்சி மாவட்ட த்தில் பெய்த மொத்த மழை அளவு 176.5 மி.மீட்ட ராகவும், சராசரி 8.40 மி.மீட்டர் அளவா கவு ம் உள்ளது.

    சேலத்தில் அஸ்தம்பட்டி, கோரிமேடு, கொண்டப்பநாயக்கன்பட்டி, 4 ரோடு, பொன்னம்மா பேட்டை, அம்மாபேட்டை, 5 ரோடு, குரங்குசாவடி, ஓமலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இன்று காலை திடீர் சாரல் மழை பெய்தது. #SalemRain
    சேலம்:

    சேலத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பகல் நேரங்களில் கோடைகாலத்தை போல் வெயில் கொளுத்துகிறது. இதனால் இரவு நேரம் கடும் வெப்பத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை சேலத்தில் அஸ்தம்பட்டி, கோரிமேடு, கொண்டப்பநாயக்கன்பட்டி, 4 ரோடு, பொன்னம்மா பேட்டை, அம்மாபேட்டை, 5 ரோடு, குரங்குசாவடி, ஓமலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் திடீர் சாரல் மழை பெய்தது. பன்னீரை தெளித்ததுபோல் சாரல் மழை பெய்ததால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் நனைந்து கொண்டே சென்றார்கள். நடைபயிற்சி சென்றவர்களும் நனைந்தவாறு சென்றார்கள்.

    சிறிதுநேரம் இந்த சாரல் மழை நீடித்தது. தொடர்ந்து வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. வெயிலால் தவித்த பொதுமக்களுக்கு இந்த சாரல் மழை சற்று ஆறுதலை கொடுத்தது. #SalemRain
    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று மாலை முதல் இரவு வரை சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று மாலை முதல் இரவு வரை சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கியது. சூறாவளி காற்றால் ஜமீன்குளத்தூர் திரவுபதி அம்மன் கோவில் அருகே இருந்த 120 வருட பழமையான மரம் முறிந்து விழுந்தது.

    அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வெயில் அடித்த போதிலும் ஜெயங்கொண்டம் பகுதியில் மட்டும் நேற்று பலத்த மழை பெய்தது. குளிர்ச்சியான சீதோஷ்ணம் நிலவியதால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். 
    ×