search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "salem rain"

    • ஏற்காட்டில் நேற்று இரவு தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை சாரல் மழையாக நீடித்தது.
    • மழையால் ஏற்காட்டில் ரம்மியமான சூழல் நிலவி வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக 4-வது நாளாக நேற்றும் கனமழை பெய்தது.

    சேலம் மாநகரில் நேற்றிரவு 10 மணயளவில் தொடங்கிய மழை விடிய, விடிய சாரல் மழையாக நீடித்தது. இந்த மழை அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி, ஜங்சன், கொண்டலாம்பட்டி உள்பட அனைத்து பகுதிகளிலும் பெய்தது.

    கடந்த சில நாட்களாக சேலம் மாநகரில் மழை பெய்து வருவதால் பல சாலைகள் சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். மழையை தொடர்ந்து மாநகர் முழுவதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.

    இதே போல சேலம் புறநகர் பகுதிகளான மேட்டூர், ஆத்தூர், கெங்கவல்லி, எடப்பாடி தலைவாசல் ஆகிய பகுதிகளில் நேற்று 2 மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னலுடன் கனமழை கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் விவசாய பயிர்களுக் கு இந்த மழை உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஏற்காட்டில் நேற்று இரவு தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை சாரல் மழையாக நீடித்தது. இந்த மழையால் ஏற்காட்டில் ரம்மியமான சூழல் நிலவி வருகிறது. சனிக்கிழமையான இன்று காலை முதலே சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வரத்தொடங்கினர். இதனால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக மேட்டூரில் 58.60 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. ஆத்தூர் 44, கெங்கவல்லி 40, ஏற்காடு எடப்பாடி 37, தலைவாசல் 37, பெத்தநாயக்கன் பாளையம் 9.4, தம்மம்பட்டி 9, சங்ககிரி 9, சேலம் 8.5, காடையாம்பட்டி 8, ஏற்காடு 7.20, வீரகனூர் 7, ஓமலூர் 5.02, கரியகோவில் 4, ஆனைமடுவு 3 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 286.72 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் கொல்லி மலை, மோகனூர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது . இந்த மழையால் சாலைகள், வயல் வெளிகள், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கொல்லிமலையில் 39 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. மோகனூர் 31, எருமப்பட்டி, குமாரபாளையம் 4, நாமக்கல் 2.2, ராசிபுரம் 6, சேந்தமங்கலம் 13, திருச்செங்கோடு 2, கலெக்டர் அலுவலகம் 3 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 106.2 மி.மீ. மழை பெய்துள்ளது.

    • கல்வராயன் மலையில் பெய்த மழையால் கல்லாறு, புலி ஊற்று, நீரோடை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • ஆணைவாரி நீர் வீழ்ச்சியில் எப்போதும் இல்லாத அளவுக்கு தண்ணீர் வருகிறது. 2 தரைப்பாலங்கள் மூழ்கியது. பெரிய பாலத்தை தொட்ட படி தண்ணீர் செல்கிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக ஏற்காட்டில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய மழை 3 மணி நேரம் கனமழையாக கொட்டியது. இதனால் ஏற்காடு மலை வெள்ளக்காடாக காட்சி அளித்தது.

    ஏற்காட்டில் பெய்த கனமழையால் ஏற்காட்டில் இருந்து கொட்டச்சேடு மலைப்பாதை வழியே வாழவந்தியை அடுத்த ஆத்துப்பாலத்தை முழ்கடித்து வெள்ளம் சீறிப்பாய்ந்தது. காடுகளில் உள்ள மரம், செடி, கொடி பாறை, கற்கள் உள்பட அனைத்தையும் தள்ளி கொண்டு காட்டாற்று வெள்ளமாக மழை நீர் ஓடியது.

    இதையடுத்து அந்த வழியாக உள்ள 26 கிராமங்களுக்கு செல்லும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் ஆத்துப்பாலத்தை மூழ்கடித்த படி வெள்ளம் சீறிப்பாய்ந்ததால் 2-வது நாளாக போக்குவரத்து தடைபட்டது. இதனால் அந்த பகுதி மக்கள் தங்கள் சொந்த கிராமங்களுக்கு செல்ல முடியாமல் ஆங்காங்கே நின்று தவித்தனர்.

    அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த குப்பனூரில் சேலம்-அரூர் பிரதான சாலையில் குப்பனூர் ஊருக்குள் செல்லும் சாலை நடுவே திருமணிமுத்தாறு மேம்பாலம் உள்ளது. நேற்று பெய்த மழையால் மழை நீர் அதிக அளவில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த மேம்பாலம் உடைந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.

    அந்த பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் அந்த வழியாக செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். வேலைக்கு சென்ற மக்களும் வீடுகளுக்கு செல்ல முடியாமல் அவதிபட்டனர். வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் அந்த வழியாக செல்ல வேண்டிய மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    2-வது நாளாக இன்றும் அந்த பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாததால் பொது மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். மேலும் மாற்று பாலத்தை அமைக்க வேண்டும் என்றும், மாற்று பாதை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றும் அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    வாழப்பாடி அண்ணாநகரில் பேளூர் நெடுஞ்சாலையோரம் இருந்த புளியமரம் சாலையில் சரிந்தது. இதனால் நேற்று வாழப்பாடி-பேளூர் சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் அங்குள்ள தடுப்பு சேதம் அடைந்தது. இதையடுத்து மறு உத்தரவு வரும் வரை ஆனை வாரி நீர்வீழ்ச்சி, முட்டல் ஏரி படகு சவாரிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்து சுற்றுலா மையம் மூடப்பட்டுள்ளது.

    கல்வராயன் மலையில் பெய்த மழையால் கல்லாறு, புலி ஊற்று, நீரோடை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆணைவாரி நீர் வீழ்ச்சியில் எப்போதும் இல்லாத அளவுக்கு தண்ணீர் வருகிறது. 2 தரைப்பாலங்கள் மூழ்கியது. பெரிய பாலத்தை தொட்ட படி தண்ணீர் செல்கிறது.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன கல்வராயன் மலை, கிடார், பட்டி வளவு உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முட்டல் ஏரியில் இருந்து ஆனைவாரி நீர் வீழ்ச்சி வழியாக சென்று வருவார்கள். தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இப்பகுதி மக்கள் சாலையை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதே போல பெத்தாநயக்கன்பாளையம், தம்மம்பட்டி, ஆனைமடுவு, சங்ககிரி, ஓமலூர் பகுதிகளிலும் கனமழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தில் அதிக பட்சமாக ஏற்காட்டில் 65.2 மி.மீ. மழை பெய்துள்ளது.

    பெத்தநாயக்கன் பாளையம் 49.5, தம்மம்பட்டி 40, ஆனைமடுவு 37, சங்ககிரி 31, ஓமலூர் 27, மேட்டூர் 19, சேலம் 11, கரியகோவில் 10, எடப்பாடி 10, காடையாம்பட்டி 5, ஆத்தூர் 4, வீரகனூர் 4 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 312.70 மி.மீ. மழை பெய்துள்ளது.

    சேலம் அருகே அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த பள்ளிப்பட்டி கிராமத்தில் நேற்று பெய்த கனமழை காரணமாக அதிகப்படியான நீர்வரத்து ஏற்பட்டது. அங்குள்ள தரை பாலத்தை மூழ்கடித்து அந்த வெள்ள நீரில் சில கால்நடைகள் அடித்துச் செல்லப்பட்டன. சாலையும் கடுமையாக சேதம் அடைந்தன.

    • சேலம் மாநகரில் நேற்றிரவு அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி உள்பட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
    • இந்த மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

    குறிப்பாக மேட்டூர், கரியகோவிலில் நேற்று கனமழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சேலம் மாநகரில் நேற்றிரவு அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி உள்பட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொது மக்கள் போர்வையை போர்த்திய படி தூங்கினர்.

    சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக மேட்டூரில் 25.6 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. கரியகோவில் 22, சேலம் 15.4, பெத்தநாயக்கன்பாளையம் 13, ஓமலூர் 8.2, காடையாம்பட்டி 2.2, ஏற்காடு 2 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 88.4 மி.மீ. மழை பெய்துள்ளது. இன்று காலையும் வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது.

    கஜா புயல் எதிரொலியாக சேலம் மாவட்டத்தில் மழை பரவலாக பெய்தது. அப்போது வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
    சேலம்:

    கஜா புயல் எதிரொலியாக சேலம் மாவட்டத்தில் நேற்று பரவலாக பெய்தது. இதில் தம்மம்பட்டி, வீரகனூர், ஆத்தூர் உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது.

    இந்த மழையால் ஆத்தூர் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த மக்காசோழப்பயிர்கள் தரையில் சாய்ந்தது. மாவட்டத்தில் பல பகுதிகளில் பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த பொன்னாரம்பட்டியை சேர்ந்த சின்னப்பையன். இவரது மனைவி சந்திரா (வயது 42). இவர்களது மகள் சத்யா (29)வுக்கு திருமணம் ஆகி விட்டது. மகன் பி.இ.படித்து வருகிறார்.

    சந்திரா நேற்றிரவு வீட்டருகே தென்னங்கீற்று முடையும் வேலையில் ஈடுபட்டு வந்தார். அப்போது அந்த பகுதியில் பெய்த சாரல் மழையால் வீட்டின் சுவர் இடிந்து சந்திராவின் மீது விழுந்தது. இதில் உடல் நசுங்கிய அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த சேலம் ஆர்.டி.ஒ.(பொறுப்பு) ஜெகநாதன் மற்றும் வருவாய் துறையினர் அந்த பகுதியில் விசாரணை நடத்தினர்.

    சேலம் மாவட்டத்தில் அதிக பட்சமாக தம்மம்பட்டியில் 97 மி.மீ. மழை பெய்துள்ளது. வீரகனூர் 41, ஆத்தூர் 28, கெங்கவல்லி 27, ஆனைமடுவு 23, பெத்தநாயக்கன் பாளையம் 22, ஏற்காடு, கரிய கோவிலில் 20.2, சங்ககிரி 19, மேட்டூர் 14.6, காடையாம்பட்டி 12, ஓமலூர் 11, எடப்பாடி 8.6, சேலம் 6.9, வாழப்பாடி 2.5 மி.மீ. மழை என மாவட்டம் முழுவதும் 353 மி.மீ. மழை பெய்துள்ளது.
    சேலத்தில் 3 மணி நேரம் கொட்டிய மழையால் அம்மாபேட்டைஜோதி தியேட்டர் பகுதி, கிச்சிப்பாளையம் நாராயணன் நகர், கருவாட்டு பாலம் உள்பட பல பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. #SalemRain
    சேலம்:

    சேலத்தில் கோடை வெயிலை மிஞ்சும் வகையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்தது. இதனால் மதிய நேரங்களில் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் தவித்தனர்.

    நேற்று காலை முதலே சீதோஷ்ண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டு சேலத்தில் சாரல் மழை பெய்தது. இரவு 9 மணி முதல் 3 மணி நேரம் கனமழை பெய்தது.

    இதில் சேலம் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், அஸ்தம்பட்டி, கிச்சிப்பாளையம், அம்மாபேட்டை, சூரமங்கலம், அன்னதானப்பட்டி, கன்னங்குறிச்சி, கொண்டலாம்பட்டி, 5 ரோடு, ஜங்சன், கோரிமேடு என மாநகரின் அனைத்து பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது.

    இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மணக்காடு, களரம்பட்டி, ராஜகணபதி நகர், மணியனூர், சங்கர் நகர், பள்ளப்பட்டி, சின்னேரி வயக்காடு, பெரமனூர், நாராயணபிள்ளைதெரு, 5 ரோடு ஸ்ரீராம்நகர், திருவாகவுண்டனூர் உள்பட பல்வேறு பகுதிகளில் மழை நீருடன் சாக்கடை நீரும் ஆறாக ஓடியது. இதனால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் கடுமையாக அவதிப்பட்டனர்.

    அம்மாபேட்டைஜோதி தியேட்டர் பகுதி, கிச்சிப்பாளையம் நாராயணன் நகர், கருவாட்டு பாலம், பெரமனூர், சங்கர்நகர், ஸ்ரீராம்நகர் உள்பட பல பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

    இதனால் வீடுகளுக்குள் இருந்த பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்பட எலக்ட்ராணிக் பொருட்களை கட்டில்களில் பாதுகாப்பாக எடுத்து வைத்தனர். மேலும் இரவு முழுவதும் தூங்க முடியாமல் தவித்த மக்கள் பாத்திரங்கள் மூலம் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றினர்.

    மழையை தொடர்ந்து சேலம் மாநகரில் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் தூங்க முடியாமல் விடிய விடிய கொசுக்கடியால் தவித்தனர்.

    இதே போல சேலம் மாவட்டம் ஓமலூர், காடையாம்பட்டி பகுதிகளில் இரவு 9 மணி முதல் அதிகாலை 2 மணி வரை கன மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    ஏற்காட்டில் அரை மணி நேரம் மழை பெய்தது. மழையை தொடர்ந்து நேற்றிரவு 9 மணி முதல் இன்று காலை 6 மணி வரை மின் தடை ஏற்பட்டது. இதனால் பொது மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    சேலம் மாவட்டத்தில் இன்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு விவரம் வருமாறு:- சேலம் 70.6, ஓமலூர் 59.4, காடையாம்பட்டி 48, வீரகனூர் 23, தம்மம்பட்டி 22.6, ஏற்காடு 15, கரியகோவில் 5, வாழப்பாடி 2.7, சங்ககிரி 3, எடப்பாடி 1.4 என மாவட்டம் முழுவதும் 251.2 மி.மீ மழை பெய்தது. இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது. #SalemRain
    சேலத்தில் அஸ்தம்பட்டி, கோரிமேடு, கொண்டப்பநாயக்கன்பட்டி, 4 ரோடு, பொன்னம்மா பேட்டை, அம்மாபேட்டை, 5 ரோடு, குரங்குசாவடி, ஓமலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இன்று காலை திடீர் சாரல் மழை பெய்தது. #SalemRain
    சேலம்:

    சேலத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பகல் நேரங்களில் கோடைகாலத்தை போல் வெயில் கொளுத்துகிறது. இதனால் இரவு நேரம் கடும் வெப்பத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை சேலத்தில் அஸ்தம்பட்டி, கோரிமேடு, கொண்டப்பநாயக்கன்பட்டி, 4 ரோடு, பொன்னம்மா பேட்டை, அம்மாபேட்டை, 5 ரோடு, குரங்குசாவடி, ஓமலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் திடீர் சாரல் மழை பெய்தது. பன்னீரை தெளித்ததுபோல் சாரல் மழை பெய்ததால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் நனைந்து கொண்டே சென்றார்கள். நடைபயிற்சி சென்றவர்களும் நனைந்தவாறு சென்றார்கள்.

    சிறிதுநேரம் இந்த சாரல் மழை நீடித்தது. தொடர்ந்து வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. வெயிலால் தவித்த பொதுமக்களுக்கு இந்த சாரல் மழை சற்று ஆறுதலை கொடுத்தது. #SalemRain
    சேலத்தில் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாணவன் 24 மணி நேரத்திற்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளான். #SalemRain #SalemStudentBodyFound
    சேலம்:

    சேலம் மாநகரில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி விடிய விடிய பெய்த கனமழை பெய்தது. இதன் காரணமாக பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பொதுமக்கள் இரவு முழுவதும் தூங்காமல் விடிய விடிய தவித்தனர்.

    கிச்சிப்பாளையம் நாராயண நகரில் நேற்று அதிகாலையில் மழை பெய்துகொண்டிருந்தபோது சகோதரருடன் வந்த மாணவன் முகமது ஆசாத் (வயது 16) அங்குள்ள கழிவுநீர் ஓடையில் தவறி விழுந்தான். அவனை சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதிக அளவில் தண்ணீர் சென்றதால் அவனை மீட்க முடியவில்லை. அவனை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

    மாணவன் தவறி விழுந்த ஓடை பகுதியை நேற்று மாவட்ட கலெக்டர் ரோகிணி பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படும் மாணவனை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதற்காக 7 குழுக்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

    இந்நிலையில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாணவன் 24 மணி நேரத்திற்குப் பிறகு இன்று காலை கருவாட்டுப் பாலத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். #SalemRain #SalemStudentBodyFound
    ×