search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rotting crops"

    • 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டது.
    • மாவட்டம் முழுவதும் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடலூர்:

    வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால் கடலூர் மாவட்டம் சிதம்பரம், குமராட்சி, கீரப்பாளையம், குறிஞ்சிப்பாடி ,குள்ளஞ்சாவடி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டது. தற்போது தொடர் மழை பெய்து வருவதால் பெரும்பாலான விளைநிலங்களில் தண்ணீர் வடியாமல் பயிர்கள் அழுகி வரும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    நேற்று கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் புவனகிரி சேத்தியாத்தோப்பு காட்டுமன்னார்கோவில் பரங்கிப்பேட்டை குறிஞ்சிப்பாடி கடலூர் தொழுதூர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனை தொடர்ந்து நேற்று தொடர் மழை காரணமாக ஒரு குடிசை வீடும் மற்றும் 4 கால்நடைகளும் இறந்துள்ளன இது மட்டும் இன்றி மாவட்டம் முழுவதும் முக்கியசாலைகள் அனைத்தும் பெரிய அளவிலான பள்ளம் ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது இந்த நிலையில் வங்கக்கடலில் வருகிற 9 -ந் தேதி உருவாக உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதிகாற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    எனவே கடலூர் மாவட்டம் முழுவதும் தாழ்வான பகுதிகளில் தற்போது தண்ணீரை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மாவட்டம் முழுவதும் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும் ஏரிகள் நிரம்பி உள்ள நிலையில் தொடர் மழை பெய்தால் தண்ணீர் வெளியேற்றும் நடவடிக்கை தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    கடலூர் மாவட்டத்தில் மழை அளவு மில்லி மீட்டர் அளவில் பின்வருமாறு:- புவனகிரி - 27.0, சேத்தியாதோப்பு- 20.4, அண்ணாமலைநகர் - 16.0, கீழ்செருவாய் - 13.0, காட்டுமன்னார்கோயில் - 12.0,பெல்லாந்துறை - 9.2, சிதம்பரம் - 7.0, லால்பேட்டை - 6.0, பரங்கிப்பேட்டை - 5.6, . குறிஞ்சிப்பாடி - 5.0, தொழுதூர் - 4.0, கொத்தவாச்சேரி - 3.0, ஸ்ரீமுஷ்ணம் - 2.1 , கலெக்டர் அலுவலகம் - 0.8, கடலூர் - 0.7 மொத்தம் - 131.80 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. 

    ×