என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலையில் பரவலாக பெய்தமழையால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
- மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது
- தண்டராம்பட்டில் அதிகபட்சமாக 40 மில்லி மீட்டர் கொட்டியது
திருவண்ணாமலை
திருவண்ணாமலை நகரப் பகுதியில் மேகம் மந்தமாக காணப்பட்டது. சில இடங்களில் சாரல் மழை பெய்தது.செங்கம், செய்யாறு, போளூர், ஆரணி வந்தவாசி பகுதிகளில் மிதமான மழை பெய்தது. மற்ற இடங்களில் சாரல் மழை பெய்தது அதிகபட்சமாக தண்டராம்பட்டில் 40 மில்லி மீட்டர் மழை பெய்தது. இன்று காலையில் பல இடங்களில் மேகம் மந்தமாக காணப்பட்டது.
மழை காரணமாக குளிர்ந்த காற்றும், குளிர்ச்சியான சீதோஷண நிலை காணப்பட்டது. அதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பரவலாக மழை பெய்து வருவதால் ஏரி குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:
திருவண்ணாமலை-3.1, ஆரணி-20.6, செய்யாறு-35.8, செங்கம்-35.8, ஜமுனாமரத்தூர்-15, வந்தவாசி-12.2, போளூர்-25.6, தண்டராம்பட்டு-41, கலசபாக்கம்-7, சேத்துப்பட்டு-1.2, கீழ்பென்னாத்தூர்-10.8, வெம்பாக்கம்-6.






